Monday, May 21, 2012

சனீஸ்வரன் கருப்பாக மாறியது எப்படி? ஐஞ்சுவை அவியல்

                              
ஸ்ஸ்ஸ்ஸ் அபா..., ஏனுங்க மாமோய் அந்த ஐச் பொட்டில இருந்து கொஞ்சம் ஜில்ல்லுன்னு தண்ணி கொண்டு வாங்களேன்.

கோவிலுக்குதானே போய் வரே, அதுக்கு ஏன்  இப்படி அலுத்துக்குற புள்ள?!

ஏன் கேட்க மாட்டீங்க?  சனிபெயர்ச்சி நடந்துதனால  உங்களுக்கு இப்போ டைம் சரியில்லையாம். அதனால, நம்ம ஜோசியர் இன்னிக்கு சனீஸ்வரனை 108 சுற்று சுற்றி, கருப்பு துணி அவருக்கு சார்த்தி, எள்லாம் படைச்சுட்டு வரேன்.

ம்ம்ம் சரி, எல்லா சாமியும் சூப்பரா சிகப்பு கலர்ல இருக்கும்போது சனீஸ்வரன் மட்டுமே ஏன் கருப்பா இருக்கார்ன்னு உனக்கு தெரியுமா?

ம்ஹூம் தெரியாதுங்க மாமா.

ம்க்கும், ஜோசியம் சொன்னா மட்டும் கேட்டுக்கோ. ஆனா, இந்த மாதிரி புராண கதைலாம் கேட்காத.

சரி கிண்டலடிச்சது போதும். கதை சொல்லுங்க மாமா...,

தேவர்களில் ஒருத்தரான சனீஸரன், கால் ஊனமுற்றிருந்தாலும், அழகா, திடகாத்திரமாதான் இருந்தார். 

மனுசங்க ஊணமா பொறக்குறது சாமி செயல்ன்னு நாம சொல்றோம். அந்த கடவுளே ஊணமா பொறாந்தாரா? ஏன்? 

அது ஒரு பெரிய கதை அதை அப்புறமா சொல்றேன். இப்போ அவர் கருப்பாக மாறிய  கதைய மட்டும் சொல்றேன்.

ஏன் புள்ள, நளன் தமயந்தி கதை உனக்கு தெரியுமா?!

ம்ம் தெரியும்ங்க மாமா..,

சரி, தன் கூட  காட்டுக்கு வந்த, தன் பொண்டாட்டி தமயந்தி,  கஷ்டப் படுவதைப் பார்த்து, நளன் மனசுக்குள்ள வேதனை பட்டான்.  அவளை எப்படியாவது அவளொட அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்க ஆசை  பட்டார்.  இப்ப இருக்குற பொண்ணுங்கலாம் சின்ன சின்ன மேட்டருக்கெல்லாம் சண்டை போட்டுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போய்டுறாங்க. ஆனா, தமயந்தியோ, புருசனை விட்டு போகமாட்டேன், கஷ்ட நஷ்டத்துலயும் உங்க கூடத்தான் இருப்பேன்னு  என பதிபக்தியுடன் இருந்தா. 

ஒருநாள் ரத்திரி, அவளை ஒரு மண்டபத்தில் தனியே விட்டுட்டு நளன் போய்ட்டான். கண் முழிச்ச தமயந்தி அழுதபடியே பக்கத்து நாட்டுக்குச் போய் சேர்ந்தா. அவ அங்கிருப்பதை தெரிஞ்சுக்கிட்ட  அவ அப்பா,  தன் நாட்டுக்கு கூட்டிக்கிட்டு போய்ட்டார்.

 நளனின் திட்டம் பலிச்சு போச்சுது. ஆனா, நளன் அதுக்கப்புறமும் படத பாடுபட்டான்.  காட்டு வழியா போகும்போது, ஒரு இடத்துல  நெருப்பு பிடிச்சு எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. . அதுக்குள்ள  சிக்கிக்கிட்டு இருந்த ஒரு  பாம்பு ஐயோ! காப்பாத்துங்க! காப்பாத்துங்கன்னு  கதறிக்கிட்டிருந்துச்சு. இரக்கப்பட்ட நளன் பாம்பைப் பிடிச்சு  வெளியே விட்டான்,  அப்போ அந்த பாம்பு அவனைக் கடிச்சிடுச்சி. நளனோட உடம்புலாம்  கருப்பாகிட்டது. உன்னைக் காப்பாத்துன  என்னை கடிச்சுட்டயே!ன்னு  நளன் வருந்தினான். 

எல்லாம் நன்மைக்கேன்னு சொல்லிய பாம்பு, இனி நடக்க போகும் நிகழ்ச்சிகளை எடுத்துச்சொல்லி மறைஞ்சுட்டது. விஷம் நளனோட  உடம்புக்குள்ள  புகும்போது, அவனைப் பிடிச்சுக்கிட்டிருந்த சனீஸ்வரனும் அவஸ்தை பட்டார். ஒரு நல்லவனைப் பிடித்ததால் சனீஸ்வரனுக்கே சோதனை வந்து விட்டது. அவரும் கருப்பாகிட்டார்ன்னு ஒரு கதை. அதனால்தான், சனீஸ்வரனுக்கு கருப்பு வஸ்திரம், கருப்பு எள், நீலக்கல்ன்னு எல்லாமே கருப்பா  படைக்கிறோம்.

அப்பிடிங்களா மாமா? உங்களுக்கெப்படி தெரியும் மாமா?

தினமலர் ஆன்மீக மலர்ல படிச்சேன் புள்ள.
                                     

ஓ ஓ , அப்புறம் நான் கோவிலுக்கு போகும்போது, நம்ம தெரு முனை ரோட்டுல ஒரு நாய் அடிப்பட்டு செத்து போய் இருந்துச்சு.   நான் அருவருப்போட முகத்தை திருப்பிக்கிட்டு போயிட்டேன். செத்து போன  நாய் மேல ரோட்டுல போற வர வண்டி ஏறி பார்க்கவே குமட்டிக்கிட்டு இருந்துச்சு. 
திரும்பி வரும்போது. வண்டில இருந்து ஒருத்தர் இறங்கி அந்த நாய்கிட்ட போய் பார்த்துட்டு என்கிட்ட மண்வெட்டி கேட்டார். நானும் நம்ம பார்வதி அக்காக்கிட்ட வாங்கி குடுத்தேன்.

அவர், ரோட்டோரத்துல குழி தோண்டி, செத்த்டு போன நாயை கொஞ்சம் கூட அருவறுப்பு இல்லாம எடுத்து போய் புதைச்சிட்டாரு. சார் நீங்க ப்ளூ கிராஸோ என்னமோ சொல்றாங்களே அதுல மெம்பரா இருக்கீங்களான்னு கேட்டேன்.

இல்லம்மா, ஆனாலும் இதுப்போல நாய், காக்கா, குரங்குலாம் அடிபட்டு செத்து போய்ட்டா. அதை நாம அப்படியே கண்டுக்காம விட்டுடுறோ. இது எவ்வளவு சுகாதார கேடு  தெரியுங்களா?  துர்நாற்றம் வீசும். அந்த பிராணிகளோட உடம்புல இருக்குற கிருமிகள் காத்துல கலந்து நம்ம உடம்பு பாதிக்கும். அதனால, என் கண் முன் இதுப்போல பிராணிகள் எதாவது செத்திருந்தால்  நான் இப்படி செய்யுறேன்ன்னு சொன்னார். இத்தனைக்கும் அவர் நம்ம ஸ்டேட் கூட கிடையாது, கேரளாங்க மாமோய். 

அப்பிடியா புள்ள, எங்கிருந்தோ வந்தவருக்கு இருக்கும் அக்கறை நமக்கு நம்ம தெருவை பத்தி இல்லாம போச்சே. இனி நாமும் இதுப்போல செய்ய முயற்சிக்கனும்.
                                                       

சரி சரி சீரியசா பேசிட்டோம். ஒரு ஜோக் சொல்றேன். நேத்து டிவி பொட்டில கேட்டேன்.
முதலாளி: நாளைல இருந்து வேலைக்கு வந்துடு. சம்பளாத்தை எப்படி வாங்கிக்குறே? நாள்கணக்குலயா? இல்ல வாரக்கணக்குலயா? இல்ல மாசக்கணக்குலயா?
தொழிலாளி:  மாசக்கணக்கு சம்பளத்தை மாசக்கடைசிலயும். வாரக்கணக்கு சம்பளத்தை வாரக்கடைசிலயும், நாள் கணக்கு சம்பளத்தை டெய்லி வீட்டுக்கு போகும்போதும் வாங்கிக்குறேனுங்க.
முதலாளி: ????!!!!!!
                           

ஹா ஹா நல்லா இருக்குங்க மாமா. அப்புறம் நம்ம ராஜியோட அப்பா, தன் பேரன்கிட்ட அவன் எல்.கே.ஜி படிக்கும்போது , பெரியவங்க பேச்சை கேளு,  பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா குதிக்கனும்ன்னு அடிக்கடி  சொல்லி வளர்த்திருக்கார். 

ஒரு நாளைக்கு ஒன்பது தரம், பெரியவங்க நிக்க சொன்னா நிக்கனும், உக்கார சொன்ன உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா....,ன்னு கேட்டு கேப் விட்டா, கிணத்துல குதிக்கனும் தாத்தான்னு அழகா அப்பு பதில் சொல்வான்.  ஒரு நாள் அப்பு என்ன டென்சன்ல இருந்தானோ தெரியலை! ராஜி அப்பா எதோ  சொல்ல, அப்பு முரண்டு பிடிக்க, அப்பு, பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதினான்னு சொன்னா...., ந்னு கோவமா கேட்டு கேப் விட, 
                                 
அப்பு கோவமா, ம்ம்ம்ம் பக்கத்துல நின்னு சொல்றவங்களை பிடிச்சு கிணத்துல தள்ளி விட்டுடனும்ன்னு சொன்னதை கேட்டு ராஜி அப்பா கோவம் மறைஞ்சு சிரிச்சுட்டாராம். இதை அடிக்கடி என்கிட்ட ராஜி சொல்லி சிரிப்பா.

ம்ம்ம் என்ன மாமா, சிரிக்காம டல்லா இருக்கீங்க? எதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒண்ணுமில்ல புள்ள. நீ உன் ஃப்ரெண்ட் குழந்தை பண்ற சுட்டித்தனத்தை சொல்லி சிரிக்குறே. ஆனா, என் ஃப்ரெண்டுக்கு இன்னும் குழந்தையே பொறக்கலை அதுக்கு என்ன பண்றதுன்னு  தெரியாம தவிக்குறான். 
                             

குழைந்தை எதிர்பார்த்து இருக்கும் ஆம்பிளைங்க பாவக்காய், எலுமிச்சை சாப்பிட  கூடாது... இவை சாப்பிடால் விந்து சத்து இருக்காது... அதனால கரு நிக்காது. ஆண்கள் மாதுளைஜீஸ், பழம் அதிகம் சேர்த்துக் கொண்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.பெண்களுக்கும் கருப்பை வலிமையாக இருக்கும். வைட்-டமின்-ஏ, இதற்கு ரொம்ப முக்கியம். இது உடலிலுள்ள எப்பிதீலியல் திசுக்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருகிறது. லிவர், முட்டை, சீஸ், பட்டர், கேரட்...லாம் டாக்டர் அட்வைஸ் கேட்டு சேர்த்துக்கலாம். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முட்டைகோஸ் தவிர்க்கனும்ன்னு அறுசுவைன்னு ஒரு பிளாக் இருக்கு அதுல படிச்சேனுங்க மாமா.

சாமியை மனசுல வேண்டிக்கிட்டு நல்ல டாக்டரா போய் பார்க்க சொல்லுங்க மாமா. பத்தாவது மாசமே அழகும், அறிவும் நிறைஞ்ச குழந்த பொறக்கும்.

அறிவை பத்தி நீ பேசுறியா?! சரி என் விடுகதைக்கு விடை சொல்லு பார்க்கலாம்..,

கேளுங்க மாமா,

அண்ணனின் தயவால்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?

 ஹா ஹா அவனா? இரு இருஉன்னைவிட புத்திசாலிலாம் பிளாகுல இருக்காங்க. அவங்க சொல்லட்டும். சொல்லலைன்னா நீ சொல்லு.

ம்ம் சரிங்க மாமா.

சரி புள்ள, நான் கிளம்புறேன். இன்னிக்கு கிராம சபா மீட்டிங் இருக்கு, அதுல கல்ந்துக்கனும் வரேன் புள்ள.

25 comments:

  1. அங் இன்னிக்கு நான் தான் பஸ்ட்டு., அவியல் சுவை அருமை ..,

    சிப்பிங், என்னவொரு வில்லத்தனம் .. :)

    ReplyDelete
  2. சனீஸ்வரன் சரிதம், நாய் மேல் இரக்கப்பட்டவரின் நல்ல குணம், அப்புவின் சுட்டித்தனம் எல்லாவற்றையும் மிக ரசித்தேன். குழந்தை இல்லாதவர்களுக்காக டிப்ஸ் கொடுத்திருப்பது மிக உபயோகமான விஷயம்மா. நன்று. அவியல் இம்முறையும் மிகச் சுவை. போன முறை புதிரை உடைச்சுட்டேன்னு அண்ணன் மேல கோபமா? என் சிற்றறிவுக்கு எட்டாத புதிரைப் போட்டுட்டாங்களே அவங்க..?

    ReplyDelete
  3. அண்ணன் பற்களின் தயவால் ஆட்சி நட்த்தும் நாக்கு !

    பல்லுப்போனால் சொல்லுப் போகும் !

    ReplyDelete
  4. நாய்குட்டிகள்... நேரிலேயே பார்த்து இருக்கேனே ஹே ஹே ஹே

    ReplyDelete
  5. சனீஸ்வரன் வாகனமே காகம் தான்.. அதனால வாகனத்தோட கலர் அவருக்கும் வந்துடுச்சு போல..

    ReplyDelete
  6. சனீஸ்வரனில் தொடங்கி,ஒரு ரவுண்டு அடித்துப் பல விஷயங்களைத் தொட்டு சுவையான பதிவைப் படைச்சிட்டீங்க.

    ReplyDelete
  7. சனீஸ்வரன் கதை, குழந்தையின் சுட்டிததனம் எல்லாமே ரசிக்கும்படி இருந்துச்சு

    ReplyDelete
  8. என்னமா அவிக்குரீங்க....சப்பா........

    ReplyDelete
  9. ஏனுங்க மாமோய் அந்த ஐச் பொட்டில//

    என்னாது....??அச்சு பொட்டியா

    ReplyDelete
  10. எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது அவியல் இம்முறையும் மிகச் சுவை.சகோ

    ReplyDelete
  11. அவியல் சுவை அருமை
    மிகவும் ரசித்துச் சுவைத்தேன்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Very good presentation. Enjoyed a lot.

    ReplyDelete
  13. ’ஐஞ்சுவை அவியல்’
    தங்கள் கைமணத்தால்
    அருஞ்சுவை விருந்தாக
    அமைந்துள்ளது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. அவியல் சுவை அருமை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. ///இப்போ அவர் கருப்பாக மாறிய கதைய மட்டும் சொல்றேன். விஷம் நளனோட உடம்புக்குள்ள புகும்போது, அவனைப் பிடிச்சுக்கிட்டிருந்த சனீஸ்வரனும் அவஸ்தை பட்டார். ஒரு நல்லவனைப் பிடித்ததால் சனீஸ்வரனுக்கே சோதனை வந்து விட்டது. அவரும் கருப்பாகிட்டார்ன்னு ஒரு கதை.///

    அப்ப இந்தியாவில் 100 கோடி சனீஸ்வரன்கள் இருப்பாங்க! ஓஹோ! இதான் காரணமா வெள்ளைக்காரனுக்கு சனி பிடிகிறதில்லையா!

    ReplyDelete
  16. அவியல் ரொம்ப சுவையாக இருக்குங்க...மிகவும் ரசித்து சுவைத்தேன்.

    ReplyDelete
  17. சம்பள ஜோக் சூப்பர். சனீஸ்வரன் கருப்பாக மாறியதன் மர்மத்தை பகிர்ந்துகொண்டதற்கு உங்களுக்கு ஒரு ஐஸ்கிரீம். பிராணிகள் அடிபட்டுக்கிடந்தால் நம்மில் யாருமே கண்டுகொள்வதில்லை. சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  18. சுவையான அவியல் ! வாழ்த்துக்கள் சகோதரி !

    ReplyDelete
  19. அத்தைனையும் அருமை. நாய்களின் ஸ்கிப்பிங் ரசித்தேன். அந்த கேரளாக்காரரின் செயல் யோசிக்க வைத்தது.
    அருமையான பகிர்வு

    ReplyDelete
  20. சனியின் நிறத்துக்கான புராணக்கதை, யாரோ ஒருவரின் பலன் எதிர்பாரா உதவி, குழந்தையில்லாதவர்களுக்கான டிப்ஸ், அப்புவின் மழலைக்குறும்பு, சம்பள நகைச்சுவை என்று எல்லாச்சுவையையுமே ரசித்தேன். புதிருக்கு விடை இராஜராஜேஸ்வரி மேடம் சொன்னதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. புதமையான முறையில் அவியல் பகிர்வுக்கு நன்றி ராஜி.

    ReplyDelete
  21. சனீஸ்வரன் வரலாறு நான் அறியாத விடயம்
    நாய் இரக்கம் கொண்டவர்,மற்றும் அப்பு
    என வழமை போல இன்றைக்கும் அவியல்
    சுவைதான் அக்கா

    ReplyDelete
  22. சனீஸ்வரன் கதை அருமை சகோதரி...
    ருசித்துப் புசிக்க அருமையான ஐஞ்சுவை சமையல்...

    ReplyDelete