Thursday, November 15, 2012

எனக்கு சினிமாவை பிடிக்காம போன காரணங்களில் சில...,

                                                    

1. காதாநாயகனோ இல்ல கதா நாயகியோ இல்ல ரெண்டு பேருமே கோவில் திருவிழாவுக்காக நடுத்தெருவில், ஊர்சனமே பார்க்க ஆடிக்கிட்டு இருக்கும்போது வில்லன் கோஷ்டி அருவா, துப்பாக்கி கையோடு நின்னுட்டு இருக்குறதை ஒரு பயலும் பார்க்க மாட்டான்..,

2. கதாநாயகி(கன்)க்கு தங்கச்சியா பொறந்தா கற்பழிக்கனும், தம்பியா பொறந்தா செத்துதான் போகனும்...,

3.  படம் ஆரம்பிக்கும்போது, கதாநாயகி(கன்)யோட அப்பாவோ இல்ல அம்மாவோ   ரகசியம் சொல்ல வந்தா “பொட்டு”ன்னு செத்து போறதும்..., படம் முடியும் வேளைன்னா 4 பக்கத்துக்கான வசனத்துல ரகசியத்தை சொல்லிட்டு செத்து போறது....,

4. பணக்கார வீட்டு பையனாவோ இல்ல பொண்ணாவோ பொறந்தா கண்டிப்பா திமிர் பிடிச்சு போய் அழிச்சாட்டியம் பண்ணுற கெட்டவனாத்தான் பொறப்பாங்க..., 

5. டூ பீஸ் போல இருக்குற ட்ரெஸ்ல தலை விரிச்சு போட்டுக்கிட்டு யாரையுமே மதிக்காம இருக்குற பொண்ணு.., காதல் வந்ததும்!? இழுத்து போர்த்தி சேலை கட்டிக்கிட்டு தழைய தழைய தலை வாரி கனகாம்பரம் பூ வெச்சுக்கிட்டு வரும்...,

6. செகண்ட் ஹீரோயின்ன்னு ஒருத்தி அந்த படத்துல இருந்தா நிச்சயம் ஹீரோ மேல செம லவ்வாகி டூயட்லாம் பாடி!! ஹீரோவால் நான் உன்னை என் தங்கச்சியாதான் நினைக்குறேன்ன்னு சொல்ல கேட்டு வில்லனை கட்டி கொடுமைக்கு ஆளாவா! இல்லாட்டி வில்லனால் செத்து போவா!!

7. படத்துல ஹீரோவும் அவர் அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் போல காட்டுனா கண்டிப்பா ஒண்ணா சேர்ந்து தண்ணியடிச்சுக்கிட்டும் ஃபிகரை தேத்துறதுக்கு ஐடியா குடுக்குறதுமாதான் இருக்கும்...,

8. ஹீரோயினுக்கு சோகம் வந்தா வேகமா ஓடிப்போய் “தொபுக்கட்டீர்”ன்னு கட்டில்ல விழுந்துதான் அழுவாங்க..., சேர், வாசப்படி, சோஃபால லாம் உக்காந்து அழமாட்டாங்க...,

9. செகண்டுக்கு 100 புல்லட்டை துப்புற மெஷின் கன்னிலிருந்து  50 கிமீ வேகத்துல பறக்குற குண்டுல இருந்து  (மெஷின் கன்னோட டீட்டெயில் தெரியாது. சும்மானாச்சுக்கும் சொல்லியிருக்கேன். தெரிஞ்சவங்க வந்து கிளாஸ் எடுக்காதீங்கப்பா!) லேசான தலையசைக்குறதானால ஹீரோ தப்பிச்சுடுவார்...,

10.  ஹீரோயினோட கல்யாணம் நின்னு போய்ட்டா.., கரெக்டா ஹீரோதான் பெரிய மனசு பண்ணி வாழ்வு குடுப்பார். லட்டு ஃபிகரா இருக்கவே தாலி கட்டுறவர் அட்டு ஃபிகரா இருந்தா தாலி கட்டுவாரா?!

11. ஹீரோ தத்து பிள்ளையா இருந்தா அந்த ரகசியம் கண்டிப்பா அவரோட கல்யாணத்தப்போ தான் தெரிய வரும்..

12. கிராமத்து படமா இருந்தா கண்டிப்பா ஆலமரத்தடி பஞ்சாயத்து சீன் கண்டிப்பா உண்டு. அதுல இப்படியே உக்காந்திருந்தா எப்படிப்பா?! யாராவது ஆரம்பிங்கப்பான்னு ஒரு பெருசு சவுண்ட் விடும்....,

13.  பாம்பு, குரங்கு, யானை, நாய்லாம் அந்த படத்துல இருந்தா அதுலாம் இங்க்லீஷ் தெரிஞ்சுக்கனும், வில்லன் கூட கம்பு, கத்தி சண்டை போடனும், துப்பாக்கி சுட ட்ரெயினிங் எடுத்து சர்டிஃபிகேட் வங்கியிருக்கனும்...

14. ஹீரோ கிராமத்துல பொறந்திருந்தா,  கண்டிப்பா குடுமி வெச்சுக்கிட்டு அசடாத்தான் இருக்கனும், அவங்க குடும்பத்தை இழந்து பட்டணத்துக்கு போய் கிராப் வெட்டி, கராத்தே, குங்க்ஃபூலாம் கத்துக்கிட்டு செத்தவங்களோட திதி அன்னிக்கு பழிவாங்கனும்...,

15. வில்லங்கன்னா கண்டிப்பா சுமோதான் வெச்சிருக்கனும்.., அத்தோட அவங்க ஆளுலாம் சீட்டுல உக்காரம வெளில நின்னுக்கிட்டு,  கத்தி, அருவாலாம் சுத்திக்கிட்டே போகனும்...,

16.சாமி படம்ன்னா எட்டு கால், இருபத்தி நாலு கை, மூணு கண்ணு, நாலு தலைன்னு பெயர் தெரியாத ஜந்து ஒண்ணு  கிளைமேக்ஸ்ல நெருப்பை கக்கிட்டே வரணும்.

17. பேய் படத்துல வர்ற பொம்பளை பேய்ன்னா கண்டிப்பா வெள்ளை புடவை கட்டி, பார்லர் போய் சீரா முடி வெட்டி, புருவம் திருத்தி, நகத்தை நீளமா  அழகா வெச்சிருக்கனும். ஆம்பிள்ளை பேய்ன்னா பாதி சிதைஞ்ச முகம், சுருங்கி போன தோல்ன்னு பயம் காட்டனும்..,

18. ஓப்பனிங்க் ஷாட்டுல கிராமம்ன்னா சூரியோதமும், சேவல் கூவுறதும்,  கோவம், ஏர் தூக்கிக்கிட்டு போற உழவனோடதான் தொடங்கும்.. சிட்டி படம்ன்னா பேப்பர் போடுறது, ஓட ஓட வெரட்டி கொல்லுறது, வாக்கிங்க், ஜாக்கிங்க் போறதுலதான் தொடங்கௌம்...,

19. கிராமத்து படத்துல ஒரு பொண்ணை லேசா உரசிட்டாலே  ஊரே ஒண்ணு கூடி அடிக்கும். அதுவே சிட்டி படத்துல நடு ரோட்டுல ஒருத்தனை இழுத்து போட்டு வெட்டுனாலோ இல்ல ஒரு பொண்ணை ஈவ் டீசிங் பண்ணக்கூட யாரும் கண்டுக்காமத்தான் நிப்பாங்க..

20. ஸ்கூல், காலேஜ் சப்ஜெக்ட் படமா இருந்தா ஹீரோவும் அவங்க ஃப்ரெண்ட்ஸும் கண்டிப்பா உருப்படாதவங்களாத்தான் இருப்பாங்க. கடைசி 3 ரீல்ல ஹீரோயின், இல்ல டீச்சர், இல்ல பெத்தவங்க குடுக்குற ஸ்பீச்சுல மனசு மாறி 12 வருசமா தொடாத புக்கை தொட்டு ஒரே மாசத்துல படிச்சு !! பரிட்சைல கோல்ட் மெடல் வாங்குவாங்க??!!...,

டிஸ்கி: எப்பவுமே சினிமாக்கு கூட்டி போனால் வேண்டா வெறுப்பாத்தான் போவேன். ஆனா, அதுக்கு காரணம் தெரியாது. வளர்ந்த பின் தான் காரணம் தெரியுது. கதை, லொக்கேஷன், ஆக்டர்ஸ் மாறினாலும் அடிப்படை விஷயங்கள் மட்டும் மாறுறதே இல்ல.  அதனாலயே சினிமா பார்க்குறதே பிடிக்காம போய்ட்டுது. இது சில காரணங்கள்தான் இன்னும் சில காரணங்கள் இன்ன்மொரு பதிவில்....,

14 comments:

 1. சரியா சொன்னிங்க .. அதான் நான் மாசம் 5 படம் பார்ப்பதுடன் நிறுத்திக்கிறேன் ...

  ReplyDelete
 2. படமே அருமை! நன்றி!என்னுடைய வலைப்பூவில் "நலம் தருவாய் நரசிம்மா!" மற்றும் "வாழ வை!" கவிதைகள். தங்களின் தகவலுக்கு! நன்றி!

  ReplyDelete
 3. இன்னும் ஒரு பதிவா.போதுங்க இப்பவே கண்ணைக் கட்டுது..அடுத்தப் பதிவுல எப்படியெல்லாம் சீன் வைக்கணும்ன்னு சொல்லணும்..ஓ.கே வா..இலவச விளம்பரம் போட தளம் இல்லைன்னு நெனச்சேன் இங்க போடலாம் போலிருக்கே..ஹிஹிஹி

  ReplyDelete
 4. என்னே ஒரு கவனிப்பு...! ஒரு புத்தகமே போடலாம் போலிருக்கே...

  நன்றி சகோதரி...
  tm5

  ReplyDelete
 5. நீங்க சொன்ன இத்தனை காரணங்களுக்காவே எங்க ஊர்க்காரர் ஒருத்தர் படம் பார்க்கிறார்!

  ReplyDelete
 6. //ஹீரோயினுக்கு சோகம் வந்தா வேகமா ஓடிப்போய் “தொபுக்கட்டீர்”ன்னு கட்டில்ல விழுந்துதான் அழுவாங்க..., சேர், வாசப்படி, சோஃபால லாம் உக்காந்து அழமாட்டாங்க...//

  சூப்பர்...

  ReplyDelete
 7. இதெல்லாம் வரலைன்னா...
  அது தமிழ் சினிமாவான்னு குழம்பும் ராஜி அக்கா...

  ReplyDelete
 8. என்னமா யோசிக்கிறாங்கப்பா !!!!!!...........:))))
  சரிவாங்க அக்கா சரஸ்வதி சபதம் பாக்கப் போவம் :)

  ReplyDelete
 9. ஒரு சில படங்கள் இதுபோன்ற
  சம்பிரதாயங்களில் இருந்து
  விடுபட்டு நன்றாக வந்திருந்தாலும்..
  பொதுவாக நீங்கள் சொன்னது போலவே
  திரைப்படங்கள் வருகின்றன....
  இதையெல்லாம் நெற்றிக்கண் திறந்து
  குற்றம்னு சொன்னா
  போய்யா பார்க்கலேன்னா
  பார்க்கிறவன யாவது பார்க்கவிடுன்னு
  சொல்லிடுவாங்க...

  உங்க பதிவுகளில் அந்த ஆதங்கம் தெரிகிறது..

  ReplyDelete
 10. சில படங்கள் நல்லாதானே இருக்கு. ஆனா பெரும்பாலான படங்கள் நீங்க சொன்னபடிதான் இருக்கு. கேட்டா ஜனங்க அதத்தான் ரசிக்கராங்கன்னு சொல்லிடராங்க.

  ReplyDelete
 11. முதலில் பதிவுக்கு எனது பாராட்டுக்கள் படிக்க மிக நன்றாக இருந்தது.


  ///எனக்கு சினிமாவை பிடிக்காம போன காரணங்களில் சில...,///

  //காதாநாயகனோ இல்ல கதா நாயகியோ இல்ல ரெண்டு பேருமே கோவில் திருவிழாவுக்காக நடுத்தெருவில், ஊர்சனமே பார்க்க ஆடிக்கிட்டு இருக்கும்போது வில்லன் கோஷ்டி அருவா, துப்பாக்கி கையோடு நின்னுட்டு இருக்குறதை ஒரு பயலும் பார்க்க மாட்டான்..,///

  என்னங்க அரைகுறையாக ஆடை உடுத்தி கொண்டிருப்பதை பார்ப்பார்களா அல்லது அருவாவை பார்ப்பார்களா


  /படம் ஆரம்பிக்கும்போது, கதாநாயகி(கன்)யோட அப்பாவோ இல்ல அம்மாவோ ரகசியம் சொல்ல வந்தா “பொட்டு”ன்னு செத்து போறதும்..., படம் முடியும் வேளைன்னா 4 பக்கத்துக்கான வசனத்துல ரகசியத்தை சொல்லிட்டு செத்து போறது....,///

  படம் ஆரம்பிக்கும் போது பொட்டுன்னூ போனா ஃப்ளாஷ் பேக்குல காண்பிக்கலாம் ஆனா படம் முடியும் போது அப்படி செய்ய முடியாதே


  ///பணக்கார வீட்டு பையனாவோ இல்ல பொண்ணாவோ பொறந்தா கண்டிப்பா திமிர் பிடிச்சு போய் அழிச்சாட்டியம் பண்ணுற கெட்டவனாத்தான் பொறப்பாங்க...,//

  பணம் இருக்குற இடத்திலதாங்க திமிர் இருக்கும் ஆனா பணமில்லாதவர்களிடம்தான் நாலு பேருக்கு உதவும் மனப்பான்மை இருக்கும்


  ///டூ பீஸ் போல இருக்குற ட்ரெஸ்ல தலை விரிச்சு போட்டுக்கிட்டு யாரையுமே மதிக்காம இருக்குற பொண்ணு.., காதல் வந்ததும்!? இழுத்து போர்த்தி சேலை கட்டிக்கிட்டு தழைய தழைய தலை வாரி கனகாம்பரம் பூ வெச்சுக்கிட்டு வரும்..///


  அப்படி அவ்ரகள் சேலைகட்டவில்லை என்றால் கதாநாயகன் எப்படி சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்ரு பாட முடியும்


  ///படத்துல ஹீரோவும் அவர் அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் போல காட்டுனா கண்டிப்பா ஒண்ணா சேர்ந்து தண்ணியடிச்சுக்கிட்டும் ஃபிகரை தேத்துறதுக்கு ஐடியா குடுக்குறதுமாதான் இருக்கும்...///


  நண்பர்கள் என்றாலே சேர்ந்து தண்னி அடிப்பதும் பிகரை தேத்துறதுதானே அதை விட்டு இரண்டு பேரும் சமுக சேவை பண்ணுற மாதிரியா காண்பிக்க முடியும்

  //ஹீரோயினுக்கு சோகம் வந்தா வேகமா ஓடிப்போய் “தொபுக்கட்டீர்”ன்னு கட்டில்ல விழுந்துதான் அழுவாங்க..., சேர், வாசப்படி, சோஃபால லாம் உக்காந்து அழமாட்டாங்க...,///

  கட்டிலதானே பெட்சிட் இருக்கும் கண்ணை துடைப்பதற்கு பெண்கள் அழும் போது துண்டு எல்லாம் எந்த மூலைக்கு


  ///ஹீரோயினோட கல்யாணம் நின்னு போய்ட்டா.., கரெக்டா ஹீரோதான் பெரிய மனசு பண்ணி வாழ்வு குடுப்பார். லட்டு ஃபிகரா இருக்கவே தாலி கட்டுறவர் அட்டு ஃபிகரா இருந்தா தாலி கட்டுவாரா?!////


  அட்டு ஃபிகரா இருந்தா பக்கத்தில் இருக்கும் நண்பரையல்லாவா இழுத்து மாட்டிவீடுவார்


  ///பேய் படத்துல வர்ற பொம்பளை பேய்ன்னா கண்டிப்பா வெள்ளை புடவை கட்டி, பார்லர் போய் சீரா முடி வெட்டி, புருவம் திருத்தி, நகத்தை நீளமா அழகா வெச்சிருக்கனும். ஆம்பிள்ளை பேய்ன்னா பாதி சிதைஞ்ச முகம், சுருங்கி போன தோல்ன்னு பயம் காட்டனும்..,///


  அழகான பொண்ணுங்கதாங்க பேய்ங்க அதை கட்டிகிட்டா ஆண்கள்பாதி சிதைஞ்ச முகம், சுருங்கி போன தோலாகத்தான் ஆகி போவார்கள்


  ///ஓப்பனிங்க் ஷாட்டுல கிராமம்ன்னா சூரியோதமும், சேவல் கூவுறதும், கோவம், ஏர் தூக்கிக்கிட்டு போற உழவனோடதான் தொடங்கும்.. சிட்டி படம்ன்னா பேப்பர் போடுறது, ஓட ஓட வெரட்டி கொல்லுறது, வாக்கிங்க், ஜாக்கிங்க் போறதுலதான் தொடங்கௌம்...,////

  என்னங்க கிராமத்தை காட்டும் போது புல்லட் ரயிலும் 5 ஸ்டார் ஒட்டலா காட்ட முடியும் அப்ப்டி காட்டுனா நீங்கதான் சும்மா விட்டுருவிங்களா என்ன. இதுக்கே இந்த மாதிரி கும்மா குத்து வுடுற நீங்க அப்புறம் என்ன குத்து குத்துவீங்க


  //கி/ராமத்து படத்துல ஒரு பொண்ணை லேசா உரசிட்டாலே ஊரே ஒண்ணு கூடி அடிக்கும்///

  ஆனா பட்டண்த்தில் ஊரில் உள்ளவர்கள் எல்ல்லோரும்ல உரசிக்கிட்டே இருப்பாங்க பட்டணத்துல் கூட்டம் இருபதுனாலா அதுலாம் சகஜமுங்க  //எப்பவுமே சினிமாக்கு கூட்டி போனால் வேண்டா வெறுப்பாத்தான் போவேன். ஆனா, அதுக்கு காரணம் தெரியாது. //


  சினிமாவுக்கு உங்க வீட்டுகாரர் உங்களை கூட்டிப் போனால் குழ்ந்தைகளையும் அம்மா அப்பாவையும் கூட்டிச் செல்வார் ஆனால் உங்களுக்கு படத்தில் வரும் கதாநாயகன் போல பைக்கிலோ ஜீப்பிலோ வைத்து உயிரின் உயிரே என்று பாடி கூட்டிச் செல்லவில்லை என்பதால்தான் உங்களுக்கு படத்திற்கு போக புடிக்கவில்லை

  சரிதானே.....


  நான் இதோட நிறுத்திகிறேன் காரணம் பேய் படத்துல வர்ற பொம்பளை பேய் நேர்ல வருதுங்கா ஹீ.ஹீ

  ReplyDelete
 12. ஆகா எவ்வளவு விஷயங்கள் சொல்லியிருக்கீங்க ஆனால் இதையெல்லாம் தவிர்த்து கதையே உருவாக்க முடியாது போலிருக்கே

  ReplyDelete
 13. நல்லாப் படம் பார்த்துத்தான் முடிவுக்கு வந்துள்ளீர்கள். தொடர்ந்து பார்த்தால் இன்னும் பல விடயங்கள் கிடைக்கும்.

  ReplyDelete