Tuesday, November 13, 2012

தலை தீபாவளி


வந்து போனது தடாலடி தீபாவளி!!
புது தம்பதியினருக்கு இது தலை தீபாவளி...,
மாப்பிள்ளை முறுக்கில் புது மணமகனும்...,
தேவதையின் வரவாய் அந்த புது பெண்ணும்...,
அவள் தாய் வீட்டு அழைப்பை ஏற்று
செல்ல தயார் ஆகிறார்கள்.

அவளோ சிறகடித்து வானில் பறக்கிறாள்...,
தன் தாய் வீட்டிற்கு போவதற்கு!!
தாயின் அன்பும்...,  தந்தையின் பாசமும்...,
கிடைத்தது மணமாகும் முன்பு!!

இப்போதும் கிடைக்கிறது...,  ஆனால்,
பெற்றோரை பிரிந்து வேறு மாநிலத்தில்
வாழுகிறாள்!!  வாடுகிறாள்..., அவர்களின் பிரிவில்.
ஆனால், இன்றோ தீபாவளி கொண்டாட்டம்!!
அந்த, சந்தோஷத்தில் துயரை மறக்கிறாள்??!!

மாப்பிளையும் ,  புது பொண்ணும்...,
அவள் வீட்டை அடைந்தார்கள்.
இல்லை..., இல்லை..., சொர்க்க
வாசலையே அடைந்தார்கள்.

பெற்றோரும், அவள் தங்கையும்,
அவர்களை வரவேற்க அங்கு
ஆனந்த கொண்டாட்டம் ஆரவாரமாய்..,
ஆனந்த கண்ணீரில் நடக்கிறது!!

இனிப்பு பலகாரம் கொடுத்து...,
இன்பத்தை குடுத்தாள் தாய்!!
தங்க மோதிரத்தை பரிசளித்து
மாப்பிளையை கொஞ்சம் தூக்கலாக
கவனித்தார் பெண்ணின் தந்தை!!

மாப்பிளையும் ஆச்சிரியத்தில் மிதக்க??!!
அந்த மோதிரத்தை புது பெண்ணின்
அழகிய மெல்லிய விரலில்
மாப்பிளை மெல்ல மாட்டினார்.
இதை கண்டு, பெண்ணின் பெற்றோர்
புரிந்து கொண்டனர் தன் மகளின்
வாழ்க்கை சந்தோஷமாய் போகிறது என்று??!!

அவளும், அவரின் அந்த காதலில்
உருகினாள் அழகாய் அன்று!!
பெண்ணின் தங்கையோ அவர்கள்
இருவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க
கை கடிகாரத்தை பரிசளித்தாள்!!
அவர்களுக்கு இன்னும் ஆச்சிரியம்!!
அதை, இருவரின் கையில் மாட்டிவிட்டாள் அவள்.

இருவரும், எழுந்து நின்று
சாமி அறைக்கு சென்று..., கடவுளிடம்
நன்றி சொன்னார்கள் இந்த நாளிற்கு!!
பின், பெண்ணின் பெற்றோரிடம்
இருவரும் சென்று பணிந்து
ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

அவளின், பெற்றோரும் அவர்களுக்கு
புது ஆடை பரிசளித்தார்கள் தம்பதியினருக்கு...,
தலை தீபாவளி என்பதால் கொஞ்சம்
கவனிப்பு தூக்கலாக இருந்தது
அன்றைய நாளின் தொடக்கம்...,

பின், காலை உணவு உண்ண தயாரானார்கள்
தாயின் கை பதத்தில் சாப்பிட்டு கொல்லை நாளானது!!!
அவளின் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகபோகுது...,
மல்லிகை பூ இட்டிலியும்,  கார சட்டினியும்...,
கமகமக்கும் ஆட்டுக்கறி கூட்டும் பரிமாறப்பட்டது...,
தித்திப்பான மஞ்சள் நிற கேசரியுடன்.

காலை உணவு உண்டு கொஞ்சம்
அரட்டை அடித்து கொண்டு இருந்தார்கள்.
பின், பெண்ணோ தாயிடம் நலம் விசாரிக்க...,
தாயும் தடபுடலாய் மதிய உணவை தயார்
செய்துகொண்டே உரையாடினாள்  அவளிடம்.

இவள், உதவ வர தாய் தடுத்தாள்...,
போய் கணவரை கவனி என்று கூறி...,
தந்தையோ வாழை இலை வாங்க சென்றார்.
அரட்டை அடித்ததில் நேரம் சென்றது...,

”பட பட பட்டாசு” வைத்து நேரத்தை கழித்தார்கள்!!
பட்டாசு லக்ஷ்மி வெடி வெடித்து குருவி வெடிகள் போட்டு
மகிழ்ந்தனர் அனைவரும் ஆனந்தமாய்!!

விருந்து தயார் ஆனது, நாக்கில் எச்சி ஊருது...,
வாசனை மூக்கை துளைக்கிறது நன்றாய்!!
மிளகு ஆட்டுக்கறி வறுவல்... ,ஆட்டுக்கறி கூட்டு...,
கோழி கூட்டு....,, மிளகு போட்ட முட்டை வறுவல்...,
சத்தான ஈரல் கூட்டு..., ஆட்டுக்கறி குழம்பு...,
கோழி சூப்பு தக்காளியும், எண்ணெயும் மிதக்க..,

ஆரோக்கியமான புதினா துவையல்...,
மொறு மொறு அப்பளம்..., கலர் கலர் வடகம்...,
செமிக்க ரசமும்...,,  தயிரும்.., உளுந்த வடையும்...,
அப்பறம் இனிப்பு பலகாரமும்...,
இப்படி நிரம்பி வலிய மனமும் வேட்டையாடியது...,
 இந்த  படையலை!!

கொஞ்சம் மனம் விட்டு அனைவரும் பேசி...,
அரட்டையடித்து..., குட்டி தூக்கம் போட்டு..,
மாலை காபி குடித்து கிளம்ப தயார் ஆனார்கள்.
இப்போது,கொஞ்சம் அந்த பெண்ணிற்கு??!!

கண்ணீர் வந்தது..., ஆனால், இந்த நாள்
அவளுக்கு சந்தோஷத்தின் மணமாய்!!
இருந்தாதால்..., அவள் கண்ணீரை கட்டுபடுத்தி..,
சந்தோஷமாய் கிளம்பினாள்...,
புகுந்த  வீட்டை நோக்கி...,
பிறந்த வீட்டில் விடை பெற்று!!டிஸ்கி: என் நாத்தனாருக்கு இது “தலை தீபாவளி”.  அதனால, தொபுக்கட்டீர்ன்னு இந்த கவிதை தோனுச்சு. கவிதைக்கு மேச்சா போட்டோ வேணும்ன்னு கூகுள்ல கேட்டா, அது, இந்த ஃபோட்டோ ஒண்ணுதான் தம்பதியாய் தீபாவளி கொண்டாடுற மாதிரி இருந்துச்சு. அதனால இந்த படத்தையே சுட்டுட்டேன்.

12 comments:

 1. ரசனைக்குரிய வரிகள் சகோதரி... போட்டோ செலக்சன் சூப்பர்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கவிதை அழகான ஒரு கதையையே சொல்லிருச்சே...! இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் எல்லாருக்கும்...

  ReplyDelete
 3. அண்ணன்கிட்டே சொல்லியிருந்தா ஆயிரம் போட்டோ எடுத்து தந்துருப்பேனே"ம்மா...! சரி போட்டோவில் இருப்பவிங்களுக்கும் ஒரு வாழ்த்தை சொல்லிருவோம்...!

  ReplyDelete
 4. தலைதீபாவளி என்றதும்
  அந்தநாள் ஞாபகம் தான் வருது
  நெஞ்சுக்குள்ளே...
  அருமையா இருக்குது கவிதை...

  ReplyDelete
 5. போட்டோல இருக்குறது பிரபல பதிவர் துளசி கோபால் அவர்கள்

  ReplyDelete
 6. துளசி டீச்சர் படத்தைப் போட்டு அறுபதாம் கல்யாணம் பண்ணினதும் வர்ற தீபாவளிங்கறதால அவங்களையே தலைதீபாவளி தம்பதியாக்கி கவிதை சொல்லிட்டம்மா. கவிதையிலயே ஒரு கதை படிச்ச ஃபீலிங். அருமை.

  ReplyDelete
 7. ரசனையான தீபாவளிக்கவிதை !

  ReplyDelete
 8. அருமை! தீபாவளி நினைவுகள் இனிமை! நன்றி

  ReplyDelete
 9. தீபாவளி (கதை) கவிதை இனிமையாய் இருந்தது

  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. தலை தீபாவளி தம்பதியினர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. >>என் நாத்தனாருக்கு இது “தலை தீபாவளி”. அதனால, தொபுக்கட்டீர்ன்னு இந்த கவிதை தோனுச்சு.

  o, idhaan kavithaiyaa? aaa girrrr

  ReplyDelete