செவ்வாய், ஏப்ரல் 24, 2012

பெற்றால் தான் தாயா ??!!


அரச மரம் சுற்றி,நெய் தீபம் ஏற்றி ,
மண் சோறு உண்டு,பல மருத்துவமனைகள்
 படியேறி பல செயல்கள் செய்தும்..., மனமிரங்காமல்?!
 என்னை வஞ்சிக்கும் தெய்வமே ...
நீ என்று மனம் இறங்குவாய் ??தூக்கம் வற்றிய எனது கண்களும்..
கண்ணீரில் நனைந்த என் தலையணையும்....,
 எந்த விடியலில் மாறும்..?

நீ சிரிக்கும் போது நானும் சிரித்து..
நீ அழும் போது, நானும் அழுது...
 உன்னை கையில் ஏந்தி கொஞ்சி மகிழவென்று,
 நான் உன்னை பெறுவேன் என் செல்லமே ...,


குரலெடுத்து அழுகின்ற....,
 பக்கத்து வீட்டு குழந்தையின் அழு குரல்
 கேட்கும் போதும் , சிரித்து விளையாடும்
ஒலி கேட்கும் போதும்,  இனம் புரியாத இரக்கமும்,
 மகிழ்வும் தோன்றும் எனது தன்மைக்கு...,
’மலடி’ என்றொரு மற்றொரு பெயரா?


இருவரில் யாரிடத்தில் குறைகள்
இருப்பினும் ”மலடி”  பட்டம் பெறுவது
 பெண்கள் மட்டும் தானே !?

பிச்சை எடுத்து செல்லும் சின்னஞ்சிறு
பிள்ளைகளை பெற்று நடு வீதியில்
 விட்டு சென்றவள்தான் தாயா?!


அந்த பிச்சை எடுத்து செல்லும்
பிள்ளைகளை கண்டு மனம் வாடும்
நான் மலடியா..?!

பிள்ளைகளை வளர்க்க வழி இன்றி,
 தெருவில் விடும் பேதைகளை தாயென்று?!
 கொண்டாடும் உலகம்..., என்னை ”மலடி”
 எனக் கூறி மகிழ்வது என்ன நியாயம்?
பெற்றால் தான் தாயா ?  


24 கருத்துகள்:

 1. சரியான கேள்வி.

  அதானே... ஏன் இந்த ஓரவஞ்சனையோ?

  பதிலளிநீக்கு
 2. தாயின் கடமைகளைப் புறந்தள்ளிய தாய்மையைவிடவும் கருவைச் சுமக்காமலேயே தாய்மையை சுமப்பவளைக் கொண்டாடியே ஆகவேண்டும். உன்னதக் கரு சுமந்த கவிதையை என் மனம் சுமந்து தாலாட்டுகிறேன். பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. சரியான கேள்வி......

  பிள்ளை இருந்தால் தானே உலகம் தாயென மதிக்கிறது!

  பதிலளிநீக்கு
 4. பெற்றால்தான் பிள்ளையா? கற்றால் தான் கல்வியா? போஸ்ட் போட்டால் தான் தொல்லையா? கமெண்ட் போடலைன்னா சல்லையா? ஹி ஹி

  பதிலளிநீக்கு
 5. ம்ம் அட நியாயமான கேள்விதான்.தாய் இவளின்றி நாமில்லை ராஜி அக்கா

  பதிலளிநீக்கு
 6. மிக சிறந்த கவிதை பெற்றால்தான் பிள்ளையா தொடர்க....

  பதிலளிநீக்கு
 7. நல்ல கவிதை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. சாட்டையடி கேள்வி . அருமையான வரிகள் .
  த.ம.4

  பதிலளிநீக்கு
 9. //////அந்த பிச்சை எடுத்து செல்லும்
  பிள்ளைகளை கண்டு மனம் வாடும்
  நான் மலடியா..?!////////


  வரிகள் உணர்ச்சிகளின் குவியல் .....,!

  அருமையாக கவிதை .., புல்லரிக்கச் செய்தது..,

  பதிலளிநீக்கு
 10. ///இருவரில் யாரிடத்தில் குறைகள்
  இருப்பினும் ”மலடி” பட்டம் பெறுவது
  பெண்கள் மட்டும் தானே !?///
  சரியான கேள்வி.இது இன்னமும் தொடர்வதே வேதனை.
  தாய்மை உணர்வு உள்ள அனைவருமே தாய்தான்!

  பதிலளிநீக்கு
 11. இந்நிலை நம்ம ஊரில் மாற கொஞ்ச காலம் எடுக்கும்...நல்ல படைப்பு சகோதரி...

  பதிலளிநீக்கு
 12. ஆதங்கத்தால் விளைந்த கேள்வியை எழுப்பிய கவிதை அருமை! தாய்மை உள்ளம் படைத்த அனைவருமே தாய்தான்! சூப்பர்ப்!

  பதிலளிநீக்கு
 13. பெற்றால் தான் தாயா ?

  தாய்மை உள்ளம் படைத்தவருமே தாய்தான்!

  பதிலளிநீக்கு
 14. குழந்தையை பார்த்ததும்,தூக்க வேண்டும் என்ற உணர்வு வரும் போதே எல்லோரும் தாயாகி விடுகிறார்கள்.இதில் ஆண் பால் பெண் பால் இருப்பதாக தெரியவில்லை,
  மலடி என்ற பெயரை நினைக்க மறப்போம்.

  பதிலளிநீக்கு
 15. நல்ல கவிதை-
  என ஒற்றை வரியில்-
  அடக்கிட முடியாது!

  என் மனதை-
  கலங்கிட வைத்த கவிதை!

  எத்தனை எத்தனை-
  சகோதரிகளின் நிலை இது...?

  கவலை கொள்ளவே முடிகிறது!

  பதிலளிநீக்கு
 16. Good! ஆனால், சாதுவா எழுதி இருக்கிறீர்கள், சாட்டையடி கொடுக்க வேண்டிய இடத்தில்

  பதிலளிநீக்கு
 17. தாய் என்பவள் மனதளவில் எப்போதும் எங்கும் உண்டு சகோ!

  பதிலளிநீக்கு
 18. // அந்த பிச்சை எடுத்து செல்லும்
  பிள்ளைகளை கண்டு மனம் வாடும்
  நான் மலடியா..?! //

  மனதை மிக மிக அதிகமாக பாதித்த கவிதை. உணர்வுகளை எழுபிவிடும் வார்த்தைகள். ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் அருமை

  பதிலளிநீக்கு
 19. பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் கண்ணீரை,மிகச் சரியாக வடித்துள்ள கவிதை! சொற்களில் சோகம் படிப்பவரின் நெஞ்சில் பசுமரத்து ஆணி போல் நன்கு பதியும் அருமை! சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 20. மனசில் தாய்மையுணர்வு கொண்ட எல்லோருமே தாய்தான்..

  பதிலளிநீக்கு
 21. பெற்றால் தான் பிள்ளயா!

  அமைதிச்சாரல் சொன்னது போல் தாய்மைஉணர்வு கொண்ட எல்லோருமே தாய் தான்.

  தாய்மை உணர்வு இருக்கும் எல்லோருமே தாய் தான்.
  நெகிழவைத்த கவிதை.

  பதிலளிநீக்கு
 22. அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு