Monday, March 25, 2019

ஒரு கடிதம் எழுதேன்.. ப்ளீஸ்... - ஐஞ்சுவை அவியல்

ஏன் மாமா?! நிலாவிலிருந்து பார்த்தால்  சீனா பெருஞ்சுவர் தெரியுமாமே! உண்மையா?!  

உலக அதிசயம்ன்னு ஒப்புக்கிட்ட ஏழில் எதுக்கும் இல்லாத சிறப்பு, சீனா பெருஞ்சுவருக்கு மட்டும் உண்டு. நிலாவிலிருந்து பார்த்தால் சீனப்பெருஞ்சுவர் தெரியும்ன்னு சொல்றாங்கதான். ஆனா, எந்தளவுக்கு உண்மைன்னு தெரில.  அப்படி தெரியுறமாதிரி ஒரு படத்தைக்கூட நான் இதுவரை பார்த்தில்லை. அதனால் அது உண்மையா?! பொய்யான்னு தெரில. நீ கேட்டதுக்காக வேணும்ன்னா சீன பெருஞ்சுவரை பத்தி சில விசயங்களை சொல்றேன்.  சீனா நாட்டின் வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்திருக்குது இந்த சீனப்பெருஞ்சுவர். இது கட்டி முடிச்சு இரண்டாயிரம் வருசம் ஆகிடுச்சு. இந்த சுவர் உருவாக காரணமானவர் பேரு ஷி ஹூவாங்டி (Shi Huangdi). இவரோட சாதனை சீனப் பெருஞ்சுவரை கட்டியது மட்டுமில்ல. சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த சீனப் பெருநிலத்தை ஒருங்கினைத்து ஒன்றுபட்ட சீனாவாகவும் ஒருங்கினைத்தவர்தான் இந்த  ஷி ஹூவாங்டி. 
Great Wall of China, Beijing, China

 கி.மு 259-ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார் ஷி ஹூவாங்டி. அவர் பிறப்பதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை சீனாவை Zhao மன்னர்கள் ஆண்டு வந்தாங்க.. ஆயிரம் ஆண்டு காலமாக நடந்த அந்த மன்னர்களின் ஆட்சி சிறிது சிறிதாக வலுவிழந்து,  நிறைய சிற்றரசுகளா  சீனா சிதறுண்டு போனது.  சிற்றரசர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் தங்களுக்குள் அடிக்கடி  சண்டை போட்டுக்கிட்டாங்க. சண்டையில் சில சிற்றரசுகள் அழிந்து போனது. மிச்சமிருந்த சிற்றரசுகளில் பலம் பொருந்தியதா சின் (Qin) அரசு இருந்தது. அந்த அரச வம்சத்தில்தான் பிறந்தவர்தான் செங் (Zheng) என்ற ஷி ஹூவாங்டி.
The walls of Kumbalgarh Fortress in Rajasthan, India


ஷி ஹூவாங்டி தன்னோட 13வது வயசில் ராஜாவானார். ஆனா, 21வது வயசில்தான் ஆட்சியின் முழு அதிகாரமும் அவர் கைக்கு வந்துச்சு. மிகச்சிறந்த அறிவாளியாக இருந்த இளவரசர் செங் தகுதி வாய்ந்த தளபதிகளை தேர்ந்தெடுத்து தன் படை வலிமையைப் பெருக்கினார். ஏற்கனவே வலிமை குன்றியிருந்த எஞ்சிய சிற்றரசுகள்மீது படையெடுத்து அவற்றை ஒவ்வொன்றாக கைப்பற்றத் தொடங்கினார். சீனாவின் ஆக கடைசி சிற்றரசு கி.மு.221-ஆம் ஆண்டு அவர் வசமாகி ஒட்டுமொத்த சீனாவும் அவரது ஆட்சியின்கீழ் வந்தது. அப்போது அவருக்கு வயது 38தான் ஆனது. அந்த சமயத்தில் அவர் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர்தான் ஷி ஹூவாங்டி .

ஷி ஷூவாங்டின்னா முதல் பேரரசர்ன்னு அர்த்தம். ஒட்டுமொத்த சீனாவும் தனது ஆளுமையின்கீழ் வந்ததும் அவர் உடனடியாக பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செயல்படுத்தத் தொடங்கினார். ஒற்றுமையின்மைதான் சீனா சிதறுண்டு இருக்க காரணம்ன்னு புரிஞ்சுக்கிட்ட   அவர் 'பியூடல் சிஸ்டம்' எனப்படும் பிரபுத்துவ அரசுமுறையை முற்றாக ஒழித்தார். சீனாவை மொத்தம் 36 மாநிலங்களாக பிரித்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரை நியமித்தார். அதுமட்டுமல்ல ஒரே பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஆளுநராக இருந்த முறையையும் ஒழித்தார். ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையும், அதிக செல்வாக்கை உருவாக்கிக் கொள்வதையும் தவிர்க்க அவர்களை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாநிலமாக மாற்றினார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் ஆளுநரோடு ஓர் இராணுவ தலைவரையும் நியமித்தார். அனைவருமே மன்னரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டவர்கள்தான். அவர் அறிமுகம் செய்த அந்த மாற்றங்களால் சீனா ஒற்றுமை உணர்வோடு வலுப்பெறத் தொடங்கியது. நாடு முழுவதும் நல்ல சாலைகள் அமைக்கப்பட்டன. எந்த மாநிலத்திலாவது கலகமோ, உட்பூசலோ நேர்ந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு மத்திய அரசின் இராணுவத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் மற்றும் இராணுவ மாற்றங்களோடு வர்த்தகத்திலும் மாற்றங்களை கொண்டு வந்தார் ஷி ஹூவாங்டி. பொருட்களை அளக்கும் கருவிகளையும், அளவை முறைகளையும் ஒருங்கினைத்தார். நாடு முழுவதும் பொதுவான நாணய முறையை அறிமுகப்படுத்தினார். சாலைகள் மற்றும் கால்வாய்களின் கட்டுமானத்தை நேரடியாக மேற்பார்வையிட்டார். சீனா முழுவதற்கும் ஒருங்கினைந்த சட்டத்தை அறிமுகம் செய்ததோடு எழுத்து வடிவத்தையும் சீராக்கினார்.
The Great Wall, one day I will see it in person
விளக்கின் அடியிலே இருள் இருக்குமென்ற நியதிக்கேற்ப இத்தனை நல்லது செஞ்ச ஷி ஹுவாங்டி ஒரு கெட்ட செயலையும் செய்து வரலாற்றின் பழிச்சொல்லுக்கும் ஆளானார்.  அது என்னன்னா, கி.மு 213-ஆம் ஆண்டு அவர் வேளாண்மை, மருத்துவம் போன்ற முக்கியத்துறை சம்பந்தபட்டவற்றை தவிர்த்து சீனாவில் உள்ள மற்ற நூல்கள் அனைத்தையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அதற்கு ஒரு முக்கிய காரணம் 'கன்பூசியஸ் சித்தாந்தம்' உட்பட போட்டி சித்தாங்கள் அனைத்தையும் அவர் அழிக்க நினைத்துதான். ஆனால் எல்லா நூல்களையும் அழித்துவிடாமல் தடை செய்யப்பட்ட நூல்களின் சில பிரதிகளை அரசவை நூலகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். சீனாவின் தென்பகுதியில் படையெடுத்து பல பகுதிகளை கைப்பற்றி சீனாவுடன் இணைத்துக்கொண்டார் ஷி ஹுவாங்டி. வடக்கிலும், மேற்கிலும் பல பகுதிகளை கைப்பற்றினாலும் அந்தப் பகுதிகளை முழுமையாக அவரது ஆட்சிக்குகீழ் கொண்டு வரமுடியவில்லை. Zhao மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே வடக்குப் பிரதேசங்களிலிருந்து சீனாவுக்குள் அடிக்கடி நுழைந்து தாக்குதல்களை நடத்தி வந்தனர் சிங் நு (Xiongnu) இன மக்கள். அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த சீன எல்லை நெடுகிலும் சிறிய, சிறிய சுவர்களை அமைக்கத் தொடங்கினர் சீனர்கள். அப்படி சிறுசிறு சுவர்களாக இருந்ததை இணைத்து ஷி ஹூவாங்டி அமைக்கத் தொடங்கியதுதான் மிக நீண்ட சீனப் பெருஞ்சுவர் ஆனது. சீனப் பெருஞ்சுவரை கட்டுவதற்காகவும், போர் செலவுகளுக்காகவும் பொதுமக்கள்மீது கடுமையான வரிகளை விதித்தார் ஷி ஹூவாங்டி. அதனால் அவரை மக்கள் வெறுக்கத் தொடங்கினர். அதனால் அவர்மீது கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து வந்த ஷி ஹூவாங்டி கி.மு.210-ஆம் ஆண்டில் தனது 49-ஆவது வயதில் இயற்கையாகவே காலமானார். அவர் கல்லைறையைச் சுற்றி மிக விமரிசையாக ஆறாயிரம் டெரகோட்டா (Terracotta Army) களிமண் வீரர்களின் சிற்பங்கள் புதைக்கப்பட்டன. மரணத்திற்கு பிறகும் அவருக்கு சேவை புரிய அந்த சிற்பங்கள் உதவும்ன்ற நம்பிக்கையில் அப்படி செய்யப்பட்டதாம். சீன வரலாற்றில் ஷி ஹூவாங்டி என்ற மன்னன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. அவர் மறைந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அவர் உருவாக்கித்தந்த அரசாட்சி முறையும், சட்ட முறையும்தான் நவீன சீனாவுக்கு அடிப்படையாக விளங்குகின்றனது. மன்னன் ஷி ஹூவாங்டியின் 'சின்' பேரரசின் ஆட்சி பலம் பொருந்தியதாக இருந்ததால்தான் அதன் பெயரிலேயே அந்த தேசம் சீனா என்றழைக்கப்படுகிறது. புத்தகங்களை எரித்ததிலும், போட்டி சித்தாந்தங்களை அழிக்க நினைத்ததிலும் மன்னன் ஷி ஹூவாங்டி தவறு செய்திருந்தாலும், சீன வரலாற்றில் அவரது ஒட்டுமொத்த பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது. பாதுகாப்புக்காகவும், எதிரிகளை அண்ட விடாமல் தடுப்பதற்காகவும் கட்டப்படத் தொடங்கிய ஓர் உன்னத கட்டுமான அதிசயம்தான் சீனப் பெருஞ்சுவர். இன்றும் சீனாவின் செல்வாக்கை அது உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த உலக அதிசயத்தையும், அதற்கு ஒத்த ஓர் அதிசய ஆட்சி முறையையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழங்க மன்னன் ஷி ஹூவாங்டிற்கு உறுதுணையாக இருந்தது, அவரது ஆராய்ந்து முடிவு எடுக்கும் அறிவு, முடிவெடுத்து அதனை அச்சமின்றி செயல்படுத்தும் திறன், எதிரிகளை திணறடிக்கும் தைரியம், ஒற்றுமையே பலம்ன்ற அவரது நம்பிக்கையும்தான். இப்படி ஒரு தலைவன் தான் எல்லா நாட்டிற்கும் தேவை..ஆனா, எல்லா நாட்டுக்கும் இந்த வரம் கிடைக்கவில்லை. 

அது மன்னராட்சி மாமா! அப்படி ஒரு தலைவன் வர கொடுத்து வச்சிருக்கனும். எல்லாருக்கும் அது வாய்க்காது. ஆனா, நம்மோட நாடு  மக்களாட்சி முறையை கொண்டது. நல்லா சிந்திச்சு சரியான ஆளை தேர்ந்தெடுத்து ஓட்டு போட்டா நல்ல தலைவன் கிடைப்பான் மாமா.

ம்க்கும்.  எரியும் கொள்ளில, எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு பார்த்துதான் ஓட்டு போடனும். அதுக்குதான் நான் ஓட்டு போடவே போறதில்லை.

அது தப்பு மாமா! அது கள்ள ஓட்டு போடுறவங்களுக்கு வசதியாகிடும். கண்டிப்பா உன் ஓட்டை பதிவு பண்ணனும் நீ. 
அப்படின்னா நான் நோட்டாவுக்கே என் ஓட்டை போட்டுடுறேன்.

அதும் தப்பு மாமா நோட்டாவுக்கும் போடக்கூடாதுன்னு சொல்ற இந்த வீடியோவை பாரு. நோட்டாவாலயும் ஒன்னும் மாற்றம் நிகழாது. அதனால் கட்சி, இனம், ஜாதி, பணம் கொடுக்குறவங்கன்னு பார்க்காம நம்ம பகுதில சமூக சேவை செய்து சுயேட்சையா நிற்கும் பணம், பதவியால் மாறாத ஆளுக்கு நம்ம ஓட்டை போடலாம். அதுவே சரியான தீர்வாகும்.  

ம்க்கும், அந்த மாதிரி ஒரு ஆளை தேடி கண்டுபிடிக்குறதுக்குள் மண்டை காய்ஞ்சு மூளை உருகி வெளிய வந்திடும். 

அதுலாம் மூளை இருக்கவுங்க  சொல்லனும். நீ அதுக்கெல்லாம் கவலைப்படாத மாமா. உன்னைய இந்த பாப்பா மாதிரி தண்ணி ஊத்தி மண்டை சூட்டை ஆத்துறேன். 

இப்படிலாம் கலாய்ச்சா நான் சாமியாரா போய்டுவேன்.

நீ சாமியாரா போனால், பழனி பாரதி மாதிரி  கவிதை எழுதுவேன்.
Awesome! pin  #blackandwhitelandscapephotography


பயணியைப்போல்
புறப்படக் காத்திருக்கும் பனியை
பெட்டி பெட்டியாய்த் தேடி
வழியனுப்ப
ஓடிவருகிறது சூரியன்

இந்தப்
பொங்கல்நாள் ரயில்நிலையம்
எவ்வளவு அழகு.

எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னுடைய விரல்கள் இல்லை,,,

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னுடைய விரல்கள் இல்லை..

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை..
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை..

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது இந்த  பூசணிப்பூ..


உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை..

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி..

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டு விட்டாய்!!!


உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால் 
ஒரு கடிதம் எழுது..!

 - பழனி பாரதி

ஆகமொத்தம் எங்க போனாலும் என்னைய நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டிருக்கே! அப்படித்தானே?!....................................................................

நன்றியுடன்...
ராஜி

16 comments:

  1. ராஜி எதுக்குப்பா சீனச் சுவர் நிலாலருந்து பார்த்தா தெரியுமானு உங்க மாமாவைக் கேட்டுக்கிட்டு?!!! நாமளே ஒரு எட்டு நிலாவுக்குப் போய் அங்கிட்டுருந்து எட்டிப் பார்த்தா போச்சு....!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மொட்டை மாடிக்கு போய் நிலாவை பார்க்க முட்டி நோகுது. இதுல நிலாவுக்கு போறதா?!
      அப்படி போனால் நல்லாதான் இருக்கும். ஒரு மாசத்துக்கு பதிவுக்கு உதவும்.

      Delete
  2. பழனி பாரதியின் கவிதை அருமை! ரசித்தோம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க கீதாக்கா

      Delete
  3. சீனா பற்றிய தகவல்கள் அருமை சகோ.

    ReplyDelete
  4. நோட்டாவுக்கோ இல்லை வேற எதுக்கோ நோட்டு வாங்காம மக்கள் போட்டா சரி.

    பாப்பா குளியல் சூப்பர் ரசித்தோம்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாங்க நோட்டு வாங்குறதில்லைன்னு எல்லா கட்சிக்காரனுக்குமே தெரியும். எங்க வீட்டை ஸ்கிப் பண்ணிட்டு போய்டுவாங்க

      Delete
  5. சரி, சீனா பெருஞ்சுவர் பார்க்க போகலாம்... எப்போன்னு சொல்லுங்க...

    "நோட்டா" ஒரே ஓர் பயன் = நம் ஒட்டு கள்ள ஓட்டு ஆகாது...

    பாப்பா காணொளி அழகு...

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் நோட்டாவினால் பயனில்லைன்னு சொல்றாங்களே!

      Delete
  6. சீனா பற்றிய தகவல் எனக்கு புதுசு !

    ReplyDelete
    Replies
    1. சைனாக்காரியுடன் தோழமையா இருந்துமா?! இதுலாம் பேசாம என்னதான் செய்வீங்க?!

      Delete
  7. ஒரு சரித்திர வகுப்புக்கு போன மாடிரி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. இது சுட்டதுப்பா

      Delete
  8. நன்றிங்க சகோ

    ReplyDelete
  9. கவிதை சிறப்பு. சுவையான அவியல்.

    ReplyDelete