Friday, April 20, 2012

மறவாதிருக்கும் வரம் தருவாய் இறைவா

                               
 
காலை என்னை எழுப்பும் அலார கடிகாரமாய் புல்லினங்கள் ஒரு சேர எழுப்பும் காலை கீதங்கள்...,
எழுந்ததும் சன்னல் கதவை முட்டி கொண்டு என்னை ஸ்பரிசிக்கும் தென்றல் காற்று....,

புற இருளை விரட்ட இறைவன் முன் ஏற்றிய  குத்துவிளக்கின் முத்துப்போன்ற சுடர்...,
அக  இருளை போக்க இறைவனை தியானிக்கும்போது ஏற்படும் மன அமைதி...,
நெருப்பில் காய்த்து பழுத்த பழம் போன்ற இளம் காலை சூரியன்...,
 எங்கிருந்தோ காற்றில் கலந்து வரும் மலர்களின் வாசம் அல்லது இறைவனுக்கேற்றிய ஊதுவத்தி வாசம்...,
கோவமாய் இருக்கும்போது எதேச்சையாய் சினேகமாய்  பார்த்து சிரிக்கும் எதிர்வீட்டு குழந்தை...,
வாலை மேலே தூக்கி கொண்டு ஏதோ சொல்ல வருவது போல கிட்ட வந்து முகர்ந்து விட்டு ஓடும் பக்கத்து வீட்டு நாய்...,
காலை நேர அவசரத்திலும் வாசலில் அழகாய்  விரிந்த மாக்கோலம்....,
வாஸ்துக்காய் சிறு மண்சட்டி தண்ணீரில் வைத்த செம்பருத்தியும்,சாமந்தியும்....
வண்டி ஓட்டும்போது திடீரென்று முன்வந்து திக்குமுக்காட வைக்கும் இளம்கன்றுக்குட்டியின் துள்ளல்...,
தூரத்து உறவுகளிலும் கூட வெளிப்படும் அன்னியோன்யம்...,
கொத்து கொத்தாய் இலைகளையும், பூக்களையும் சுமந்திருக்கும் கொன்றை மரம்...,
நீல பட்டாடையை விரித்தது போன்ற வானம், பஞ்சு பொதிகளாய் திரியும் மேகங்கள் சில்காற்று பட்டு கருமேகமாய் மாறி  மழை பொழியும் அதிசயம்...,
பார்க்க பார்க்க சலிப்பு தட்டாத அஸ்தமன சூரியன்...,
சூரியன் அழகை வியந்தவாறே கூடு நோக்கி பறக்கும் பறவைகள்...,
உரு மாறி வரும் நிலவை ரசித்தவாறே மொட்டை மாடியில் குடும்பத்துடன் உண்ணும் “நிலாச்சோறு”...,
ஒரே சீராக செல்லாமல் பல வழித்தடங்களில் ஓடும் என் எண்ண அலைகள்...,

உலக துனபங்களை கண்டு சோர்ந்திருக்கும் வேளையில் எனக்கும் வாழும் ஆசையை கூட்டும் என் மழலை செல்வங்கள்....,

இவைகளை பார்த்து, ரசித்து, உணரும்போது நான் அனுபவிக்கும் இன்பம், ஆனந்தம், உவகை, உத்வேகம் இவை எல்லாம் என்னுள்ளிலிருந்து தான் என்பதை மறவாதிருக்கும் வரம் தருவாய் இறைவா!!!...,

20 comments:

 1. இவைகளை பார்த்து, ரசித்து, உணரும்போது நான் அனுபவிக்கும் இன்பம், ஆனந்தம், உவகை, உத்வேகம் இவை எல்லாம் என்னுள்ளிலிருந்து தான் என்பதை மறவாதிருக்கும் வரம் தருவாய் இறைவா//

  கூடவே எனக்கும்...

  ReplyDelete
 2. இவைகளை பார்த்து, ரசித்து, உணரும்போது நான் அனுபவிக்கும் இன்பம், ஆனந்தம், உவகை, உத்வேகம் இவை எல்லாம் என்னுள்ளிலிருந்து தான் என்பதை மறவாதிருக்கும் வரம் தருவாய் இறைவா//

  அருமையான கருத்துக்கள்.

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு..மிக்க நன்றி,

  ReplyDelete
 4. நன்று1கேட்ட வரம் கிடைக்கும்! இறைவனும்,உங்கள் எழுத்தில் மகிழ்ந்து!

  ReplyDelete
 5. வரிதோறும் முத்துக் கருத்துக்களை
  வாரி இறைத்துள்ளீர்! நடையழகு பொலிய, தடையின்றி வார்த்தைகள்
  தவழ்கின்ற தென்றலென மனதை வருடிச்செல்ல தமிழ் அமுதமாகத்
  தந்துள்ளீர் வாழ்க! வளர்க!
  வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 6. இயற்யையை ஸ்பரிசிப்தில் வரும் ஆனந்தம் அது சொற்களில் வர்ணிக்க முடியாதது.... அருமையான பகிர்வு அக்கா

  ReplyDelete
 7. எல்லா கருத்துக்களும் நல்லா இருக்கு..

  ReplyDelete
 8. அருமையான கருத்துக்கள்.

  ReplyDelete
 9. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா - என்ற பாரதியின் வரியை நினைவுபடுத்தும் அழகிய பதிவு.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. பதிவை படித்ததோடு அல்லாமல்
  நானும் தங்களைப் போலவே
  வேண்டிக் கொண்டேன்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. ஒரே சீராக செல்லாமல் பல வழித்தடங்களில் ஓடும் என் எண்ண அலைகள்..
  -அதேதான் எனக்கும்! மிக அழகான பகிர்வும்மா. ரெவெரி சொன்ன மாதிரி எனக்கும்னு ஒரு வரியை சேர்த்துக்கிட்டு படிச்சு முடிச்சேன்.

  ReplyDelete
 12. உள்ளிருக்கும் உணர்வுகளை தேவையான நேரத்தில்
  பயன்படுத்த நிச்சயம் மறவாதிருக்கும் வரம் வேண்டும்...
  இல்லையேல் கர்ணன் தேர் சரிந்திடுகையில் பட்ட சிரமத்தைத் தான்
  நாமும் பட வேண்டும்..
  அத்தகைய நிலை வராமலிருக்க இறைவன் அருள் வேண்டும்...

  நல்ல படைப்பு சகோதரி..

  ReplyDelete
 13. //உலக துனபங்களை கண்டு சோர்ந்திருக்கும் வேளையில் எனக்கும் வாழும் ஆசையை கூட்டும் என் மழலை செல்வங்கள்....//

  அருமையான தேவையான ஒரு பதிவு பகிர்வுக்கு நன்றி சகோ.


  ஹி ஹி ஹி ஆமா எங்கிருந்து சுட்டதுன்னு சொல்லவே இல்லை
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 14. /உலக துனபங்களை கண்டு சோர்ந்திருக்கும் வேளையில் எனக்கும் வாழும் ஆசையை கூட்டும் என் மழலை செல்வங்கள்....//
  நிம்மதி தந்த பதிவு அழகான காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது .

  ReplyDelete
 15. இயற்கையை யாசிக்கும் இதயம் கவர்ந்த நிலையின் வெளிப்பாடு மனதில் வேண்டுவதும் இதையே நல்ல பதிவு ராஜி அக்காள்.

  ReplyDelete
 16. ரசிக்கும் மனமிருந்தால்
  வறுமையும் அழகுதான்
  புள்ளிகளும் கோலம்தான்....

  ரசிக மனம் கொண்ட ராஜிக்கு வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
 17. கொத்து கொத்தாய் இலைகளையும், பூக்களையும் சுமந்திருக்கும் கொன்றை மரமாய் இனிய அழ்கிய மனம் கவர்ந்த அருமையான காட்சிகள் மனக்கண்கலில் படமாய் விரியும் அற்புதப் படைப்புகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 18. சோர்ந்திருக்கும் மனத்தைத் தூக்கி நிறுத்த புதிதாய் எதுவும் தேவையில்லை, நம்மைச் சுற்றிலும் பார்த்தாலே போதும் என்னும் அற்புதத்தை அழகாய்ச் சொன்ன பதிவு. மனம் ஈர்க்கிறது ராஜி. பாராட்டுகள்.

  ReplyDelete