Thursday, July 27, 2017

வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது... - கைவண்ணம்

எனக்கு புடவை, நகைகள் மீது ஆர்வமில்லை. ஆனா, வளையல்மீது கொள்ளை ஆசை, புடவைக்கு மேட்சிங்கா வளையல் வேணும் எனக்கு. முன்னலாம் நிறைய கடையில் வாங்குவேன்.  கொஞ்ச நாள்ல வளையல் நிறம் மாறிடும். தூக்கி போட மனசு வராம மூட்டையா கட்டி கப்போர்ட்ல வச்சிருக்கேன். இப்ப கிராஃப்ட்ல ஆர்வம் வந்தப்பின், பழைய வளையல்ல நானே விதம் விதமா வளையல் செஞ்சு போட்டுக்கிறேன். 

இன்னிக்கும் அப்படி நான் செஞ்ச ஒரு பிரேஸ்லேட்தான் கைவண்ணத்துல வரப்போகுது...
பழைய வளையல் நாலு எடுத்து சில்க் நூல் சுத்திக்கனும்...
 நாலு வளையலையும் ஓரிடத்துல க்ளூ போட்டு ஒட்டிக்கனும்.

க்ளூ போட்டு ஒட்டி காய்ஞ்ச இடத்துல நூலை சுத்திக்கனும்...
 கருப்பு கலர் சேலைல ஆரஞ்ச் பூ போட்டது என் சேலை. அதனால இந்த காம்பினேஷன்ல எடுத்துக்கிட்டேன். 
கல்லை சுத்தி  கோல்ட் முத்து.....
அதுக்கடுத்து ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கனும்..
மீண்டும் கோல்ட் செயினை சுத்திக்கிட்டா பதக்கம் ரெடி....
பதக்கத்துக்கு நேரெதிர் ஒவ்வொரு வளையலுக்கிடையேயும்  கண்ணாடி வளையலின் உடைஞ்ச துண்டில் தங்க நிற நூலை சுத்தி ஒட்டிக்கிட்டேன். பேபி ட்யூப் இருந்தாலும் ஒட்டிக்கலாம். 
கடைசி வளையலில் ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கிட்டேன். அப்புறம் அங்கங்க திலக வடிவ முத்தை ஒட்டிக்கிட்டேன். 

அழகிய பிரேஸ்லெட் ரெடி. 

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
நன்றியுடன்,
ராஜி.

19 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நிறைய கம்பெனிகளை ஒழிச்சுடுவீங்க போலயே...
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் நோ கிண்டலிங்க்ண்ணே

      Delete
  3. கில்லர்ஜீ கருத்துதான் எனதும்
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. செட்டு சேர்த்துட்டீங்களா?!

      Delete
  4. கலைநயம் மிக்க பதிவு. தம வாக்கிட்டு ஆதரித்து விட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ஆதரவுக்கு நன்றிண்ணே

      Delete
  5. இதுக்கெல்லாம் வேற யாருக்கு டைம் இருக்கு தங்கச்சிய தவிர....எனிவே....சூப்பரா இருக்கும்மா.......

    ReplyDelete
    Replies
    1. ஆமா. வெட்டியா இருக்கேன்னு சொல்லாம சொல்லுறியாண்ணே

      Delete
  6. ஒட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டதுன்னு சொல்லுது...யாருப்பா கள்ள ஒட்டு போட்டது...ஹஹஹஹஹ
    நல்ல வேலைப்பாடு ராஜி
    கீதா

    ReplyDelete
    Replies
    1. நேத்து முழுக்க இதே பிரச்சனைதான் எனக்கும். நண்பர்களின் தளத்தில் ஓட்டு போடவே முடில. எப்பதான் தமிழ்மணம் மாறும்

      Delete
  7. சூப்பரா இருக்குக்கா...

    ReplyDelete
  8. வளையலுக்கு வோட்டு என்றதும் விழுந்து விட்டதே :)

    ReplyDelete