Monday, May 21, 2018

அம்மாடியோவ்! இத்தனை பசங்களா!? ஐஞ்சுவை அவியல்

மாமா! எனக்கு ஏழரை சனி ஆரம்பிச்சிருக்காம். அதனால, கெட்டது நடக்காம இருக்கு காக்காவுக்கு சோறு வச்சிட்டு,, சாமி கும்பிட்டு அப்புறமா என்னை சாப்பிட சொல்லி இருக்காங்க. 

ம்ம்ம் மத்த பறவையை விட்டுட்டு காக்காவுக்கு ஏன் சோறு வைக்குறாங்கன்னு சொல்லு பார்க்கலாம்... 

சனி பகவானோட வாகனம்ங்குறதால சோறு வைக்குறாங்க. அதுமில்லாம நம்ம மூதாதையர்கள்லாம் காக்கா ரூபத்துல வருவாங்கன்னு சொல்றதாலயும் சோறு வைக்க சொல்றாங்க. அதுமட்டுமில்லாம, காக்காவுக்கு விருந்தாளிங்க வர்றது தெரியும். அதானலயும் சோறு வைக்க சொல்றாங்க. 

ம்க்கும், வாட்ஸ் ஆப், ஐ.எம்.ஓ, வீடியோ கால்ன்னு உலகம் போகுது. காக்கா வந்து உனக்கு தகவல் சொல்லுதா?!  ஆன்மீக காரணத்தை தாண்டி அறிவியல் காரணம் ஒன்னு இருக்கு. அது என்னன்னா, காக்காவுக்கு பய உணர்ச்சி இல்ல. பழக்காமயே மனிதர்களோடு சட்டுன்னு நெருங்கிடும். அதனால, வீடு, வாசல், தோட்டம்ன்னு மனிதர்கள் புழங்குற இடத்துல காக்காவும் புழங்கும். காக்கா செத்த பூச்சி, பல்லி, கரப்பான், எலி, பாம்பு, தவளைன்னு பாச்சைலாம் சாப்பிடும் குணம் கொண்டது.  சோறு சாப்பிட வரும் காக்கா வீட்டுல செத்து விழுந்திருக்கும் பல்லி கரப்பான், பாச்சைகளை சாப்பிட்டு சுத்து சூழலை சுத்தமா வச்சிக்க உதவுறதாலயும் காக்காவை வீட்டுக்கு வர வைக்குற உத்திக்காகத்தான் அப்பிடி சொல்லுறாங்க.

ஓஓஒ இதுல இப்பிடி ஒரு காரணமிருக்கா?! அப்ப போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலைன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம்ன்னு உனக்கு தெரியுமா?!

ம்ம்ம்  போக்கு + கற்றவன் அதாவது எவனெவன் எந்த மாதிரி நடந்துப்பான், என்ன மாதிரி நடந்திருக்கும்ன்னு யூகிக்க தெரிஞ்சவன்  போலீஸ் வேலைக்கு தகுதியானவன்.  வாக்கு +கற்றவன்.. வாக்குன்னா எல்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டிருந்தாலும் எல்லாருக்கும் புரியுற மாதிரி சொல்ல முடியாது அந்த  மாதிரி புரிய வைக்கும் திறமையை கொண்டவனுக்கு வாத்தியார் வேலை சரிப்பட்டு வரும்ன்னு சொல்லுறதுதான் இந்த பழமொழி..

ஒரு ஆணோ, இல்ல பெண்ணோ தன் வாழ்நாள்ல எத்தனை குழந்தை பெத்துக்க முடியும்ன்னு சொல்லு பார்க்கலாம்.  

புராணக்கதைகளில் நூத்துகணக்கா சொல்வாங்க. புராணக்கதையில் பல பொண்டாட்டி இருந்ததால சாத்தியம்.  நம்ம தாத்தா பாட்டி காலத்துல இருதார மணம்ங்குறது சகஜம். கூடவே குழந்தை இறப்புங்குறது சகஜம். அதனால பதினாறு, பதினேழுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்பலாம் ஒன்னுத்துக்கே வழிய காணோம்.  ஏன் கேக்குறீங்க மாமா?!

18ஆம் நூற்றாண்டில் மொரோக்கோவை ஆண்ட மன்னர் மொர்லே இஸ்மாயிலுக்கு 500 அந்தப்புரப் பெண்கள். அவர்கள் மூலம் அவர் பெற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 888. 1816 முதல் 1872 வரை ரஷ்யாவில் வாழ்ந்த வாசிலெட் என்ற பெண்மணிதான் அதிக குழந்தைகள் பெற்றவர். 27 முறை கர்ப்பம் தரித்திருக்கிறார். பதினாறு பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள், ஏழு பிரசவத்தில் மும்மூன்று குழந்தைகள்,  நான்கு குழந்தைகள் வீதம் நான்கு பிரசவம். மொத்தம் 69 குழந்தைகளாம்.  இதுதான் இப்ப வரைக்கும் லீடிங்க்ல இருக்கு..

ஆத்தாடியோவ், இதுங்களைலாம் எப்படி படிக்க வச்சு, கல்யாணம் கட்டிக்கொடுத்து கரையேத்துறதாம்?!

ரொம்ப வாய பொளக்காத... வாட்ஸ் அப்ல வந்த ஒரு ஜோக்கை காட்டுறேன். பார்த்து சிரிச்சு ரிலாக்சாகி, காஃபி குடிச்ச டம்ப்ளரை கழுவு.

ம்ம்ம் காஃபி போட்டு கொடுக்க முடிஞ்ச உங்களால ரெண்டு டம்ப்ளரை கழுவ முடியாதாக்கும். அதுமில்லாம, என்னையவிட நீங்கதான் சுத்தமா பாத்திரம்லாம் கழுவுவீங்க.

பார்த்தியா?! இடத்தை கொடுத்தா மடத்தை புடுங்குறியே! இதுக்குதான்டி உன்ன்னாக்கூடலாம் சேரக்கூடாதுன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க...

சரி, சரி, விடுகதை போட்டு ரொம்ப நாளாச்சுது. அண்ணன் தயவில் தம்பி ஆட்சி அமைப்பான். யார் அந்த தம்பி?!

யோசிச்சு வைங்க. வேலைலாம் முடிச்சுட்டு வாரேன்..

நன்றியுடன், 
ராஜி 

5 comments:

 1. என்ன இன்று எங்கு போனாலும் காகத்தைப்பற்றிய பதிவு.

  888 குழந்தைகளா ?
  நல்லவேளை அப்போது யூ.கே.ஜி, எல்.கே.ஜி. எல்லாம் திறக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. திறந்திருந்தா இந்நேரத்துக்கு யூனிவர்சிட்டியாகி இருக்கும்ண்ணே.

   Delete
 2. காக்காய்க்குப் போட்டுப் பார்த்து, அது சாகாமல் இருந்தால் தான் சாப்பிடுவான் மனிதன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!!!!

  அடடா... இன்னும் 112 மட்டும் பெற்றுக்கொண்டிருந்தால் ஆயிரமாகியிருக்குமே இஸ்மாயிலுக்கு வாரிசுகள்!


  அண்ணன் தயவுல ஆட்சி அமைக்கற தம்பி யாருன்னு சொல்லவே இல்லையே...

  ReplyDelete