சனி, ஏப்ரல் 14, 2012

வல்லவனுக்கு வல்லவன் - நான் யார்?


முறை தவறிப் போய் யாருக்கும் நான்
இதுவரை தீங்கிழைக்கவில்லை. ஆனால்,
என்னால் பலரது வாழ்க்கை அழிந்துள்ளது. 
அரசுகள் சீரழிந்துள்ளது. 
நோய்கள் தீவிரமடைந்துள்ளது.

நான் யாரையும் தாக்கவுமில்லை.
கடுமையாகப் பேசவுமில்லை. ஆனால், என்னால்
பல குடும்பங்கள் சிதைந்துவிட்டன. நட்புகள் 
உடைந்துவிட்டன. 

குழந்தைகளின் குதூகலம் மறைந்துவிட்டது.
 மனைவியர் மனம் கசந்து கண்ணீர் விட்டனர். சகோதரர்களும் 
சகோதரிகளும் பிரிந்தனர். பெற்றோர்கள் மனமுடைந்து 
கல்லறைக்குச் சென்றுவிட்டனர்.

நான் ஒருவருக்கும் தவறிழைக்கவில்லை. 
ஆனால், என்னால் திறமைகள்  தோற்றுவிட்டன.
மரியாதையும், அன்பும் மறைந்துவிட்டன. 
வெற்றி இழப்பையும், மகிழ்ச்சி துயரத்தையும் தந்துவிட்டன.

நான் யார் தெரியுமா?! 
என்னுடைய பெயரை கேட்டாலே 
நீங்கள் நடுக்கம் கொள்வீர்கள்!

நான் ஆற்றல் மிக்கவர்களைவிட 
ஆற்றல் மிக்கவன்!
சிறப்பு வாய்ந்தவர்களைக் காட்டிலும்
 சிறப்பு வாய்ந்தவன்!
வல்லமை மிக்கவர்களை  விடவும் 
வல்லமை மிக்கவன்!

எனது பெயர்தான்  அலட்சியம்.

20 கருத்துகள்:

 1. அலட்சியம் என்கிறவனால் ஏற்படும் அழிவுகளை அழகாக மனதில் பதியும் வண்ணம் விளக்கிட்டீங்க சிஸ்டர்... ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 2. யப்பா... அந்த அருவி படம். சாரல் என் மேலயே தெறிக்கற மாதிரி ஃபீலிங். எங்கம்மா புடிச்சே? நல்லாருக்கு. நாளைக்கு, அப்புறம் பாத்துக்கலாம் என்று தள்ளிப் போடுகிற அலட்சியத்தின் விளைவுகள் அருமையான பாடலாய் வடிவெடுத்திருக்கு. அருமை.

  பதிலளிநீக்கு
 3. // நான் ஆற்றல் மிக்கவர்களைவிட
  ஆற்றல் மிக்கவன்!
  சிறப்பு வாய்ந்தவர்களைக் காட்டிலும்
  சிறப்பு வாய்ந்தவன்!
  வல்லமை மிக்கவர்களை விடவும்
  வல்லமை மிக்கவன்!

  எனது பெயர்தான் அலட்சியம்.// அருவிக்காட்சியும், அலட்சியக்கவிதையும் அருமை! சாஇராமாநுசம்

  பதிலளிநீக்கு
 4. அலட்சியம்........ஒவ்வொரு வரிகளும் சுடுகிறது

  கொட்டும் அருவியை ரசித்தேன்.. அழகு அருவி நேரில் பார்ப்பது போல் அருமையாக இருக்கு சகோ

  பதிலளிநீக்கு
 5. அலட்சியம் வாழ்க்கையை தலை கீழாக்கும்... அழகான கவி வரிகள் ராஜி அக்கா

  பதிலளிநீக்கு
 6. அடடே.. உங்க பிளாக் படிச்சு இயற்கை அன்னையே என்னை விட்டுடு அப்டின்னு ஆனந்தக்கண்ணீர் வடிக்குதே? அடடே

  பதிலளிநீக்கு
 7. அலட்சியம்!

  இனி கூடாது!

  சரியா சொல்லீடிங்க!

  படம் அருமை!
  உண்மையில் நனைம்தது போல-
  இருந்தது!

  பதிலளிநீக்கு
 8. அலட்சியத்தை பற்றி அலட்சியமாக எழுதி இருந்தாலும் மிக அருமையாக வந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. //
  குழந்தைகளின் குதூகலம் மறைந்துவிட்டது.
  மனைவியர் மனம் கசந்து கண்ணீர் விட்டனர். சகோதரர்களும்
  சகோதரிகளும் பிரிந்தனர். பெற்றோர்கள் மனமுடைந்து
  கல்லறைக்குச் சென்றுவிட்டனர்.

  //

  அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 10. லட்சியத்தின் வழியில்
  அலட்சியம் கொண்டால்
  இலக்கின் இமைகள் மூடிக்கொள்ளும் என
  அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் சகோதரி..

  பதிலளிநீக்கு
 11. அலட்சியம் என்கிர ஒரு சிறு விஷயம் செய்கிர அழிவுகளுக்கு அளவே இல்லைதான்.

  பதிலளிநீக்கு
 12. இந்த பதிவை அலட்சியம் பண்ணுனா அது லட்சியத்துக்கே அவமானம். புரியலயோ? பரவாயில்ல விடுங்க. அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 13. மிக நல்ல கரு கொண்ட கவிதை....

  வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 14. அறிவார்ந்த அலசல் .
  thank you sister.

  பதிலளிநீக்கு
 15. நான் அலட்சியப்படுத்தாமல் உங்கள் பதிவினை வாசித்தேன். துவக்கமும் முடிவும் அருமை.

  பதிலளிநீக்கு