இந்தா புள்ள! ஆப்பிள் கேட்டியே வாங்கி வந்திருக்கேன்.. எடுத்துக்கிட்டு போய் உள்ள வை. பசங்க வந்தபின் கட் பண்ணி கொடு..
மாமா! இந்த பழத்து மேல ஏதோ ஸ்டிக்கர் ஒட்டி இருக்கே! பார்க்க என்ன விலை மாதிரியும் தெரில! என்னது மாமா!?
அதுவா?! மரபணு மாற்றம் செய்யப்பட்ட, பூச்சிக்கொல்லினால தயாரிக்கப்பட்டதுன்னும், நாட்டு விதை, இயற்கை உரம் கொண்டு தயாரிக்கப்பட்டதுன்னும் நாம தெரிஞ்சுக்கனும்ன்னுதான் பி.எல்.யுன்ற குறியீடு போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுது. பி.எல்.யு(PLU) ஸ்டிக்கர் என்பது Price Look Up நம்பர் ஒட்டப்படுது. காய்கறி, பழங்கள்ல 1441 மாதிரியான நான்கு நம்பர் இருந்தா வழக்கமா பயன்படுத்துற பூச்சிக்கொல்லியை தெளிச்சு விளைஞ்சது. 81442 ன்னு 8 ல ஆரம்பிக்குற நம்பர் இருந்தா மரபணு மாற்றம் செஞ்சு விளைஞ்சது. 94532 ன்னு 9 ல ஆரம்பிக்குற நம்பரா இருந்தா அது நாட்டு விதை மற்றும் இயற்கை உரத்தால விளைஞ்சதுன்னும் அர்த்தம்.
ஓ அப்படியா?! ஆப்பிள் மேல மெழுகு பூசுறதா சொல்லுறாங்களே! உண்மையா?!
ஆமா, ஆப்பிள் சீக்கிரம் கெட்டுப்போகாம இருக்க ஒருவிதமான மெழுகு பூசுறாங்க. அதனால, ஆறு மாசம் வரைக்கூட கெடாம வச்சுக்கலாம்..
ஐயோ! அந்த மெழுகை சாப்பிட்டா நம்ம உடம்பு என்னத்துக்கு ஆகும்?!
அதனாலதான் ஆப்பிளை நல்லா கழுவி, தோலை சீவிட்டு சாப்பிடனும்.. கண்ணுக்கு தெரியாம எங்கயோ விளைஞ்சு வரும் ஆப்பிள்லதான் சத்து இருக்குன்னு இல்ல... நம்மை சுத்தி விளையுற கொய்யா, நெல்லிக்காயில் இதைவிட நிறைய சத்து இருக்கு. அதனால அதைலாம் சாப்பிடலாம்.
அப்பயும் பூச்சிக்கொல்லிலாம் தெளிச்சிருப்பாங்களே!
ம்ம்ம்ம் புளி தண்ணில ஒரு கால் மணிக்கூர் ஊற வெச்சு அப்புறம் நல்லத்தண்ணில கழுவி அப்புறம் கட் பண்ணனும். கீரை, கேரட், வெங்காயம், தக்காளி உருளைக்கிழங்குன்னு அத்தனையையும் மண் போக கழுவி அப்புறம் கட் பண்ணிக்கனும். கட் பண்ணிட்டு கழுவக்கூடாது. கத்திரிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு மாதிரியான கட் பண்ணா கருத்திடும் காய்களை வேணும்ன்னா கட் பண்ணிட்டு அப்புறமா தன்ணில போடலாம். அப்பயும் புளித்தண்ணில கழுவிட்டுதான் ஊறவெச்சுதான் கட் பண்ணனும். இதுப்போல திராட்சை, கொய்யா, மாதிரியான பழங்களையும் கழுவி சாப்பிடலாம். புளித்தண்ணில ஊற வைக்கும்போது பூச்சிக்கொல்லி தன்னோட வீரியத்தை இழக்குது. முட்டைக்கோசை கட் பண்ணும்போது இலை இலையா எடுத்துதான் கட் பண்ணனும். அப்படியே கட் பண்ணா இலைகளுக்கிடையே இருக்கும் பூச்சி, புழுவை நாம பார்க்க முடியாது. வெங்காயம் கட் பண்ணும்போது கண் எரியாம இருக்க வெங்காயத்தை கொஞ்ச நேரம் ஃப்ரிட்ஜில் வச்சு எடுத்திட்டு அப்புறமா கட் பண்ணா கண்ணு எரியாது. வெண்டைக்காயை கட் பண்ண பொறவு லேசா எலுமிச்சை பழச்சாறு தெளிச்சு பொரியல் செஞ்சா ஒன்னோட ஒன்னு ஒட்டாது.கேரட்டை கட் பண்ணி ரொம்ப நேரம் வச்சா அதிலிருக்கும் சத்துலாம் போய்டும். வெங்காயத்தை கட் பண்ணி ரொம்ப நேரம் வச்சிருந்தா சுத்தி இருக்குற பாக்டீரியாவைலாம் வெங்காயம் இழுத்துக்கும்.
காய்கறி நறுக்க இத்தனை விசயமிருக்கா?! ஃபேஸ்புக்ல இந்த படம் வந்துச்சு. காத்து வர என்னலாம் யோசிக்குறாங்கண்னு பாரு மாமா..
தான் ஆசை ஆசையாய் வாங்கிய வண்டிக்கு லைசென்ஸ் வாங்க போனதுக்கு லஞ்சம் கேட்டிருக்காங்க. அதுக்கு ஒருத்தர் கொடுத்த செருப்படியை பாருங்க மாமா. ட்விட்டர்ல பார்த்தேன். ஆனா எந்த ஊருன்னுதான் தெரில. இந்த மாதிரி எல்லோரும் லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு எல்லாரும் கிளம்புனா நாடு உருப்பட்டுடும்.
ம்ம்ம் அப்படியே இந்த விடுகதைக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்....
காய்க்கும்...
பூக்கும்....
சலசலக்கும்...
ஆனா, காக்காய் உட்காரக்கூட இடமிருக்காது..
அது என்ன?
நன்றியுடன்,
ராஜி.
என்றைக்கு மனுஷன் கடவுளுக்கு தேங்காய் உடைச்சு லஞ்சம் கொடுத்தானோ... அன்றைக்கு தொடங்கியது லஞ்சம்.
ReplyDeleteஆமாம்ண்ணே. இத்தனை வேகமா வந்து பதிவை வாசிச்சு கருத்து சொன்னதுக்கு நன்றிண்ணே
DeleteAaga kalakalana foto vaalthukal. padivum arumai.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ
Deleteநறுக்குன்னு நாலு வார்த்தை! த ம 4
ReplyDeleteநல்ல யோசனைதானேப்பா
Deleteகுழந்தைகளுக்கு விளக்குவது போல் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு..... நன்றி,தங்கச்சி.....///லஞ்சம்.....ஹூம்....எங்க திருந்தி எப்ப வல்லரசாகி எப்ப.............
ReplyDeleteநாம பார்க்கப்போறதில்லண்ணே
Deleteபயனுள்ள தகவல்கள். த.ம.5
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteகடவுள் லஞ்சம் நான் சொல்ல வேண்டியது நீங்களே சொன்னா எப்படி :)
ReplyDeleteஅண்ணன் மனசு தங்கச்சிக்கு தெரியாதோ!
Deleteசுவையான ஐஞ்சுவை அவியல்.
ReplyDeleteத.ம. ஏழாம் வாக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteபழங்களின் மீது ஏன் sticker ஒட்டி இருக்கிறது? என்று யோசித்திருக்கிறேன் விடை கிடைத்தத்தில் மகிழ்ச்சி. புளித்தண்ணி-பூச்சிகொல்லி நாசினி நல்லதொரு தகவல்.
ReplyDeleteவிடுகதை பதில்-
My ans: நிலகடலை
Google ans:நெற்கதிர்
எது சரி?
பிற்பாதி விடை சரி..
Deleteபுளித்தண்ணில ஊற வச்சா பூச்சிக்கொல்லி பாதிப்புல இருந்து தப்பிக்கலாம்ன்னு நாட்டு மருத்துவத்தில் சொன்னாங்க
ஆப்பிள் மேல் ஸ்டிக்கர் காரணம் படித்த்திருக்கிறேன்.
ReplyDeleteகாய்கறிகளைக் கழுவி எடுத்துக் கொள்வோம். ஆனால் புளித் தண்ணீரில் எல்லாம் கழுவுவதில்லை! அவசரமும், அலுப்பும்தான் காரணம்.
மரத்துக்கு பிராந்தி ... ஹா... ஹா... ஹா...
9 ம் வாக்கு என்னுது!
எல்லாருக்குமே இப்படிதான். அதும் காலை வேளையில் சொல்லவே வேணாம். இன்னும் ரெண்டு கைகளும், கால்களும், கண்கள், காதுகள் இருந்தா பெட்டர்ன்னு தோணும்
Deleteபயனுள்ள தகவல்கள் சகோதரி...
ReplyDeleteவிடுகதைக்கு பதில் : நெல்லு...
விடை சரிதான்ண்ணே. நீங்க விடை சொல்லலைன்னா எனக்கு வருத்தம்தான்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான ஐஞ்சுவை அவியல்.
ReplyDeleteஸ்டிக்கர் காரணம் அறிவோம்....
ReplyDeleteகாய்கறி, பழம் எல்லாம் கழுவித்தான் பயன்படுத்துவது...கல்லுப்பு நீரில் போட்டு வைத்துவிட்டுக் கட் பண்ணுவது வழக்கம். உப்பு நீரிலும் போட்டாலும் நல்லதே.
காத்து வரதுக்கு மரத்துக்குப் பிராந்தி ஊத்துற சஜஷன் அஹஹஹஹ் வெடிச் சிரிப்பு
விடுகதைக்கு நெல்லு...விடை...ஆனா அது சலசலக்குமா நு டவுட். ஹிஹிஹி
துளசி, கீதா
கீதா: இறைவனுக்கே லஞ்சம் கொடுக்கறோமே// யெஸ் யெஸ்!!! ஹைஃபைவ் ராஜி!!