பீர்க்கங்காயில் கூட்டு, பொரியல், சாம்பார், மசியல்ன்னு செய்வோம். அப்படி செய்யும்போது பீர்க்கங்காயின் தோல் சீவி எறிஞ்சுடுவோம். அப்படி அந்த தோலை தூக்கிப்போடாம முன்னலாம் துவையல் செஞ்சு சாப்பிடுவோம். இப்பலாம் அப்படி செய்யுறதில்ல.... பீர்க்கங்காயின் நன்மைகளை ஏற்கனவே போட்ட இந்த பதிவுல போய் பார்த்துட்டு வாங்க.
தேவையான பொருட்கள்..
பீர்க்கங்காய் தோல்
காய்ந்த மிளகாய்,
உ.பருப்பு
கடலைப்பருப்பு
தனியா
உப்பு,
புளி
தேங்காய்
பீர்க்கங்காய் தோல் சீவி எடுத்துக்கோங்க..
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா சேர்த்து சிவக்க விடுங்க.
சீவி வச்சிருக்கும் பீர்க்கங்காய் தோலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்க..
தேங்காய், உப்பு சேர்த்து வதக்குங்க...
புளி சேர்த்து வதக்குங்க
மிக்சில இல்ல ஆட்டுக்கல்லுல கொரகொரப்பா அரைச்சு எடுத்தா சூப்பர் துவையல் ரெடி. தயிர்சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கு ஏத்த டிஷ்.
அம்மில வச்சு அரைச்சு முடிச்சதும், அம்மியில ஒட்டியிருக்கும் துவையலில் சாதம்போட்டு பிசைஞ்சு உருட்டி அம்மா கொடுப்பாங்க.... ம்ம்ம்ம்ம்ம் யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி.... துவையல் ருசிச்சது அம்மா கைமணமா?! இல்ல அம்மிக்கல்லா? இல்ல அம்மாவின் பாசமான்னு இன்னும் தெரில.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466799
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466799
நன்றியுடன்,
ராஜி.
இதுவரை செய்ததில்லை...
ReplyDeleteநன்றி...
செஞ்சு சாப்பிட்டு பாருங்கண்ணே. பித்தத்துக்கு நல்லது
Deleteபயனுள்ள தகவல்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ
DeletePuthumai padagaludan arumai. vaalthukal.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteசுவையான பதிவு!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ
Deleteபீர்க்கங்காய் தோல் அதிக சத்து உள்ளது எல்லோரும் அதை வீசி எறிந்துவிட்டு உள்ளிருக்கும் சக்கையை கூட்டு செய்து உண்கின்றனர்.இனியாவது அதை துவையல் செய்து உண்டால் உடல் நலம் மேம்படும். தேவையான பதிவு. நன்றி.
ReplyDeleteகருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க
Deleteநாங்களும் இதுபோல் செய்வது உண்டு...
ReplyDeleteமுன்னாடி எல்லாரும் இப்படி செய்வாங்க, இப்பலாம் அப்படி இல்ல. எல்லாருக்கும் சோம்பேறித்தனம்
Deleteபயனுள்ள தகவல் பாராட்டுகள்
ReplyDeleteகருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சகோ
Deleteஅட இன்று எங்கள் வீட்டில் பீர்க்கங் காய் தோல் துவையல், பீர்க்கங்காய் கூட்டு....
ReplyDeleteஇதே போன்று பெங்களூர் கத்தரிக்காய்/சௌசௌ தோல் லிலும் செய்யலாம்....
கீதா
வாட் எ கோ இன்சிடெண்ட்
Deleteஎனக்குப் பிடிக்கும்
ReplyDeleteபித்தத்தை போக்கும்ப்பா
DeleteYemmy.....
ReplyDelete