என்ன புள்ள?! பக்கத்து வீட்டு பொண்ணுக்கு ஏதோ அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கே?!
அந்த புள்ள தன் பையன் மம்மின்னு கூப்பிடலியாம்.. அதை குறையா சொல்லிட்டிருந்தா. அம்மா, அப்பா... தாய் தந்தைன்னு எத்தனை அழகா தமிழ்ல வார்த்தைகள் இருக்கு. அதைவிட்டு ஏன் மம்மின்னு கூப்பிட சொல்றே?! மம்மின்னா பிணம்ன்னு அர்த்தம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். வேறோன்னுமில்ல.
மம்மின்னா பிணம்ன்னு சொல்லிட்டே. சரிதான். ஆனா, அப்பா, அம்மா, தாய், தந்தைக்கு அர்த்தம் தெரியுமா?!
தெரியாதே!
அ - உயிரெழுத்து... ம் - மெய்யெழுத்து... மெய்ன்னா உடல்ன்னு ஒரு பொருள் இருக்கு. உயிரும் உடலும் தந்தவள் அம்மான்னு பொருள் வரும், அதே மாதிரிதான் அப்பாவுக்கும்... உடலும் உயிரும் தந்தவங்கன்றதாலாயே அழகுத்தமிழில் அம்மா, அப்பான்னு சொல்றோம். குழந்தையை தாவி எடுத்து தழுவுவதால் அம்மாக்கு தாய்ன்னு பேர். தாய்க்கு குழந்தையை தந்த தலைவன்ங்குறதால தந்தைன்னு பேரு. நம் தமிழ்ல அத்தனை வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கு. அதிலும் உறவுகளுக்கு அழகூட்ட ஆயிரம் பேர்கள் இருக்கு. கிராண்ட்மா, கிராண்ட்ப்பான்னு ரெண்டு சொல்லுல நம்ம முன்னோர்களை அடக்கிடுறோம். அப்பா வழில வந்த பாட்டி, தாத்தான்னா அதுக்க்கொரு பேரு, அம்மா வழில வந்த தாத்தா பாட்டின்னா அதுக்கொரு பேரு. பாட்டன் பாட்டி, பூட்டன் பூட்டி, ஓட்டன் ஓட்டின்னு ஒவ்வொரு தலைமுறைக்கு ஒவ்வொரு பேரு வச்சு சொல்றோம். அதுமட்டுமில்லாம பெரியம்மா, சித்தி, அத்தை, மாமின்னு அத்தனை உறவுகளையும் ஆண்டின்னு ஒரு சொல்லிலும், சித்தப்பா, பெரியப்பா, மாமாக்களை ஒரே சொல்லிலும் கூப்பிடுறது நல்லதா?! தமிழ்ல அழகா சொல்லி கூப்பிடும்போது இருக்கும் உறவுகளுக்குள்ளான நெருக்கம் இப்படி அன்னிய மொழில கூப்பிடும்போது வருமா?! ஒரே வீட்டுப்படியை தாண்டிவந்து ஒன்னா வாழப்போகும் மச்சினன் மனைவியை ஓர்ப்படின்னு அழகா சொல்லுற தமிழ் பேருக்கு ஈடாகுமா சிஸ்டர் இன் லா?!
ம்ம்ம்ம்ம் இனி நம்ப பசங்களையும் ஆண்டி, அங்கிள்ன்னு சொல்லாம பார்த்துக்குறேன்.
சரி. முடிஞ்சவரை தமிழ்லயே பேசச்சொல்லு. இன்னொரு மொழியை கத்துக்குறது தப்பில்ல. ஆனா, தாய்மொழியை மறக்காம இருக்கனும். அதான் முக்கியம். வெளில போகனும்.. வெயில் இன்னிக்கு அதிகம் . பளிச்சுன்னு கண்ணாடி மாதிரி கண்ணு கூசுது. அந்த கூலிங்க் கிளாசை கொண்டு வா.
இந்தாங்க மாமா. மாமா எனக்கொரு டவுட்?! சூரிய வெளிச்சம் காலைல, சாயந்தர நேரத்துல ஆரஞ்ச் இல்லன்னா மஞ்சள் கலர்ல இருக்கு. ஆனா, பொழுதுபோகப்போக வெள்ளை கலர்ல இருக்கே! சூரிய வெளிச்சத்தோட நிறம்தான் என்ன?!
சூரியன்னு பேர் இருந்தாலும் சூரியனும் விண்மீன்கள் வரிசையில்தான் வருது. விண்மீன்களை வகைவகையாய் பிரிச்சு வச்சிருக்காங்க. சூரியன் G2V வகைல வருது. G2V வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5,500 டிகிரி செல்சியசா இருக்கும்போது வெள்ளை நிறத்துல ஒளிவீசும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாக தெரியுது. இதே ஒளிச்சிதறல் காரணமாதான் வானம்கூட நீல நிறமா நமக்கு தெரியுது. உண்மையில் அண்டவெளி கருப்பா இருக்கும். சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால்தான் மஞ்சளாவோ இல்ல ஆரஞ்ச் கலர்லயோ தெரியுது. தூயதமிழ்ல சூரியனுக்கு அம்பதுக்கும் மேல தமிழ்ல பேர் இருக்கு. அகில சாட்சி, அண்டயோனி, அரியமா, அரிகிரணன், அருக்கன், அருணன், அலரி, அழலவன், அனலி, ஆதவன், ஆதித்தன், ஆயிரஞ்சோதி, இரவி, இருள்வலி, இனன், உதயன், எல், எல்லை, ஏழ்பரியோன், ஒளியோன், கதிரவன், கன்ஒளி , கனலி , சண்டன்ம் சித்திரபானு, சுடரோன், சூரன், சூரியன், செங்கதிரோன்,சோதி, ஞாயிறு, தபனன், தரணி சான்றோன், திவாகரன், தினகரன், தினமணி, நபோமணி, பகல், பகலோன், பங்கயன், பதங்கன், பரிதி, பருக்கன், பனிப்பகை, பானு, மார்த்தாண்டன், மித்திரன்ம் மாலி, விகத்தன், விண்மனி, விரிச்சி, விரோசணன், வெஞ்சுடர், வெய்யோன், வெயில்.
அப்ப்ப்ப்ப்ப்ப்பாடி... இத்தனை பேர் இருக்கா?! உங்களுக்கு எப்படி இதுலாம் தெரியும்?!
ம்ம்ம்ம் எப்பப்பாரு பேஸ்புக்ல உக்காந்துக்கிட்டு மொக்கைஉம், கடலையும் போட்டுக்கிட்டு இருந்தா இதுலாம் எந்த காலத்திலயும் உனக்கு தெரியாது.
என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க...
ச்ச்ச்ச்சீ ரொம்ப நடிக்காத. ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது..
சொன்னது நீதானா!? சொல்... சொல்.. என் உயிரே!
அடிங்கொய்யால.... இந்த பாட்டு எந்தப்படத்துல வருதுன்னு தெரியுமா?!.
ம்ம்ம் ஸ்ரீதர் இயக்கி, எம்.எஸ்.வி இசையில், கண்ணதாசன் வரியில்.. தேவிகா, முத்துராமன் நடிப்புல வந்த படம். அம்மாக்கு முத்துராமனை பிடிக்கும். அப்பாக்கு தேவிகாவை பிடிக்கும். முன்ன கேபிள் வசதி இல்லாம விசிடி ப்ளேயர் இருந்தக்காலத்துல இந்த படத்தோட கேசட் எங்கூட்டுல இருந்துச்சு. ரெண்டு பேரும் மாறி மாறி பார்த்து இந்த படத்து சீன்லாம் இஞ்ச் பை இஞ்சா தெரியும்..
ம்ம்ம் பார்ரா. அம்மா முத்துராமன் ரசிகை, பொண்ணு கார்த்திக் ரசிகையா/ பலே. சரி இந்த பாட்டுக்கு பின் ஒரு கதை இருக்கு அது என்னன்னு தெரியுமா?!
ம்ஹூம்
எம்.எஸ்.வியும், கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்கள். பல வெற்றிப்படங்கள் இவங்க கூட்டணில வந்திட்டிருந்த காலக்கட்டம். எம்.எஸ்வி. ஏதோ சொல்ல ரெண்டு பேருக்குள்ளும் முட்டிக்கிச்சு. ரெண்டு பேரும் இணைஞ்சு படம் பண்ணுறது தள்ளிப்போட்டுக்கிட்டே போய்க்கிட்டிருந்துச்சு. ஸ்ரீதர் சார் போராடி நெஞ்சில் ஓர் ஆலயம் படத்துல ஒன்னு சேர்த்தார். கம்போசிங்க் எம்.எஸ்.வி வந்து காத்துக்கிட்டிருந்தார். கண்ணதாசன் வந்தார்... சிச்சுவேசனை சொன்னதும்... படபடவென சொன்னது நீதானா?! சொல்.. சொல்.. சொல்... என் உயிரே! சம்மதம்ம்தானா?! ஏன்/! ஏன்!? ஏன்?! என்னுயிரே! இன்னொரு கைகளிலே நான்... நான்... நானா... எனை மறந்தாயா?! ஏன் ஏன் எனை மறந்தாய்ன்னு சில நிமிசத்துல எழுதிக்கொடுத்தார். நீரு பூத்த நெருப்பாய் இருந்த அவங்க நட்பு மீண்டும் அவர்களுக்குள் கனன்றது. படம் ரிலீஸ் பாட்டு செம ஹிட். இந்த கதையோட சேர்த்து அந்த பாட்டை சேர்த்து கேட்டுப்பாரு புது அர்த்தம் பாட்டுல தெரியும்.
சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே
(சொன்னது)
இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
(சொன்னது)
மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே
மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே
இன்று
(சொன்னது)
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?!
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?!
பாட்டை கேட்டுக்கிட்டே இந்த கணக்குக்கு விடையையும் யோசிச்சு பாரு..
கட்டியால் எட்டு கட்டி
காலரை முக்கால் கட்டி
செட்டியார் இறந்து போனார்...
சிறுபிள்ளை மூன்று பேர் ...
கட்டியை உடைக்காமல்
கணக்காய் பிரித்திடுக.....
அப்படியே பொண்டாட்டின்னா எப்படி இருக்கனும்ன்னு இந்த படத்தை பார்த்து தெரிஞ்சுக்க... நான் ஓடிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டென். ஆயிரங்குச்சி கட்டை தூக்காத.....
இது என்னோட 750 பதிவு. ஒன்னுமே தெரியாம சும்மா கிறுக்குற கவிதைகளுக்காக கிறுக்க சும்மா வலைப்பூ. சிரிப்பு போலீஸ் ரமேஷ், தமிழ்வாசி பிரகாஷ், தென்றல் சசி, மதுரை தமிழன், மின்னல் வரிகள் கணேஷ் அண்ணா, டில்லி வெங்கட் நாகராஜ் அண்ணா, மதுரை ரமணியப்பா, புலவர் ஐயா, சென்னைப்பித்தன் ஐயா, கிரேஸ், கும்மாச்சி, தனிமரம்., இளமதி, ராஜேஸ்வரி அம்மா, ஸ்ரீ ராம் சார், சீனாதானா ஐயா, கமலாம்மா, நாச்சியார் அம்மா, துளசி அம்மா, கோமதி அரசு, ராஜபாட்டை ராஜா, கருண், சௌந்தர், சரவணன், ஆவி, அரசன், ரூபக்ராம், சீனு, சுப்புதாத்தா, கில்லர்ஜி அண்ணா, பகவான் ஜி அண்ணா, அனு, மதுமதி, சுரேஷ்குமார், சொக்கன், ஆச்சி, ஆமினா, கீதாக்கா, ருக்மணி பாட்டி, மனோ அண்ணா, விக்கியண்ணா, ஆரூர் மூனா, ஆபீசர், அம்பாள் அடியாள், ..ன்னு கருத்திட்டு என்னை வளர வைத்த அத்தனை பேருக்கும்.. பேர் விடுபட்டுப்போன சகோதரர்களுக்கும் எனது நன்றி... கூடவே வலைப்பூவை அப்பப்ப ரிப்பேர் செஞ்சு கொடுக்கும் தனபாலன் அண்ணாக்கும், பதிவோடு ரசிக்கத்தக்கதா படத்தை போடனும்ன்னு சொல்லித்தந்த வலைப்பூ வட்டத்துக்கு வெளிய இருக்கும் முதல் ரசிகருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.... இதேமாதிரி வருகையும், கருத்தும், தவற்றை சுட்டிக்க்காட்டியும் என்னை ஊக்கப்படுத்த வாருங்கள்...
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை
ராஜி.
750-க்கு முதலில் வாழ்த்துகள் சகோ
ReplyDeleteதமன்னா+1
அம்மா-அப்பாவின் வார்த்தைகளுக்கு பின்னே இவ்வளவு விடயங்களா ?
Deleteஆச்சர்யமாக இருக்கிறது.
க.தாசன்-எம்மெஸ்வி கூட்டணி பற்றிய விபரங்கள் அருமை.
தொடர்ந்து எழுதி விரைவில் 1000 தொட்டுவிட எமது வாழ்த்துகள்.
பதிவில் எம்மையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.
நான் கொஞ்சம் சோம்பேறிண்ணே. நான் எப்படி எழுதி ஆயிரத்தை தொட்டு..... வாழ்த்துக்கு நன்றிண்ணே
Deleteவாழ்த்துகள் அன்பு சகோதரி...
ReplyDeleteநன்றிண்ணே
Delete¾ கட்டிகள் மூன்று...
ReplyDelete½ கட்டிகள் நான்கு....
¼ கட்டிகள் ஒன்று.
மூத்தவனுக்கு இரண்டு ¾ கட்டிகள்...
இரண்டாமவனுக்கு ஒரு 3/4, ஒரு ½, ஒரு ¼ கட்டிகள்...
இளையவனுக்கு மூன்று ½ கட்டிகள்...
விடை சரிதாண்ணே
Deleteமுக்கால் ஆயிரத்தை தொட்டதுக்கும்,விரைவில் முழு ஆயிரத்தைத் தொடவும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteத ம வாக்கிட்டால் ,மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்றே வருகிறதே :)
அதான்ண்ணே தெரில. என்னிக்குதான் தமிழ்மணம் சரியாகப்போகுதோ!! நம்ப புலவர் ஐயாக்கூட பதிவு போட்டிருக்கார் இதுப்பத்தி....
Deleteவருகைக்கும் வாழ்த்துக்க்கும் நன்றிண்ணே
750-க்கு முதலில் வாழ்த்துகள் சகோ த.ம 4
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா
Deleteபுதுப்புது தகவல்களா அள்ளி தருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteபடித்ததை பகிர்ந்துக்குறேன். அவ்வளவே.
Delete750-வது பதிவு. வாழ்த்துகள்.....
ReplyDeleteசுவையான அவியல். பாராட்டுகள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteதகவல்கள் அருமை......வாழ்த்துக்கள்,750 க்கு.///சூரியனுக்கு இவ்ளோ பேர்களா...... நன்றி,பதிவுக்கு.
ReplyDeleteஇது அத்தனையும் தூய தமிழ் பெயர்கள்ண்ணே
Deleteஅம்மாவுக்கும் அப்பாவுக்கும் விளக்கம் அருமை. சூரியனுக்கு இத்தனை பெயர்களா! அட! பொது அறிவுக்கான விஷயங்களை படிக்கச் சுவாரஸ்யமான நடையில் தந்திருக்கிறீர்கள். கண்ணதாசன் பாடல்களுக்கு அதன் பின்னணி என்று நிறைய கதைகள் சொல்வார்கள். அந்த சிவகாமி மகனிடம் பாடலுக்கு ஒரு பின்னணி, அன்னான் என்னடா தம்பி என்னடா பாடலுக்கு ஒரு பின்னணி என்று! படக் காட்சி பொருத்தமாக அமைகிறது. அஷ்டே!
ReplyDelete750 வைத்து பதிவுக்கு வாழ்த்துகள். வந்து படித்தால் எப்போதுமே தவறாது தம வாக்குப் போட்டு விடுவேன்.
*அன்னான் = அண்ணன்
Deleteநீங்க ஓட்டு போடுவீங்கன்னு எனக்கு தெரியும்ண்ணே. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே
Deleteஅப்பா... 750- பதிவுகளா.. வாழ்த்துகள்..
ReplyDeleteபல பல அருமையான தகவல்களுக்கு நன்றி...
7 வருசத்துல 750 பதிவுதான். இடையில் அப்பப்ப பிரேக்...
Deleteநான் இப்போது தான் 310 பதிவு .
ReplyDelete750 வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ராஜி.
இன்று எல்லாம் அருமையான ஐஞ்சுவை
சோம்பேறிம்மா நானு. அதான் 7 வருசத்துல 750 பதிவு. அப்பப்ப பிரேக் வேற. இனியாவது பிரேக் விடாம இருக்கனும்.. பார்ப்போம்.
Deleteதமிழ்மண வாக்கு அளித்து விட்டேன்.
ReplyDeleteநன்றி
Deleteவாழ்த்துகள். தொடரட்டும் பல ஆயிரங்கள்.
ReplyDelete