Monday, April 07, 2014

தேர்தலும், கிரிக்கெட்டும் கோடைக்காலத்தில் நடத்துவதன் மர்மம் - ஐஞ்சுவை அவியல்

ஏனுங்க மாமா! ராத்திரி இம்புட்டு நேரமாச்சே! இப்பதான் வீட்டுக்கு வர வழித்தெரிஞ்சுதா!?  

கட்சி மீட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அங்கப் பேசுறது கேட்டுக்கிட்டு இருந்ததால டைமாகிடுச்சு.

இப்ப பத்தாவது பரிட்சை நடக்குது. மத்த பசங்களுக்கும் பரிட்சை நடந்துக்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல, நேரம் கெட்ட நேரத்துல கட்சிப் பாடல்களை சத்தமா பாட விடுறதும், கோஷம் போட்டுக்கிட்டு தெருத் தெருவா சுத்துறதும் நல்லாவா இருக்கு. தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஏன் இதை யோசிக்க மாட்டேங்குறாங்க. எனக்கு ரொம்ப நாளாய் ஒரு டவுட்டு மாமா! அதெப்படி பள்ளி பொதுத் தேர்வு வரும்போது எலக்‌ஷனும் நடக்குது. கிரிக்கெட் மேட்சும் நடக்குது. அதுக்கான காரணம் என்ன மாமா!?

எனக்கும் சரியா தெரியல புள்ள. ஒரு வேளை கோடைக்காலம்ங்குறதால வெயில் கொடுமைத் தெரியாம இருக்க ஒரு பொழுது போக்கா இருக்கட்டுமேன்னு நல்ல எண்ணத்துல வைக்குறாங்களோ என்னமோ!!?? 

அப்படியும் இருக்கலாம் மாமா.  மாமா ரெண்டு நாளைக்கு முன்னாடி எதிர்த்த வீட்டு ரேவதி தன் ஒன்றரை வயசு குழந்தையை இடுப்புல வச்சுக்கிட்டு தெருவுல நின்னு வேற ஒருத்தர்கிட்ட கதைப்பேசிக்கிட்டிருந்திருக்கா. குழந்தை கையிலிருக்கும் பிஸ்கட்டை நாய் பிடுங்கி இருக்கு. நாய் பிஸ்கட்டை மட்டும் பிடிங்காம குழந்தை கையையும் சேர்த்து கடிச்சிடுச்சு. நல்ல வேளை அதிகமா காயம் எதும் படல. லேசா பல்தடம் பதிஞ்சதோட சரி. குழந்தை கத்துனதை கேட்டுதான் என்ன நடந்துச்சுன்னு ரேவதி புரிஞ்சுக்கிட்டு இருக்கா. 

இப்படியா! கதை பேசுவீங்க. கைவிரலை கடிச்சு துண்டாக்கி இருந்தா என்ன செய்யுறது. டாக்டர்கிட்ட கூட்டிப் போனாங்களா!?

இல்ல மாமா. லேசா பல்தடம் பட்டதுக்கு எதுக்கு டாக்டர்கிட்டப் போகனும்ன்னு விட்டுட்டாங்க.

என்ன ஒரு இருநூறு ரூபாய் செலவாகுமா!? டாக்டரைப் பார்த்துட்டு வரச்சொல்லு.

ம்ம்ம் சொல்றேன் மாமா. ராஜி பையன் சின்ன வயசுல சாமிக் கும்பிடும்போது சாமி! பெரிய அக்காவை காப்பாத்து, சின்ன அக்காவை காப்பாத்து, எனக்கு கோவம் வரக்கூடாது, 3 வண்டி வாங்கி நாங்க மூணு பேரும் ஸ்கூல் போகனும்.  நான் வேலைக்குப் போய் அம்மா, அப்பாவைக் காப்பாத்தனும், பெரிய வீடுக்கட்டி அம்மாவுக்கு ஒரு ரூம், அப்பாவுக்கு ஒரு ரூம், எங்க மூணு பேருக்கும் ஒரு ரூம் வச்சு வீடுக்கட்டனும்ன்னு சாமிக் கும்பிடுவான். 

ஏண்டா, உங்க மூணு பேருக்கும் ஒரு ரூமா!? அது நல்லா இருக்காதேடா, ஆளுக்கொரு ரூம் கட்டிக்கோங்கன்னு ராஜி சொன்னா, ஆளுக்கொரு ரூம் கட்டினா தனித்தனியா படுக்கனும். அப்புறம் நான் உச்சாப் போறதை நீங்க கண்டுப்பிடுச்சுடுவீங்கனு சொல்வான்.



ஆஹா! நல்ல ஐடியாதான் சரி உனக்கொடு படம் காட்டுறேன். அதுல எத்தனை கறுப்பு புள்ளி, வெள்ளைப் புள்ளி இருக்குன்னு சொல்லுப் பார்க்கலாம்.

இருங்க உங்களுக்கொரு ஜோக் சொல்லிட்டு அப்புறம் விடை சொல்றேன். 

கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார்
எழுதி வெச்சிருக்கிறாரு?

ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது
பாருங்க, அதான்!

ஹா! ஹா! இதும் நல்ல ஐடியாதான். விடைச் சொல்லுப் பார்க்கலாம்.

இருங்க வரேன்....,

14 comments:

  1. நாய்கடிக்கு கண்டிப்பா டாக்டர்கிட்ட போய் ஊசி போடச் சொல்லுங்க ராஜி..

    ReplyDelete
  2. ஜோக் சூப்பர்! சுவையான அவியல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. பேச்சின் சுவாரஸ்யம் அப்படி.... புள்ளிகள் 35ஆ ராஜி அக்கா?

    ReplyDelete
  4. கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகள் illusion technique தானே?
    பப்பு சொன்னது தான் செம ஜோக்!

    ReplyDelete
  5. அவியல் - கடசில நல்லாருக்கு ..! ஏற்கனவே சோடா புட்டி இதுல இது வேறயா ? :(

    ReplyDelete
  6. அடடா கண்ணை ரிப்பேர் ஆக்கிட்டீங்களே

    ReplyDelete
  7. இப்பவே கண்ணைக் கட்டுதே...

    ReplyDelete
  8. நகைச்சுவை சுவை...
    பகிர்வு அருமை அக்கா.

    ReplyDelete
  9. நாய்க்கடிக்கு கண்டிப்பாக ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    ராசியில்லாத டாக்டர்! :) ரசித்தேன்.

    ReplyDelete
  10. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : வலையுலக நண்பர்களும்.... பதிவுகளும் !

    ReplyDelete
  11. பின்னூட்டம் இட்டு போக வில்லை! இதுவாது போகிறதா பார்ப்போம்!

    நாய் கடிக்கு, அது வெறியுடன் அல்லாமல் செல்லமாகக் கடித்தாலும், அந்த நாய்க்கு ஊசி போடப்பட்டிருந்தாலும், நாம் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும். 200 அல்ல அதகும் கொஞ்சம்மேலே செலவாகும்தான். எல்லா பகிர்வுகளுமே நன்று!

    அந்த ஜோக் மிக அருமை!

    ReplyDelete
  12. எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  13. சகோதரி அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  14. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்!///லேட்டா நான் வந்து சாப்புட்டாலும்,அஞ்சுவை அவியல் டாப்!

    ReplyDelete