Friday, April 27, 2012

காதலியே திருமண பரிசாய்.....,



திருமண வரவேற்பில்
மணமகனிடம் கை குலுக்கி..,
புகைப்படத்திற்கும் முகம்காட்டி...,
பரிசொன்றை தந்து...., 
பத்திரமாய் பார்த்துக்கொள்ள
சொல்லிவிட்டு..., 
மணமேடை கீழிறங்கி
இருவிழி கலங்கி நின்றேன்...
பத்து வருடம் தொட்டுவிட்ட
எங்கள் காதலின் பரிசாய்..,
வரவேற்பு பத்திரிக்கையை
எனக்கு தந்துவிட்டு?!  

மணமேடையில்
மணப்பெண்ணாய் என்னவள்?!!
மணக்கோலத்தில் இருந்ததைக் கண்டு...,
அலங்கோலமாய் நான்
அழுதுகொண்டே வெளிசென்றேன்...

நான் பத்திரப்படுத்த சொன்னது
பரிசை அல்ல?! காதலியையென்று
மாப்பிளைக்கு தெரியாது...
நான் இன்றும் அவள்தந்த
வரவேற்பு பத்திரிகையையோடு.....,

 அவளின் நினைவுகளையும்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறேனென்று
என் காதலிக்கும் தெரியாது...!

19 comments:

  1. Me The First! காதலின் வேதனையை, கண் முன்னால் காதலிக்கு இன்னொருவனுடன் கல்யாணம் நடப்பதைப் பார்க்கும் சோகத்தை அழகாய், அழுத்தமாய் உணர்த்துகிறது கவிதை! அந்தக் காதலன் அப்புறம் தாடி வெச்சானா? இல்லயா?

    ReplyDelete
  2. தலைப்பும் அதற்கான விளக்கமாய் அமைந்த படைப்பும்
    அருமை.மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நான் பத்திரப்படுத்த சொன்னது
    பரிசை அல்ல?! காதலியையென்று
    மாப்பிளைக்கு தெரியாது...
    நான் இன்றும் அவள்தந்த
    வரவேற்பு பத்திரிகையை
    பத்திரப்படுத்தி
    வைத்திருக்கிறேனென்று
    என் காதலிக்கும் தெரியாது...!//

    good one!!!!

    ReplyDelete
  4. கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. நல்ல ஆக்கம் சகோ.., எனக்கு இந்த காதலும்.., அது கொடுக்கும் வலியும் பிடிக்காத ஒன்னு .., இருந்தாலும் கவிதையை ரசித்தேன் ..!

    ReplyDelete
  6. இரண்டு முறை வாசித்தேன் சகோதரி...ஏதோ நெருடலாயிருந்தது...மறுபடி பிறகு வாசித்து பார்க்கிறேன்...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. i think u come to say something, but nobody can understand it avv

    ReplyDelete
  8. இப்படி நிறைய நண்பர்களின் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன் சகோதரி..

    ReplyDelete
  9. அழகான உள்உணர்வுகளை அழுத்தமாகச் சொன்ன பதிவு.

    எனக்கு இது மிகவும் பிடித்துள்ளது.

    பலபேர்களின் வாழ்க்கையில் இதே உள்ளுணர்வுகள் தான், வெளிச்சொல்ல முடியாதபடி.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. ஒருதலைக்காதல் போல தோன்றுகிறது. காதல் வலி காதலித்தவர்களுக்குத்தான் தெரியும்.

    ReplyDelete
  11. இரசித்தேன்!நன்றி!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  12. பேஷ் பேஷ் கவிதை ரொம்ப நன்னா இருக்கு. அசதிட்டேள் போங்கோ.....வாழ்த்துகள்

    ReplyDelete
  13. nalla kavithai!

    pathira paduththalaam!

    ReplyDelete
  14. வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் சகோதரி !

    ReplyDelete
  15. கவிதை பிடிச்சிருக்கு சகோ

    ReplyDelete
  16. சோகத்தை சுமந்து நிற்கின்றது.

    அருமையான கவிதை.

    ReplyDelete
  17. யாதார்த்தம் வரிகளில்..

    ReplyDelete