இருவது முப்பது வருசத்துக்கு முன்னாலலாம் பெரும்பான்மையான வீடுகளில் காலைல பழைய சாதம், மதியம் கூழ் இல்லன்னா களி, நைட்டுக்குதான் சாதம். சில வீடுகளில் அதுகூட கிடையாது. இட்லி, தோசைலாம் தீபாவளி பொங்கல் நாட்களில்தான்.
கடந்த பத்து இருபது வருசக் காலங்களில் கூழ், களி சாப்பிடுறதை கௌரவக் குறைச்சலா நினைக்க ஆரம்பிச்ச நம்மாளுங்க இதையெல்லாம் சாப்பிடுறதைக் குறைச்சுக்கிட்டாங்க. கடந்த அஞ்சு வருசக் காலமா நீரிழவு நோயாளிகள், உடல் எடையை குறைக்குறவங்கலாம் மட்டும் சாப்பிடலாம்ன்ற எண்ணம் மக்கள் மத்தியில உண்டாகிடுச்சு. இப்போ கூழ், களி சாப்பிடுறது ஒரு ஃபேஷனாவே ஆகிட்டுது. வீதியோர தள்ளுவண்டிக் கடைகளில் வாங்கி சாப்பிடுறாங்க நம்மாளுங்க. சிறு வியாபாரிங்க இந்த வியாபாரத்துல பொழைக்குறாங்க. ஆனா, அதேவேளையில் நம்ம ஆரோக்கியத்தையும் மனசுல வச்சுக்கனும்ல்ல. கூழ் கரைக்கும் கையின் சுத்தம், தண்ணி, பாத்திர பண்டத்தோட சுத்தம், அதுமில்லாம தள்ளுவண்டியில் இருக்கும்போது விழும் தூசுன்னு மனசுல வச்சிக்கிட்டு ஒரு அரைமணிநேரம் செலவு பண்ணால் நம்ம வீட்டிலேயே சுத்த பத்தமா செஞ்சு சாப்பிடலாமே!
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - ஒரு கப்
பச்சரிசி அல்லது நொய் - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
கேழ்வரகை வாங்கி வந்து கல், மண் போக கழுவி முளைக்கட்டி வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைச்சு வச்சுக்கோங்க. விருப்பப்பட்டால் ஒரு கிலோ கேழ்வரகுக்கு, கால் கிலோ கம்பும், கால் கிலோ சோளமும் கலந்து அரைச்சுக்கலாம்.
ஞாயித்துக்கிழமை மாலை கூழ் காய்ச்சனும்ன்னு நினைச்சா சனிக்கிழமைக் காலையே, ஒரு கப் கேழ்வரகு மாவை, தண்ணி விட்டு கரைச்சு புளிக்க விடனும். சிலர் கைப்பக்குவம் சீக்கிரம் உணவு கெட்டுப்போகாது, மாவு கரைச்சாலும் புளிக்காது. எனக்கும் அப்படிதான். அதனால், மாவு கரைச்சு வெயிலில் வைப்பேன். மாவும் புளிச்சுடும்.
ஞாயித்துக்கிழமை சாயந்திரம் பச்சரிசி (அ) நொய்யை ரெண்டு மணிநேரம் ஊற விட்டு, அடிக்கணமான பாத்திரத்தில் குழைய, குழைய கஞ்சியாய் காய்ச்சிக்கனும். என் அம்மா அரிசியை ரவை பதத்தில் உடைச்சு கஞ்சி காய்ச்சுவாங்க. கூழ் நைசா இருக்கும்.
ஸ்டவ்வை சிம்ல வச்சு, புளிச்ச கேழ்வரகு மாவை தண்ணியாய் கரைச்சு, வெந்திருக்கும் கஞ்சியில் கொட்டி, கைவிடாம கிளறி விடவும்.
கொதிச்சு வரும்போது உப்பு சேர்த்துக்கோங்க.
கோதுமை நிறம் மாறி கேழ்வரகுப் போல பிரவுன் நிறத்துக்கு வர ஆரம்பிக்கும். நல்லா கொதிச்சு அல்வா பதம் மாதிரி வந்ததும் அடுப்பை அணைச்சிடுங்க. சுவையான கூழ் ரெடி. மறுநாள் அதாவது, திங்கட்கிழமை காலைல அந்த கூழ் மேல ஏடு மாதிரி காய்ஞ்சிப் போயிருக்கும். அதை எடுத்துட்டு, உள்ள இருக்கும் கூழ்ல கொஞ்சம் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து கட்டி இல்லாம பிசைஞ்சு கொஞ்சம், கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கனும்.
சிலருக்கு கூழை தண்ணியாய் குடிக்க பிடிக்கும், சிலருக்கு கெட்டியாய் குடிக்கப் பிடிக்கும். அதனால, அவங்கவங்க விருப்பத்துக்கேத்த அளவுக்கு தண்ணி சேர்த்துக்கோங்க. விருப்பப்பட்டா மோர், வெங்காயமும் போட்டுக்கலாம். சிலர் பொடிசா வெட்டிய மாங்காயும் சேர்த்துப்பாங்க. கூழ் கரைக்கும்போது கையால கரைச்சா நல்லா இருக்கும். கையால கரைக்குறதான்னு, ஹைஜீனிக்கா நினைக்குறவுங்க க்ளவுஸ் போட்டுக்கோங்க. மிச்சம் இருக்கும் கூழை வெளில வச்சாலும் ரெண்டு நாள் தாங்கும். ஃப்ரிட்ஜ்ல வச்சா ஒரு வாரம் தாங்கும்.
இப்ப அடிக்கும் வெயிலுக்கு வாரம் ஒரு நாளாவது அவசியம் கூழ் குடிக்கலாம். என் பசங்க மதியம் லஞ்சுக்காக ஸ்கூலுக்கு கொண்டுப் போய் சாப்பிடுவாங்க. கூழ் சாப்பிடுறதால கால்சியம் சத்து அதிகமா கிடைக்குது, பசியின்போது சுரக்கும் அமிலச் சுரப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை நிலையாய் வைத்திருக்க உதவுது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்குது.நார் சத்தும் கூழ்ல அதிகம் இருக்கும். கூழுக்கு ஊறுகாய் நல்ல சைட்டிஷ். சுண்டைக்காய் வத்தல், மோர்மிளகாய், மாங்காய் பொரியல், பாவக்காய் பொரியல், முருங்கைக்கீரை பொரியல், அரைக்கீரை மசியல்ன்னும் சாப்பிடலாம். என் சின்ன பொண்ணுக்கு தயிரும், வெங்காயமும் சேர்க்கக்கூடாது. அதேப்போல டம்ப்ளர்லயும் ஊத்தி குடிக்காது. தட்டில் கூழை ஊத்திக்கிட்டு அதுமேல சாம்பார் இல்ல, காரக்குழம்பை ரவுண்ட் ரவுண்டா டிசைனா ஊத்தி குடிக்க பிடிக்கும்.
ஆனா, கூழ் சமைத்ததும் சாப்பிடக் கூடாது. குறைந்தது எட்டு மணிநேரம் கழிச்சுதான் சாப்பிடனும். சுடுக்கூழ் சளிப்பிடிக்கும்ன்னு சொல்வாங்க. கூழ் காய்ச்சும்போது ஜாக்கிரதையா கவனமா இருங்க. இல்லன்னா மேல கொட்டி கொப்பளம் எழும்பும். கூழ் காய்ச்சி முடிச்சு அடுப்பிலிருந்து பானையை இறக்கும்போது பானை உடைஞ்சு கூழ் மேல கொட்டி என் பாட்டி இறந்துட்டாங்க. அதனால, நான் ரொம்ப கவனமா இருப்பேன். கொஞ்சம் சூடுப்பட்டாலும் கொப்பளம் எழும்பும். ஜாக்கிரதை!
நன்றியுடன்,
ராஜி
செய்முறை அருமை... ஆனாலும் கவனமாக செய்ய வேண்டும் என்பதையும் அறிய முடிந்தது...
ReplyDeleteகவனமா செய்யலைன்னா கை சுட்டுக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஎனக்கு சிறு வயது முதலே கேப்பை களியை விட கம்பங்கூழுதான் பிடிக்கும்.
ReplyDeleteஎங்க வீட்டில் எல்லோருக்குமே ரெண்டுமே இஷ்டம்
Deleteஎங்க வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடித்த உணவு க்கா...
ReplyDeleteவாரம் ஒருமுறை அல்லது இரு முறை ராகி களியும் கஞ்சி யும் உண்டு...
நல்ல விசயம் அனு. பசங்களுக்கும் பழக்குங்க
Deleteஅருமையா கூழ் செய்முறைப் பதிவு.....மக்ழே...........ஜாக்கிரதையா காச்சணும்,....இல்லேன்னா தெறிச்சு கொப்புளம் போட்டுடும்.......>>>>சொல்லிட்டேன்,தங்கச்சி....
ReplyDeleteநீங்க , நான் சொல்லியும் கேக்காம கை கொப்புளிச்சு வந்தா கம்பெனி பொறுப்பேற்காதுன்னு சொல்லிடலாமாண்ணே!?
Deleteம்........
Deleteஅருமை
ReplyDeleteநன்றி சகோதரியாரே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஅருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteகேப்பையில் உண்மையிலேயே நெய் வடியும் !! இக்கால உணவுகளை பார்க்கிலும் அன்று நாங்கள் சாப்பிட்டது (குடித்தது) இன்றைய நெய்யை விட மேலானது.
ReplyDeleteஆமாம் சகோ. அதனாலதான் ஹெல்த்தியா இருக்கோம். இப்ப பிள்ளைங்க மாதிரி தண்ணிக்கும், சாப்பாட்டுக்கும், காத்துக்கும் வீழ்ந்தவரில்லை நாம்
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Delete
ReplyDeleteThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ACCA Training in Chennai | ACCA Training institutes Chennai | ACCA Exam Coaching Classes
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteAyurveda
Ayurveda Resorts
Ayurveda Kovalam
Ayurveda Trivandrum
Ayurveda Kerala
Ayurveda India