தலைசுட்டிக்கு தலை அழகா?
நெத்திக்கு பொட்டு அழகா?
பொட்டுக்கு நெத்தி அழகா?
கண்ணுக்கு மை அழகா?
மைக்கு கண் அழகா?
காதுக்கு தோடு அழகா?
தோடுக்கு காது அழகா?
மூக்குக்கு மூக்குத்தி அழகா?
மூக்குத்திக்கு மூக்கு அழகா?
கழுத்துக்கு தாலி அழகா?
தாலிக்கு கழுத்து அழகா?
கைக்கு வளை அழகா?
வளைக்கு கை அழகா?
விரலுக்கு மோதிரம் அழகா?
மோதிரத்துக்கு விரல் அழகா?
இடுப்பிற்கு ஒட்டியாணம் அழகா?
ஒட்டியானத்திற்கு இடுப்பு அழகா?
காலுக்கு கொலுசு அழகா?
கொலுசுக்கு கால் அழகா?
கால் விரலுக்கு மெட்டி அழகா?
மெட்டிக்கு கால் விரல் அழகா?
பெண்ணுக்கு பெண்மை அழகா?
பெண்மைக்கு பெண் அழகா?
அழகிற்கு அழகு சேர்க்கும் பதுமையாம் பெண்மை.
அகமும் புறமும் அழகானால் அவளுக்கு செழுமை.
அதை பேணிக் காத்திட்டால் பெண்ணிற்கு பெருமை.
அதை உணர்ந்து நடந்தால் உலகிற்கு நன்மை.
ஆணெனும் ஆணவம் அழிந்திடுமே உலகினில்,
பெண்ணுக்கு பெருமை சேர்க்கும் இந்த பதிவு அழகு...
ReplyDeleteபெண்ணின் அழகு வியக்கவைக்கிறது..அதை அழகாக கவிதை எடுத்துரைக்கிறது.நன்று..நன்றி சகோ.
ReplyDelete//அழகிற்கு அழகு சேர்க்கும் பதுமையாம் பெண்மை.
ReplyDeleteஅகமும் புறமும் அழகானால் அவளுக்கு செழுமை.
அதை பேணிக் காத்திட்டால் பெண்ணிற்கு பெருமை.
அதை உணர்ந்து நடந்தால் உலகிற்கு நன்மை.//
உண்மை!
பெண் பெண்ணாக இருந்தாலே அழகுதான். எந்த நகையும் அதற்கு ஈடாகாது. இது பெண்ணடிமைத்தனம் அல்ல.
ReplyDeleteபெண்ணுக்கு புன்னகையே அழகுதானே.கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.
ReplyDeleteபெண் என்றாலே அழகுதான்,
ReplyDeleteஉடல் மற்றும் ஆபரணங்களின் அழகை விட மனதின் அழகு சிறப்பு வாய்ந்தது!
அருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
‘மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட்ல் வேண்டும்’ என்று பெண்மையைச் சிறப்பித்துப் போற்றியவர்கள் உண்டு. பெண்ணின் இயல்பான அழகு சிரித்த முகமும், அன்பான மனமும்தான். கவிதை இனிமை!
ReplyDeleteநீங்கள் எழுதிய எதுவும் அழகில்லை... அவைகள் அழகாவது மட்டும் அழகாக தெரிவது ஒரு பெண்ணின் மீது படர்ந்தால் மட்டுமே!
ReplyDeleteஅழகு அழகு கவிதை அழகு
ReplyDeleteமிக அழகான கவிதை ! எத்தனை அற்புதமான வார்த்தைகள் ! பகிர்வுக்கு நன்றி !
ReplyDeleteஇப்பாடி மொக்கை கவிதை போடுவது உங்களூக்கு அழகா? ஹி ஹி சும்மா ஜோக்
ReplyDeleteமகிழ்ச்சியால் நான் உங்கள்
ReplyDeleteகவியை படித்ததா!?
உங்கள் கவியை படித்ததால்-
எனக்கு மகிழ்ச்சியா!?
பெண்ணின் பெருமையைப் பாடிய உங்கள் உணர்வு அருமை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொன்னு விக்கிற வெலையில
ReplyDeleteபெண்மைக்கு பெண் மட்டும் தான் அழகு.
புன்னகை போதும்.
பொன்னகை வேண்டாம்.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
உடலுக்கு ஏற்ற உடையழகு
ReplyDeleteஉடைக்கு ஏற்ற உடலழகு
உடலுக்கு ஏற்ற நகையழகு
நகைக்கு ஏற்று உடலழகு
இதை
உணர்தாலே பெண்ணழகு
பெண்மைக்கே அதுவழகு
புலவர் சா இராமாநுசம்
மனம் இடம் கொடுத்தால் எல்லாமே அழகுதான் ராஜி அக்கா
ReplyDeleteஒன்றில்லா விட்டால் ஒன்றில்லையே?நல்ல் கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிக்கு சொல் அழகா
ReplyDeleteசொல்லுக்கு கவி அழகா???
எழுதிய விதம் அழகு...
அகமும் புறமும் அழகானால் அவளுக்கு செழுமை.
ReplyDeleteஅருமை!-காரஞ்சன்(சேஷ்)