Monday, December 02, 2013

இப்படிப்பட்ட மாணவர்களை என்ன செய்யலாம்!? ஐஞ்சுவை அவியல்

ஸ்ஸ்ஸ்ஸ் அபா! வெளில வேலைக்குப் போய் வீட்டுக்குள் வந்தோமா! கசகசப்பு போக கொஞ்ச நேரம் காத்து வாங்க ஃபேனுக்கடியில நின்னோமான்னு இல்ல. ச்ச்சே எப்ப பார்த்தாலும் கரண்ட் கட்.

ஆமா மாமா! தினமும் 12 மணி நேரம் கரண்ட் கட்டாகுது. எப்ப கரண்ட் கட்டாகும்ன்னு பயந்து பயந்து மிக்சில அரைக்க வேண்டியதுலாம் முதல்லியே அரைச்சு வச்சுக்குறதா இருக்கு.இந்த கரண்ட் கட்னால எந்த எலக்ட்ரானிக் பொருள், எப்ப ரிப்பேர் ஆகி என்ன செலவு வைக்கும்ன்னு தெரியல.  ம்ம்ம் சென்னைல பொறந்திருக்கலாம். நிம்மதியா இருந்திருக்கலாம்.

ரொம்ப அலுத்துக்காத! இன்னில இருந்து (2.12.2013) முதல் சென்னையிலயும் தினமும் ரெண்டு மணி நேரம் பவர் கட்ன்னு மின்சார வாரியம் அறிவிச்சிருக்கு. 

அப்படியா! மாலை ஆறு மணிக்கு முன்னயும், காலை ஆறு மணிக்கு பின்னயும் எரிய விடப்படும் தெரு விளக்குகள், கட்சிக் கூட்டம், மத விழாக்களுக்காக எரியவிடப்படும் அலங்கார விளக்குகள், பகலிலேயே தேவையில்லாம அரசு அலுவலகங்களில் எரிய விடப்படும் விளக்குகள்ன்னு இருக்குறதை அக்கறையா யாராவது அணைச்சா நல்லா இருக்கும்.

சும்மா அரசாங்கத்தையே குறைச் சொல்லாம வீடுகள்லயும் ஆளுக்கொரு ரூம்ல டிவி பார்க்காம, ஒரே ரூம்ல டிவி பார்க்கலாம். தேவையில்லாத நேரங்களில் சாமி ரூம், தெரு வாசப்படில எரியும் ஜீரோ வாட்ஸ் பல்ப்களை அணைச்சு வைக்கலாம். குழந்தைகள் தனித்தனி ரூம்ல படிக்காம ஒரே ரூம்ல படிக்க வைக்கலாம். முடிந்த வரை குழந்தைகளை ஒரே ரூம்ல படுக்க வைக்கலாம். பகல்ல ஜன்னல்லாம் திறந்து வச்சு லைட் எரிக்காம பார்த்துக்கலாம். வெயில் நேரத்துலயும் வாஷிங் மெஷின் ட்ரையர்ல துணிகளைத் துவைச்சு போடாம, துணிகளை துவைச்சு, அலசுறதை மட்டும் செட் பண்ணிக்கலாம். 

நீ சொல்றதுலாம் கூட சரியாதான் இருக்கு புள்ள. அரசாங்கத்தோடு சேர்ந்து நாமளும் பொறுப்பா நடந்துக்கனும்.

ஆனா, எனக்கொரு டவுட் மாமா. கரண்ட் கட்டுக்கு காரணம்ன்னு நீதான், நீதான்னு இப்போ ஆள்றவங்களும், ஏற்கனவே ஆண்டவங்களும் அடிச்சுக்குறாங்களே! அதைவிட்டு ஆக்கப்பூர்வமா சிந்திச்சு பிரச்சனையை சரிப்பண்ண மாட்டாங்களா!? அதுமில்லாம எதாவது ஒரு இடத்துல ரிப்பேர்ன்னு சொன்னா பரவாயில்ல. நெய்வேலி. மேட்டூர்ன்னு எங்கெல்லாம் கரண்ட் தயாரிக்குறாங்களோ அங்கெல்லாம் ஒரே நேரத்துலயா ரிப்பேர் வரும்!? 

நீயும், நானும் பேசி என்ன பிரயோஜனம்!? யோஒசிக்க வேண்டியவங்க யோசிக்கனும். நம்ம வூட்டு வேலைகளை செய்யவே அலுத்துக்குறியே! ராஜி வூட்டுக்கு எதிர்க்க செல்வின்னு ஒரு அக்கா இருக்காங்க. படிப்பறிவில்லாதவங்க. குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட அவங்க, தினமும் காலைல 4  மணிக்கு எழுந்து பஜாருக்கு போய் சில கடைகள் வாசல் தெளிச்சு கோலம் போட்டு, அதுக்கப்புறம் 2 வீடுகளில் வேலை செய்து, 9 மணிக்கு வீட்டுக்கு வந்து குளிச்சு சித்தாள் வேலை இல்லாட்டி அரிசி ஆலை வேலைக்கு போய் வருவாங்க. 

மீண்டும் சாயந்தரம் 6 மணில இருந்து 3 வீட்டு வேலைக்குப் போய் வருவாங்க. இதுக்கிடையில் அவங்க வீட்டில் சமைச்சுன்னு ஓயாம ஓடி உழைக்குறங்க. இப்படி உழைச்சு 3 வீடு கட்டி இருக்காங்க. வேலை விட்டு வரும்போது ரோடு ஓரத்துல நாம எறியும் அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குடிமகன்கள் போடும் சரக்கு பாட்டில்கள், புத்தகம்ன்னு எல்லாத்தையும் எடுத்து வந்து காசாக்கி தன் ஒரே பையனை டிப்ளமோ மெக்கானிக் படிக்க வைக்குது.

ம்ம்ம் எனக்கும் தெரியும்ங்க. இவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதுவரை யார்கிட்டயும் எதுக்காகவும் கையேந்தினதில்லைன்னு ராஜி சொல்லுவா. 

அவங்களும் அவங்க குடும்பமும் நல்லா இருக்கனும்ன்னு நாம எல்லோரும் வேண்டிக்கலாம்!! 

ராஜியோட பையன் அப்பு எட்டு மாச கைக்குழந்தையா இருக்கும்போது, அவனுக்கு கிஃப்டா வந்த டெடி பியர் பொம்மையை பார்த்தாலே அழுவான்.  முட்டிப் போட்டு நகர ஆரம்பிச்சதும் தெருக்கதவை திறந்தாலே தெருவுக்கு ஓட ஆரம்பிச்சுடுவான். அப்போ அவங்க வீட்டுக்கு எதிர்க்க பெரிய தரைக் கிணறு இருக்கும். அதனால, இடுப்புல கயிறுக் கட்டி சோஃபாவுல கட்டி வைக்க ஆரம்பிச்சா. அது தப்பு குழந்தை மனசு பாதிக்கும்ன்னு யாரோ சொன்னதால என்னப் பண்றதுன்னு தெரியாம முழிச்சா ராஜி. 

அப்புறம் அவன் பார்த்து பயப்படும் டெடி பியர் பொம்மையை வாசப்படில வச்சு பார்த்தா. பயப்புள்ள அதுக்கப்புறம் மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி டெடி பியர் பொம்மையைத் தாண்டி தெருவுக்கு ஓட ஆரம்பிக்கலியே! ராஜியும் நிம்மதியா இருந்தா.

புள்ளையை கயிறுல கட்டலாமா!? உன் ஃப்ரெண்டுக்கு அறிவே இல்லியா!? 

என் ஃப்ரெண்டை பத்தி சொல்லாதீங்க. உங்களுக்கு அறிவிருக்கா!? அப்படி இருந்தா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்!!

ஒரு சாக்லேட் ஒரு ரூபாய், இது கூட‌ 3 சாக்லேட் எம்ப்டி க‌வ‌ரை குடுத்தால், அதுக்கும் ஒரு சாக்லேட் த‌ர்றாங்க‌. உங்ககிட்ட‌ 15 ரூபாய் இருக்கு.அப்போ உங்களால எத்த‌னை சாக்லேட் வாங்க‌ முடியும்?

விடைதானே!? சொல்றேன் அதுக்கு மின்னாடி ஒரு ஜோக் சொல்றேன். கேளு..,
மூன்றாம் வகுப்பு மாணவன் :டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?
ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை சொல்றாங்கன்னு பார்க்கலாம்.


அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார் .

ஆசிரியை :மறுநாள்....  உலகத்தின் எடை என்ன ன்னு யாருக்காவது பதில் தெரியுமா!?

யாருமே பதில் சொல்லலை!!


சிரியை :- (பெருமையாக ) தான் கண்டுபிடித்த விடையை சொல்ல ....,
மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா!?


ஆசிரியை :- ?????????????????

ஹா! ஹா! சிரிச்சுட்டேன். சாக்லேட் புதிருக்கு விடை சொல்லுங்க!!

விடைதானே!? இரு ஒரு முக்கியமான ஃபோன் பண்ணனும். பண்ணிட்டு வந்து சொல்றேன்.

ம்ம்ம் போங்க மாமா! போங்க. எப்படியும் சாப்பிட வீட்டுக்குதானே வந்தாகனும்!? அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி!? 

26 comments:

  1. உண்மைதான் சகோதரி..... இன்று மின்சாரம் இல்லாமல் எதுவும் இல்லை என்றாகிவிட்டது, அதை நாம் சேமிக்க பழகி கொள்ள வேண்டும்.
    சாக்லேட் புதிருக்கு விடை.....22, சரியா ?!

    ReplyDelete
    Replies
    1. புதிருக்கு விடை சரிதான் சகோ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  2. மின்சாரே பிரதானம், ஆமா இவ்வளவு கரண்ட் கட் இருக்கே... இத்தனை பட்ஜிவுகள் எப்படி எழுதறீங்க? நிறைய பேருக்கு கருத்து சொல்றீங்க? பாராட்டுக்கள் அக்கா..

    22 சாக்லேட் வாங்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. பதிவுகள்னு படிக்கவும்... மொபைல்ல கமென்ட் போட்டேன்...

      Delete
    2. காலை 9 டூ 12 இல்லாட்டி மதியம் 12 டூ 3 மணிக்கு கரண்ட் இருக்குமே! அந்த நேரத்துல வீட்டு வேலைகளும் பெருசா இருக்காது. அந்த நேரத்துல பதிவு தேத்துறதுதான்.

      Delete
  3. 1 ரூபாய்க்கு ஒரு Chocolate வீதம் ரூ.15 க்கு 15 Chocolate-களும், 3 Chocolate Empty க‌வ‌ருக்கு ஒரு Chocolate வீதம் (5+1+1), மொத்தம் 15+5+1+1= 22 Chocolate வாங்க முடியும்...!

    எப்பூடி விளக்கம்...!

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான் அண்ணா!

      Delete
  4. அரசாங்கத்தோடு சேர்ந்து நாமளும் பொறுப்பா நடந்துக்கனும்.///உண்மையே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  5. பரவாயில்லை உங்க பிள்ளை டெட்டிபியருக்கு பயந்தது ,என் பய பிள்ள எனக்கே பயப்பட மாட்டானே !
    த.ம 3

    ReplyDelete
    Replies
    1. அறியாத குழந்தையா இருக்கும்போது பொம்மைக்கு பயப்பட்டான். இப்போ எதுக்கும் பயப்படுறது இல்ல!

      Delete
  6. //சும்மா அரசாங்கத்தையே குறைச் சொல்லாம வீடுகள்லயும் ஆளுக்கொரு ரூம்ல டிவி பார்க்காம, ஒரே ரூம்ல டிவி பார்க்கலாம். தேவையில்லாத நேரங்களில் சாமி ரூம், தெரு வாசப்படில எரியும் ஜீரோ வாட்ஸ் பல்ப்களை அணைச்சு வைக்கலாம். குழந்தைகள் தனித்தனி ரூம்ல படிக்காம ஒரே ரூம்ல படிக்க வைக்கலாம். முடிந்த வரை குழந்தைகளை ஒரே ரூம்ல படுக்க வைக்கலாம். பகல்ல ஜன்னல்லாம் திறந்து வச்சு லைட் எரிக்காம பார்த்துக்கலாம். வெயில் நேரத்துலயும் வாஷிங் மெஷின் ட்ரையர்ல துணிகளைத் துவைச்சு போடாம, துணிகளை துவைச்சு, அலசுறதை மட்டும் செட் பண்ணிக்கலாம்.///

    ஐடியா நல்லாதான் இருக்கு.. உங்க ஐடியா கூட என் ஐடியாவையும் சேர்த்தீங்கன்னா இன்னும் நிறைய மின்சாரம் சேமிக்கலாம்.

    தெருவுக்கு ஒரு கல்யாணம் மண்டபம் கட்டி அதில் ஒரே ஒரு விளக்குமட்டும் மாட்டி அதில் வசிக்கலாம்.
    அது போல தெருவுக்கு ஒரு டிவி மட்டும் இருந்தால் போதுமே. துணி துவைக்க எல்லாப் பெண்களும் ஆத்தங்ககரை குளத்தங்கரைக்கு போகலாம்

    ReplyDelete
    Replies
    1. அவசியப்பட்டால் அப்படியும் செய்யலாம். ஏன், நம்ம அம்மாக்கள், அத்தை, சித்திலாம் ஆத்தங்கரையில் குளிச்சு, துணி துவைச்சு ஆரோக்கியமா இல்லியா!?

      Delete
  7. பகிர்வுக்கு நன்றி அக்கா.

    ReplyDelete
  8. ஐஞ்சுவை அசத்தல், மின்சாரத்த தொட்டால்தான் ஷாக் அடிக்கும், இப்போ மின்சாரம் இல்லாமலேயே ஷாக் அடிக்குதே...?

    ReplyDelete
  9. மின்சார சேமிப்பு பற்றி சிறப்பா சொல்லியிருக்கீங்க....

    டெடி பியருக்கு பயந்தானா! பரவாயில்லையே....:))

    ReplyDelete
  10. சிறப்பானதொரு பதிவு.. முழுவதும் படித்தேன்.. இனிமையான, பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரி.. !

    வாழ்த்துக்கள்..!

    இன்று என்னுடைய வலையில்:

    வணக்கம்...

    நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

    அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

    சரியா...?

    உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

    அப்போ தொடர்ந்து படிங்க...

    ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

    ReplyDelete
  11. டெடி பியர் பொம்மையால இப்படியும் ஒரு உபயோகம் இருக்குன்னு இப்பத்தாம்மா புரிஞ்சுது. மின்சார சிக்கனம் முடிந்த வரை நாமும் கடைப்பிடிக்கணும்னு சொன்னது அருமை. அந்தப் புதிருக்கு விடை சொல்லி என் அறிவுத் திறமைய(?) காட்டலாம்னா... முன்னாடியே மத்தவங்க சொல்லிட்டாங்களே... அவ்வ்வ்வ்...!

    ReplyDelete
  12. சரியான நேரத்தில் சரியான பதிவு அக்கா...

    ReplyDelete
  13. மின்சார சேமிப்பு குறித்த அறிவுரைகள் சிறப்பு! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. ஒரு வாரமாய் நான் சென்னையில் இல்லை. பவர் கட்டா திரும்பவும்.?ஓயாமல் உழைக்கும் அக்காவைப் பாராட்டாமல் உங்கள் தளத்தை விட்டு நகர முடியவில்லை. அவருக்குப் பாராட்டுக்கள். பதிவைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.
    ஓயாமல் உழைக்கும் அக்காவின் உழைப்பைப் பாராட்டாமல் நகர முடியவில்லை. அவருக்குப் பாராட்டுக்கள். பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. பதிவுக்கேத்த படம்! அருமை தோழி.

    ReplyDelete
  17. அரசாங்கத்தோடு இணைந்து நாமும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். உண்மைதான்

    ReplyDelete
  18. மின்சார சிக்கனம் பற்றிய பதிவு மிக உபயோகமானது ராஜி. காசு பணம் மட்டுமல்ல, மின்சாரம், தண்ணீர், உணவுப்பொருள் போன்ற எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க குழந்தைகளுக்கும் கற்றுத்தரவேண்டும்.

    குழந்தைகளைக் கட்டிப்போட்டு வளர்ப்பதை நானும் கண்டிக்கிறேன். நீங்கள் செய்த உபாயம் ரசிக்கவைக்கிறது. பகிர்வுக்கு நன்றி ராஜி.

    ReplyDelete
  19. அவியல் நன்று. மின்சாரம் - காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிட வேண்டியிருக்கு....

    த.ம. 11

    ReplyDelete