Monday, May 14, 2018

’சிக்ஸ் பேக்’ன்னா என்னன்னு தெரியுமா?! - ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள சோகமா இருக்கே!?

தெருவுல பூச்செடிகள் வந்துச்சுங்க. செடிகள் வாங்கலாமேன்னு செடி விக்குறவரை கூப்பிட்டு, ஒரு பாலித்தீன் கவர் மேல ரோஜாச்செடி லேசா வடி இருந்துச்சு. ஏன் இப்படி வாடி இருக்குன்னு கேட்டதுக்கு, ”வெயில்ல வச்சுதானேமா சுத்துறேன். அதான்”ன்னு சொல்லி, லேசா கவரை பிரிச்சு வேரைக் காட்டினார். சரின்னு நானும் நம்பி ரெண்டு பூச்செடி வாங்கினேன். செடி நடலாம்ன்னு பள்ளம் தோண்டி செடி இருந்த பாலித்தீன் கவரைப் பிரிச்சா, மண்ணுக்கு மேல ரோஜாச்செடி கிளையும், மண்ணுக்குக் கீழ ஏதோ செடியின் சல்லி வேரையும் வச்சு ஏமாத்தி இருக்கான். அம்பது ரூபா போச்சு. அதான் சோகமா இருக்கேன்.

அடிப்பாவி! என்கிட்டச் சொல்லி இருந்தா நம்பிக்கையான இடத்துல இருந்து செடிகள் வாங்கித் தந்திருப்பேனே! இப்ப 50ரூபா போச்சே! இனி கவனமா இருந்துக்க!

சரிங்க மாமா! மாமா உடம்பு குண்டாகிட்டேப் போகுது! நான் நாளைக்கு காலைல இருந்து எக்சர்சைஸ் பண்ணவா!? டயட்ல இருக்கவா!?

ம்ம்ம் பண்ணு. ஆனா, என்ன எக்சர்சைஸ் பண்ணனும்!? என்ன டயட்ல இருக்கனும்ன்னு டாக்டரைக் கேட்டுட்டு அப்புறம் செய். வேணாம்ன்னு சொல்லல. 

ஏன் மாமா! நான் நெட்டுல பார்த்து ஏழு நாளில் ஏழு கிலோ எடைக்குறைப்பது பத்தி படிச்சு அதுப்படி நடந்துக்கலாம்ன்னு இருக்கேனே!!

அதெல்லாம் தப்பு புள்ள! டாக்டர் அட்வைஸ் இல்லாம இதெல்லாம் முயற்சி செய்யக்கூடாது புள்ள. என் ஃப்ரெண்ட் வெங்கடேசன் பொண்ணு உடம்பு குண்டாகிட்டே போகுதுன்னு திவிரமா டயட்லயும், எக்சர்சைஸிலயும் இறங்கி ச்சு. உடம்பு வெயிட்டும் குறைஞ்சது., கூடவே, பிபி, சர்க்கரை, கொலஸ்ட்ரால் லெவலும் குறைஞ்சு கோமா ஸ்டேஜ்க்குக் கொண்டுப் போய் இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்கு. அதனாலதான் சொல்றேன்.

சரி மாமா! ஹாஸ்பிட்டல் போய் டாக்டரைக் கேட்டு வந்து எடைக்குறைப்பை ஆரம்பிக்குறேன் மாமா!


ம்ம்ம்ம் நீ எக்சர்சைஸ்ன்னு சொன்னதும் நினைவுக்கு வருது. உன் ஃப்ரெண்ட் ராஜி, அப்பு, உனக்கு பதினெட்டு வயச்சானதும் ஜிம்முக்குப் போய் எக்சர்சைஸ் பண்ணி உடம்பை ஃபிட்டா வச்சுக்கனும்டான்னு தன் பையன்கிட்ட சொல்லிட்டு இருந்தா.

அதுக்கு அப்பு, SIX PACK BODY ன்னா என்னம்மா!?ன்னு கேட்டான். கை, மார்புல சதைலாம் குண்டு குண்டா இருந்தா அதுதான் சிக்ஸ் பேக்ன்னு ராஜி சொன்னா. உடனே அப்பு, "ஆறடி மண்ணுல புதையைப்போற உடம்பு" ன்னும் அர்த்தம் வரும்ன்னு சொல்லி ராஜி வாயை அடைச்சான். 

அவன் தன் அம்மாவோட சேர்ந்து பல பிளாக் படிக்குறதால அவன் அம்மா போலவே அவனும் புத்திசாலியாகிட்டே வரான் மாமா! ஒரு ஜோக் சொல்லவா!?

யாரு உன் ஃப்ரெண்ட் ராஜி புத்திசாலியா!? நேரக்கொடுமைடி. ஏதோ ஜோக் சொல்றேன்னு சொன்னியே! இதான் ஜோக்கா!?

ம்ம்க்கும் ரொம்பதான் மாமா உங்களுக்கு நக்கலு!! 
"மாமனார் வீட்டுல போட்ட நகையையெல்லாம் வித்துத் தின்னுட்டு பொண்டாட்டிய குண்டுமணி தங்கம் கூட இல்லாம வெளியில அழைச்சுட்டு வந்துருக்கியே நீயெல்லாம் ஒரு புருஷனா..?" அப்படின்னு கேட்டு உங்க மூஞ்சுல காறி துப்பிட்டு போறானே யாருங்க அவன்..?எங்க சொந்தக்காரன் மாதிரியும் தெரியலே...

வழிப்பறி கொள்ளைக்காரண்டி..!
ஜோக் பரவாயில்ல புள்ள! ஆனா, சிரிப்புதான் வரலை. சரி நான் ஒரு விடுகதை கேக்கவா!? பதில் சொல்லுறியா!?

சொல்லுறேன் மாமா!

நாலு மூலை சதுரப் பெட்டி. அதில் ஓடுமாம் குதிரைக் குட்டி. அது என்ன!?

ப்ப்பூ இவ்வளவுதானா!?  இருங்க பதில் சொல்றேன்.

நன்றியுடன்,
ராஜி

16 comments:

 1. அவியல் அருமை........இனிமே,பொரியலும் னு சேத்தே போடுங்க.....///சிக்ஸ் பேக் ......விளக்கம் அருமை.உங்க வாயையும் சேத்து அப்பு அடைச்சிட்டான்னு சொன்னீங்க.....வெல்டன் மாப்ள........

  ReplyDelete
  Replies
  1. அவியலே சைட் டிஷ்தான். இதுல பொரியல் வேற வேணுமாக்கும். எங்க வீட்டில் என் வாயைதான் ஈசியா அடைக்க முடியும்.

   Delete
 2. சிக்ஸ் பேக் என்றால் ஆறு பைதானே ?

  ReplyDelete
 3. விடுகதை
  செஸ்போர்டு

  ReplyDelete
 4. வாயை கட்டிக் கொண்டால் வயிறு தன்னால சிக்ஸ் பேக் ஆகிவிடும்

  ReplyDelete
  Replies
  1. வாய கட்டதான் முடியலியே!

   Delete
 5. சிரிப்புதான் வரலை... (!)

  விடை : அம்மியும்,அரைக்கும் கல்லும்...

  ReplyDelete
  Replies
  1. இப்ப வரும் ஜோக்கில் எதுதான் சிரிக்க வைக்குதாம்!?

   விடை சரிதான்ன்ணே

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

   Delete
 7. நன்றாக இருந்தது எல்லாமே அதுலயும் அந்தத் தத்துவம் சூப்பர்! 6 பேக் தத்துவம்...ரசித்தோம். ஜோக்...?!!! விடுகதை க்கு விடை தெரியலை அதான் டிடி சொல்லிட்டாரே. அவர் இருக்கும் போது நாங்கலாம் விடை சொல்லி ஹிஹிஹிஹி

  துளசி, கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமா, டிடி அண்ணா மூளை மட்டும் சிந்திச்சே பழுதாகட்டும். நமதுலாம் அப்படியே ஃப்ரெஷ்சா இருக்கட்டும்.

   Delete
 8. சிக்ஸ் பேக் உடல் வளம் பற்றி சுவையான செய்திகள் ரசிக்கத்தக்கவை.

  ReplyDelete