ஆனை முகத்தோனே....,
விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். இவர் யானை முகத்தை தனக்கு வைத்திருக்கிறார். அநேகமாக, எல்லா தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, இவருக்கு மட்டும் ஏன் யானையின் முகம் வந்தது?
எல்லாம், சிவபெருமான் நம் மீது கொண்ட கருணையால் தான். கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். ஆண், பெண் சம்பந்தமில்லாமல் பிறந்த ஒருவனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்பது அவன் கேட்ட வரம்; கேட்ட வரம் கிடைத்தது. ஆண், பெண் சம்பந்தமின்றி, உலகில், குழந்தை பிறப்பு சாத்தியம் இல்லை என்பது அவன் போட்ட கணக்கு. அவன் நினைத்தபடியே அப்படி யாருமே உலகில் பிறக்கவில்லை. எனவே, அவன் சர்வலோகங்களையும் வளைத்து, தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தான். தேவர்களை வதைத்தான். அவர்கள், துன்பம் தாளாமல் தவித்தனர்.
அவர்களது துன்பம் தீர்க்க லோகமாதாவான பார்வதிதேவி முடிவு செய்தாள். தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினாள். உறுப்புகளையும், உயிரையும் கொடுத்தாள். அந்தக் குழந்தைக்கு, “பிள்ளையார்’ என பெயர் சூட்டினாள். அந்தப்பிள்ளை தன் அன்னையின் அந்தப்புர காவலனாக இருந்தான்.
சிவபெருமான் அங்கு வந்தார். அவர் மனதில் தேவர்கள் படும் துன்பத்தை நினைத்து கருணை உண்டாயிற்று. இதற்காக ஒரு திருவிளையாடல் செய்தார். “என் அந்தப்புரத்தில் இருக்கும் நீ யாரடா?’ எனக் கேட்டு, பிள்ளையாரின் கழுத்தை வெட்டிவிட்டார். அதே நேரத்தில், வடக்கு நோக்கி ஒரு யானை படுத்திருந்தது. வடக்கு நோக்கி யார் படுத்தாலும், உலக நலனுக்கு ஆகாது என்பது சாஸ்திரம்.
அந்த நேரத்தில் பார்வதி வந்தாள். தன் மணாளனைக் கண்டித்தாள். பிள்ளைக்கு மீண்டும் உயிர் வேண்டும் என்றாள். சிவபெருமானும், வடக்கு நோக்கி படுத்து, உலக நலனுக்கு எதிர்விளைவைத் தந்து கொண்டிருந்த யானையின் தலையை வெட்டி, பிள்ளையாருக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். தாய், தந்தை கலப்பின்றி பிறந்த அந்தக் குழந்தை, கஜமுகாசுரனை வென்று தேவர்களைப் பாதுகாத்தான்.
யானைத் தலையை விநாயகருக்கு தேர்ந்தெடுத்ததன் மூலம், பல அறிவுரைகள் மனிதனுக்குத் தரப்படுகின்றன. மனிதனின் வாயும், உதடும் தெளிவாக வெளியே தெரிகிறது. மற்ற மிருகங்களுக்கும் கூட அப்படித்தான். ஆனால், யானையின் வாயை தும்பிக்கை மூடிக் கொண்டிருக்கிறது; அது வெளியே தெரியாது. தேவையின்றி பேசக்கூடாது என்பதும், தேவையற்ற பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதும் இதனால் விளக்கப்படுகிறது.
விநாயகருக்கு, “சுமுகர்’ என்ற பெயருண்டு. “சு’ என்றால் மேலான அல்லது “ஆனந்தமான’ என்று பொருள்படும். அவர் ஆனந்தமான முகத்தை உடையவர். யானையைப் பார்த்தால் குழந்தைகள் ஆனந்தமாக இருப்பது போல, பக்தர்களுக்கும் ஆனந்தத்தை தரவேண்டும் என்பதற்காக இந்த முகத்தை சிவபெருமான் அவருக்கு அளித்தார்.
விநாயகர் சதுர்த்தி நன்னாளில், “ஓம் கணேசாய நம’ என்ற மந்திரத்தை, 108 முறை சொல்லி, அருகம்புல் அணிவித்து வழிபட்டால், அவரது நல்லருளைப் பெறலாம்.
நன்றி: தினத்தந்தி ஆன்மீக மலர்...,
ஆயிரம் பொய் சொல்லி....
மனைவி: ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணுன்னு சொல்றாங்களே. நம்ம கல்யாணத்துக்கு நீங்க எத்தனை பொய் சொன்னீங்க?
கணவன்: பொண்ணு அழகா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்குன்னு ஒரே ஒரு பொய்தான் சொன்னேன்.
மனைவி:???!!!!!
காதுல விளக்கா...,?!
என் அண்ணனோட மகன் கதிரவன் , எல்.கே.ஜி படிக்குறான். ஒரு நாள் காது வலிக்குதுன்னு சொல்லி அழுதான். உடனே, ''காதுல கொஞ்சம் எண்ணெய் விடலாம்...''ன்னு சோல்லி பாட்டிலை எடுத்தாங்க. எங்க பாட்டி. சுட்டியோ தன் இரு கைகளால் காதைப் பொத்திக்கிட்டு இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சுட்டான். 'வலி அதிகமாகிடிச்சோன்னு' என்று பதறி போய் விசாரிச்சேன், ''என் காதுல திரி போட்டு விளக்கேத்தப் போறாங்க அத்தை... வேணாம்ன்னு சொல்லு அத்தைன்னு என்னை கட்டிப்பிடிச்சு அழ.. நாங்கள் சிரிச்ச சிரிப்புல சில நொடிகள் அவன் தன் காது வலியையே மறந்துட்டான்!
என்னை கண்டுபிடி....,
காண உருவம் உண்டு
கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?
கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?
விடை வழக்கம் போல அடுத்த பதிவில்.....,
சமைக்க போறீங்களா?!...,
வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.
சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு, அதை பிரிஜ்ஜில் 2, 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.
வெங்காய பக்கோடா கமகமவென்று இருக்க வேண்டுமா? பக்கோடா செய்யும் போது, பாதி வெங்காயத்தையும், சிறிது இஞ்சியையும் மிக்சியில் விழுதாய் அரைத்து, அதை மாவில் கலந்து பக்கோடா செய்யுங்கள். பிறகென்ன, வாசனை ஊரையே தூக்கும்
கதிரவனின் குறும்பை ரசித்தேன். எனக்குப் பிடித்த விநாயகக் கடவுள் பற்றிய கதையும் நன்று. எல்லாத்தையும் விட மீடியனா வெச்சிருக்கற பொம்மைங்க மனசைப் பறிக்குதும்மா... புதிருக்கு விடை தெரிஞ்சு போச்சு. காதைக்குடு சொல்றேன். ....... ரைட்டாம்மா? நான்தான் ஃபர்ஸ்ட் விடை சொல்லிருக்கேனாக்கும....
ReplyDeleteஅவியல்.....அவியல்
ReplyDeleteஒரு பொய் ஹே ஹே ஹே
காதுல விளக்கு.. சிப்பு அடங்கல.....
பகிர்வுக்கு நன்றி
என்னை கண்டுபிடி....,
ReplyDeleteகாண உருவம் உண்டு
கட்டிப்பிடிக்கத்தான் உடல் இல்லை -அது என்ன?
புகை ....
என்ன பகையோ !!
"ஆயிரம் பொய் சொல்லி.....பாவம்...
ReplyDeleteஐஞ்சுவை அவியல்" அருமையான அறுசுவைப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
சிறப்பான பகிர்வுகள் ..
ReplyDeleteமிகுந்த நன்றிகள் ..
பிள்ளையார் அவதாரத்தினை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி
ReplyDeletenakai suvai!
ReplyDeletearumai!
what? u only told 1000 lies? avvvvvvvv
ReplyDelete//மனைவி: ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணுன்னு சொல்றாங்களே. நம்ம கல்யாணத்துக்கு நீங்க எத்தனை பொய் சொன்னீங்க?
ReplyDeleteகணவன்: பொண்ணு அழகா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்குன்னு ஒரே ஒரு பொய்தான் சொன்னேன்.
மனைவி:???!!!!!
//
(அண்ணன் )உங்கள் கணவர் சொன்னதை எப்படியா பப்ளிக்கா சொல்றது ..
சுவையான அவியல்.
ReplyDeleteஜோக்! :))))
நன்றாக இருந்தது அவியல் ருசித்தேன். படங்கள் கண்ணை கவர்கின்றன். அக்கா
ReplyDeleteஅவியல் சூப்பர் !
ReplyDelete"என்னை கண்டுபிடி..... "
விடை : நிழல்
சரியாம்மா ?
அசையும் படங்கள் எல்லாம் உண்மையாகவே அசர வைத்து விட்டன அருமைங்க .
ReplyDeleteநகைச்சுவைகள் மிகவும் சுவையாக இருந்தன அதிலும் உங்கள் கணவர் சொன்ன பொய் மிக அருமை ஹீ..ஹீ
ReplyDelete