ஆங்கில புத்தாண்டு இப்பவே எல்லா இடமும் களைகட்ட
ஆரம்பிச்சாச்சு! வாணிப நிறுவனங்கள்லாம் போட்டி போட்டுக்கிட்டு தங்களுக்குள் ஆஃபர்களை
போட்டு கல்லா கட்டுறாங்க.
அதுப்போல பெரு நகரங்கள்ல புத்தாண்டுக் கொண்டாட்டம் களைக் கட்ட ஆரம்பிச்சுடுச்சு. புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் அதனோடு மற்றைய விருந்திற்கும் சென்னையில் கூட நகரமெங்கும்
போஸ்டர்களை ஒட்டி விளம்பரபடுத்துறாங்களாம். அதை கேள்விப்பட்டபோது மனசு
கொஞ்சம் வருத்தமாச்சு.
எதற்கு தேவையில்லாத ஆடம்பரம்!? பீச்சில்
ராத்திரிவரை கும்மாளம்!? இதெல்லாம் கொண்டாடுறோமே ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டம் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு மெனக்கெட்டதுல வந்த பதிவுதான் இது.
மேல இக்கும் படத்தில் இருப்பது எகிப்து காலெண்டர். உலகின் பல்வேறு
வகையான நாடுகளுக்கு, பல்வேறு வகையான மொழிகளுக்கு, பல்வேறு வகையான இனங்களுக்குன்னு தனித்தனியா காலண்டர்கள் இருக்கு. இன்றைய வருடம் 2013 ஐ ஒப்பிடும் போது ஆசிரியன் காலண்டர் 6762 ஆண்டுகள் கொண்டது. புத்தமத காலண்டர் 2557 வருடங்கள் கொண்டது சைனீஸ் காலண்டர் டிராகன் மற்றும்
பாம்பு காலண்டர்கள் 4609 வருடங்கள்
கொண்டது. ஹீப்ரு காலண்டர் 5774 ஆண்டுகள்
கொண்டது ஹோலோசியன் காலண்டர் 12013 வருடங்கள்
கொண்டது. கொரியம் 4346 வருடங்கள்
கொண்டது. எகிப்த் காலண்டர் 4236 B.C.,ஆண்டுகள் கொண்டது.
மேல முதலில் இருப்பது சைனீஸ் காலெண்டர். அடுத்து பல்கேரியன். அதனையடுத்து பாபிலோனியன் காலண்டர்கள்ம் குறித்த படங்கள் இவை . இந்த
புதுவருட கொண்டாட்டங்கள்லாம் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் பழைய காலங்களில்
எல்லாம் வசந்த கால தொடக்கமான மார்ச் மாதத்தில் தான் கொண்டப்பட்டு வந்தன.
இயேசு
கிறிஸ்து பிறப்பதற்கு முன் இருந்த சுமார் 2000 முற்பட்ட மெசப்படோமியா நாகரிகத்தில் மார்ச் மாத மத்தியில் தான் கொண்டாட பட்டதாம். அப்பதான் வசந்தகாலம் தொடங்கும் சமயம். முற்கால ரோமானியர்கள் கூட மார்ச் 1
ம் தேதியைத்தான் புத்தாண்டின் முதல் நாளாக கொண்டாடினார்கள். அதுவும்
அந்த காலண்டரில் வெறும் பத்து மாதங்கள் கொண்டவையாகத்தான் இருந்ததாம்.
அவர்கள் மாதங்களை அந்தந்த
எண்களுடனே தொடர்புப்படுத்தி இருப்பதாகவே காலண்டர்களை வடிவமைத்தனர். லத்தின் மொழியில்
Septemன்னா seven என்பதையும், Oct ன்னா eight என்பதையும், Novem என்றால் nine என்பதையும்., decem என்றால் ten என்பதையும் குறிப்பதாகவும் வடிவமைத்தனர்.
முதன்முதலில் கி.மு 153 ம் வருடத்தில் தான்
ஜனவரி1 வருடத்தின் முதல்நாளாக கொண்டாடப்பட்டதாம். கி.மு 700 முன்பு வரை ஜனவரி
அவங்க காலண்டரில் இல்லையாம். அதன்பிறகு ரோமனின் 2 வது அரசன்
நுமாபண்டிளியஸ் ஜனவரியையும், பிப்ரவரியையும் சேர்த்தாராம். அதன் பிறகுக் கூட சில
சமயங்களில் மார்ச் 1 ம் தேதிகளில்
புதுவருட கொண்டாட்டாங்கள் கொண்டாடபட்டதாம்.
அதன் பிறகு கி.மு 46 ல் இருந்த ரோமானிய அரசன் ஜூலியஸ் சீசர்
சூரியமண்டலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ஜூலியன் காலண்டரை உருவாகினாராம். ஜூலியன் நாட்காட்டி என்பது கிமு 46 இல் ஜூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு
கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த
நாட்காட்டியாகும். இது ரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட
குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின்
கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்க்கேத்தவாறு அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும், 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும், நான்கு
ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட லீஃப் ஆண்டாக வடிவமைக்கப்பட்டது.
இந்த ஜூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும். வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். ஜூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள்
ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை
அதிகமாகத் தருகிறது. இந்த 3 நாள்
பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு
கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு
ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன. 20ம்
நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து
வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின்
நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள்
மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப்
பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு
மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைகணக்கிடுவதற்கு ஜூலியன் நாட்காட்டியையேப் பயன்படுத்துது பயன்படுத்துகின்றது.வட ஆப்பிரிக்காவின்
பெர்பெர் மக்கள் ஜூலியன் நாட்காட்டியையே தற்போதும்
பயன்படுத்துகின்றனராம் .
அதன்பிறகு
வந்த கிரிகோரியன் காலெண்டர் இயேசுவின் விருத்த சேதன விழா நாளும் இந்நாளிலேயே
கிறிஸ்துவ தேவாலயங்களை
சேர்ந்தவர்களால்
கொண்டாடப்படுது. இந்நாட்களில் பல உலக நாடுகளும் கிரிகோரிய நாட்காட்டியையே
தங்களது பொதுவான நாட்காட்டியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தப்
புத்தாண்டு நாளே உலகின் அதிகமாகக் கொண்டாடப்படும் நாளாகும்.
எங்கப்பா காலத்துலலாம் காலையில் எழுந்து குளிச்சு கோவிலுக்கு போய் அறுசுவை உணவு சாப்பிடுவங்க. புத்தாண்டு அன்னிக்கு கண்டிப்பா இன்ப்போடு துவர்ப்பு சுவை உணவும், கசப்பு சுவை சேர்ந்த உணவும் சேர்த்துக்குவாங்க. சொந்தக்காரங்களோடு சந்தோசமா இருப்பாங்களாம்.
நான் சின்னப் புள்ளையா இருந்தப்போ ஒரு வாரத்துக்கு முந்தியே க்ரீட்டிங்க்ஸ் வாங்கி ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்களுக்கு அனுப்பிட்டு கோவிலுக்கு போய் வந்து வடை, பாயாசத்தோடு விருந்து சாப்பிட்டு, ஹாயா தூங்கி எழுந்து, மாலை நேரத்துல பொதிகை சேனல்ல போடும் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்து, நைட் 12 மணி வரை முழிச்சிருந்து, தெருவிலிருக்குறவங்களுக்கும், தெரு அக்காக்களை சைட்டடிக்க வரும் அண்ணன்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிக் கொண்டாடினோம்.
இந்த காலக்கட்டத்துல நைட் 12 வரை டிவியில் ஒரு நோட்டமும், கம்ப்யூட்டர், லேப்டாப், மெயிலும், க்ரீட்டிங்க்ஸ் அனுப்பிக்கிட்டும் வாழ்த்துச் சொல்லி, புத்தாண்டுக் கொண்டாடி இனிப்போடு, பிரியாணி, கொழம்புன்னு வெளுத்துக் கட்டி, மொபைல்ல எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லி, நஸ்ரியா, ஆண்ட்ரியா, சிவக்கார்த்திகேயன், ஆர்யாக்களை டிவில பார்த்துக்கிட்டும் ஆவி, ஸ்பை, சசிகலா, எழில், சுபா, கணேஷ் அண்ணா, பிரகாஷோடு புத்தாண்டுக் கொண்டாட்டம் நடக்குது.
எது எப்படியோ! கொண்டாடும் விதம் மாறினாலும் புது வருசத்தை எந்த துக்கமுமில்லாம கொண்டாடுவோம். இன்றைய தினம் போலவே வருடம் முழுக்க கொண்டாட்டமும், சந்தோசமும் மட்டுமே எல்லோருக்கும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வணங்கிக் கேட்டுக்குறேன்.
சகோதரர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். எல்லோரும் எல்லா நலனும் பெற்று நோய் நொடி இல்லாம சந்தோசமா இருக்க இறைவனை இந்த நல்ல நாளில் வேண்டிக்குறேன்.
அறியாதன பல அறிந்தேன்
ReplyDeleteபடங்களோடு சொல்லிப்போன விதம்
தெளிவாகப் புரிந்து கொள்ள வைத்தது
எந்தத் துறையெனினும் சிறப்பான பதிவாக்கித்
தருவதில் தங்களுக்குள்ளத் திறமை
பிரமிப்பூட்டுகிறது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிப்பா!
Deletetha.ma 2
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!
Deleteஇன்ப்போடு துவர்ப்பு சுவை உணவும், கசப்பு சுவை சேர்ந்த உணவும் சேர்த்துக்குவாங்க//அதுபோல சிறந்து வாழ வாழ்த்துகிறேன்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!
Deleteகாலண்டர் பிறந்த கதையை அருமையான விளக்கப் படங்களுடன் தந்தீர்கள்!
ReplyDeleteசகோதரிக்கு நன்றி! வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அறியாத தகவல்கள்... பகிர்வுகு நன்றி..
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அறிய தகவல்களுக்கு நன்றி
ReplyDeleteவியாசர் வடிவமைத்த காலண்டர் அப்படி இப்படி என்று இன்று செய்தித் தாளிலும் இது பற்றிப் படித்தேன். இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில், சுவாரஸ்யமாய்க் கொண்டாட ஒரு வாய்ப்பு! ஆனால் நடுஇரவு வரை பீச்சில் கும்மாளம், தண்ணி பார்ட்டி போன்றவை 'ஸாரி, கொஞ்சம் ஓவர்' ரகம்! :))
ReplyDeleteபல சுவாரசியமான விவரங்களைக் கொடுத்திருக்கிறீர்கள், நன்றி ராஜி.
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிகச் சிறந்த பதிவு. உண்மை தான் எனது பதிவுகளும் கிட்டத்தட்ட இதே விடயங்களை தொட்டே செல்கின்றது வியபக்காத் தான் உள்ளது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அறிய தகவல்களுக்கு நன்றி
ReplyDeleteசுவாரசியமான தகவல்கள்.....
ReplyDeleteதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.