சனி, நவம்பர் 17, 2012

நானும் நடிகைதான்..,

பாதத்தில் புரளும்
கொசுவத்தை சற்றுத் தூக்கிப் பிடித்து,

சப்தமிடும் கணுக்கால்
கொலுசு வெளித் தெறிய..,

சிணுங்கும் கண்ணாடி வளையலும்,
மருதாணி சிவப்பேறிய கைகளாலும்
உயர்த்திப் பிடித்து,

சாலையோரம் தேங்கியுள்ள
நீரில் கால் நனைத்து,
நேற்றிரவு பெய்த மழையின்
மீதத்தை சேமித்திருக்கும்
இலை பிடித்து இழுத்து,

வேலியோரத்து பூக்களின்
தேனை வண்டுக்கு தெரியாமல்
களவாடி செல்கையில்,

வாகனங்களில் செல்வோரின்
ஏளனப் பார்வைக்கு பயந்து,
கைகள் தன்னிச்சையாக
கொசுவத்தை விட்டு...,

என்னிலிருந்து மாறுபட்டு
பதவிசாக நடப்பதாக
நடிக்க ஆரம்பிக்கிறேன் நான்....,

12 கருத்துகள்:

 1. இந்த உலகில் எல்லோறும் ஏதோ ஒரு விதத்தில் நடித்துக்கொண்டுதான் இருக்கின்றோம் கவிதை அழகு

  பதிலளிநீக்கு
 2. நீங்க ஒரு நல்ல நடிகைதானே..

  பதிலளிநீக்கு
 3. உலகமே நாடகமேடை ஒவ்வொருவரும் நடிக்கிறார்கள்..!

  பதிலளிநீக்கு
 4. ஒட்டியில் பதிவுகளை வேகமாக தேர்ந்தெடுக்க முடிகிறது.
  இதனால் எனக்கு ஒட்டி பிடிக்கும்

  http://otti.makkalsanthai.com

  பயன்படுத்தி பாருங்கள் உறவுகளே!! ஒட்டி உங்களுக்கும் பிடிக்கும்

  பதிலளிநீக்கு
 5. ஆமா எல்லாருமே நடித்துக்கொண்டுதானிருக்கிரார்கள்.

  பதிலளிநீக்கு
 6. தினம் தினம் எத்தனை எத்தனை வேசங்கள்...!

  நல்ல வரிகள் சகோதரி...tm5

  பதிலளிநீக்கு
 7. நாம் எல்லோருமே நடிக்க பிறந்தவர்கள் ,நடிக்க தெரிந்தவர்கள் தானே?

  பதிலளிநீக்கு
 8. இரசித்தேன்!பகிர்விற்கு நன்றி! என்னுடைய வலைப்பூவில்"நலம் தருவாய் நரசிம்மா! மற்றும் வாழ வை பதிவுகள்~ வருகை தாருங்கள்

  பதிலளிநீக்கு
 9. வாழ்க்கையில் பலநேரங்களில் சுயங்களை தொலைத்துவிட்டு நடிக்கத் தான் வேண்டி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. ஓம்! ஒவ்வொரு வகையிலும் அனைவரும் தெரிந்தோ, தெரியாமலோ நடிகர்கள் தான்.
  நல்ல வரிகள்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 11. நாளொன்றுக்கே எத்தனை விதமாக நடிக்கவேண்டியிருக்கிறது ராஜி....அருமையான கவிதை !

  பதிலளிநீக்கு
 12. நடமாடும்
  நந்தவனம்
  என்றார் என்னை
  நானோ நொந்தவனமாக
  நடக்கிறேன்....
  எங்கோ ஒரு நடிகை சொன்னது ஞாபகம் சகோதரி...
  கவிதை நல்லா இருக்குது....

  பதிலளிநீக்கு