Tuesday, November 06, 2012

தியாகிகள்- கடல் கடந்து வாழும் என் சகோதரர்களுக்கு சமர்ப்பணம்




வளமையான
வாழ்விற்காக...,
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள்!!

வறுமை என்ற
சுனாமியால்!?
அரபிக்கடலோரம்
கரை ஒதுங்கிய
அடையாளம் தெரிந்த
நடைபிணங்கள்!!

சுதந்திரமாக
சுற்றி திரிந்தபோது
வறுமை எனும்..,
சூறாவளியில் சிக்கிய
திசைமாறிய பறவைகள்1!

நிஜத்தை தொலைத்துவிட்டு..,
நிழற்படத்திற்கு
முத்தம்கொடுக்கும்
அபாக்கியசாலிகள் !!

தொலைதூரத்தில்
இருந்துகொண்டே?!
தொலைபேசியிலே...,
குடும்பம் நடத்தும்
தொடர்கதைகள் !

கடிதத்தை பிரித்தவுடன்
கண்ணீர் துளிகளால்
கானல் நீராகிப் போகும்
மனைவி எழுதிய
எழுத்துக்கள்!

ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம் நடத்தும்
கம்ப்யூட்டர்வாதிகள் !

நலம் நலமறிய
ஆவல்..., என்றால்
பணம் பணமறிய
ஆவல்..., என கேட்கும்
. டி . எம் . மெஷின்கள்??!!


பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறிகொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள்!!
.சி .காற்றில்
இருந்துக்கொண்டே...,
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே
வாரிசுகளை...,
வாரியணைத்து...,
கொஞ்சமுடியாத
கல்நெஞ்சக்காரர்கள் !

தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகளுக்கு சொந்தக்காரர்கள்

”அபஷி” என்ற அரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின் மூலம்
அர்த்தமானவர்கள் !


உழைப்பு என்ற
உள்ளார்ந்தஅர்த்தத்தை
உணர்வு பூர்வமாக
உணர்ந்தவர்கள்!
”முடியும்” வரை
உழைத்துவிட்டு...,
”முடிந்தவுடன்
ஊர்செல்லும்
”நோயாளிகள்”!
கொளுத்தும் வெயிலிலும்
குத்தும் குளிரிலும்
பறக்கும் தூசிகளுக்கும்
இடையில் பழகிப்போன
ஜந்துகள்!


பெற்ற தாய்க்கும்...,
வளர்த்ததந்தைக்கும்..,
கட்டிய மனைவிக்கும்...,
பெற்றெடுத்தகுழந்தைக்கும்...,
உற்ற குடும்பத்திற்கும்...,
இடைவிடாது உழைக்கும்
”தியாகிகள்” 
 

டிஸ்கி: சிங்கப்பூர்ல இருக்கும் என் அண்ணாக்கிட்ட விளையாட்டா உனக்கென்ன அண்ணா?! வெளிநாடுல இருக்கே! வாழ்க்கை சொர்க்கம்ன்னு கலாய்ப்பது வழக்கம். ”எங்க” வாழ்க்கை எப்படி இருக்குன்னு இந்த கவிதை பார்த்து தெரிஞ்சுக்கோம்மான்னு அனுப்பினார். ரொம்ப நாளா இது மெயில்ல இருந்துச்சு. நேத்து மனோ அண்ணா பிளாக்குல “வெளிநாட்டில் வாழும் ஏழைகள்”ன்னு போஸ்ட் போட்டிருந்தார். அதை படிச்சதும் இந்த கவிதையை போஸ்ட் போடனும்ன்னு தோணுச்சு. இந்த கவிதை சுட்டதுங்கோ. என்னுதில்லை. 

15 comments:

  1. ச்சே..சகோதரி கவிதயெல்லாம் பின்னுறாங்களேன்னு
    நெனச்சு ஆச்சர்யப்பட்டு வாசிச்சுக்கிட்டே வந்தேன்..அப்புறம்தான் சுட்டதுதுன்னு தெரிஞ்சது..தமிழ்மணத்துல கூட இணைக்காம் எங்க போனிங்க..

    ReplyDelete
    Replies
    1. உண்மையை ஒத்துக்கிட்டது தப்போ?!

      Delete
  2. சில இடங்கள் மிகவும் அற்புதம்.. ரசித்தேன்..ஏ.சி காற்று,முடியும் வரை எனத்தொடங்கும் இரண்டும் பிடித்தது..கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  3. வெளிநாட்டு வாழ்கையை அப்படியே படம் பிடிக்கிறது கவிதை...!

    ReplyDelete
  4. நலம் நலமறிய
    ஆவல்..., என்றால்
    பணம் பணமறிய
    ஆவல்..., என கேட்கும்
    ஏ . டி . எம் . மெஷின்கள்??!!



    ஏ .சி .காற்றில்
    இருந்துக்கொண்டே...,
    மனைவியின்
    மூச்சுக்காற்றை
    முற்றும் துறந்தவர்கள் !




    வலி மிகுந்த வரிகள்

    பெற்ற தாய்க்கும்...,
    வளர்த்ததந்தைக்கும்..,
    கட்டிய மனைவிக்கும்...,
    பெற்றெடுத்தகுழந்தைக்கும்...,
    உற்ற குடும்பத்திற்கும்...,
    இடைவிடாது உழைக்கும்
    ”தியாகிகள்”

    ஆம் தியாகிகள்

    ReplyDelete
  5. பகட்டான வாழ்க்கை வாழ "எல்லாருமே" வெளிநாடு போவதில்லை என்ற உண்மையும் உண்டும்.

    ReplyDelete
  6. வறுமை நீங்கி விடும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டில் உழைத்துக் கொண்டிருப்பவர்களின் நிலையை உருக்கமாக கவிதையில் படம் பிடித்து விட்டீர்கள்.
    ஆனால் இங்கு வசதிகள் இருந்தும் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையுடன் வெளிநாடு செல்பவர்கள் நிசமாகவே வாழ்வை தொலைப்பவர்கள்தான்

    ReplyDelete
  7. /// பகட்டான வாழ்க்கை வாழ///

    இவர்கள் பகட்டான வாழ்க்கை வாழ சென்றவர்கள் இல்லை. தன் குடும்பம் நலமாக இருக்க பலி ஆடாக சென்றவர்கள்.

    ///பணத்திற்காக
    வாழக்கையை
    பறிகொடுத்த
    பரிதாபத்துக்குரியவர்கள்///

    தன் குடும்பத்திற்காக தன் வாழ்க்கையை பலி கொடுத்தவர்கள் இவர்கள்

    ReplyDelete
  8. ///ஏ .சி .காற்றில்
    இருந்துக்கொண்டே...,
    மனைவியின்
    மூச்சுக்காற்றை
    முற்றும் துறந்தவர்கள்//


    ஏ .சி .காற்றில் இருந்து வேலை செய்பவர்கள் தங்கள் குடுமப்தினருடந்தான் வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் அனல் காற்றில் வேலை செய்து மனைவியின் அணைப்பில் உண்டாகும் உடல் சூட்டை மறந்தவர்கள்

    ReplyDelete
  9. வெளிநாடுகளில் இருப்பவர்கள் நிலையை படம்பிடித்துக் காட்டிய கவிதை....

    ReplyDelete
  10. sako!

    ulukkiyathu...
    ovvoru varikalum!

    pakirntha ungalukkum-
    ungal arumai annaavirkkum-
    mikka nantri!

    ReplyDelete
  11. இரவில் படுக்கையில் தாரை தாரையாக குடும்பத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் இவர்கள் எப்படிம்மா வாரிசுகளை நினைக்காத கல்நெஞ்சக்காரர்களாக இருக்க முடியும்? கவிதையில முரண் தெரிகிறதே? ஆனால் கையாளப்பட்டுள்ள வார்த்தைகளில் உண்மை இருக்கிறது. நல்ல கவிதை.

    ReplyDelete
  12. கவிதை சுட்டதென்றாலும் கருப்பொருள் மிகவும் நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
  13. உண்மை வரிகள் சகோ...

    நன்றி...
    tm9

    ReplyDelete