Thursday, July 04, 2013

”காதல் கடிதம்”போட்டிக்காக பதிவர்களை வைத்து, “மீண்டும் ஒரு திருவிளையாடல் ”

 ஐயோ! ஐயோ! நான் என்ன பண்ணுவேன்?! என்ன பண்ணுவேன்?! யாரை கேப்பேன்?! ஒண்ணா!? ரெண்டா?! ஐநூறு ரூபாயாச்சே?! இந்த நேரம் பார்த்து எனக்கு எழுத வர்ல்லே! எழுத வர்ல்லே! என் பிளாக்குல குப்பையை கொட்டுறதுக்கே முடியலை இதுல போட்டிக்குலாம் ஏன் பேர் குடுக்கனும்?! எனக்கில்ல, எனக்கில்ல, வேற யாரோ! வேற யாரோ! பரிசை அடிச்சுட்டு போகப்போறங்க... சொக்கா! சீனு கேட்ட லெட்டர் எழுதி அந்த ஐநூறு ரூபாயையும் எனக்கே கிடைக்குற மாதிரி அருள் புரிய கூடாதா?! எல்லாரும் எழுதி அனுப்பிட்டாங்க. கடைசி தேதி இந்த மாசம் 20ம் தேதி ஆச்சே! இன்னும் ஒரு வார்த்தையும் சிக்கலியே!! வேணும் வேணும் எனக்கு இதும் வேணும் இன்னமும் வேணும், காலம் போன காலத்துல இந்த காதல், கடிதம், போட்டிலாம் தேவையா?!

அன்பே! ஆருயிரே!ன்னு ஆரம்பிக்கலாம்னா ஓல்டா இருக்குன்னு சொல்லி ஓட்டுவாங்க, அழகான ராட்சசின்னு ஆரம்பிக்கலாம்ன்னா! முதல்வன படத்திலிருந்து சுட்டுட்டேன்னு கிண்டல் அடிப்பாங்க, முரட்டு பிசாசு, ஆசை புயல்ன்னு ஆரம்பிக்கலாம்ன்னா எல்லா வார்த்தையையும் நம்மாளுங்க யூஸ் பண்ணி கடிதத்தை அனுப்பிட்டாங்க..., என்ன செய்வேன்! எங்க தேடுவேன்!?

ராஜி!

யாருங்க?!

”நாந்தான் கூப்பிட்டேன்” 

ஏன் கூப்பிட்டீங்க? நீங்க யாரு?!

லவ் லெட்டரு, மொக்கை ஜோக்கு, காதல் கவிதை, கடை, தகவல்கள், ஆன்மிகம், நட்பு கவிதை, புனைவுன்னு கலந்து கட்டி தரும் கூகுள் நான்..

இந்த பிளாக்குல காதல் கடிதம் எழுதுற போட்டின்னு போட்டதை நீயும் படிச்சுட்டியா?! என் வயித்துல அடிக்குறதுக்குன்னே வந்திருக்கியா நீ?! 

”திடங்கொண்டு போராடு” சீனு கேட்ட கடிதம் உனக்கு கிடைத்தால் பரிசு உனக்கே கிடைக்கும்தானே!

ஐய்ஹோ! ஐய்ஹோ! அந்த லெட்டர் மட்டும் கிடைச்சுட்டா! அடுத்த செக்கண்ட் என் கையில ஐநூறு ரூபா இருக்கும்!

கவலைப்படாத, அந்த லெட்டரை நான் தரேன்.

இன்னாது, லெட்டரா?! நீயா?! சொந்தமா எழுதுனாலே அங்க பார்த்தேன், இங்க படிச்சேன்னு கிண்டல் அடிக்கவே ஒருத்தர் அமெரிக்காவுல லேப்டாப் வாங்கி உக்காந்திருக்கார். இருந்தாலும், பதிவர்ன்னு போனா போகுதுன்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க. அதையும் கெடுக்கலாம்ன்னு பார்க்குறியா?! நீ எழுதுறது எப்படின்னு தெரிஞ்சுக்கனும்ன்னா நீயே மெயில் தட்டேன்.. அதான் நீ எப்படி குடுப்பே! கமெண்ட்ல கிழி கிழின்னு கிழிப்பாங்கன்னு பயம் உனக்கு. அதான் என் தலையில் கட்டப் பார்க்குறே?!

என் திறமை மீது உனக்கு டவுட் இருந்தா, என்னை டெஸ்ட் பண்ணி பாரேன், உனக்கு டேலண்ட் இருந்தா?!

இன்னாது, என்கிட்ட, என்கிட்டயே மோதப் பார்க்குறியா?! படிக்க சுமாரா இருந்தாலும் அதையும்!? நல்லா இருக்குன்னு சொல்ல ஒரு கூட்டத்தை சேர்த்து வச்சிருக்கேன். என்னை பத்தி தெரியாது உனக்கு.., ரெடியா  இரு.

ம்ம் கேள்விகளை நீ கேக்குறியா?! இல்ல நான் கேக்கட்டுமா?!

ஆங்.., நீ கேட்காத, நானே கேக்குறேன். எனக்கு கேக்கதான் தெரியும். அப்போதான் பதில் தெரியலைன்னாலும் சமாளிச்சுக்கலாம்.

பிரிக்க கூடாதது என்னவோ!? பதிவும்,  கலகலப்பும்,
பிரியக்கூடாதது என்னவோ?! சொந்த சரக்கும், ஓவர் பில்டப்பும்,
சேர்ந்தே இருப்பது?! கமெண்டும், சண்டையும்
சேராதிருப்பது?! உன் பிளாக்கும், உபயோகமான பதிவும், 
ம்ஹ்ம், ம்ஹ்ம், சொல்லக்கூடாதது?! பிளாக்குல உண்மையான விவரம்,
சொல்லக்கூடியது?! பிளாக்குல கற்பனைக் கதை,
பார்க்கக்கூடாதது?! பதிவு போட நேரம், காலம்,
பார்த்து ரசிப்பது?! கமெண்டுல செல்ல சண்டை,
பிளாக் என்பது?! கொஞ்சம் உன்மை, நிறைய பொய்,
பாட்டுக்கு?! “தென்றல்” சசிகலா?!
நாட்டு நடப்புக்கு?! ”வேடந்தாங்கல்” கருண்
வடநாட்டு பதிவுக்கு?! சகோ.”வெங்கட் நாகராஜ்”,
சாப்பாட்டு பதிவுக்கு?!   ”கோவை நேரம்” ஜீவா,
மொக்கைக்கு?! உன் பிளாக்,
என்னையே கலாய்க்க!? அவர்கள் உண்மைகள்” மதுரை தமிழன்,

 ஐயா! ஆளை விடு!? நீர்தான் கூகுள், எங்கே அந்த லெட்டர்?! குடு அப்படியே மெயில் தட்டி விடுறேன். கிடைக்கும் பரிசை நெட் கார்டு போட்டுடுறேன்.  

ம்ம்ம்ம், இந்தா கடிதம், 
கலர் ஜெராக்ஸ் எடுத்த கருங்குரங்கே...,
ரொம்ப நாளாய் ஏங்கி, தவித்து, உருகி, அந்தா இந்தான்னு ஒரு வழியா உன் மீதான என் காதலை சொல்ல ஒரு காதல் கடிதம் எழுதிட்டேன் உனக்கு.., 

 செந்தமிழில் - உனக்கு
கடிதம் எழுதி முடித்த பின்,
ஏற்பட்ட உணர்வுதான்..,
வில்லை உடைத்து சீதையை
கைபிடித்த போது இராமனுக்கும்
ஏற்பட்டிருக்குமோ ? ...........
.
.
.
.
.
.
.
.
 இப்படிக்கு,
உன்  ஆசை ஜில்லு
 
22 comments:

 1. உங்கள் திரு.விளையாடல் சூப்பர் அதிலும் கேள்வி பதில் மிக சூப்பர்

  ReplyDelete
 2. தங்கச்சி அங்குன இந்த அக்கா பெயரை விட்டுட்டியே :( உனக்கு 500 என்ன
  ஒரு ரூபாயும் கிட்டாதடி. ஆத்தா மலை ஏறீற்ரா...........அக்கா எழுதின
  கடிதத்தைப் படிச்சியா படிக்க இல்லையா ?.....நீ படிச்சிருக்க மாட்ட .சொக்கா
  ஒரு காதல் கடிதம் இரு பாச மலர்கள் பிரிஞ்சு போக்கக் காரணமாயிருக்க
  வேண்டாம் .பரிசு எனக்கே எனக்குத் தான் .கடிதத்தைப் படிச்ச சொந்தங்கள்
  ஊத்தின கண்ணீரையாவது வந்து பார் .உனக்கும் எனக்கும் இண்டையில இருந்து
  எண்ணி 5 நாளைக்கு டூஊஊஊஊஊ . (அதுக்கு மேல தாங்கதடி என் செல்லம் :(
  எனக்கு எதிரா கில்மா கடிதமாய் எழுதிப் பகைச்சுக் கொள்ளாத .நான் எழுதினா
  என்ன நீ எழுதினா என்ன ?...இரண்டும் ஒன்றுதான் .பேசாமல் போய்த் தூங்கு.
  இனி நீ புலம்புறது என் காதுக்கு கேக்கக் கூடாது ஒக்கே .........

  ReplyDelete
 3. ஹா... ஹா... ரசித்தேன்...

  பரிசு நிச்சயம் உண்டு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. இப்பத்தான் ராஜி திருவிளையாடல் ஆரம்பிச்சிருக்கு... இனி மேல் தான் பயம் கவ்வுது...

  ReplyDelete
 5. // இங்க படிச்சேன்னு கிண்டல் அடிக்கவே ஒருத்தர் அமெரிக்காவுல லேப்டாப் வாங்கி உக்காந்திருக்கார்.// ஹா ஹா ஹா செம செம

  அல்லாரும் காதல் கடிதம் எழுதுறீங்களோ இல்லையோ இந்த சின்னப் பையன ஓட்டி மட்டும் நல்ல எழுதுறீங்க, ஹா ஹா ஹா ஆனாலும் மதுரைத் தமிழனுக்கு தான் கொஞ்சம் ரிவீட்டு அதிகம், இதப் படிசிட்டாறு, இன்னும் என்னவெல்லாம் கல காம்பினேசன் பண்ணப் போறாரோ,

  ரசித்து சிரிக்க வைத்த பதிவு :-)

  சொக்க இவிங்ககிட்ட இருந்து என்னா காப்பாத்த வாப்பா

  ReplyDelete
 6. ரசித்து சிரித்தேன் கேள்வி பதில் ரொம்ப நல்லாருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. திருவிளையாடல் ”சிரிக்க வைத்தது ...!

  ReplyDelete
 8. ஹா.....ஹா.... பதிவு முழுக்க வாய்விட்டு சிரித்தபடியே வாசித்தேன்.
  தருமியே உங்க கிட்ட பிச்சை வாங்கணும்!
  கேள்வி பதில் டாப்!

  ReplyDelete
 9. ராஜி மேடம்.... கலக்கிட்டீங்க. சூப்பர்.
  ஆமாம் கடிதம் எங்கே?

  (அம்மனி... இங்கே நக்கீரினி யார் தெரியுமா? நாந்தான்
  ஞாபகம் வச்சிக்கங்க.....)

  ReplyDelete
 10. கலக்கிட்டீங்க !

  ReplyDelete
 11. ராஜி எனும் பெண்சிங்கம் வந்தது பார் உறுமி..
  பதிவின் திருவிளையாடலில் ஜொலித்ததோ தருமி..
  பதிவர்களே, போடுங்கள் ஒரு "ஓ" உங்கள் குரலை செருமி..

  கிட்டிடும் வெற்றி, ஏனெனில் சீனு இல்லை "கருமி".. :-)

  ReplyDelete
 12. உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ....

  ReplyDelete
 13. உண்மையான திருவிளையாடல்...

  ReplyDelete
 14. கலக்கல் பதிவு... கூகுல் கொடுத்த கடிதமாயிற்றே பரிசு உங்களுக்குன்னு நெனைச்சா அது தப்புத்தா.... உங்கள் பாட்டில் பிழை உள்ளது...!!!

  ReplyDelete
 15. ரசித்து சிரித்த பதிவு. அருமையான பதிவு

  ReplyDelete
 16. ஹா... ஹா... நவீன தருமி- கூகிளார் உரையாடல் பிரமாதம்! யாராவது இந்த ஆவி மெல்ல மெல்ல விஜய டி.ஆர். மாதிரில்ல ஆயிட்டு வர்றாரு... யாராவது என்னைக் காப்பாத்துங்கோ!

  ReplyDelete
 17. வட நாட்டுப் பதிவுக்கு - அட யாருங்க அது..... :)

  தருமி திருவிளையாடல் ஸ்டைலில் ஒரு கலக்கலான பகிர்வு. ரசித்தேன்.

  ReplyDelete
 18. இதோ..பாருடா. இப்படியும் பேர்வாங்க புறப்பட்டுடாங்க?

  ReplyDelete
 19. ஒரு போட்டி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனித்திறமையை வெளிகொண்டுவரதான் என்பதை சரியாக புரிந்துகொண்ட செயல்படும் உங்களுக்கு வாழ்த்து தோழி

  ReplyDelete