Thursday, August 01, 2013

முதல் பதிவின் சந்தோசம் - தொடர் பதிவு


 வீட்டு வரவு செலவு கணக்கை என் மக தூயாக்கிட்ட கூட டிஸ்கஸ் பண்ணுவார் என் அப்பா.  ஆனா, என்னை ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டாங்க.  வூட்டுக்காரரோட ஏடிஎம் கார்ட், கிரெடிட் கார்ட் நம்பர் என் பையனுக்கு கூட தெரியும், ஆனா, எனக்கு தெரியும். நானா எதையாவது சமைக்க போனாலும் அதெல்லாம் வேணாம் இன்னிக்கு இட்லியும் ,  புதினா சட்னி மட்டும் செஞ்சுடு போதும்ன்னு அம்மா சொல்லுவாங்க. ரேங்க் கார்டுல நான் கையெழுத்து போட போனா, நீ போடாதேம்மா, உன் அம்மாக்கு என்ன தெரியும்ன்னு அவங்ககிட்ட வாங்கி வந்திருக்கேன்னு மிஸ் திட்டுவாங்க. அதனால, அப்பா இல்ல தாத்தா  போடட்டும்ன்னு சொல்லிடுவாங்க என் புத்திர சிகாமணிகள்.

இப்படி நண்டு, சிண்டு நட்டுவாக்களின்னு யாருமே மதிக்காத என்னை திண்டுக்கல் தனபாலன் அண்ணா தன் முதல் பதிவின் சந்தோசம் ன்ற  தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கார். அவர் மரியாதைக்கு பதில் மரியாதை செஞ்ச மாதிரியும் ஆச்சு. ஒரு பதிவு தேத்துனது மாதிரியும் ஆச்சுன்னு எழுத ஆரம்பிச்சாச்சு!!

எப்பவாவது எல்லாரும் யாராவது கவன மறதியா கவனிக்காத பேப்பரும், பேனாவும் கிடைச்சா எதாவது கிறுக்க ஆரம்பிச்சுடுவேன். அதை படிச்ச என் ஃப்ரெண்ட் நல்லா இருக்கே!! இதை என் பிளாக்குல போடுறேன்னு சொல்லி அடிக்கடி போடுவாங்க. அப்புறம், என் கவிதைக்காக  தனியா பிளாக் ஓப்பன் பண்ணி பதிவு போட்டு வந்தாங்க.


அப்போதான், கம்ப்யூட்டர் பழக கிளாசுக்கு போனேன். கிளாசுல தினமலர் மட்டும் படிக்க அனுமதி உண்டு.  .சார் இல்லாத டைம்ல என் கவிதைகள் வந்த பிளாக்குக்கு போய் வருவேன்.  ஒரு பிளாக் ஓப்பன் பண்ணனும்ன்னு நினைச்சு என் ஃப்ரெண்டு கிட்ட கூட உதவி கேக்காம, இந்த  பிளாக்கை ஆரம்பிச்சு ஒரு  கவிதையை போட்டுட்டு என் ஃப்ரெண்டுக்கு உடனே மெசேஜ் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

என்ன ஆச்சோ!? சரியா வந்ததா?!ன்னு குழப்பத்துலயே மறுநாள் கிளாசுக்கு போனா அங்க சார் இருந்தார்.  புதுசா கல்யாணம் ஆன ஜோடிலாம் ஆடி மாசம் தொடங்குறதுக்கு முன் ஒரு வாரம் எப்படி பிரியாம இருப்பாங்களோ அதுப்போல கம்ப்யூட்டர் செண்டரை விட்டு இந்த பக்கம் அந்த பக்கம் நகரலை.  இப்படியே ரெண்டு நாள் போச்சு. மூணாவது நாளும் வந்து தன் சீட்டுல உக்காந்து கண்ணுல வெளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு கிளாசை பார்த்துக்கிட்டு இருந்தார்.

திடீர்ன்னு ஒரு போன்கால். ஒரு பத்து வருசத்துக்கு முந்தி ஆடி மாசம் பிரிஞ்சிருக்குற புருசனை, ஆஃபீஸ் ஹவர்ஸ்ல, ஆஃபீஸ் போன்ல   புது பொண்டாட்டி கூப்பிட்டா எப்படி பம்மிக்கிட்டு பேசுவாரோ அதுப்போல ஏதோ குசுகுசுன்னு பேசிட்டு, கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்னு சொல்லி வெளில போய்ட்டார்.

எல்லாரும் அவ்சர அவசரமா விஜய் போட்டோ கேலரியை பார்க்குறதும், சூர்யா கல்யாண ஆல்பத்தை பார்க்குறதும், அஜீத் பொண்ணை பார்க்குறதுமா பிசியா இருந்தாங்க. நான் பட்டுன்னு என் பிளாக்கை தட்டி பார்த்தா என் ஃப்ரெண்ட் ஆதிரை ”இத்தனையும் நீயே செய்து கவிதை எழுதியது மகிழ்ச்சியா இருக்கு”ன்னு கமெண்ட் போட்டுட்டு போய்ட்டாங்க.   அதை பார்த்ததும் ஆவணி மாசம் முதல் சந்தோசப்படுற புது ஜோடி மாதிரி விசில் அடிக்காத குறை.

அப்புறமும், ரொம்ப நாளைக்கு என் பதிவுல ஆதிரை மட்டும்தான் கருத்து சொல்லுவாங்க. அடுத்து “சிரிப்பு போலீஸ்” ரமேஷ் வந்து கருத்து சொன்னதோடு கமெண்ட் மாட்ரேஷன் வைக்காதீங்க. கண்ணை கட்டுதுன்னு  ஒரு அட்வைஸ் சொல்லிட்டு போனார்.  அங்க ஆரம்பிச்சு, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன், வெறும்பய, வசந்த், பன்னிக்குட்டி ராமசாமி, அருண்பிரசாத், சிபி சார், நாஞ்சில் மனோ அண்ணா, தமிழ்வாசி பிரகாஷ், சௌந்தர், கருண், மதுரை தமிழன், நண்டு நொரண்டு, விக்கியண்ணா, ராஜா, கோவை நேரம் ஜீவா, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, கணேஷ் அண்ணா, மோகன் உமார் அண்ணா, மதுமதி, ரமணி ஐயா, சென்னைப்பித்தன் ஐயா! கோமதி அரசு, கூடல் பாலா,  கண்ணதாசன், சக்கரை கட்டி, ராஜேஸ்வரி அம்மா, வெங்கட் நாகராஜ், கீதமஞ்சரி, விச்சு, சசி, அருணா, ரூபிகா, எழில்,  சங்கவின்னு பயணப்பட்டு,  ஜீவன் சுப்பு, கோவை ஆவி,  ரூபக் குமார்  ராஜலட்சுமி பரமசிவம்,    டி.ஆர்.பி ஜோசப்,   வரை வந்து நிக்குது.

 என் முதல் பதிவான  தாயுமான சுவாமி கடவுள்  படிச்சு பாருங்க. என்ன காரணம்ன்னு தெரியலை. தோழி ஆதிரையோட கருத்து காணோம்.  நான் போடுற மொக்கைகளுக்கு தவறாம வந்து போகும் அனைத்து சகோக்களுக்கும்  கோடானு கோடி நன்றிகளை இந்த சமயத்துல சொல்லிக்குறேன்.

தொடர்பதிவுன்னா யாரையாவது அஞ்சு பேரை கோர்த்து விடனுமாம் இல்லாட்டி ரம்யா கிருஷ்ணன் சாரி பாதாள பைரவி நைட்டு கனவுல வந்து கண்ணை குத்திடுமாம். அதனால,

“கனவு மெய்ப்பட வேண்டும்” ரூபக்ராம்!

46 comments:

  1. முதல் பதிவு முத்தான பதிவு...

    மீண்டும் தொடர்பதிவா கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கவி!

      Delete
  2. இன்னிக்கு முத குத்து என் குத்து தான் போல...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
  4. முதல் ஆக்கத்தின் அனுபவம் புதிதே .அதயே மீண்டும் சுவைப்பது அதனிலும் மகிழ்வு .தொடர பதிவுக்கு அழைக்கப்பட்டவர்களும் அவரவர் அனுபவத்தைச் சொல்லக் கேட்போம் (கால நேரங்கள் இடம் கொடுத்தால் ) .அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அக்கா!

      Delete
  5. துவங்கிட்டிங்களா.... ரைட்டு..

    ReplyDelete
    Replies
    1. ரஜினிகாந்த் போல பெரிய பஸ் கண்டக்டர்ன்னு நினைப்பு. ரைட்டு குடுக்குறாரு!!

      Delete
  6. முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழி. தொடரட்டும் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி நட்பே!

      Delete
  7. தனபாலன் தயவில அடுத்த தொடர் பதிவு ஆரம்பமா!நடக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ஐயா! உங்களை சிக்க வைக்க யாராவது வருவாங்க!!

      Delete
  8. என்னுடன் ஓட்டிப் பிறந்து பின் பிரிந்த ரெட்டையனா இந்த 'ரூபக்குமார்'..ஹி ஹி ஹி... அக்காவிற்கு மட்டும் தெரிந்த ரகசியமோ ...

    அக்காவின் அன்பான அழைப்பை ஏற்று, விரைவில் 'என் முதல் பதிவு சந்தோஷத்தை பகிர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. அக்கா பாசத்துக்காக அவனவன் என்னென்னமொ செய்யுறான்!! ஆஃப்டர் ஆல் பேருல பாதி தானே! இந்த அக்காவுக்காக மாத்திக்க கூடாதா?!

      Delete
    2. அக்காவுக்காக கண்டிப்பா மாத்திக்கலாம்... தப்பு இல்ல... ஆனா 'குமார்'ங்கர பேரு பிடிக்கல... வேற எதாச்சு ஸ்டைலா வச்சிருக்கலாம்...ஹி ஹி ஹி

      Delete
  9. ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குங்க கலக்குங்க சகோதரி

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோ!

      Delete
  10. ஒரு தயக்கம் மனதில் இருந்தது... இப்போது தயக்கம் மகிழ்ச்சியாகி விட்டது... சொல்ல வார்த்தைகள் இல்லை... அன்பர்களை குறிப்பிட்டது சிறப்பு... மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. ஐயோ! இவ்வளவு பெரிய வார்த்தைலாம் சொல்ல இதில் என்ன இருக்கு அண்ணா! என்னையும் மதிச்சு தொடர்பதிவுக்கு கூப்பிட்டதுக்கு ஒரு பதில் மரியாதை அவ்வளவே!

      Delete
  11. //அஞ்சு பேரை கோர்த்து விடனுமாம்///

    ஆறு மனமே ஆறு...!

    ReplyDelete
    Replies
    1. திருத்திட்டேன் அண்ணா!

      Delete
  12. மொக்கையா சொல்லாதீங்க

    ReplyDelete
    Replies
    1. என்னது பதிவு மொக்கையா?!

      Delete
  13. ///இப்படி நண்டு, சிண்டு நட்டுவாக்களின்னு யாருமே மதிக்காத என்னை திண்டுக்கல் தனபாலன் அண்ணா///

    நானே உங்களுக்கு தம்பி மாதிரி அதுவும் என்னைவிட சின்ன புள்ளை இந்த தனபாலன் சார் அவரை அண்ணா என்று அழைத்து தங்களை என்றும் பதினாரு என்று சொல்லுகிறீர்களா என்ன

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும், விட்டா என் வீட்டு கடைக்குட்டி அப்புக்கு கூட நீங்க தம்பின்னு சொல்லுவீங்களே!!

      Delete
  14. ஓஹோ....ஆஹா....வேற சொல்ல ஒண்ணும் இல்லை....


    இனி விளைவுகள் கடுமையா இருக்கும் போல தோணுது...எனக்கு மட்டும்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!!!!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் தோழி!!

    ReplyDelete
  16. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
    ஆடிமாதம் பற்றிய வரிகள் நல்ல குசும்பு.
    நானும் எழுதி இருக்கிறேன் கணினி அனுபவம் படித்து பாருங்கள் நேரம் கிடைக்கும் போது.

    ReplyDelete
  17. இன்னொரு சுத்து வந்து உங்களைக் கூப்பிட்டாலும்
    இதே மாதிரி அசத்துவீங்கன்னு நினைக்கிறேன்.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  18. கந்தா, கடம்பா...எங்கப்பன் ஞானபண்டிதனுக்கு இன்னிக்கு ஆடிக் கிருத்திகை விசேஷமா!ரொம்ப சந்தோஷம்: இன்னிக்கு வெள்ளிக்கிழமை! முருகா, முருகான்னா (கிருபானந்த வாரியார் சொல்றாமாதிரி படியுங்க!)

    எங்க தாத்தாவிற்கு பிடித்த சொற்பொழிவாளர் இவர்! எனக்கும் தான்...!

    ReplyDelete
  19. அடடா அருவா பலமால்லா மாட்டிக்குச்சு, என் பிளாக்குல நானே கமெண்ட் போட்டதை என்னான்னு சொல்ல அவ்வ்வ்வ்....

    வாறேன் வாறேன்.

    ReplyDelete
  20. உங்கள் முதல் பதிவு அனுபவத்தை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.ஆடி மாதம் உங்களிடம் பட்ட பாடு இருக்கிறதே , ஆடிக்கு இத்தனை இடியா என்று தோன்றுகிறது.
    என்னை உங்கள் ரசிகர் மன்றத்தில் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  21. அடித்த தொடர் பதிவா? ரைட்டு..

    ReplyDelete
  22. ‘முதல்’ விஷயங்கள் எப்போதுமே இனிமையான அனுபவங்கள் தானே! அதே போல், 100ஆவது, 200ஆவது, 300ஆவது அனுபவங்களையும் விரைவில் எழுதுங்களேன்! – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
  23. ‘முதல்’ விஷயங்கள் எப்போதுமே இனிமையான அனுபவங்கள் தானே! அதே போல், 100ஆவது, 200ஆவது, 300ஆவது அனுபவங்களையும் விரைவில் எழுதுங்களேன்! – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
  24. ஆடி மாசத்துல இவ்வளவு விஷயமிருக்கா? அக்கா.. பதிவு அருமை.

    ReplyDelete
  25. டி.ஆர்.பி ஜோசப், வரை வந்து நிக்குது.//


    நல்லா எழுதறீங்க... ஆனா என் பேரைத்தான் மாத்திட்டீங்க. அது டிபிஆர். டிஆர்பி இல்ல. TRPன்னா டெலிவிஷன் ப்ரோக்ராம் ரேட்டிங். அதுவும் நல்லாத்தான் இருக்கு.

    முதல் பதிவுன்னா ஒரு நாலஞ்சி வருசம் முன்னால போவணும்... முதல்ல தேடிப்பிடிச்சிட்டு போடறேன். அழைச்சதுக்கு ரொம்பவும் நன்றிங்க.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. ஏன் இப்படி ஒரு தொடர் பதிவு எழுதினா பத்தாதா ?

    ReplyDelete
  28. ஜிறப்பு..ஜூப்பர்..

    ReplyDelete
  29. முதல் பதிவு அனுபவம் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  30. சுவாரஸ்யமான அனுபவம்.....

    நம்மையும் மாட்டி விட்டாச்சா.........:) எழுதறேன்.... கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ்.....

    ReplyDelete
  31. //உங்களை ஒரு நிகழ்ச்சிக்கு வருமாறு வீடு தேடி வந்து ஒரு அழைப்பு விடுத்த பிறகு நீங்க போகாம இருந்தா நல்லாவா இருக்கும். அதுமாதிரி என்னோட ”ஹர்ஷ் கா டிலா – ரத்த பூமி பகுதி 9” [சந்தடி சாக்குல ரொம்ப பேர் படிக்காத இந்த பதிவுக்கு ஒரு விளம்பரம்.....] பதிவுல “வெற்றிலை, பாக்கு, பூ, பழம். இனிப்போடு ஒண்ணே முக்கா ரூபா பணமும் வச்சு கூப்பிட்ட” பிறகு எழுதாம இருந்தா நிச்சயம் ”உங்களை புருஷா மிருகம் தின்னட்டும்” ந்னு வரமளித்து விட வாய்ப்பு இருக்கிறது. அதனால எழுதிட்டேன்.///

    http://venkatnagaraj.blogspot.com/2013/08/blog-post_6.html

    ReplyDelete
  32. முதல் பதிவின் சந்தோஷ நினைவுகள் படித்து மகிழ்ந்தேன்.

    //மோகன் உமார் அண்ணா, //

    வீடுதிரும்பல் மோகன் "உமார்"தானே! :))))

    ReplyDelete