Saturday, July 29, 2017

விஷ்ணுவிடம் போரிட்ட கருட பகவான். - கருட பஞ்சமி

எல்லா கடவுளும் பல்வேறு அவதாரங்களை எடுத்தன. அவ்வாறு எடுக்கும்போது தனக்கென அடையாளமா இருக்கும் பொருட்களையோ அல்லது தனது வாகனத்தையோ கொண்டிருக்க மாட்டாங்க. ஆனா, விஷ்ணுவின் எல்லா அவதாரத்திலும் கருடன் இருப்பார்ன்னு சொல்லுது கருட புராணம்.  சதா சர்வக்காலமும் இறைவனுடனே இருக்குற கருடனை வணங்கினால் அவரின் அருளாசி கிட்டும். முக்கியமா பார்வைக்குறைபாடு, கண் கோளாறுகள் கருடனை வேண்டிகொண்டால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.   கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், கும்பாபிஷேகம் போன்ற கால நேரங்களில் வானில் கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும் மங்களகரமானதுன்னு நம்ம எல்லோருக்கும் தெரியும். மேலே பறக்கும் கருடனின் நிழல் பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புகிறார்கள். கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எதிரிகளை வெல்வதற்கும், விஷங்களை முறிக்கவும், மந்திர, தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவும் கருட மந்திரம் நல்ல பலன் தரும். கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கி பிடித்து, நாகங்களை ஆபரணமாக தரித்துள்ளதால் ராகு-கேது தோஷமுள்ளவர்கள் கருட தரிசனம் செய்வது நலம் தரும். கருடனின் குரு குருபகவான்.. அதனால் குருபகவானை வணங்க அறிவு கூடும். 



ஆடி மாதம் முழுக்க நிறைய பண்டிகை இருக்கு. அதுல முக்கியமானது கருட பஞ்சமி. பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் கருடன் பகவான்தான் இருக்கார். ஆடிமாதம் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதியில் இப்பண்டிகை அனுஷ்டிக்கப்படுது.  இவரைப்போல பலசாலியாகவும் புத்திமானாகவும், வீரனாகவும், விவேகியாகவும் குழந்தைகள் உருவாக  கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். பெருமாள் வீதியுலா வர எத்தனையோ வாகனமிருக்க கருடன்மீது வரும் உலாவை கருட சேவைன்னு சொல்லி ஆர்ப்பரிக்கும்போதே கருடனின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம். கருடனுக்கு விஹாகேஸ்வரன், வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடின்னு பல பேர் இருக்கு. 
பிரம்மனின் மகனான காஷ்யப்பருக்கு நாலு மனைவி.  அவர்களில் கத்ரு என்பவளின் பிள்ளைகள்தான் நாகர்கள்.  தாயின் சொல்லை கேட்காமல் சாபத்துக்குள்ளாகி  ஜனமேஜயன் என்பவனின் யாகத்தீயில் விழுந்து மாண்டன. அஸ்தீகர் ஜனமேஜயனது யாகத்தை நிறுத்தி கத்ரு பிள்ளைகளின் சாபத்தை நீக்கிய நாளே நாக சதுர்த்தி.  நாக சதுர்த்தியன்று விரதமிருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
Garuda, South India
வினதைக்கு அருணனும் கருடனும், கத்ருவுக்கு நாகர்களும் வாரிசு. ஒருமுறை வினதையும், கத்ருவும் தோட்டத்தில் உலா வந்துக்கொண்டிருந்தபோது இந்திரனின் வாகனமான உச்சைச்சிரவ் அந்தப்பக்கம் சென்றது. வினதையிடம் அந்தக்குதிரை வாலின் நிறம் என்னன்னு கத்ரு கேட்டாள். வாலின் நிறம் வெண்மைன்னு வினதை சொன்னாள். இல்லை, அதன் நிறம் கருப்பு என கத்ரு வாதிட்டாள். வாதம் சூடுப்பிடித்து வாக்குவாதமானது. போட்டியில் தோற்பவர் வெற்றி பெற்றவருக்கு அடிமை எனவும், அவர்களுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென முடிவானது.  கத்ரு தன் பிள்ளைகளிடம் சென்று கருமை நிறம் கொண்டவர்களில் உச்சைச்சிரவ் வாலில் சுற்றிக்கொண்டு வாலை கறுப்பாக்குங்கள் என  உத்தரவிட, அவளின் பிள்ளைகளும் அப்படியே அவ்வாறு செய்ய குதிரையின் வால் கருப்பானது. பின்பு, ஏதுமறியாதவள் போல வினதையை அழைத்துக்கொண்டு கத்ரு குதிரையை காண சென்றாள்.  அங்கு குதிரையின் வால் கருமையா இருப்பதை காட்டி நீ எனக்கு அடிமை என சொன்னாள். வினதையும் ஒத்துக்கொண்டு கத்ருவின் அடிமையானாள். எங்கு சென்றாலும் கத்ருவை சுமந்து செல்வது அவளின் வேலையானது.   இதுமட்டுமின்றி அருணன் மற்றும் கருடனும் அவளின் தாயாரோடு சேர்த்து கத்ருவுக்கும், அவளின் பிள்ளைக்கு அடிமையாயினர். 

அடிமைத்தனம் பிடிக்காத கருடன் தன் மாற்றாந்தாயான கத்ருவிடம் சென்று தங்களை விடுவிக்குமாறு வேண்டி நின்றார். அதற்கு கத்ரு, தேவ லோகத்திலிருந்து அமிர்தம் கொண்டு வந்து தரவேண்டும் என நிபந்தனையிட்டாள் தேவலோகம் சென்றான் கருடன். இந்திரனைச் சந்தித்து தன் விருப்பத்தைக் கூறி, தேவலோக அமிர்தத்தைத் தருமாறு கேட்டான். நாகங்கள் மரணமில்லா வாழ்வு பெற்றால் உலகம் என்னாவது என்று யோசித்த இந்திரன். அமிர்தத்தைத் தர மறுத்தான். தன் பலத்தில் நம்பிக்கை கொண்டிருந்த கருடன், இந்திரனுடன் யுத்தம் செய்து, அவனை வென்று அமிர்த கலசத்தை அடைய விரும்பினான். அதையடுத்து, இருவரும் கடுமையாக மோதிக் கொண்டார்கள். கருடனுக்கும் இந்திரனுக்கும் நடந்த யுத்தத்தில் கருடனே வென்றான். தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு நாகங்களுக்குக் கொடுக்கப் புறப்பட்டான்.
இத்தனை சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த மகாவிஷ்ணு, அதன்பின்னரும் சும்மா இருக்க விரும்பவில்லை. அமிர்த கலசத்துடன் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த கருடனை வழிமறித்தார். விஷ நாகங்களுக்கு அமிர்தம் தந்தால், அவை மரணமில்லாமல் வாழ்ந்து, மனித இனத்தையும் தேவர்களையும் அழித்துவிடும். இது வேண்டாம் என அறிவுரை கூறினார். ஆனால், கருடனோ எதற்கும் செவி சாய்க்கவில்லை. அடிமைத் தளையிலிருந்து விடுபடவேண்டும் என்ற வெறியில் அவன் விஷ்ணுவையே துச்சமாகக் கருதினான். இந்திரனை வென்ற ஆணவத்தில், துணிவிருந்தால் என்னோடு போர் புரிந்து ஜெயித்து, அதன்பின்பு அமிர்த கலசத்தை நீங்களே தேவலோகத்தில் கொடுத்துவிடுங்கள் என்று விஷ்ணுவுக்கே சவால் விட்டான்.
சற்று நேரம் விஷ்ணு யோசித்தார். தன் தாயின்மீது கொண்ட பக்தியால் தேவேந்திரனையே எதிர்க்கத் துணிந்த கருடனின் வீரத்தை எண்ணி வியந்தார். அதோடு, அமிர்த கலசம் கையில் இருந்தும், அந்த அமிர்தத்தை தான் அருந்தி அழியாநிலை பெற விரும்பாமல் சென்றுகொண்டிருக்கும் அவனின் தன்னலமற்ற தன்மையை மனத்தால் பாராட்டினார். கருடனுக்குள் ஆணவமும் அகங்காரமும் இருந்தாலும் அவனுக்குள் இருந்த உயர்ந்த பண்புகளையும், அவனது விடுதலை வேட்கையையும் கண்டு வியந்த விஷ்ணு அவனோடு போரிடுவதைப் பெருமையாகக் கருதினார்.
India Antique Ravi Varma Lithograph / Lord Vishnu on Garuda #569
விஷ்ணுவுக்கும் கருடனுக்கும் யுத்தம் ஆரம்பமானது.  முனிவரிடம் தான் கற்ற வித்தைகளையும் மாயா ஜாலங்களையும் காட்டிக் கடும் போர் புரிந்தான் கருடன். ஒரு தாய் தன் குழந்தையோடு விளையாடும்போது, தான் தோற்றுப்போவதுபோல நடிப்பாள். இது குழந்தையைச் சந்தோஷப்படுத்துவதற்காக! அது போல விஷ்ணுவும் கருடனை ஜெயிக்க வைப்பதுபோல நடித்துக்கொண்டு, அவனுடன் போர் செய்துகொண்டிருந்தார். வெற்றி தோல்வி நிர்ணயமாகாமல் 21 நாட்கள் போர் தொடர்ந்தது. அப்போது பகவான் விஷ்ணு கருடனுக்கு நல்வழிகாட்ட மீண்டும் முயற்சி செய்தார். கருடா! உன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காபாற்ற நீ எடுத்துக்கொண்ட இந்த விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன். இருந்தாலும், எல்லா சாஸ்திரங்களும் கற்ற உனக்கு, தேவலோக அமிர்தத்தை எடுத்து நாகங்களுக்குக் கொடுப்பது தர்மமாகாது என்பது மட்டும் ஏன் தெரியவில்லை? நாம் வீணாகப் போர் புரிவதில் இருவருக்கும் லாபமில்லை. நீ வேண்டும் வரங்களைக் கேள். தருகிறேன்! என்றார்.
Kāliya took advantage of this situation. He was unnecessarily puffed up by the volume of his accumulated poison, as well as by his material power, and he thought, "Why should Garuḍa be offered this sacrifice?" He then ceased offering any sacrifice; instead, he himself ate the offering intended for Garuḍa. When Garuḍa, the great devotee-carrier of Viṣṇu, understood that Kāliya was eating the offered sacrifices, he became very angry and quickly rushed to the island to kill the offensive serpent.
இப்போது என் கையில் உள்ள அமிர்த கலசத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றால், என் தாயும், சகோதரனும், நானும் அடிமையில் இருந்து விடுபட வழிசெய்யுங்கள் என்று வரம் கேட்டிருக்கலாம் கருடன். ஆனால் கர்வம் தலைக்கேறியிருந்த கருடனுக்கு அப்படிக் கேட்கத் தோன்றவில்லை. நீ யார் எனக்கு வரம் தர? வேண்டுமானால் நீ ஏதாவது வரம் கேள். நான் தருகிறேன் அதன்பிறகாவது நான் சொல்ல வழிவிடு! என்றான் கருடன், அகம்பாவமாக. மகாவிஷ்ணு அப்போதும் விட்டுப் பிடித்தார். என்ன வரம் கேட்டாலும் தருவாயா? அப்புறம் வாக்குத் தவறமாட்டாயே? என்று கேட்டார்.  நான் வாக்குத் தவறமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத்தான் உங்களையே எதிர்த்து நிற்கிறேன். என்ன வரமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான் கருடன். அப்படியானால், நீயே எனக்கு வாகனமாகிப் பணிபுரியும் பாக்கியத்தை வரத்தைத் தா! என்றார் விஷ்ணு. மகாவிஷ்ணுவின் இந்தப் பதிலால் கருடனின் கர்வம் வேரோடு அழிந்தது. அவனின் அகக் கண்கள் திறந்தன. அவன் விஷ்ணுவின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தான். அவரை எதிர்த்துப் போரிட்டதற்காக மன்னிப்புக் கோரினான். தொடர்ந்து அமிர்த கலசத்தை விஷ்ணுவின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தான். அமிர்தம் அருந்தாமலேயே, நீ மரணமில்லாமல் சிரஞ்சீவியாக என்னுடன் இருப்பாய் என்று விஷ்ணு ஆசி கூறினார்.
Garuḍa was asked by the Lord to leave that place because the snake Vāsuki, who was to be used as the rope for churning, could not go there in the presence of Garuḍa. Garuḍa, the carrier of Lord Viṣṇu, is not a vegetarian. He eats big snakes.
தொடர்ந்து, தான் கொண்டு சென்ற அமிர்த கலசத்தை தர்ப்பைகள் பரப்பி அதன்மீது வைத்தான் கருடன்.    வினதையோடு கருடன் மற்றும் அருணனுக்கு நாகர்களின் தாய் கத்ருவிடமிருந்து விடுதலை கிடைத்தது. நாகர்கள் கடலில் குளித்துவிட்டுக் கலசத்திலிருந்த அமிர்தத்தை உண்ண வருகையில், இந்திரன் அமிர்த கலசத்தைத் தூக்கிக் கொண்டுச் சென்று விட்டார். ஏமாந்த நாகர்கள் அமிர்த கலசம் வைத்திருந்த தர்ப்பைப்புல்லைத் தங்கள் நாக்கினால் நக்கியதால், பாம்பினங்களுக்கு நாக்குகள் பிளவுண்டன. ஸ்ரீமகாவிஷ்ணு கருணைகூர்ந்து விஷமில்லா நாகங்கள் பல காலம் வாழும். விஷமுள்ள நாகங்கள் சில காலம் வாழும். நல்ல நாங்களை மனிதர்கள் பூஜித்து வழிபடுவார்கள் என்று அருளினார். தொடர்ந்து.... வினதையும் கருடனும், அவனது சகோதரனும் கத்ரு மற்றும் நாகங்களின் அடிமைத்தளையில் இருந்து விடுபட்டனர். கருடன் தன் தாய் வினதை மற்றும் கத்ரு ஆகியோரை வணங்கி ஆசிபெற்று விஷ்ணு சேவையில் தொடர்ந்து ஈடுபட்டான். 
எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் சந்நிதியை நோக்கி வணங்கியபடி நிற்கும் கருடனை நாம் கருடாழ்வார் என்றே அழைத்து பூஜிக்கிறோம். நாகங்களுக்கும் கருடனுக்கும் பகை என்றாலும், விஷ்ணுவின் சந்நிதியில் ஆதிசேஷன் எனும் நாகமும், கருடாழ்வாரும் நட்பு கொண்டே விஷ்ணு சேவை செய்கின்றனர்.        கருடனின் திருஉருவம் காணப்படும். ஒருவர் உடலில் ஏறிய பாம்பின் விஷத்தை கருட வித்தியா மந்திரங்கள் செபிப்பதன் மூலம் நீக்கப்படுகிறது. கருடன் பெயரில் கருட புராணம் உள்ளது. அமிர்தத்தை, தேவ லோகத்திலிருந்து பூமிக்கு எடுத்து வந்தவர். விஷ்ணுவின் வாகனமாக கருடன் இருப்பதால், வைணவர்கள் இவரைப் பெரிய திருவடி என்பர். திருமாலையே கருடன் எதிர்த்திருந்தாலும், திருமாலுக்கே வரம் தந்த பெருமை, திருமாலுக்கே வாகனமான பெருமை என இரு பெரும் பேறுகள், பெற்ற தாயைப் போற்றி வணங்கியதன் காரணமாக கருடனுக்குக் கிடைத்தன.
Garuda, Carrier of Lord Vishnu.- https://ramanan50.wordpress.com/2014/08/05/serious-illness-ward-off-black-magic-ashu-garuda-dandakam/
வாலகில்யை முனிவர்கள்..
கட்டை விரலைவிட சிறிய உருவம் கொண்ட முனிவர்கள் 60.000 பேர் இருந்தனர். வானுலகில் சுற்றித்திரியும் ஆற்றல் கொண்ட இவர்கள் சூரிய பகவானின் நண்பர்கள். காசிபர் முனிவர் வேள்வி செய்யும்போது இந்திரன், வேள்விக்குண்டான மரக்கட்டைகளுக்காக , மலைக்காட்டையே பெயர்த்தெடுத்து வந்து தந்தார். ஆனால், வாலகில்யை முனிவர்கள் அத்தனை பேரும் சேர்ந்தும்  சிறு மரக்கட்டையை தூக்க சிரமப்பட்டு கொண்டு வந்ததை கண்டு இந்திரன் கேலி செய்து சிரித்தான். தேவாதிதேவனான உன்னை வெல்லும் ஆற்றலோடு காசிபருக்கு மகனாய் பிறப்பான் என சாபமிட்டனர். இந்திரன் தான் செய்த தவறுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான். பிரம்மன் தலையிட்டு சமரசம் செய்யப்போக  ஆரம்பத்தில் இந்திரனுக்கு எதிரியாகவும், பின் நண்பனாகவும் விளங்குவான் என அருளினர்.
Image from http://www.buddhamuseum.com/bronze-buddha_2/hoysala-garuda-ad49.jpg.
ஒருமுறை வாலகில்யை முனிவர்கள்  தலைக்கீழாய் தொங்கியபடி தவமிருந்தபோது கருடன் தன் சிறுவயதில் காப்பாற்றினார். அதனால் அவருக்கு எளிதில் எதையும் சுமக்கும் தன்மை உண்டானது.  தெய்வங்கள் அனைத்துக்கும் அநேகமாக வாகனங்கள் உள்ளன. ஆனால் வாகனங்களுக்கு வாகனம் எதுவும் கிடையாது. ஆனால் கருடன் அதிலும் சிறப்பு மிக்கவராக உள்ளார். ஏனெனில் கருடனுக்கு வாகனம் உண்டு. அதாவது வாயுதான் கருடனின் வாகனமாக உள்ளதாக இதிகாச புராணங்கள் தெரிவிக்கிறது. 
முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்ட யானையை காப்பாற்ற வாய்வுவேகம், மனோவேகமாய் பெருமானை சுமந்து வந்த கருடன் நம் துயரினை போக்கவும் விஷ்ணுவை அழைத்துவருவார். பலசாலியும் புத்திக்கூர்மையுடனும் பிள்ளைவரம் வேண்டியும், சகோதரர்களுக்குள் ஒற்றுமை உண்டாகவும், கண் குறைபாடுகள் நீங்கவும், உத்தியோகத்தில் சிறக்க கருட வழிபாடு சிறந்தது.
Garuda, Laxmi, Vishnu
பிறக்கும் குழந்தை துறுதுறுப்பா இருக்க இந்த விரதம் உதவும். ஆனா, பாருங்க இந்த விரதத்தை என் அம்மா கடைப்பிடிக்கலைப்போல!!!!! நான் சோம்பேறியா பொறந்துட்டேன். அதனாலதான் நேத்தைய கருட பஞ்சமி விழாவுக்கு இன்னிக்கு பதிவு போட்டிருக்கேன். டைப்ப லேட்டாகிட்டுது.... :-(

தமிழ்மணம் ஓட்டுப்பட்ட.....
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467710
Etruscan God Typhon, the titan monster painting looks similar to hindu god and mighty eagle bird Garuda, who carried Lord Vishnu & Lord Hanuman in Ramayana
நன்றியுடன்,
ராஜி.

19 comments:

  1. கட்டுரையும் படங்களும் தகவல்களும் அருமை. மஹா விஷ்ணுவினால் ஆட்கொள்ளப்பட்ட கருட பெருமானின் பெருமைகளை பறை சாற்றுகிறது.படிப்போர்தாம் யாரும் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. படிக்குறாங்க ஐயா! படிப்பவர்கள் அத்தனை பேரும் கருத்து சொல்வதில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஐயா!

      Delete
  2. கருடன் விஷ்ணுவுடன் போர் செய்த கதை சுவாரஸ்யமாக இருக்கிறது....படங்களும் கதா, தகவல்கள் எல்லாமே அருமை....ராஜி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதா

      Delete
  3. நேர்லே இருந்து பார்த்த மாதிரியே நல்லா கதை விடுறீங்களே :)

    ReplyDelete
    Replies
    1. பார்த்தால்தான் நம்புவேன்னு சொன்னா எப்பிடிண்ணே?! அடுத்த வேளை சாப்பாடு சாப்பிடுவோம்ன்ற நம்பிக்கையில்தான் சமைக்கிறோம். நம்பிக்கை அத்துப்போச்சுன்னா ஒருநிமிசம்கூட உயிர் வாழ்தல் முடியாது. நம்பிக்கைதான்ண்ணே எல்லாமே!

      Delete
  4. புராணக் கதைகள் படிப்பது எப்போதுமே சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். கடவுளை நம்புறோமோ இல்லியோ. ஆனா படிக்க, கேட்க நல்லா இருக்கும்

      Delete
  5. சிறப்பு பதிவு அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாள் லேட்ட்ட்ட்ட்ட்டாய்

      Delete
  6. படங்கள், தகவல்கள் சிறப்பு.

    த.ம. ஏழாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  7. பல அறிய தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  8. நான் அறியாத கதை!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் புதிய கதைதான்ப்பா.. இப்பதான் சமீபத்துல கேட்டேன். அதான் பகிர்ந்துக்கிடேன்

      Delete
  9. பெரிய திருவடியின் சுவராஸ்யமான வரலாறு நன்று...
    தங்கள் பணி... அதற்காக
    கருட மாலா மந்திரம்
    ஓம் நமோ பகவதே கருடாய காலாக்னி வர்ணாய
    ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
    பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
    ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
    தஹ தஹ பத பத ஹூம்பட் ஸ்வாஹா

    ReplyDelete