எத்தனை நாள்தான் கவிதையே சுட்டும் சுடாமல் பதிவையிடுவது.
இன்று வித்தியாசமாய் ஏதாவது பதிவிடலாம் என்று மண்டையை பிச்சுக்கிட்டு இருக்கும் போது (இருக்கும் நாலு முடியும் கொட்டிப் போச்சுனா) , எப்போவோ கேட்டு ரசித்த ஒரு கதை. இப்போ உங்களுக்காக...,
ஒரு ஊருல ஒரு அம்மா அப்பா.
அப்பா பேரு பிளேடு, அம்மா பேரு பிளேடு,பிளேடு.
அவங்களுக்கு இரண்டு பையன்கள்.
பெரியபையன் பேரு, பிளேடு,பிளேடு,பிளேடு,
சின்னப் பையன் பேரு பிளேடு,பிளேடு,பிளேடு,பிளேடு,
ஒரு நாள் அப்பா பிளேடு, ஷேவ் செய்றதுக்காக பிளேடு பாக்கெட்டை எடுக்குறார்.அப்போ பிளேடு பாக்கெட்ல பிளேடு இல்லை. உடனே, பொண்டாட்டி பிளேடு, பிளேடை கூப்பிட்டு, பெரிய பையன் பிளேடு,பிளேடு, பிளேடை பிளேடு கடைக்குப் போய், ஒரு பிளேடு பாக்கெட் வாங்கி வரச் சொல்லுனு சொல்றார்.
பையன் பிளேடு,பிளேடு,பிளேடு, பிளேடுக் கடைக்குப் போறான்.
அப்பா பிளேடு, ஷேவ் பண்ண பிளேடு பாக்கெட்ல, பிளேடு இல்லாமல் பிளேடுக்காக காத்திருக்கிறார். பையன் போய் ரொம்ப நேரமாச்சு..., பிளேடு இல்லாமால் அவருக்கு கோவம் வந்துச்சு. உடனே பொண்டாட்டி பிளேடு, பிளேடைக் கூப்பிட்டு பிளேடு இல்லாமல் நான் ஷேவ் பண்ணாமல் இருக்கேன். பிளேடுக் கடைக்கு பிளேடு வாங்க போன பையன் பிளேடு, பிளேடு, பிளேடைக் காணோம். நீ போய் சின்னப் பையன் பிளேடு,பிளேடு,பிளேடு,பிளேடைக் கடைக்கு அனுப்பி, பிளேடுக் கடைக்குப் போன பிளேடு,பிளேடு,பிளேடைக் கூட்டிக்கிட்டு, பிளேடுக் கடையில பிளேடை வாங்கிட்டு வரச் சொல்லுனு சொன்னார்.
உடனே அம்மா பிளேடு,பிளேடு, சின்னப் பையன் பிளேடு,பிளேடு, பிளேடு, பிளேடைக் கூப்பிட்டு அப்பா ஷேவ் பண்ண பிளேடு இல்லாமல் அண்ணா பிளேடு, பிளேடு பிளேடைக் கடைக்குப் போய் பிளேடு வாங்கிவரச் சொன்னார். அண்ணா பிளேடு, பிளேடு, பிளேடை , பிளேடு வாங்கக் கடைக்குப் போய் பிளேடு வாங்கி வரச் சொன்னார். பிளேடுக் கடைக்குப் பிளேடு வாங்கப் போன அண்ணனை இன்னும் பிளேடோடக் காணோம் நீ பிளேடுக் கடைக்குப் போய் அண்ணா பிளேடு, பிளேடு, பிளேடைக் கூப்பிட்டுக்கிட்டு, அப்பா பிளேடு ஷேவ் பண்ண பிளேடை வாங்கிக் கிட்டு, வாடானு சொன்னாங்க...,
ஐயோ, என்னாங்க கதையை முடிக்குறதுக்குள்ள எழுந்து ஓடுறீங்க.
சரி இன்னிக்குப் போங்க. நாளைக்கு குருவியும், நெற்கலனும் கதை சொல்றேன்.
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு,
ReplyDeleteப்ளேடு ப்ளேடு ப்ளேடு,
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு,
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு,
ஐயோ ப்ளேடு,
அம்மா ப்ளேடு,
ஆள உட்ரா ப்ளேடு!