தமிழர்கள் விருந்தோம்பல் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்ல. தமிழர்களின் விருந்துகளில் பாயாசத்துக்கு முக்கிய இடமுண்டு. தமிழர் வீட்டு விசேசங்களில் அது நல்ல விசேசமானாலும் சரி, கெட்ட விசேசமானாலும் சரி பாயசம் கண்டிப்பா இருக்கும். கடவுளுக்குப் படைக்கப்படும் படையலிலும் பாயாசம் கண்டிப்பா இருக்கும்.
என் பெரிய பொண்ணுக்கு பால் பாயாசம் ரொம்பப் பிடிக்கும். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவசியம் செஞ்சுக் கொடுக்கனும். வீட்டுக்காரருக்கும், பையனுக்கும் பாயாசத்தோடு சில வடைகளைக் கொடுத்துட்டாப் போதும். போட்டிப் போட்டுக்கிட்டு காலிப் பண்ணிடுவாங்க. மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு பால் பாயாசம் செய்யுறது இஷ்டமும், ஈசியும்..., ரொம்ப ஈசியா கால் மணி நேரத்துல பாயசம் ரெடிப் பண்ணிடுவேன்.
தேவையானப் பொருட்கள்:
சின்ன ஜவ்வரிசி - ஒரு கப்
பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி,
சேமியா - ஒரு கைப்பிடி
சர்க்கரை - ஒரு கப்
பால் - ஒரு கப்
உப்பு - சிறிது
முந்திரி, திராட்சை - கொஞ்சம்
ஏலக்காய் பொடி - சிறிது
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பாசிப்பருப்பை கழுவி நல்லா வேக வச்சுக்கோங்க.
பாசிப்பருப்பு வெந்ததும், அதுலயே சின்ன ஜவ்வரிசியைக் கழுவிப் போட்டு வேக வைங்க. தண்ணிக் கொஞ்சம் தாராளமாவே இருக்கட்டும்.
ஜவ்வரிசி நல்லா வெந்ததும் சேமியாவை சேர்த்து வேக விடுங்க. சேமியாவை சேர்த்தப் பின் ரொம்பவும் கொதிக்க வேணாம். கரண்டிப் போட்டு அதிகம் கிளறவும் வேணாம். அப்படி கிளறினா பாயாசம் கொழ கொழன்னும் கெட்டியாவும் ஆகிடும்.
உப்பு சேர்த்துக்கோங்க.
ஏலக்காய் பொடி சேர்த்துக்கோங்க.
சர்க்கரை சேர்த்து அது கறையும் வரை கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கிங்கோங்க.
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக்கோங்க.
பாயாசம் ஓரளவுக்கு ஆறினதும் காய்ச்சுன பால் சேர்த்துக்கோங்க. பால் குறைவா இருக்குற மாதிரி தோணினால் மிக்சில போட்டு ஒரு சுத்து சுத்தி பாயாசத்துல சேர்த்துக்கோங்க. சூடான பாயசத்துல பால் சேர்த்தால் பால் திரிஞ்சுப் போய்டும்.
சுவையான பால் பாயாசம் ரெடி. நைஸ் வடைன்னு அப்புவால பேர் சூட்டப்பட்ட உளுந்து வடையும், க்றிஸ்ப்பி வடைன்னு பெரியவளால பேர் சூட்டப்பட்ட கடலைப்பருப்பு வடையும் இந்த பாயாசத்துக்கு ஏத்த ஜோடிங்க. கடலைப் பருப்பு வடை எப்படி செய்யுறதுன்னு இங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி .
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
Deleteநாக்குல எச்சில் ஊறுது. வீட்டுல செய்யச்சொல்லி ருசி பார்க்கலாம்தான். ஆனா இந்த சர்க்கரை வியாதி வந்து வயிற்றெறிச்சலைக் கிளப்புதே!?
ReplyDeleteமாசத்துல ஒரு நாளைக்கு ஒரு டம்ப்ளர் பாயாசம் குடிக்குறதுல ஒண்ணும் சுகர் எகிறிடாது. அவ்வளவு பயமிருந்தா ரெண்டு மாத்திரைப் போட்டுக்கோங்க.
Deleteநல்ல பாயசப் பகிர்வு/பதிவு!நானும் கொஞ்சம் டிபரண்டா,செய்வனே?ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteபாயசத்துக்கு வடை காம்பினேஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும்! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteசுவையோ சுவை :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteபால் பாயசம் செய்முறையும் விளக்கமும் அருமை. ஒரு ரெண்டு டம்ளர் பார்சல்.................ப்ளீஸ்.
ReplyDeleteகண்டிப்பா பார்சல் செய்யுறென். ஆனா, ஊசிப்போச்சுன்னா நான் பொறுப்பல்ல.
Deleteஸ்.... சரியான ஜோடி....
ReplyDeleteநன்றிண்ணா! நீங்க எங்களைத்தானே சொல்றீங்க!!?
Deleteநிஜமாகவே கொஞ்சம் உப்பு
ReplyDeleteசேர்க்கணுமா ?
கண்டிப்பா கொஞ்சமே கொஞ்சம் உப்பு சேர்க்கனும். இல்லாட்டி ருசிக்காது.
Deletetha.ma 9
ReplyDelete"//தமிழர்கள் விருந்தோம்பல் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமில்ல. //"
ReplyDelete- அதனால உங்களுக்கு என்னவெல்லாம் நன்றாக (நன்றாக!!) சமைக்கத் தெரியுமோ, அதையெல்லாம் லிஸ்ட் போட்டு சொல்லுங்க, நான் அடுத்த முறை இந்தியா வரும்போது, உங்கள் வீட்டில் இருந்து ஒவ்வொரு நாளாக எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு திரும்பி சிட்னி போறேன்.
சமைச்சுப் போடுறேன்.கண்டிப்பா வாங்க.., செல்போன், லேப்டாப், பர்யூம், சாக்லேட், எல்சிடி டிவின்னு நிறைய கிஃப்ட் வாங்கி வாங்க.
Deleteபடங்கள் பார்க்கும் போது பாயசம் சாப்பிடும் ஆசை வருகிறது பகிர்வுக்கு நன்றி சகோதரி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteஎன்னாது பாயாசத்துல உப்பா ? டூத் பேஸ்ட்டுல உப்பு மாதிரி போல :)
ReplyDeleteபச்சரிசி பாயாசத்த பதமான சூட்டுல வாழ இலைல போட்டு சாப்புட்டோம்னு வைக்கா அதேன் அமிர்தம் ....
எந்த ஸ்வீட் செஞ்சாலும் துளியூண்டு உப்பு சேர்த்தால்தான் இனிப்பு சரியாய் இருக்கும். டிரைப் பண்ணிப் பாருங்க சகோ!
Deleteநான் பாசிபருப்பு பாயசம் தனியா , பால் பாயசம் தனியா தான் செய்வேன். இதை ட்ரை பண்ணிபார்க்கிறேன் :)
ReplyDeleteபால் பாயாசம் செஞ்சு, சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.
Deleteபாயசமும் வடையும்.... நல்ல காம்பினேஷன் தான்! ருசியோ ருசி..........
ReplyDelete