காரின் இதயம் போன்றது என்ஜின் . அதன் பராமரிப்பே வாகன பயணத்துக்கு இனிமை சேர்க்கும். என்ஜின் சிறப்பாக இயங்க இதோ சில டிப்ஸ்......
என்ஜினில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் சக்தியை மேம்படுத்தலாம். அதாவது என்ஜின் சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது பெரிய சிலிண்டரை பொறுத்துவது என்ற சின்ன மாற்றத்தின் மூலம் என்ஜின் இயக்கத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இது என்ஜினின் இயக்கத்துக்கு தேவையான எரிபொருளை துரிதமாக கிடைக்க உதவும்.
சிலிண்டரில் எரிபொருளுடன் போதுமான அளவு காற்றும் நிரம்பி இருப்பது என்ஜின் திறனை அதிகரிக்கும். டர்போ சார்ஜர் அல்லது சூப்பர் சார்ஜர் இருந்தால் சிலிண்டரின் உட்புட்கும் காற்றின் அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.
உட்புகும் காற்றை குளிர்வாக பராமரித்தால் என்ஜின் இயக்கம் மேம்படும் காற்று கம்ப்ரஸ்ஸன் செய்து அழுத்தப்படும்போது வெப்பக்காற்றாக மாறும். அது நிறைய இடத்தை அடைக்கும் என்பதால் வாயுவை குளிர்ச்சியாக வைத்திருப்பது என்ஜின் இயக்கத்திற்கு நல்லது. டர்போ சார்ஜர் இருந்தால் அதில் காற்றை குளிர்வாக வைத்திருக்கும் ‘இண்டர் கூலர்’இருக்கும். இது சிறப்பு ரேடியேட்டர் போல செயல்பட்டு காற்று சிலிண்டருக்குள் போகும்போதும், வெளியேறும்போதும் குளிர்ச்சியை நிலைநிறுத்தும்.
காற்று குளிர்ச்சியாக இருப்பது சிலிண்டருக்குள் எளிதாக உள்ளே சென்றுவர உதவும். பிஸ்டனில் உள்ள வால்வு காற்றை உள்ளிழுக்கும்போது என்ஜின் அதிகமான சக்தியை இழக்கும். குளிர்காற்றாக இருந்தால் அதிகமான சக்தியை இழக்கும். குளிர்காற்றாக இருந்தால் குறைந்த அள்வு சக்தியே போதும். நவீன கார்களில் இப்பணியை செய்ய ‘இண்டேக் மானிபோஸ்ட்’ தொழில்நுட்பம் பயன்படுத்தகிறது. பெரிய காற்று வடிகட்டிகளும் காற்றின் இயக்கத்தை துரிதப்படுத்தும்.
காற்று வெளியேறும் வால்வுகள் அதிகம் இருப்பதும் என்ஜின் இயக்கத்தை மேம்படுத்தும். சிலிண்டரில் காற்று வெளியேறாமல் தடுத்து நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டால் என்ஜின் அதிகமான சக்தியை இழக்கும். எனவே காற்று வெளியேறும் வால்வுகளை சரியாக பராமரிப்பதன் மூலமும் என்ஜினை சிறப்பாக இயங்கச் செய்யலாம். உயர்தர கார்களில் ஒன்றுக்கு இரண்டாக இந்த வால்வு அமைக்கப்பட்டிருப்பதால் அவை சிறப்பாக செயல்படும்.
மோட்டாரின் கம்ப்ரஸ்ஸன் அளவை மாற்றி அமைப்பதன் மூலமும் என்ஜின் இயக்கத்தை அதிகமாக்க முடியும். மோட்டார் கம்ப்ரஸ்ஸன் அதிக அளவில் இருந்தால் என்ஜினுக்கு நிறைய சக்தி கிடைக்கும். இந்த அழுத்த அளவு அதிகமாக இருந்தால் காற்றையும், பெட்ரோலையும் நல்ல முறையில் கலந்து கொடுக்கும். ஆக்டேன் கேசோலின் வாயுக்கலவை தூண்டப்பட்டு எளிதில் எரிப்பொருள்(பெட்ரோல்) தீப்பற்றி என்ஜின் இயக்கத்துக்கு பயன்படுகிறது. நவீன கார்களில் ஆக்டேன் காசோலின் நிறையவே தேவைப்படும் என்பதால் எப்போதுமே மோட்டார் கம்ப்ரஸ்ஸன் அதிக அழுத்தத்திலேயே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்ஜின் பாகங்கள் அனைத்தும் குறைந்த எடை கொண்ட தாதுப்பொருட்களால் செய்யப்பட்டிருந்தால் என்ஜின் இயக்கம் மிக சிறப்பாக இருக்கும்.
சிலிண்டரில் எரிபொருள் நிரப்பும்போது கருவிகளின் உதவியுடன் ஒவ்வொரு சிலிண்டரிலிம் சம அளவில் எரிப்பொருளை நிரப்பினால் என்ஜின் செயல்பாடு சிறப்பாக இருப்பதோடு எரிப்பொருளையும் மிச்சப்படுத்தலாம்.
டிஸ்கி: கார் வாங்க ஆசை வந்துட்டுது. அதை வீட்டுல சொன்னா திர்ட்டுவாங்க. இப்படி பதிவா போட்டாலாவது புரிஞ்சுக்குறாங்களான்னு பார்க்கலாம்.
நன்றி: தினத்தந்தியிடமிருந்து தகவலும், படம் கூகுளிலிருந்தும் சுட்டுட்டேன்
காரை முதல்ல வாங்கிக்கிறேன் சகோதரி..அப்புறம் மறக்காம இந்த பக்கத்தை வந்து வாசிக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteநுணுக்கமான விடயங்களை தெரிந்து கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி சகோ
ReplyDeleteசுட்டாலும் நல்லதத்தானே சுட்டிங்க . சுட்ட விடயம் அனைவருக்கும் பயனுள்ள விடயம்
ReplyDeleteஇது கார் மெக்கானிக்கு மட்டும் பயன்படும் நல்ல செய்தி அதனால நெக்ஸ்டைம்சுடும் போது எங்களுக்கும் பயன்படும் விதமாக சுடுங்கள்.
ReplyDeleteஆமாம் இந்த பதிவை உங்கள் வீட்டுகாரர் பார்த்தாரா....அல்லது வீட்டுல உள்ள பெரியவங்க பார்த்தாங்களா?
‘சோறு’ பெரும்பாடா இருக்க ‘காரு’க்கு எங்க போறதும்மா? அதனால ‘கார் வாங்க பணம் தேத்துவது எப்படி?’ன்னு ஒரு பதிவு உடனே போடவும். ஹா... ஹா...
ReplyDeleteஅக்கா.., கார் வாங்குறது ஒரு பெரிய மேட்டரே இல்ல ஆனா அதுக்கு அதுக்கு எரிபொருள் (கேஸும், பெட்ரோலும்) வாங்குறதுதான் பெரிய விஷயம்..!
ReplyDeleteஎங்க வீட்டில் ஒரு கார் இருக்குங்க! ஆனா அதுல எஞ்சின் காணமே! பின்னாடி இழுத்தா முன்னாடி போகுது! :)
ReplyDeleteகார்க்கு காசு கொஞ்சம் கொறையுது...Help me plz...
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteஎஞ்சினை மட்டும் முதலில் வாங்கிவிடலாமா? பின்பு காசு சேர்த்து காரை வாங்குவோம். நல்ல டிப்ஸ். பயன்படுத்திதான் பார்க்க முடியாது.
ReplyDeleteகார் ஓட்டணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஏரோப்ளேன் ஓட்டணும்னு கூட ஒரு ரகசிய ஆசை உண்டு. ஆனா பாருங்க... நான் ப்ளேன் ஓட்டக் கத்துக்கிட்டா எங்கயும் மோத மாட்டேன். கார் ஓட்டக் கத்துக்கிட்டா... Ha... Ha...
ReplyDeleteஎழுதினவங்க பேரைப் போட்டு சுடுவதில் தப்பே இல்ல. இன்னும் நிறைய சுடுங்க!
ReplyDeleteலேடீஸ் சைக்கிள் மாதிரி ‘லேடீஸ் கார்’ வரப் போகுதாமே நிஜமா?
This comment has been removed by the author.
ReplyDelete//என்ஜினில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் சக்தியை மேம்படுத்தலாம். அதாவது என்ஜின் சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது பெரிய சிலிண்டரை பொறுத்துவது என்ற சின்ன மாற்றத்தின் மூலம் என்ஜின் இயக்கத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.//
ReplyDeleteநீங்க புரிஞ்சு இந்த பதிவ எழுதவில்லை என நினைக்கிறேன். ஒரு காரின் என்ஜின் என்பது அதன் இதயம் போலாகும் அதில் சிலிண்டர் என்பது இதயத்தின் அறை போல, கார் வாங்கின பிறகு அந்த சிலிண்டரை மாற்றுவது அல்லது அதிகரிப்பது என்பது என்ஜின் மொத்தத்தையும் மாற்றுவது போலாகும் இது சிறிய வேலை இல்லை, ஒரு காரில் என்ஜின் மற்ற வேண்டும் என்றால் என்ஜின் இயங்க உதவக்கூடிய ECU கோன்றோலரில் இருந்து பெட்ரோல் பம்ப் வரை பலவற்றை மற்ற வேண்டும். இவ்வாறு மாற்ற ஆகும் செலவிற்கு நீங்க புதிதாக வேற ஒரு கற் வங்கி விடலாம். அப்படியே மாற்றினாலும் பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட இதய நோயாளி போல பல சின்ன சின்ன பிரச்சனைகள் வரும்.
சிலிண்டரில் பெட்ரோல் மற்றும் காற்று கலவஈருந்தால்தான் என்ஜின் இயங்கும், இது ஒரு விகிதத்தில் மட்டுமே இருக்கும் அதிக காற்று இருந்தாலும் பிரச்சனை காற்று கம்மிய இருந்தாலும் பிரச்சனை, சாதாரண பெட்ரோல் காற்று அழுத்த அளவு 12 .5 :1 என்ற அளவில் இருக்கும், இதில் டர்போ சார்ஜெர் சூப்பர் சார்ஜெர் இருந்தால் இது 10 .5 :1 அல்லது அதற்கு கீழாகவோ இருக்க வேண்டும்.
உட்புகும் காற்று குளிர்வாக இருந்தால் எஞ்சினில் இருந்து அதிக திறனை பெறலாம் ஆனால் அதற்கு விலையாக அதிக பெற்றோலை கொடுக்க வேண்டும்.
சிலிண்டரில் எரிபொருள் நிரப்புவது எல்லாம் காரில் உள்ள ECU என்ற கண்ட்ரோல் யூனிட் பார்த்துக்கொள்ளும் நாம் அதில் ஏதும் செய்ய முடியாது, எரிபொருள் நிரப்பும் பம்ப் பழுதாகி இருந்தால் வேறு மாற்றலாம்.
மன்னிக்கவும் இந்த கட்டுரை சில விசயங்களில் மிகவும் அபத்தமாக் உள்ளது,நீங்கள் கூறிய பல டிப்ஸ் என்பது கண்டிப்பாக நாம் செய்ய முடியாது.
கார் வாங்க வேண்டும் எனும் உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
சுட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே..
ReplyDeleteபெட்ரோல் விக்கற விலைக்கு அவனவன் காரை வித்துட்டு இருக்கான் :)
எங்க சொந்தக்காரர் ஒருவர் சின்ன நாய் பொம்மை வாங்கி வச்சிருந்தார் எதுக்குன்னு கேட்டா நான் ஒரு நாள் கார் வாங்குவேன் அப்ப அதில் முன்னாடி கட்டி தொங்கவிட முதல்ல பொம்மை வாங்கிட்டேன் என்கிரா.
ReplyDeletecaar ingin visayam-
ReplyDeletepadikka aasai!
car vaanga neenga-
kaasu thanthaal....(ha. hah)
car ullavangalukku-
nalla visayam!
காருக்கு கூட டிப்ஸா சூப்பர் .
ReplyDeleteDHANS சொன்னதிற்கு பதில்...
ReplyDeleteசும்மா அவர்கள் தமாஷா எழுதி இருக்கிறார்கள்...அவ்வளவு தான். அவர்கள் சொன்னது மட்டுமில்லை; டீலர்கள் சொல்வதையும் நம்பக்கூடாது! நம்பவே கூடாது!
அவர்கள் கணவர் பெட்ரோல் பங்க் வைத்திருக்கலாம்! அதனால் அடிச்சு விட்டு இருக்கிறார்கள். இதை ஒரு தமாஷான இடுகையா எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதற்க்கு...இவ்வளவு..,விரிவான விளக்கம் தேவை இல்லை!
நுணுக்கமான விஷயங்களைப் பதிவாக்கித் தந்தமைக்கு
ReplyDeleteமனமார்ந்த நன்றி
நமக்கும் கார் வாங்கனும்னு ஆசை வந்துடுசுங்கோ...
ReplyDeleteபயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி...
What madam now-a-days copy paste posts are become common in your blog, what happened?
ReplyDeleteகாரில் பயணம் செய்ய மட்டுமே
ReplyDeleteஎனக்குத் தெரிந்தது!
புலவர் சா இராமாநுசம்
காரில் பயணம் செய்ய மட்டுமே
ReplyDeleteஎனக்குத் தெரிந்தது!
புலவர் சா இராமாநுசம்
காரில் பயணம் செய்ய மட்டுமே
ReplyDeleteஎனக்குத் தெரிந்தது!
புலவர் சா இராமாநுசம்
சூப்பர் டிப்ஸ் ..........
ReplyDelete