ஒரு ஊருல ஒரு கணவனும், மனைவியும் இருந்தாங்க.
இரண்டுப் பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்புக் கொண்டவங்க.
அந்த கணவன் தினமும் அலுவலகம் விட்டு வரும்போது,
தன்னுடைய மனைவிக்கு பூ வாங்கி வருவார்.
ஒருநாள் இரவு அந்த கணவர் திடீர்னு இறந்துட்டார்..
மறுநாள் அவரை அடக்கம் பண்ணிட்டாங்க.
வழக்கமா அவர் அலுவலகம் விட்டு வீட்டுக்கு
எல்லாரும் அவரோட தினப்படி வழக்கத்தை நினைத்து அழுதுகிட்டு இருக்காங்க.
அப்போ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு போய் கதவைத் திறக்குறாங்க
அங்கே ஒரு பையன் வந்து பாட்டியம்மவைக் கூப்பிடுங்கனு சொல்றான்.
எல்லாரும் என்ன விஷயம் னு கேட்குறாங்க.
நேத்து தாத்தா வந்து இன்று இரவு நான் இறந்துவிடுவேன். நாளை மாலை நான் பூ வாப்கி வராமல் என் மனைவி ஏமாந்துப் போகக் கூடாது. எனவே நீ தினமும் பூ குடுத்துட்டு வா னு சொல்லி பணம் குடுத்தார் னு சொல்றான்.
அதைக் கேட்டு உறவினர்களெல்லாம் இன்னமும் பெரிதாக அழவே,
அந்தப் பையன் உள்ளப் போய் பார்க்குறான்,
அந்தப் பையனும் ஷாக்காகி நிக்குறான். அங்க, நடுக் கூடத்தில் அந்தப் பாட்டியம்மாவை சடலமாக கிடத்தி இருக்காங்க.
இதில் தன் மனைவி ஏமாந்துப் போய்விடக்கூடதுனு நினைத்த தாத்தாவின் காதல் உயர்ந்ததா?
இல்லை,
தன் இயல்பான வாழ்க்கை மாறியதை உணருமுன்பே இறந்த பாட்டியின் காதல் உயர்ந்ததா?
கதையின் கருவுக்கு நன்றி,
குறுஞ்செய்தி
வரும் நேரம் நெருங்குது.
No comments:
Post a Comment