தூயா பிறந்து 20 நாட்களில் என் உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு போனபோது எடுத்த படம். என் அப்பாக்கு தெரிந்ததும் ஃபோட்டோ எடுத்தா ஆயுசு குறைவு, அதுலயும் குழந்தை தூங்கும்போது எடுத்திருக்கியே!! அறிவில்லையா உனக்குன்னு புலம்பித் தீர்த்துட்டாரு.
20 வருசங்கழிச்சு எனக்கப்புறம் பிறந்த குழந்தைன்றதால மேடம்க்கு ரொம்ப மரியாதை, கவனிப்பு. அவ இருக்கும் இடத்தில் ஃபேன் ஓடிட்டே இருக்கனும். எப்பவாவது கரண்ட் நின்னுட்டா ஆள் மாத்தி ஆள் விசிறிக்கிட்டே இருப்போம். தன்னோட எட்டாவது மாசத்தில் என் ஃப்ரெண்ட் கல்யாணத்தின் போது... வேர்த்துக் கொட்டி கசகசன்னு இருக்குன்னு என் அம்மாக்கிட்ட சொல்லுது..,
முதல் பிறந்த நாளின் போது.., வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தன் அப்பாவோடு..., மேடம் அப்பதான் நடக்க ஆரம்பிச்சாங்க. அதனால, ஒரு நிமிசம் கூட நிக்காம ஓடிட்டே இருப்பாங்க. இந்த ஃபோட்டோவை நான் எடுக்கப் பட்டப் பாடு இருக்கே! ஸ் அபா!
ஒரு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, அவ அப்பா சட்டையில் குத்தியிருந்த தேசியக்கொடியை பார்த்து தனக்கும் வேணுமின்னு அடம்பிடிச்சு தன் மார்பில் குத்திக்கிட்டா. எனக்குதான் குண்டூசி குத்திடுமோன்னு பயம்.
பேத்தியை ஈ, எறும்பு மொய்த்தால்கூட கலங்கும் என் அப்பா, காது குத்தி வலியில் அழும்போதும் சிரித்தப்படி.. பெரியவ பொறந்த சமயத்துல என் அப்பாவோட பங்காளி வீட்டுல யாரோ இறந்துட்டாங்க. அதனால, அவ பேர் சூட்டும்போது புது துணியும், தங்கமும் சீர் செய்யக்கூடாது. குழந்தையோட மூணாவது மாசம் செய்தால் போதும்ன்னு என் மாமியார் சொல்லிட்டாங்க. முதல் பேத்தி கழுத்துல எதுமில்லாதது என் அப்பா கண்ணை உறுத்த, புதுசுதானே போடக்கூடாதுன்னு, என் அம்மா தாலிக்கொடியிலிருந்த கால்காசை எடுத்து ஒரு சிவப்பு கலர் கயிறில் கோர்த்து பாப்பா கழுத்தில் போட்டுவிட்டார்.
மூணாவது மாசம் கொலுசு, மோதிரம், செயின்லாம் போட்ட பிறகு, அந்த சிவப்பு கயிற்றை கழட்டி பீரோ லாக்கர்ல வச்சுக்கிட்டார். நான் என் வீட்டுக்குப் போனப்பின், பேத்தி நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கயிற்றை வாசம் பிடிச்சுப்பார். குழந்தைக்குண்டான வாசனை, சோப்பு, பவுடர், பாப்பாவோட வேர்வைலாம் சேர்ந்து கலவையா ஒரு வாசனை அந்தக் கயிற்றில் இருக்கும். அதைத்தான் வாசம் பிடிப்பார். ரொம்ப நாளாய் இருந்துச்சு. வீடு மாத்தும்போது அந்தக் கயிறு மிஸ்ஸிங். அதுக்கு எனக்கும், என் அம்மாவுக்கும் விழுந்த டோஸ் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அதை சொல்லி மாளாது.
மூணாவது மாசம் கொலுசு, மோதிரம், செயின்லாம் போட்ட பிறகு, அந்த சிவப்பு கயிற்றை கழட்டி பீரோ லாக்கர்ல வச்சுக்கிட்டார். நான் என் வீட்டுக்குப் போனப்பின், பேத்தி நினைவு வரும்போதெல்லாம் அந்தக் கயிற்றை வாசம் பிடிச்சுப்பார். குழந்தைக்குண்டான வாசனை, சோப்பு, பவுடர், பாப்பாவோட வேர்வைலாம் சேர்ந்து கலவையா ஒரு வாசனை அந்தக் கயிற்றில் இருக்கும். அதைத்தான் வாசம் பிடிப்பார். ரொம்ப நாளாய் இருந்துச்சு. வீடு மாத்தும்போது அந்தக் கயிறு மிஸ்ஸிங். அதுக்கு எனக்கும், என் அம்மாவுக்கும் விழுந்த டோஸ் இருக்கே! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா அதை சொல்லி மாளாது.
அக்காவும், தங்கையும் எப்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ். ஒண்ணை ஒண்ணு பிரியாது. அவங்களுக்குள் எதும் மறைச்சுக்கவும் மாட்டாங்க. அவங்க இருவர் உலகத்துக்குள்ளும் என்னாலயே நுழைய முடியாது.
தூயாக்கு தம்பின்னா கொள்ளை இஷ்டம்..., ஆனா, அப்புதான் அக்காவோடு மல்லுக் கட்டுவான் காரணம் அவனுக்கு அவள்மீது கொள்ளை அன்பு மட்டுமல்ல. எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குவா. சின்ன அக்கா மாதிரி திருப்பி அடிக்காத காரணமும்கூட..., ஆனா இப்ப எலியும் பூனையும் போல....
விளையாட்டு பிள்ளையாய் இத்தனை காலம் கடத்தினாய்...... போனது போகட்டும்... இனியாவது பொறுப்பான பெண்ணாய் அப்பாவுக்கும், தாத்தா, பாட்டி, சுற்றத்தார் மெச்ச வாழனும்ன்னு வைராக்கியம் கொண்டு அதன்படி செல்.....
நன்றியுடன்,
ராஜி.
மலரும் நினைவுகள் அருமை. வாழ்த்துகள்.
ReplyDeleteதூயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!
ReplyDeleteவாழ்க வளமுடன்.
மலரும் நினைவுகள் அருமை.
படம் சொல்லும் க்தைகள் அருமை.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிம்மா
Deleteவாழ்க வளமுடன்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிப்பா
Deleteதூயாவிற்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...உங்கள் மலரும் நினைவுகள் அருமை...முதல் படம் முன்பு பார்த்த நினைவும்
ReplyDeleteபதிவே பழசுதான் சகோ
Deleteதூயாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்க சகோ
Deleteபிறந்த நாள் காணும் தூயாவுக்கும் மற்ற குழந்தைகளுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா
Deleteஎங்கள் வாழ்த்துகளைத் கொள்கிறேன்.
ReplyDelete* எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
ReplyDeleteதம +1
குழந்தைகளைக் கண்டாலே மகிழ்ச்சிதான். வாழ்த்துகள்.
ReplyDelete