Friday, May 25, 2018

அதிசய ஆலயங்கள் - 2

ஆலயங்களினால் அதிசயம் நிகழும்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். சில ஆலயங்களே அதிசயமா இருப்பதை ஆலயங்களின் அதிசயம் 1 ன்ற பதிவில் பார்த்தோம். மத்த கோவில்களிலிருந்து வேற்பட்டிருக்கும் சில கோவில்களை பத்தி இன்னைய பதிவில் பார்க்கலாம். 
மயிலாடுதுறைக்கு பக்கத்திலிருக்கும் திருநின்றியூரில் பரசுராமருக்கு அருளிய பரசுராமலிங்கம் மற்றும் ஜமத்கனி முனிவருக்கு காட்சியளித்த  ஜமத்கனீஸ்வரர் ஆகிய இருவரும் ஒரே ஆவுடையார் (பீடம்)மீது இடண்டு பாணங்களாக காட்சி அளிக்கிறார். ஒரே பீடத்தில் இரண்டு லிங்கங்கள் இருப்பது வேற எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு பக்க்கத்திலிருக்கும் அத்திமுகம்ன்ற ஊரிலிருக்கும் ஐராவதீஸ்வரர் ஆலயத்தின் மூலவர் லிங்கத்திருமேனியில் யானையின் உருவத்தினை காணலாம். ஐராவதம்ன்ற இந்திரனின் வாகனமான யானை இத்தல இறைவனை வணங்கியதால் அந்த யானையின் முகம் லிங்கத்தில் படிந்ததாய் கூறப்படுது.

பெரம்பலூரை அடுத்த தொழுதூர் மதுராந்தக சோளீஸ்வரர் ஆலயத்திலிருக்கும் அம்பாளுக்கு நெற்றிக்கண் இருக்கும். இந்த அம்மனை ஜன்னல் வழியாகத்தான் தரிசனம் செய்யமுடியும்.

திருச்சி மாவட்டம் முசிறியிலிருந்து 12கிமீ தொலைவில் இருக்கும் தாத்தய்யங்கார்பேட்டையில்  பைரவர் கோவில் இருக்கு. இதில் எங்கும் காணமுடியாத வகையில் பைரவர் பஞ்சமுகத்தினரா காட்சியளிக்கிறார்.

 சென்னை, பொன்னேரிக்கு பக்கத்திலிருக்கும் ஆண்டார்குப்பத்திலிருக்கு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு,, சிம்ம வாகனத்தில், மயிலை தாங்கியபடியும், இடுப்பில் கைவைத்தபடியும் அதிகாரதோரணையுடன் காட்சியளிக்கிறார். 

பொதுவா தம்பதி சமேதரராய் வீற்றிருந்தாலும் எல்லா கோவில்களிலும்  பெண்பால் தெய்வங்களின் உருவங்கள்  ஆண்பால் தெய்வங்களின் மூர்த்தங்களைவிட உயரம் குறைச்சலாதான் இருக்கும். ஆனா,   வேலூரில் சதுரகிரி மலையிலிருக்கும் முருகன் ஆலயத்தில் மூலவ வள்ளி முருகன் தெய்வானை  மூர்த்தங்கள் சம உயரத்தில் இருக்கும்.  இதுக்கு காரணம், பக்கத்திலிருக்கும் வள்ளிமலையில் முருகன் வள்ளியை கடிமணம் புரிந்தார். இதனை கேள்விப்பட்டு வந்த தெய்வானையை இந்த இடத்தில்தான்  சமாதானப்படுத்தினாராம். வள்ளி தெய்வானா வெவ்வேறல்ல எனவும், மனைவியருக்கு காதல் திருமணத்திற்கு பரிசாய் சம உரிமை வழங்கப்பட்டதாக சொல்லப்படுது.

வேலூர் வள்ளிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சடாரி வைத்து தீர்த்தம் பிரசாதமா வழங்கப்படுது. முருகன் கோவிலில் தரப்படும் விபூதி இங்கு தரப்படுவதில்லை. அதுக்கு காரணம், வள்ளி, விஷ்ணு பகவானின் அம்சம் என்பதால். 


சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலம்ன்ற இடத்தில் பிரத்தியங்கிராதேவி ஆலயம் இருக்கு. இந்த அன்னைக்கு மிளகாய் வத்தல் மாலை சாத்தி, வேப்ப எண்ணெய் தீபமேற்றி வழிபட்டு தங்களது வேண்டுதலை சொல்லி அம்மனை வணங்குகின்றனர்.
சென்னை சவுக்கார்பேட்டையிலிருக்கும் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயத்தில் கருடன் பெண்வடிவில் காட்சியளிக்கிறார். இது வேறெங்கும் காணக்கிடைக்காது.

ஹரித்துவாரிலிருக்கும் பிர்வபர்வதத்தில் மானசா தேவி கோவில் இருக்கு  இங்கிருக்கும் அன்னை லட்சுமி, சரஸ்வது, பார்வதிதேவியின் மூன்று முகங்களுடன் ஒரே உருவமாய் காட்சியளிக்கிறாள்.  நினைத்ததை நடத்தி தருபவள் இவள். ஹரித்துவாரின் அழகை பிர்வபர்வத்தின் உச்சியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்.  இங்கு  வரும் பக்தர்களுக்கு பொட்டு வைத்து முதுகில் தட்டி ஆசிர்வாதம் செய்து அனுப்புகிறார் அர்ச்சகர். 

அதிசய ஆலயங்கள் தொடரும்...

நன்றியுடன்,
ராஜி

10 comments:

 1. வியப்பான தகவல்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 2. தகவல்கள் அதிசயமே... சகோ

  ReplyDelete
  Replies
  1. நாளைக்கு பதிவில் இன்னொரு அதிசயம் இருக்கு, வந்து பாருங்கண்ணே

   Delete
 3. முருகன் அழகாய் இருக்கார்.

  சுவாரஸ்யமான தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. முருகன் என்றாலே அழகுதானே சகோ?!

   Delete
 4. முருகன் படம் மிகவும் பிடித்தது. நிறைய தகவல்கள்...நீங்க நிறைய தகவல்கள் கொடுக்கறீங்க..ஒவ்வொரு நாளும்.....இத்தனையும் என் கடுகு சைஸ் மூளைக்குள்ள எங்க அடைச்சு வைக்கனு யோசிச்சுட்டுருக்கேன்...ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. உங்க மூளையே கடுகு சைஸ்ன்னா, அப்ப என்னுதுலாம்?! கடுகின் ஒரு செல் அளவுதான் என் மூளை சைஸ்ன்னு நினைக்குறேன் கீதாக்கா.

   Delete
 5. எப்படி யெல்லாமோ கேள்விப்பட்ட கதைகள் பதிவெழுத உபயோகமாகிறது

  ReplyDelete
  Replies
  1. எதாவது படிக்க, கேட்க, பார்க்கும்போது இது பதிவுக்கு உதவும்ன்னு ஸ்பார்க் வரும். உடனே எடுத்து வச்சுப்பேன்.

   Delete