Wednesday, April 23, 2014

செஞ்சிக்கோட்டை இதுவரை பார்த்திடாத சில இடங்களின் தொடர்ச்சி -மௌன சாட்சிகள்

கடந்த சில வாரங்களாகக் கோட்டையினுள்ளேயும், வெளியேயும்  உள்ள பல இடங்களைப் பார்த்தோம்.. இனி செஞ்சிக் கோட்டையை ஒட்டியுள்ள சில இடங்களைப் பார்க்கலாம்.....,
ராஜகிரி கோட்டையை விட்டு வெளியே வரும்போது, கிழக்குபக்கமாக இருப்பது இந்த சததுல்லாகான் மசூதி.  இந்த மசூதி கி.பி 1717 இல்ல கி.பி 1718 ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டு இருக்கலாம்னு சொல்றாங்க.  இப்ப தொல்லியல் துறையினர் பாதுகாத்து வருவதால் யாரும் செல்ல அனுமதி கொடுக்கவில்லை.  பூட்டியே இருக்கிறது. 

அடுத்து நாம பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்று வெங்கட்ரமணர் ஆலயம். இது, ராஜகிரி கோட்டையின் கிழக்கு பக்க்தில் இருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமான,  ஒரு காலத்தில் பூஜைகளும், புனஷ்காரங்களும் நடந்த இந்த கோவில் இன்று வெறும் சுற்றுலா பயணிகள் பார்க்கும் இடங்களாக மட்டுமே இருப்பது வேதனையளிக்கும் விஷயமாகும்.  சரி, நாம இந்த கோவிலைப் பத்திப் பார்க்கலாம்....,

முத்தியாலு நாயக்கரால் கி.பி 1540- 1550 ஆண்டுக்குள் கட்டப்பட்டு இருக்கலாம் என் கருதப்படுகிறது. செஞ்சியை ஆட்சிச் செய்த நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் செஞ்சியைச் கோட்டையை சுற்றி கலை நயமிக்க கோவில்களையும் கட்டினர். இதில் முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று. இதன் கோபுரம் மிகவும் பிரமாண்டம்மாக அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.  இது, கோவிலின் முன்பக்கம். 

ஒரு பெரிய கல்தூண் கொடிமரம் போன்ற அமைப்பில் இருக்கிறது. அதில் ஆஞ்சநேயர், கருடன் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதனை அடுத்து ஒரு பெரிய இடம் பள்ளமாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் இரண்டு மண்டபங்கள் இருக்கிறது. அதில் ஒரு பக்க மண்டபம் முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது.

இது கோவில் நுழைவாயிலின் சுவரில் உள்ள தசாவதார சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. சில இதிகாசக் கதைகளும், சில அவதார கதைகளும் சிற்பமாக செதுக்கபட்டுள்ளது.
  
இதைப்போல் இருபக்கங்களிலும் உள்ள நுழைவாயில் சுவர்களில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.  ராமர் பட்டாபிஷேகம், பாற்கடலில் அமுதம் கடைவது இவையெல்லாம் தத்ரூபமாக செதுக்கபட்டுள்ளன.

முழுவதும் கல்மண்டபங்களால்  செதுக்கப்பட்ட இந்தக் கோவிலின் அழகு முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளில் வெகுவாக சிதைக்கபட்ட்டுள்ளது என வரலாற்று அறிஞர்களால் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் உள்ள சிலைகள் எல்லாம் உருக்குலைந்து காணப்படுகின்றன. கோபுர உச்சிக்கு செல்ல வழிகள் எல்லாம் அழாகாக அமைக்கப்பட்டுள்ளன கலைநயம் மிக்க இந்த கோவில் இப்பொழுது உருக்குலைந்து காணப்படுவது வேதனை அளிக்கிறது.

மாலை மயங்கும் மஞ்சள் வெயிலில் இந்த மண்டபத்தின் அழகு பார்ப்பதற்கு எத்தனை அழகாக இருக்கிறது!?  இது கல்யாண உற்சவ மண்டபம் எனச் சொல்லப்படுகிறது. மேலும், திருவிழாக் காலங்களில் இறைவனது வாகனங்கள் இங்கே வைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தூண்கள் நிறைந்த மண்டபத்தின் பின்னால் தெரியும் மேடையில் திருவிழாக் காலங்களில் உற்சவர் அலங்காரத்துடன் வைக்கப்படும் இடமாம்.  தூண்களில் எல்லாம் சிற்பங்களும், சிற்பவேலைபாடுகளும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
அழிந்த நிலையிலும்கூட அதன் அழகு ஜொலிக்கிறது என்றால் அதன் முழுமையான தோற்றம் எப்படி இருந்திருக்கும்!? முஸ்லிம் மன்னர்கள் மட்டுமின்றி, ஆங்கிலேயர்கள், பிரஞ்சுக்காரர்கள் எல்லாம் செஞ்சியின் அழகை சிதைத்து இருக்கிறார்கள்.  இதில் கொடுமை என்னனா,  ஆங்கிலேயருக்கும், பிரஞ்சுக்காரர்களுக்கும் ஐரோப்பாவில் போர் மூண்டால் தென்னிந்தியாவில் பிரஞ்சுகாரர்களின் ஆட்சியில் இருந்த செஞ்சிக்கோட்டையை தாக்குவது வழக்கமாக இருந்துள்ளதாம்.


கி.பி., 1714ல் ராஜா தேசிங்கு ஆட்சி செய்த போது ஆற்காட்டு நவாப்பின் படை செஞ்சியை சின்னாபின்னப்படுத்தியது. இந்த போரின் போது செஞ்சி நகருக்கு பெருமை சேர்த்து வந்த வெங்கட்ரமணர், பட்டாபிராமர், கோதண்டராமர், சீத்தாராமர் கோவில்கள் எல்லாம் சிதைக்கப்பட்டன.  நாம் பார்ப்பது எல்லாம் அதனுடைய எச்சங்களாகும்.

அதன் பிறகு கி.பி.,1750 வரை நவாப்புக்களும், அடுத்து பத்து ஆண்டுகள் பிரஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தனர். கி.பி., 1761ல் ஆங்கிலேயர் கைப்பற்றினர். பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் செஞ்சிக்கோட்டை தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்தது. ராஜா தேசிங்கிற்கு பின்னர் இந்து மன்னர்கள் யாரும் செஞ்சியை ஆட்சி செய்யவில்லை. இதனால் போரில் நாசப்படுத்தப்பட்ட கோவில்கள் மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. இதனிடையே 1781-ம் ஆண்டு பிரஞ்சுகாரர்கள் கோவிலின் முன் இருக்கும் தூண்களை எல்லாம் இங்கிருந்து கடத்தி, பாண்டிச்சேரியிலுள்ள துப்ளே சிலையை சுத்தி அமைத்திருக்கின்றனர்
இந்த கலைநயம் மிக்க தூண்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது!?  ராஜா தேசிங்கிற்கு பிறகு, செஞ்சியை ஆட்சி செய்தவர்கள் கோவில் சொத்துக்களை, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மானியமாக வழங்கியதால் இந்த கோவில்கள் பராமரிப்பின்றி விடப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்திய தொல்லியல் துறையினர், கலை நயம்மிக்க வெங்கட்ரமணர் கோவில், பட்டாபிராமர் கோவில்களை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இங்கே தூண்களில் இருக்கும் சிற்பங்கள் எல்லாம் இந்த கோவிலுக்கு தொண்டு செய்த ஆழ்வார்களின் சிலைகள் எனவும் சொல்லப்படுகிறது. இதேப்போல சீதாராமர் கோவிலும்சங்கராபரணி ஆற்றங்கரையில் இருந்த கோதண்டராமர் கோவிலும் தொடர்ந்து கேட்பாரற்று விடப்பட்டன. 500 ஆண்டுகள் பழமையான கோதண்டராமர் கோவிலில் வழிப்பாடு நடக்காமல் இருந்த காலத்திலும்இங்குள்ள மண்டபத்தில் செஞ்சி ஏகாம்பரேஸ்வரரும்சிங்கவரம் அரங்கநாதரும் எழுந்தருளி மாசிமக தீர்த்தவாரி நடந்து வந்ததாம்.

இது இங்க இருக்கும் துவார பாலகர்கள் சிலை. இது மூலவர் சன்னதியாகும். ஆனால் மூலவர் இல்லை. இப்பொழுது ஊர் மக்கள் சார்பில் வழிபாடு நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இரண்டு நிலை கோபுரங்களும், மூலவர் கோபுரமும், தாயார் சன்னதியும்,  உள்பிரகாரம் வெளிப்பிரகாரம், மண்டபங்கள், தூண்கள், கல்லினால் ஆன யாகக்குண்டங்கள் என பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன.

பெரிய, பெரிய பிரகாரங்களும், கோவில் தெப்பக்குளமும் உடைந்து கிடக்கிற அன்னப்பறவை  சிலைகளும் கலைநயம் மிக்க தூண்களும், பெரிய துவாரபாலகர்களும், தீர்த்தக் கிணறும் தொடர்ந்து பதிவேற்றினால் பதிவு நீளம் கருதி கனத்த இதயத்துடன் அழிந்துவிட்ட ஒரு பெரிய கோவிலின் எச்சங்களைப் பார்த்துவிட்டு அடுத்த இடத்திற்கு செல்லலாம்.
இங்கே இருப்பது ஒரு சிவன் கோவில். இங்கே கோவிலை விட செடிகள் நிறைய வைத்து பராமரிகின்றனர். பக்தர்களுக்கு பதிலாக சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர். இங்கேயும் காதல் ஜோடிகளின் தொல்லை அதிகம். இதன் கிழக்காக இருப்பது ஒரு அம்மன் கோவில். அதுபற்றி இனி பார்க்கலாம்...,
இந்த அம்மன் கோவிலின் மேல்பாகத்து கற்கள் எல்லாம் உடைக்கப்பட்டு வெறும் தூண்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால், சிதைவுற்ற நிலையிலும் கோவிலின் எழில் குறையவில்லை. அடுத்து நாம பார்க்கப்போறது பாண்டிச்சேரி வாயில். 

வெங்கட்ரமணர் கோவிலுக்கு போகும் வழியில்  சததுல்லாகான் மசூதிக்கு கிழக்கு பக்கத்தில் ஒரு மண்டபம் இருக்கு  பாண்டிச்சேரியை பார்த்தவாறு கட்டப்பட்டு இருப்பதால் இதற்க்கு பாண்டிச்சேரி வாசல்ன்னு சொல்கிறாங்க இதனுள் பாரசீக எழுத்துக்களால் சில குறிப்புகள் இருப்பதாகவும் சொல்லபடுகிறது ஆனா எப்பவும் இந்த இடம் பூட்டியே இருக்கிறது
இந்த வாசலில் தான் ஆற்காடு நபாப் சதத்துல்லாகான் பற்றி புகழ்ந்து எழுதப்பட்டு இருப்பதாவும் சொல்லபடுகிறது இந்த வட்டவடிவ மண்டபத்தின் பின்பக்கம் தெரிவது குத்தரிசி மலைன்னு சொல்வாங்க ஆனா அங்கே எல்லாம் யாரும் செல்வதில்லை யாரும் தனியாக இங்கே செல்லவேண்டாம் ஏன்னா குடிமக்கள் மட்டும் தான் இங்கே வருவார்களாம் அதற்க்கு ஏற்றார் போல் உடைந்த மது பாட்டில்களும் இங்கே சிதறி கிடக்கின்றன
தென்பக்கத்தில் இருக்கிற குத்தரிசி மலையில் கீழ் பாகத்தில் வடக்குபார்த்த அமைப்பில் இருக்கு இந்த சிவன் கோவில் செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும் இது ஒரு குகை கோவில் ஒரு பெரிய கோவிலினுள் இருக்கிற எல்லா அம்சங்களும் இங்கே இருக்கு காலபைரவர் தன வாகனத்துடன் இருக்கும் சிலை அழக்காக செதுக்கப்பட்டுள்ளது நந்திவாகனம் கிழக்குநோக்கிய ஆவுடையார் திருமேனி எல்லாம் பர்ற்பதற்கு நல்லா இருகிறது இபோழுதும் இங்கே பூஜை செய்கிற அடையாளங்கள் காணபடுகிறது
கிழக்கு பார்த்த கருவறை வாசலின் முன்பு அர்த்த மண்டபம் கட்டப்பட்டு இருக்கு இந்த லிங்கம் இணைப்புகள் உழலாமல் அங்கிருக்கும் பாறையிலேயே செதுக்கி இருகிறாங்க அது ஒரு விசேஷ அமைப்பு இங்கே இருக்கும் வெளி தூண் சுற்றுகளில் ஆஞ்சேநேயர் சிவலிங்கம் யாழி அன்னபறவை கண்ணப்ப நாயனார் வேடுவ பெண் விநாயகர் முருகர் பூதகணங்கள் பைரவர் விழணு யானை எல்லாம் இங்கே வெளியே இருக்கிற தூண்களில அற்புதமா செதுக்கப்பட்டு இருக்கு எல்லாம் அழிவுறும் நிலமையில இருக்கு இனி இந்த கோவிலின் மேலே இருக்கிற மண்டபத்தை பாப்போம்
நெல்லை குத்தி அறிசியாக்கும் மாண்டபம் இங்கே இருந்ததால் இதற்க்கு குத்தரிசி மலைன்னு பெயர் வந்ததா சொல்கிறாங்க இங்கே தெரிகிறதுதான் இந்த குத்தரிசி மண்டபம் இது சுண்ணாம்ம்பு கலவை கொண்டு செங்கற்களால் வலுவாக கட்டப்பட்ட நான்கு தூண்களுடன் நான்கு நுழைவாயிலை கொண்டு வட்டவடிவ பாறையில் சதுர மண்டபமாக கட்டப்பட்டு இருந்ததாம் இபொழுது செங்கல் சுவர்களெல்லாம் விழுந்து நான்கு தூண்கள் மட்டுமே நிற்கின்றனது இந்த மண்டபத்தில்தான் இயந்திரங்கள் ஏதும் இல்லாத அந்த காலத்தில் ஏற்றம் போன்ற அமைப்பில் மரத்தாலான உலக்கையை கயிறுகட்டி நெல்மணியை குத்தி அரிசியை பிரிதெடுத்தனராம் இங்கிருந்துதான் கோட்டைக்கு மற்றும் மக்களுக்கு தினசரி வாழ்க்கைக்கு அரிசி கொடுக்கப்பட்டதாக சொல்லபடுகிறது அதுபோல எல்லா கோட்டைகளிலும் தானிய கழஞ்சியங்கள் இருக்கு இந்த குத்தரிசி மண்டபம் போல் எங்கும் காணப்படவில்லை ஒருவேளை இங்கே நெல்மணியை குத்தி அரிசியாக சேமித்தனாரா என தெரியவில்லை     
ராஜகிரி, கிருஷ்ணகிரி கோட்டைகளில் இருப்பது போல் இங்கேயும் பாதுகாப்பு கருதி சுழலும் பீரங்கிமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேடை குத்தரிசி மண்டபம் பக்கத்தில் உள்ளது.   

இங்கே தூரத்தில் தெரிவது பெருமாள் கோவில். இந்தக் கோவில் செஞ்சி நாயக்கமன்னர்களால் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலின் தூண்கள், சிற்பங்கள் எல்லாம் சிதைந்து காணப்படுகிறது. கட்டிடங்கள எல்லாம் மிகுந்த நுட்பத்துடன் அழகாக கட்டப்பட்டுள்ளன. பதிவின் நீளம் கருதி அதை இணைக்கவில்லை. கோவில் நுழைவு வாயில் தெற்கு நோக்கியும், கர்ப்பகிரக வாயில் கிழக்கு நோக்கியும் இருக்கு. இங்கே வெளிப்புற மண்டபம் விசலாமாக மேடைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அது படைவீரர்கள் மற்றும் பணி செய்பவர்கள் மழை வெயில் காலங்களில் இளைப்பாறவும் பயன்பட்டு இருக்கலாம் என சொல்றாங்க. அதேமாதிரி இந்த கோவிலுக்கோ, மண்டபதிற்கோ செல்ல வேண்டாம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் தான் இருக்கு. இப்படியே சென்றால் பாண்டிச்சேரி நுழைவாயிலுக்கு சென்று விடலாம்.
   
இங்கே இடது ஓரத்தில் தெரிவது காவலர் கூண்டு. இதுப் போன்று கோட்டை சுவர்களை ஒட்டியும், படிக்கட்டுகள் செல்லும் இடங்களின் உச்சியிலும் அமைக்கபட்டுள்ளது. மழை, வெயில் மற்றும் இரவு நேரங்களில் கண்காணிப்பில் இருக்கும் படைவீரர்கள் இளைப்பாருவதற்காக கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் காவல் கூண்டு, சுழலும் பீரங்கி மேடை, குத்தரிசி மண்டபம், பெருமாள் கோவில், சிவன்கோவில் எல்லாம்  ஒரே படத்தில் இருக்கு.

ஒருவழியா குத்தரிசி மலையில் இருக்கிற இடங்கள் எல்லாம் பார்த்தாச்சு. முக்கியமான விஷயம் என்னன்னா இந்த குத்தரிசி மலை, சந்திரகிரி என சொல்லப்படுகிற சக்கிலிதுர்கம் மலைக்குலாம் யாரும் செல்வதில்லை. அதனால யாரும் இங்கத் தனியாகச் செல்லவேண்டாம். இனி, நாமப் பார்க்க வேண்டியது நேரே தெரிகிற கிரிஷணகிரி என சொல்லப்படும் ராணி கோட்டை. இனி அடுத்தவாரம் இந்த கிருஷ்ணகிரி என சொல்லபடுகிற ராணி கோட்டையின் வரலாறு சிறப்பு முதலியவைகளை பார்க்கலாம்.............,  

21 comments:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  2. ஒதுங்க இடம் கிடைத்தல் போதுமே... பாழ்படுத்த ஆட்கள் எங்கும் உண்டு...

    வெங்கட்ரமணர் ஆலய சிறப்புகளுக்கு நன்றி சகோதரி... படங்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா!

      Delete
  3. படங்கள் எல்லாம் அருமை வெங்கட்ரமணா கோவிலின் நிலை பார்த்தபோது மனது வலித்தது எவ்வுளவு அழகாக செதுக்கப்பட்டுள்ள தூண்கள் பார்பதற்கே அழகு அரசு மீண்டும் இதில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் யாரும் செல்லாத இடங்களுக்கு தைரியமாக சென்று தெளிவான படங்களுடன் அருமையான விளகங்களுடன் நன்றாக இருக்கிறது ராணி கோட்டையை பார்க்க ஆவலாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அரசு எதாவது நடவடிக்கை எடுத்தால்தான் மிச்சம் மீதி இருக்குறதையாவது காப்பாத்த முடியும்.

      Delete
  4. வந்து ஆற அமர சுற்றிப்பார்க வேண்டும் என்ற ஆசை பீறிடுகிறது. பார்ப்போம். தகவல்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் செஞ்சிக்கு ஒரு முறை வந்து அவசியம் சுத்திப் பாருங்க. ஆனா, இப்ப வராதீங்க. வெயில் வாட்டிடும்

      Delete
  5. எதையோ தேடப்போக தற்செயலாக இந்த பதிவை பார்க்க நேர்ந்தது. செஞ்சிக்கோட்டை வரலாறின் அத்தனை பதிவுகளையும் ஒரே மூச்சாக படித்து முடித்தேன். படங்களும் அதற்கேற்ற கட்டுரையும் விபரங்களும் மிக பிரமாதமாக கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பதிவை ரசித்து படித்து கருத்திட்டமைக்கும் நன்றி சகோ!

      Delete
  6. விரிவான விளக்கங்கள் அருமையான படங்களுடன்.
    ஏங்க சகோ, இப்படி புகைப்படமா எடுத்து தள்ளியிருக்கீங்களே உங்களுக்கு கை வலிக்கலையா???

    ReplyDelete
    Replies
    1. வீட்டு வேலைக்குதான் கைலாம் வலிக்கும். இதுப்போல ஊர் சுத்துறதுக்குலாம் வலி தெரியாது.

      Delete
  7. அந்த கோபுரமும் அந்த தசாவதார சிற்பங்களும் மிக அழகு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி!

      Delete
  8. இப்படி படமா போட்டு அந்த இடங்களை பார்க்க தூண்டிடிங்க ...

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல் பிள்ளைகளோடு ஒரு டூர் அடிங்க. ஊட்டி போன்ற இடங்கள் உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சின்னா, இதுப்போன்ற வரலாற்று பொக்கிசங்கள் மூளைக்கும், அறிவுக்கும் நல்லது.

      Delete
  9. சிறப்பான படங்கள்! நிறைய தகவல்கள்! வரலாற்று களஞ்சியமாக ஓர் சிறப்பான பதிவு! செஞ்சிக்கு கட்டாயம் ஒரு விசிட் அடிக்க தூண்டிய பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அவசியம் வந்து சுத்திப் பாருங்க.

      Delete
  10. படங்களும் பதிவும் மிக மிக அருமை தோழி.

    நான் செஞ்சியில் ராஜா கோட்டையை மட்டும் தான் பார்த்திருக்கிறேன்.
    ராணி கொட்டையையும் உங்களின் தயவில் (படங்களில்) பார்த்து விடுகிறேன்.

    தவிர பாண்டிச்சேரி கடற்கரை ஓரத்தில் நடந்து செல்லம் பொழுது ஒரு குகைபோன்ற இடம் இருக்கும். அதைச் செஞ்சிக்குப் போகும் சுரங்கப் பாதை என்று சொல்வார்கள். நானும் அவ்வளவு துர்ரத்திற்கு எல்லாம் சுரங்கப்பாதை அமைப்பார்களா... இருக்காது என்று நினைத்தேன்.
    ஆனால் உங்களின் பதிவு அது உண்மை தான் என்பதை நிறுபித்து விட்டது.
    அந்தக்கால கலைஞர்களின் கை வண்ணம் கண்டு வியக்கிறேன். அதனிலும் உங்களின் கை வண்ணம் கண்டும் வியக்கிறேன்.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  11. வாய்ப்பு கிடைக்கும்போது மறுபடியும் செஞ்சி வந்து ராணி கோட்டையை நேரில் பார்த்துடுங்க அருணா!

    ReplyDelete
  12. மிகச் சிறப்பான சிற்பங்கள் இருக்கும் போல இருக்கே.....

    நீண்ட பதிவு! இருந்தாலும் ரசித்த பதிவு.

    ReplyDelete
  13. Migavum arumai sagothari

    ReplyDelete