Sunday, March 29, 2020

சின்னக்குயில் சித்ராவின் முதல் பாட்டு இதுவா?! - பாட்டு புத்தகம்

சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா?!.. பூவே பூச்சூடவா படத்துல வரும் பாட்டு. பாடகி சித்ரா பாடியது. அவரோட முதல் பாடல் அதுதான்னும், அதனால்தான் சித்ராக்கு அடைமொழியா சின்னக்குயில்ன்னு வச்சிருக்கிறதா நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, சமீபத்துலதான் தெரிஞ்சது, சித்ரா பாடிய முதல் பாட்டு நீதானா அந்தக் குயில் படத்துல வரும் பூஜைக்கேத்த பூவிது... பாட்டுன்னு...


பூஜைக்கேத்த பூவிது.. நேத்துதானே பூத்தது.. பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.  பாடல் ஹிட் அடிச்ச அளவுக்கு பாட்டோட காட்சியமைப்பும், படமும் ஹிட் அடிக்கலை. செத்தவன் கையில் வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாத நடிகர் ராஜா  இந்த பாட்டில் சொதப்பி வச்சிருப்பார். இளையராஜா இசையில் வந்த படம். என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் பாடுது.....    கண்ணான கண்ணா! உன்னை என்ன சொல்லி தாலாட்ட..ன்னு மூணு ஹிட் பாடல்கள் இருந்தும் படம் ஓடலை. பழிவாங்கும் கதை. ஆனா, திரைக்கதையும், நடிகர் தேர்வும் சரியில்லாததால் படம் ஓடலை. இந்த பாட்டு கார்த்திக், மோகனுக்கு கிடைச்சிருக்கனும். பாட்டோட ரேஞ்சே வேறவா இருக்கும்.




பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தத யாரத பாத்தது?!
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தத யாரத பாத்தது?!
மேல போட்ட தாவணி , சேலையாகிப் போனது...
சேலையிழுத்து விடுவதே, வேலையாகிப் போனது...
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. 
ஹோய்..



பூஜைக்கேத்த பூவிது.. 


பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்!!
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்?!
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்.
அச்சுவெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற..
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற..
துள்ளிப் போகும் புள்ளி மான, மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது..



பூஜைக்கேத்த பூவிது.. .


ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல...
தோதாக யாருமில்ல தூது சொல்ல..
வாய்வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள!
கண்ஜாடை போல ஒரு பாஷையில்ல.
சுத்திச்சுத்தி வந்து நீ சோப்பு போடுற.
கொட்டிப்போன குடுமிக்கு சீப்பு தேடுற.
என்னப் பார்த்து என்ன கேட்ட?! ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு.. மாலை வந்து மாத்துற



பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. 
ஹோய்..

பூஜைக்கேத்த பூவிது..


படம்: நீதானா அந்தக் குயில்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்: கங்கை அமரன், சித்ரா
இசை: இளையராஜா
நடிகர்கள்; ராஜா, ரஞ்சனி

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. ஸூப்பர் பாடல் சகோ

    இருந்தாலும்....

    //செத்தவன் கையில் வெத்தலை பாக்கு கொடுத்த மாதிரி எந்த உணர்ச்சியும் முகத்தில் காட்டாத நடிகர் ராஜா//

    இப்படி சொன்னது மனசுக்கு வருத்தமாக இருக்கு இன்றைக்கு இரவு சாப்பிட மனசு வராது (உண்மையான காரணம் ஹோட்டலை அடைச்சுட்டாங்கே)

    ReplyDelete
    Replies
    1. ரொம்பதான் ஃபீல் பண்றீங்க போல!

      Delete
  2. இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடன் சேர்ந்து பாடலை ரசித்தமைக்கு நன்றி சகோ

      Delete
  3. ரசித்த பாடல்களில் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. மத்திய வயதினரில் பெரும்பான்மையான ஆட்களுக்கு இப்பாடல் பிடிக்கும் சகோ

      Delete
  4. அருமையான பாடல்

    ReplyDelete
  5. அருமையான பாடல் ராஜி! பிடித்த பாடல்

    கீதா

    ReplyDelete