Tuesday, April 29, 2014

தக்காளி ஊறுகாய் - கிச்சன் கார்னர்

கோடைக்காலம் வந்தாலே  பொண்டுங்க, பொட்டு பொடுசுங்கலாம் ஊறுகாய், வத்தல்லாம் போடுற வேலைல இறங்கிடுவாங்க.  மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய்லாம் இப்போ விலைக் குறைவா கிடைக்கும். அதனால வத்தல் போட்டு சேமிச்சு வச்சு வருடம் முழுக்க பயன்படுத்திக்குவாங்க.  அதே நேரத்தில் தக்காளி, பூண்டு மாதிரியானலாம் விலைக் குறைவான நேரத்துல ஊறுகாய் செஞ்சு சாப்பிடுவாங்க. என்ன இதுலாம் பத்து இல்ல ஒரு மாசம்தான் தாங்கும்.  வருசம் முழுக்க சேமிச்சு வச்சுக்க முடியாது அதான் இதுல இருக்கும் மைனஸ் பாய்ண்ட்.

தேவையானப் பொருட்கள்:
நல்லா பழுத்த தக்காளி - 1 கிலோ
மிளகாய் பழம் அல்லது காய்ந்த மிளகாய் - 100கிராம்
புளி - 100கிராம்
உப்பு- தேவையான அளவு,
எண்ணெய் - 100 மிலி
பெருங்காயம் -  சிறிது
கடுகு - சிறிது
வெந்தயம் - சிறிது.
 தக்காளியை நல்லா கழுவி ஈரம் போக துடைச்சு நாலு துண்டா வெட்டி பீங்கான் ஜாடி இல்ல பிளாஸ்டிக் டப்பாவுல போட்டு உப்புப் போட்டு ஒரு நாள் முழுக்க ஊற விடுங்க. 

மறுநாள் காலைல ஒரு பிளாஸ்டிக் பேப்பர்ல தக்காளியை மட்டும் காய வைங்க. தக்காள் ஜூஸை தனியா வெயிலில் வைங்க. 

தக்காளி நல்லா காய்ந்ததும் ட்வெயிலி வைத்த தக்காளி ஜூசில் தக்காளி, மிளகாய், புளி போட்டு ஊற வைங்க. ஊறினாதான் அரைக்க முடியும். இல்லன்னா நைசா அரையாது. தக்காளிலாம் ஊறினதும் உரலில் இல்ல மிக்சில போட்டு நைசா அரைச்சுக்கோங்க. தண்ணி பத்தலைன்னா ஆறின சுடுதண்ணி சேர்த்து அரைக்கலாம். 

ஒரு வாணலில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் கடுகுப் போட்டு பொரிய விடுங்க. 

கடுகு பொரிந்ததும் தக்காளி, மிளகாய் அரைத்த விழுதைக் கொட்டி வதக்குங்க. எண்ணெயும், தக்காளி விழுதும் ஒண்ணோட ஒண்ணு சேர்ந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுங்க. ஊறுகாய் ஆறினதும் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் பெருங்காயத்தை வறுத்து பொடிப் பண்ணி ஊறுகாய்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க. இப்படி ரெடியான ஊறுகாயை ஒரு நாள் முழுக்க வெயிலில் வைங்க.   

காரசாரமான  தக்காளி ஊறுகாய் ரெடி.காத்து புகாத மாதிரிலாம் டப்பாவுல வைக்காம லேசா திறந்து வச்சுக்கோங்க. இல்லாட்டி பூரணம் பிடிச்சுடும்.   (ரெடியான தக்காளி ஊறுகாய் படமெடுக்க மறந்துட்டேன்.  ஒரு வாரம் கழிச்சுதான் படமெடுக்காதது நினைவு வந்து மிச்சம் மீதியைதான் படமெடுத்தேன். அதான் காய்ஞ்சு போன மாதிரி இருக்கு.) 

மோர் சேர்த்த பழைய சாதம் , கூழ்க்குலாம் இந்த ஊறுகாய் மேட்ச் ஆகும். அடுத்த வாரம் என்ன செய்யலாம்!?

லீவுக்கு வரும் சொந்தக்காரங்க தலைத்தெறிச்சு ஓட வைக்குற மாதிரி பஜ்ஜி செய்யலாமா!?

13 comments:

 1. அது என்ன தலை தெறிக்க ஓடுற பஜ்ஜி, மொளகா பஜ்ஜியா?

  ReplyDelete
 2. உங்க பள்ளி நாள் கவிதையை பற்றி வலைசரத்தில் கூறியுள்ளேன் ::)

  தக்காளி ஊறுகாய் எனக்கு மிகவும் பிடிக்கும்

  ReplyDelete
 3. பச்சை மாங்காயில் ஊறுகாய் செய்வது எப்படி? தக்காளி எல்லாம் சீக்கிரம் கெட்டுப்போகும்? பச்சை மாங்காய் ஊறுகாய் அல்லது தொக்கு கூட இப்படி ஒரு மாதத்துக்குள் கெட்டுப்போகுமா?

  ReplyDelete
 4. ஸ்ஸ்ஸ்.... செய்து பார்க்கிறோம்...

  பஜ்ஜி குறிப்பை விரைவில் ஆவலுடன்...................

  ReplyDelete
 5. தக்காளி ஊறுகாய் நாவில் நீர் ஊற வைக்கிறது! அடுத்து பஜ்ஜி குறிப்புக்காக ஆவலுடன்!

  ReplyDelete
 6. எங்களையெல்லாம் வீட்டு பக்கம் எட்டிப் பார்க்காதேன்னு சொல்றீங்க. உம். உங்களுக்கு கொடுத்டு வச்சது அவ்வளவுதான்!!!!!!!.

  ReplyDelete
 7. தக்காளி ஊறுகாய் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கே வெயில் வந்ததும் செய்து விடுகிறேன்.

  பகிர்விற்கு மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 8. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  ReplyDelete
 9. தக்காளி ஊறுகாய் - செய்து பார்த்துடலாம்!

  ReplyDelete
 10. தக்காளி ஊறுகாய் பார்த்தாலே நாவூறுகிறது. நன்றி ராஜி. விருந்தினரைத் தலைதெறிக்க ஓடவைக்கும் பஜ்ஜியா... பாவக்காய் பஜ்ஜியா? ஆனால்... அதற்கும் என்னைப் போல் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்களே... என்னவாக இருக்கும்? காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 11. தக்காளி ஊறுகாயின் செய்முறை விளக்கம் அருமை! கண்டிப்பாக செய்ய முயற்சிக்கிறேன். எனக்கு கணிணி புதிதாகையால், இத்துனை நாள் படித்தும் பின்னூட்டம் இடாமைக்கு வருந்துகிறேன்.

  வாழ்த்துக்களுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 12. நீங்க சொன்ன முறைப்படி செய்வதில்லை...தக்காளியை காயவைக்காமல் பொடியாக நறுக்கி நீங்கள் சொன்ன முறையில் செய்து விடுவேன். ஒரு அவசரத்திற்கு இட்லி, சப்பாத்திக்கும் சமயத்தில் சாப்பாட்டிலும் பிசைந்து சாப்பிடலாம்...

  ReplyDelete