Monday, April 28, 2014

குழந்தைகளுக்கு உணவு ஊட்டப் போறீங்களா!? -ஐஞ்சுவை அவியல்

ஏண்டி புள்ள! என்ன அங்க கலாட்டா!?

ம்ம்ம்ம் உங்க புள்ளைக்கு சோறு ஊட்டுறேன். அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்து என்னைப் படுத்தி எடுக்குது. 

சாப்பிடுறதுக்கா சின்ன மண்டையனை போட்டு இப்படி படுத்துறே! பசிச்சா அவனே சாப்பிடுறான். அதை விட்டுட்டு இப்படி திணிக்குறியே!!

ஒரு நாளைக்கு நீங்க சாப்பாடு ஊட்டிப் பாருங்க அவனுக்கு! அப்புறம் எனக்கு அட்வைஸ் பண்ணலாம்!!

குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட பொறுமை ரொம்ப அவசியம் புள்ள! சீக்கிரம் சாப்பிடு உனக்கு சாக்லேட் வாங்கித்தரேன்ற மாதிரியாலாம் சொல்லி பசங்களுக்கு சாப்பாடு ஊட்டுறது தப்பு. குழந்தைங்க சாப்பாட்டுல 90 சதவீதம் காய்கறிகள், பழங்கள், தானியங்கலாம் இருக்குற மாதிரி பார்த்துக்கனும். ஒரே மாதிரி இல்லாம பூரி, தோசை, சப்பாத்திலாம் விதம் விதமான வடிவத்துல செஞ்சு கொடுத்தா சாப்பிடுவாங்க. அதுப்போல செஞ்சுக் கொடுக்குறதால பசங்களுக்கு சாப்பாட்டு மேல ஆர்வத்தை உண்டாக்கும். 

வீட்டுல எப்பவும் பழங்கள் வச்சுக்கலாம். குழந்தைங்க கேட்கும்போது நொறுக்குத்தீனிக்கு பதிலா விதம் விதமான வடிவத்துல கட் பண்ணி கொடுக்கலாம். அதைவிட்டுட்டு பாக்கட்ல வர்ற சிப்ஸ், லேஸ், குர்குரே மாதிரியானதுலாம் வாங்கிக் கொடுத்து ருசி காட்டாம பார்த்துக்கனும். அதேப்போல டிவில விலம்பரங்களை நம்பி உயரமா வளர, புத்திசாலியா வளருவாங்கன்னு நம்பி ஹெல்த் ட்ரிங்க்ஸ் வாங்கி காசை கரியாக்காம, நாமளே வீட்டுல கம்பு, சோளம், சாமை, தினை மாதிரியான உணவுகளையும், பழங்கள், கீரைகள் கொடுத்தால் பசங்க ஆரோக்கியமாவும், புத்திசாலியாவும் வளருவாங்க. ராஜா, கண்ணுன்னு சாப்பாடு ஊட்டனுமே தவிர திணிக்கக்கூடாது.

இனி நீங்க சொன்ன மாதிரியே நடந்துக்குறேன் மாமா. சாப்பாட்டைப் பத்தி பேசுனதால,    பசிக் கொடுமையை போக்க தன்னாலான உதவிகளை செய்யும் ஒருத்தர் பத்தி சொல்றேன்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஏலகிரின்னு ஒரு ஹோட்டல் இருக்கு.  அங்க காலைலயே வயதானவங்க, மனநிலை சரியில்லாதவங்கன்னு நிறையப் பேர் சாப்பிட்டுட்டு காசேக் கொடுக்காம போறாங்க.  அதுமட்டுமில்லாம கூலி வேலை செய்றவங்க,  ஏழை மாணவர்களுக்குலாம் பாதி விலைதான் இந்த ஹோட்டலில். கைக்குழந்தையோடு வர்றவங்க குழந்தைக்கு பால் வாங்கிக்கிட்டு காசு கொடுத்தால் வாங்கிப்பாங்க. காசு தரலைன்னாலும் ஒண்ணும் சொல்ல மாட்டார் இந்த ஹோட்டல் வச்சு நடத்தும் நாகராஜ்.

ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த நாகராஜ் ஏழாவதுக்கு மேல படிக்கல. குடும்பத்துக்கு உதவியாய் இருக்கட்டுமேன்னு ஒரு ஹோட்டல்ல வேலைக்குப் போனார். அங்க வேலைச் செய்ததால ஹோட்டல் நெளிவு சுளிவுலாம் அத்துப்படியாந்தால் தனியா ஹோட்டல் ஆரம்பிச்சார். தரமான பொருட்களைக் கொண்டு செய்யுறதால இவரோட ஹோட்டல்ல எல்லாப் பண்டமும் ருசியாய் இருக்கும். அதனால வியாபாரமும் நல்லா நடக்குது. 5 மணி நேரம் தூக்கம் தவிர மிச்சம்லாம் ஹோட்டல் தொழில்லயே இருப்பார். இப்படிலாம் செய்யுறிங்களே! எப்படி சமாளிக்குறீங்க!? எப்படி கட்டுப்படியாகுது!?ன்னு கேட்டா பசியோட கொடுமை எப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும். அதான் இல்லாதவங்களுக்கு செய்யுறேன். இதுக்கு பக்க பலமா இருப்பது என் மனைவிதான். குடும்ப செலவுக்குத் தவிர, நகை, புடவைன்னு எதையும் என்கிட்ட கேட்டு நச்சரிக்க மாட்டாங்க. பணத்திற்காக வாழக்கூடாதுன்றதுல ரெண்டுப் பேரும் உறுதியா இருக்கோம். என் மனைவி வேலைக்குப் போக முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. அவங்களுக்கு வேலைக் கிடைச்சதும் அவங்க வருமானத்துல குடும்பத்தைக் கவனிச்சிட்டு, ஹோட்டல் வருமானத்துல உதவி தேவைப் படுவோருக்கு உதவி செய்யனும். அதனால  எங்களுக்கு நல்ல ஆரோாக்கியமும், இதே போல நியாயமான வருமானமும் வந்தால் போதும் அதை தாண்டி மக்களோட ஆசீர்வாதம் மட்டும் போதும்  நாகராஜ் சொல்றார். நானும், ராஜியும் அவர்கிட்ட ஃபோன்ல்ல பேசிட்டோம். நீங்களும் அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லிடுங்க.9944565814.

கண்டிப்பா போன் போட்டு பேசுறேன் புள்ள!  வண்டி பாக்சுல மாம்பழம் வச்சிருகேன் போய் எடுத்து வந்து கழுவி கட் பண்னி கொடுப் புள்ள! 

அடிக்குற வெயிலுக்கு மாம்பழம் அவசியம்தான். நீங்க சாப்பிடுங்க என் புள்ளைக்கு நான் தர மாட்டேன். அப்புறம் கட்டி வரும்! 

அதெல்லாம் ஒண்ணும் வராது.மாம்பழம் சாப்பிட்டா உடல் சூடு தணியும். இதய நோய், புத்து நோய், ரத்த அழுத்தம்லாம் கட்டுப் படுத்தும், சுகர் ஃபேஷண்ட்லாம் கூட மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழம் சாப்பிட்டாதோல் சுருக்கம் வராது. மாம்பழத்தில் இருக்கும் வைட்டிமின் ஏ தெளிவான பார்வைக்கு உதவுது.  மாம்பழத்தில் ஆண்டி ஆக்சிடண்டும், வைட்டமின் சி யும் இருக்கு. அதனால நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்புக்கு கிடைக்கும். 

                           

சரிங்க மாமா. இனி மாம்பழம் சாப்பிட குழந்தைக்கு பழக்குறேன். அப்புறம் நம்ம ராஜியோட அப்பா, தன் பேரன்கிட்ட அவன் எல்.கே.ஜி படிக்கும்போது , பெரியவங்க பேச்சை கேளு,  பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா குதிக்கனும்ன்னு அடிக்கடி  சொல்லி வளர்த்திருக்கார். 

ஒரு நாளைக்கு ஒன்பது தரம், பெரியவங்க நிக்க சொன்னா நிக்கனும், உக்கார சொன்ன உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா....,ன்னு கேட்டு கேப் விட்டா, கிணத்துல குதிக்கனும் தாத்தான்னு அழகா அப்பு பதில் சொல்வான்.  ஒரு நாள் அப்பு என்ன டென்சன்ல இருந்தானோ தெரியலை! ராஜி அப்பா எதோ  சொல்ல, அப்பு முரண்டு பிடிக்க, அப்பு, பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதினான்னு சொன்னா...., ந்னு கோவமா கேட்டு கேப் விட, 
                                 
அப்பு கோவமா, ம்ம்ம்ம் பக்கத்துல நின்னு சொல்றவங்களை பிடிச்சு கிணத்துல தள்ளி விட்டுடனும்ன்னு சொன்னதை கேட்டு ராஜி அப்பா கோவம் மறைஞ்சு சிரிச்சுட்டாராம். இதை அடிக்கடி என்கிட்ட ராஜி சொல்லி சிரிப்பா.
ரொம்ப நேரம் பேசிட்டோம் நான் ஒரு விடுகதை சொல்லிட்டுப் போறேன். நீ பதில் யோசிச்சு வை. நான் குளிச்சுட்டு சாப்பிட்டு வந்து விடையைக் கேட்டுக்குறேன்..

அண்ணனின் தயவில் ஆட்சி அமைக்கும் அழகான தம்பி யார்!?

21 comments:

 1. அவருக்கு தெரியாமக்கூட இனி திணிக்கக் கூடாது ஆமா... சொல்லிபுட்டேன்... ஜாக்கிரதை சகோதரி...

  நாகராஜ் அவர்களின் வாழ்வு சிறக்க வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள் பல...

  அழகான ரசிக்க வைக்கும் தம்பி தான்... இன்று அமாவாசை ஆயிற்றே... காணாம்... விடை சந்திரன்.... (சரியா சகோதரி...?)

  ReplyDelete
  Replies
  1. விடை சரிதான் அண்ணா!

   Delete
 2. குழந்தைகளுக்கு உணவை எப்படி ஊட்ட வேண்டும் என்று ஒரு பாடமே எடுத்து விட்டீர்கள்! நாகராஜ் தம்பதிகள் குறித்து ஏற்கனவே படித்தும் இருக்கிறேன்! அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அருமையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் பதிவுக்குதான் சகோ! என் பிள்ளைகள் படு சமத்து ஒரு வயசு தொடங்கும்போதே எடுத்து சாப்பிட பழக ஆரம்பிச்சுட்டேன்.

   Delete
 3. பொண்ணுங்களுக்கு சமைக்கமட்டுமல்ல அதை குழந்தைகளுக்கு எப்படி தருவது ஊட்டுவது என்பதையும் இந்த காலத்தில் ஆண்கள்தான் சொல்லித்தர வேண்டும் என்று உங்கள் பதிவை படித்ததன் மூலம் தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. பொண்ணுங்களுக்குத் தெரியும். ஆண்களும் தெரிஞ்சுக்கட்டும்ன்னுதான் சொன்னேன்.

   Delete
 4. நாகராஜ் தன் மனைவியை நோக்கி கைகாட்டுவது இவ சமைக்காததால்தான் ஹோட்டல் உணவு மிக சுவையாக இருக்கிறது என்று சொல்லத்தானோ?

  ReplyDelete
  Replies
  1. இப்படி இடக்கு மடக்கா யோசிக்க உங்களால் மட்டும்தான் முடியும் சகோ!

   Delete
 5. // இதுக்கு பக்க பலமா இருப்பது என் மனைவிதான். குடும்ப செலவுக்குத் தவிர, நகை, புடவைன்னு எதையும் என்கிட்ட கேட்டு நச்சரிக்க மாட்டாங்க.///

  என் மனைவியும் இப்படிதான் நகை புடவைன்னு எதையும் என்கிட்ட கேட்டு நச்சரிக்க மாட்டாங்க.காரணம் அவங்களுக்கு தேவையானதை எங்கிட்ட கேட்காமேயே வாங்கி கொள்ளுவாங்க்

  ReplyDelete
  Replies
  1. கேட்டா நீங்க வாங்கித் தரமாட்டீங்கன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.

   Delete

 6. //மாம்பழத்தில் ஆண்டி ஆக்சிடண்டும், //

  மாம்பழத்தில் ஆண்டி வண்டியோட்டும் போது பரக்கு பார்த்து கொண்டு ஒட்டினால் ஆக்சிடண்டு ஏற்படத்தானே செய்யும்

  ReplyDelete
  Replies
  1. நான் சொன்னது ஆன்டி ஆக்சிடென்ட்

   Delete
 7. //நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்புக்கு கிடைக்கும். //

  பூரிக்கட்டையினால் அடிவாங்கினால் தாங்குற சக்தி கிடைக்குமா என்று விசாரித்து எழுதவும்

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு ஒரு மந்திரம் இருக்கு. அது தெரிஞ்சுக்க பத்தாயிரம் ட்ராஃப்ட் எடுத்து அனுப்பவும்.

   Delete
 8. ///ராஜியோட அப்பா, தன் பேரன்கிட்ட அவன் எல்.கே.ஜி படிக்கும்போது , பெரியவங்க பேச்சை கேளு, பெரியவங்க நில்லுன்னா நிக்கனும், உக்காருன்னா உக்காரனும், கிணத்துல குதிடான்னு சொன்னா குதிக்கனும்ன்னு அடிக்கடி சொல்லி வளர்த்திருக்கார். ///

  புத்திசாலி தாத்தா அதனால்தான் பேரக் குழந்தையிடம் ராஜியோட பேச்சை கேளு என்று சொல்லி கொடுக்கவில்லை

  ReplyDelete
 9. நாகராஜ் போல நல்லவர்கள் இருப்பதால்தான் மழை வருது

  ReplyDelete
 10. நாகராஜ் தம்பதியினர் போற்றப்பட வேண்டியவர்கள்

  ReplyDelete
 11. இந்தக் காலத்தில் அது வேண்டும் இது வேண்டும் என்று நச்சரிக்காத மனைவி யார் இருக்கிறார்? ஹா ஹா.. அந்தக் குழந்தை படம் சூப்பர்...

  ReplyDelete
 12. இப்பவே மாம்பழம் சாப்டனும் போல இருக்கே கா... சொன்ன விசயங்கள் எல்லாமே சரி... விடுகதைக்கான விடை தனபாலன் அண்ணா சொன்னதுதானே...

  ReplyDelete
 13. "//ம்ம்ம்ம் உங்க புள்ளைக்கு சோறு ஊட்டுறேன். அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்து என்னைப் படுத்தி எடுக்குது. //"

  புள்ளை ஏதாவது நல்லது பண்ணினா , உடனே என் குழந்தைன்னு சொல்ல வேண்டியது. குழந்தை மேல குறை சொல்றதுன்னா, உடனே உங்க குழ்ந்தைன்னு சொல்ல வேண்டியது. இதெல்லாம் ரொம்ப அநியாயம்.

  ReplyDelete