Sunday, May 06, 2018

இளையராஜா குரலா?! ஜெயச்சந்திரன் குரலா?! - பாட்டு கேக்குறோமாம்

அப்ப 1992 பனிரெண்டாப்பு படிக்குறேன்..  எதிர்வீட்டில் காதல்ரோஜாவே பாட்டு ஹைபிட்ச்ல ஒலிக்க, கருவாடு வாசனைக்கு அடுக்களையை சுத்தி வரும் பூனைப்போல, எதிர்வீட்டையே சுத்திவர, என்ன ஏதுன்னு அண்ணன் விசாரிக்க,  இப்ப போன பாட்டுலாம் என்ன படம்?!, கேசட் கொடுண்ணான்னு கேட்க, இன்னிக்கு புதன்கிழமை எனக்கு லீவு. நாளைக்கு காலைல தரேன்னு அண்ணன் கெத்து காட்ட, ஒருவழியா மாமி சமாதானப்படுத்தி, ஒருமணிநேரத்துக்கு கேசட் வாங்கித்தர, பாடல்லாம் சூப்பரா இருந்துச்சு. படம் பார்த்தே ஆகனும்ன்னு வைராக்கியம் வச்சாச்சு. 
ஒரு விசேசத்துக்காக பாட்டி வீட்டுக்கு போயிருந்தபோது...  ஆகஸ்ட் 15 அன்னிக்கு ரோஜா படம் ரிலீஸ்ன்னு   மதுபாலா புல்வெளியில் கன்னத்தை வச்சிருக்கும் ஸ்டில்லும், படத்தில் இருக்கும் ஸ்டில்லும்ன்னு  ஊர் ஃபுல்லா போஸ்டர் ஒட்டி இருந்தாங்க. அட, ஸ்டில்லே சூப்பரா இருக்கேன்னு அப்பா அம்மாக்கிட்ட படத்துக்கு கூட்டி போன்னு கேட்க, ம்ஹும் ப்ளஸ்டூ பரிட்சை நெருங்குது படின்னு சொல்ல, இனி படிக்குறேன். கெஞ்சி கேட்டு பர்மிஷன் வாங்கியாச்சு.. ஊருக்கு வந்தபின் ஆகஸ்ட் 15 ரோஜா படமும் ரிலீஸ். கூடவே வைராக்கியத்துக்கு பங்கம் வரவைக்க கார்த்திக் நடிச்ச தெய்வவாக்கு படமும் ரிலீஸ். இப்ப நான் என்ன செய்ய?!

ரோஜா படத்துக்கு டிக்கெட் புக் பண்ணி பார்த்துட்டு வந்தாச்சு. ஆனாலும் கார்த்திக் படத்தை விட மனசில்ல. வீட்டில் கேட்டால் செருப்படி விழும். என்னை செல்லம் கொஞ்சும் எதிர்வீட்டு மாமிக்கிட்ட சொல்லி, அம்மாக்கிட்ட கேட்டால் பப்ளிக் எக்சாம் வருது. படிக்கனும்ல்ல?!ன்னு கேட்க, இப்ப ஆகஸ்டுதானே?! எக்சாம் ஏப்ரல்லதானே?! அதெல்லாம் படிச்சுப்பா. நம்ம காந்தி அறிவாளியாச்சே! ( மாமி! நீங்க எங்க இருக்கேள்?! எம்பூட்டு நம்பிக்கை என்மேல!!)ன்னு எனக்கு வக்காலத்து வாங்கி படத்துக்கு கூட்டி போய் வந்தாச்சு. தெய்வம் மட்டுமல்ல மனுஷங்களும் கொடுத்த வாக்கை காப்பாத்தனுமே! பரிட்சை முடியும்வரை சினிமாவுக்கே போகல. எக்சாம்லாம் முடிச்சுட்டு இது நம்ம பூமி படத்துக்குதான் போனேன்.அத்தனை கட்டுபாடா இருந்தும் பரிட்சைல கோட் அடிச்சதுலாம் தெய்வசெயல்.
இளையராஜா குரலில்.....

இளையராஜா குரலில் சில பாடல்கள் மட்டுமே எனக்கு பிடிக்கும்.  எனக்கென்னமோ அவர் மூக்கால பாடுற மாதிரி ஒரு ஃபீல். அதிலும் கார்த்திக்கு இளையராஜா குரல் செட்டே ஆகாது. கார்த்திக் பொறுத்தவரை எஸ்.பி.பி குரலைவிட மனோ குரல் நல்லா செட் ஆகும். மனோவிற்கு அடுத்து சுரேந்தர் குரல் செட் ஆகும். இளையராஜா பாடிய சில பாடல்களில், அதுக்கு  கார்த்திக் நடிச்சும் பிடிச்ச ஒரே பாட்டு  தெய்வ வாக்கு படத்தில் வரும் வள்ளி வள்ளி என வந்தான் .... பாட்டு மட்டுமேதான்.

இது பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய பாடல்...
இதே பாட்டை ஜெயச்சந்திரன் குரலில் இருப்பதாக முகநூலில் பார்த்தேன். ஜெயச்சந்திரன் குரலில் வந்த பாடல்களை பிடிக்கும். அதனால, தேடிப்பிடிச்சு கேட்டேன். ஜெயச்சந்திரன் இந்த பாட்டை சொதப்பிட்டாரா இல்ல சின்ன வயசுல இருந்து கேட்டு ரசிச்ச பாட்டை புது குரலில் கேட்க பிடிக்கலையான்னு தெரில. எனக்கென்னமோ ஜெயச்சந்திரன் இந்த பாட்டை கடிச்சு மென்னு பாடுற மாதிரி இருக்கு...

இதுக்குதான் நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லுறாங்க போல! எப்பயும்போல இளையராஜா குரலிலேயே கேப்போம்...

நன்றியுடன்,
ராஜி.

12 comments:

 1. அருமை.......இது நாள் வரை ஜெயச்சந்திரன் பாடி இந்தப் பாட்டு நான் கேட்டதில்லை.கடித்துத் தான் துப்புகிறார்........சுமார் தான்...இதைக் கேட்டு விட்டுத் தானோ என்னமோ படத்துக்கு,இளையராசா பாடியிருப்பார் போலும்.....

  ReplyDelete
  Replies
  1. அப்படிதான் போல! அதேப்படத்தில் ஊரெல்லாம் சாமியா நினைக்கும் பாடல் ஜெயச்சந்திரன் குரலில் நல்லா இருக்கும்.

   Delete
 2. மிகவும் ரசிக்கும் பாட்டு...

  ReplyDelete
  Replies
  1. வயசு வித்தியாசமின்றி ரசிக்கும் பாட்டு

   Delete
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 4. இளையராஜாவின் குரல் டைட்டில் பாட்டுக்கே லாயக்கு. டூயட் பாடல் கேட்டால் எனக்கு அலர்ஜியாகும்.

  ReplyDelete
  Replies
  1. கார்த்திக்கின் தர்மபத்தினியில் வரும் நான் தேடும் செவ்வந்தி பூ.. பாட்டையும் இப்படிதான் வீணாக்கி இருப்பார்.

   Delete
 5. இராஜாமகள் ரோஜாமகள் என்று ஒரு பாடல் பிள்ளை நிலாவில் வரும் அதை ஜெயசந்திரன், ஜானகி மற்றும் இளையராஜா என்று 3 பாடல்களில் கிடைக்கும். அதில் ஜெயச்சந்திரனும், ஜானகியும் பாடியபாடல்கள் அருமையாக இருக்கும். இந்த இரண்டு வடிவங்களைவிட இளையராஜா பாயது இனிமை குறைவாகவே இருக்கும். படத்தில் இளையராஜாவின் குரலில் இல்லை ஆனால் தனியாக பாட்டுகிடைக்கும். இந்த வள்ளி வள்ளி என்று ஜெயசந்திரன் பாடியது போல் தான் இருக்கும் இளையராஜா பாடியது.

  வள்ளி வள்ளி என என்ற வரிகளின் அழுத்தம் ஜெயசந்திரனுக்கு வரவில்லை அது மென்மையான குரல்........

  அருமை இரசித்தேன்... நன்றி

  ReplyDelete
  Replies
  1. ராஜாமகள்... ரோஜா மலர்.. பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜானகியம்மா குரலில் கேட்டிருக்கேன். படத்துல பெண்குரலில் இருமுறை வரும் நீங்க சொன்ன இளையராஜா குரலில் இருக்கான்னு தேடி பார்க்கேன்

   Delete
 6. மிகவும் நன்று பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 7. கழுகு படத்தில் காதல் என்னும் கோவில்... பாடலை பாடியது ஜெயச்சந்திரனா சூலமங்கலம் முரளியா?

  ReplyDelete