எங்கெங்கோ சுத்தி வந்த கிளி ஒண்ணு ஒரு பறவைல வந்து உக்காந்துச்சாம்... அங்க இருக்கும் புழு, பூச்சிலாம் தின்னு பசியாறிக்கிட்டு இருந்துச்சாம்.. கொஞ்ச நாள்ல அந்த மரத்துல பூ வச்சுச்சாம்... கிளிக்கு ரொம்ப கொண்டாட்டம். அடடா! பூ காயாகும், காய் கனியாகும்.. நாம சாப்பிடலாம்ன்னு காத்திக்கிட்டிருந்துச்சாம்.. அது நினைச்ச மாதிரியே, பூ காயாச்சாம்... சரி சீக்கிரத்துல பழுத்துரும், நாம பசியாறலாம்ன்னு கத்தி, ஸ்பூன், தண்ணி, தட்டுலாம் எடுத்து வச்சிக்கிட்டு காயையே பார்த்துக்கிட்டிருந்துச்சாம். எத்தனையோ காத்திருந்தும் காய் கனியவே இல்லியாம். ஆனா, காத்திருக்குறதையும் கிளி விடலியாம்.. ஒருநாள் காய் வெடிச்சு பஞ்சாய் மறந்து போச்சாம். அப்பதான் கிளிக்கு தான் ஏமாந்த கதை தெரிஞ்சுச்சாம்... இந்த கதையை இன்றைய அரசியலோடு ஒப்பிட்டு பார்க்காதீங்க ப்ளீஸ்....
குருஷேத்திரப்போர் முடிந்தபின் மரணப்படுக்கையில் இருந்த பீஷ்மரை பார்க்க பாண்டவர்கள், கிருஷ்ணர், திரௌபதி சூழ எல்லாரும் வந்தாங்க. க்ருஷ்ணர் தருமரிடம் , தருமா! அஸ்தினாபுரத்தின் அரியணையில் அமரப்போகிறாய். உங்கள் குலத்தின் அத்தனை பெரியவர்களும் போரில் மாண்டதால் உனக்கு ஆலோசனை யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, பீஷ்மரிடம் ஒரு மன்னன் எப்படி இருக்கவேண்டுமென கேட்டு தெரிந்துக்கொள் என கூறினான். தருமனும் அவ்வாறே வேண்டி நிற்க, மன்னன் கடைப்பிடிக்க வேண்டியவைகளை பீஷ்மர் கூறிக்கொண்டே வந்தார். திரௌபதி நகைப்பதை கண்டு ஏன் மகளே! நகைக்கிறாய் என பீஷ்மர் வினவினார். இத்தனை நியாய, அநியாயம் பேசும் நீங்கள், அத்தனை பேரும் நிறைந்திருந்த ராஜ்ஜிய சபையில் என் துகில் உரியப்படும்போது துரியோதனனை எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன் என கேட்டாள். மகளே! அப்போது நான் துரியோதன் ஆட்சியில் இருந்தேன். அவன் அளித்த உணவை உண்டேன். அதனால், அவன் குணம் என் உடலிலும் இருந்திருக்கும், அதனால, அநீதியை கண்டு அமைதியா இருந்தேன்., இப்ப அர்ஜுனன் எய்த அம்பு என்னுடலில் இருந்த அத்தனை ரத்தத்தை வெளியேத்திடுச்சு, அதான் என் நிலைக்கு திரும்பிட்டேன். அதுமிட்டுமில்லாம உப்பிட்டவருக்கு எதிராய் நடப்பதும் பாவம்ன்னு சொன்னாராம்... இந்த கதைக்கும் இன்றைய அரசியலுக்கும் சம்பந்தமில்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பிதான் ஆகனும்....
பார்த்ததில் வருந்தியது..
பார்த்ததில் யோசித்தது...
நம்ம பொழப்பு இப்படியாகிட்டுதே!
பெயர்: செவ்வாய் ,
ஊர்: கேலக்சி
தொழில்
படித்ததில் பிடித்தது...
-முகநூலில் படித்ததும் சிரித்தது.
தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..
ராஜி.
பல் சுவை பதிவு படிக்க சுவையாக இருக்கிறது
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteயார் அந்த இலவுகாத்த கிளி என்று நீங்களே உங்கள் அனுமானத்தை சொல்லி இருக்கலாம்.
ReplyDeleteபுரிய வேண்டியவங்களுக்கு இந்த கதை புரியும்ண்ணே
Deleteபல்சுவை சுவை!! முகநூல் பதிவை ரசித்தோம்...
ReplyDeleteத ம லிங்க் வேலை செய்ய மாட்டேங்குதே! பெட்டியும் கண்ணுக்குத் தெரியலை
மொபைல்ல பதிவிட்டது. அதான் இந்த குளறுபடி
Deleteஐஞ்சுவை அவியல்....ஆஹா நல் சுவை...
ReplyDeleteநன்றி அனு
Deleteகண்டேன் மதிப்பெண் தந்தேன் த ம 6
ReplyDelete