Sunday, August 12, 2018

குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் - பாட்டு கேக்குறோமாம்


ஒரு கடலோர கிராமமான முட்டம் அங்கு ஒரு பஸ்ஸில் இருந்து ஒரு பெண் இறங்கி புதுசாக அந்த கிராமத்துக்கு தன் பாட்டியுடன் குடியிருக்க வருது. அங்க அவளோடு படிக்கும் ஹீரோ லவ்வ, அந்த லவ், ஹீரோவோட அம்மாவுக்கு பிடிக்காம, அந்த பொண்ணை அசிங்கப்படுத்தி ஊரை விட்டு துரத்திவிட, பொழைக்கப்போற ஊர்ல ஒரு ரவுடிக்கு அந்த பொண்ணை கட்டி வைக்க, அவன் ஜெயிலுக்கு போக, லவ்வர் குடிகாரனாக,  பொழப்பை தேடி மீண்டும் கடலோர கிராமத்துக்கே வர, ஹீரோ, ஹீரோயினுக்கு உதவ, சில பல  மொக்கை சீன்களுக்கு பிறகு கட்டக்கடைசியா ஹீரோவும் ஹீரோயினும் செத்து போயி,  நம்மை காப்பாத்துறாங்க.  படம் ஃபுல்லா ஃபீலிங்கோ ஃபிலிங்கு.... 

ஹீரோ, ஹீரோயின் லவ் சீன்லாம் அந்த காலத்து லவ்வை கண் முன் கொண்டு வரும்.  ஹீரோவின் அப்பாவித்தனம் பிடிச்சுது. 90 களில் வரும் ஆம்பிள்ளை பிள்ளைகளைப்போல திட்டு திட்டா பவுடர் பூசி, எண்ணெய் தடவி படிய வாரிய தலை, விபூதி பட்டைன்னு இருக்குறதே பிடிச்சு போயி பத்து வருசத்துக்கு முந்தி இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க வச்சுது. படம் சூர மொக்கைன்னாலும் ரெண்டு பாட்டு செமயா இருக்கும்.

கடலோரம் ஒரு ஊரு

ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று
தீண்டியதும்
விரல் பட்ட பூ வேர்த்ததோ
தொட தொட மோகங்கள்
தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
கண்ணங்களை காட்டு
கை எழுது போட்டிட வேண்டும்
ஈர உதடுகளால்
பல்லு படும் லேசா
கேலி பேச்சு கேட்டிட நேரும்
ஊரு உறவுகளால்

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது

யாரு நம்ம இங்கு தடுக்குறது
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ?

இருந்தும் எதற்கு எடையிலே

இருக்க நீயும் இடையிலே
இடை தான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்
ஓ பள்ளிகூட சினேகம்
பள்ளியறை பாய் வரை போகும்
யோகம் நமக்கிருக்கு
கட்டுக்களை பொட்டு
நட்டு வச்ச வேலிகள் தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு

புள்ளி வைக்க இந்த பூமி உண்டு

கோலம் போட அந்த சாமி உண்டு
இங்கே நீ இன்றி நானும் இல்லையே

காத்தா இருக்க மூச்சுல

மொழியாய் இருக்க பேச்சுல
துணியா இருப்பேன் இடையிலே
துணையா இருப்பேன் நடையிலே

கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று
தீண்டியதும்
விரல் பட்ட பூ வேர்த்ததோ
தொட தொட மோகங்கள்
தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு..

பாட்டு மட்டும் கேளுங்க. படத்தை தப்பி தவறியும் பார்த்துட்டு, இந்த மொக்கை படத்தை ராஜி எப்படி பார்த்தால்ன்னு என்னை திட்டாதீங்க. 

படம் : குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பி.சரண்


நன்றியுடன்,
ராஜி.

13 comments:

 1. சந்திரபாபு பாடிய பாடலோ என்று நினைத்து வந்தேன்...!

  இந்த பாடல் இசை காது கிழியுது...!

  ReplyDelete
  Replies
  1. அது, குங்குமப்பூவே.. கொஞ்சு புறாவே..ன்னு ஆரம்பிக்கும்ண்ணே

   Delete
 2. பழைய தலைப்பில் புதிய பூ.
  கசா'நாயகன் அழக்'கு

  ReplyDelete
  Replies
  1. அழகா?! அழுக்கா?!
   ஒன்னும் பிரிலப்பா

   Delete
 3. எஸ் பி பி சரண் இன்னும் பாடறாரா? இந்தப் பாடல் நான் கேட்டதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் பாடுறார் சகோ. சென்னை 28, நாணயம், திருடன் போலீஸ்ன்னு ஒருசில படங்களில் பாடி இருக்கார்.

   Delete
 4. அருமையான பாடல்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. நிஜமா பாட்டு கேட்டீங்களாண்ணா?!

   Delete
 5. சந்திரபாபுவின் பாடலோ என்றுநினைத்தேன்

  ReplyDelete
  Replies
  1. அது குங்குமப்பூவே.. கொஞ்சு புறாவேன்னுல்ல ஆரம்பிக்கும்.

   Delete
 6. தலைப்பை நினைத்து நான் உள்ளே வந்தேன். இருந்தாலும் ஒரு நல்ல அலசலைக் கண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்களுமாப்பா?! சாரி

   Delete
 7. இப்படி ஒரு படம் வந்ததா? பாடல் கேட்டதில்லை.

  ReplyDelete