Thursday, April 12, 2012

நெருப்பு கக்குமா? நெருப்புக் கோழி

உலகின் மிகப் பெரிய பறவை ஆஸ்ட்ரிச். இதை நெருப்புக்கோழி என்றும் சொல்வார்கள். ஆனால், நெருப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதே போல எதிரிகள் தாக்க வரும்போது தலையைத் தாழ்த்திக்கொள்ளுமே தவிர, மணலில் புதைத்துக்கொள்ளும்போது என்பது தவறான கருத்தாகும்.

இவற்றின் பூர்வீகம் ஆப்பிரிக்கா. விலங்கியல் பெர்யர் ஸ்ட்ருதியோ கேமெலஸ் (Struthio camelus). கிழக்கு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சஹாரா பகுதிகளில் உள்ள வறண்ட புல்வெளிகளில் இவை வசிக்கும்.

சுமார் 8 அடி உயரமும் 105 கிலோ எடையும் கொண்டது. இதன் பெருத்த உருவம் பறப்பதற்குத் தடையாக இருந்தாலும், வேகமாக ஓடக்கூடியது. இதன் வேகம், மணிக்கு 64கிமீ பறவைகளில் வேகமாக ஓடக்கூடியதும் இதுதான். 

இதன் சிறகுகள், கடுமையான வெப்பத்தில் இருந்து காக்கும் வகையில், மென்மையான பொதி போல் இருக்கிறது.  இதன் இறக்கையில் இன்னொரு வித்தியாசமான அமைப்பும் உண்டு. இறக்கையின் முடிவில் இரண்டு கொக்கிகள் போன்ற நகங்கள் இருக்கும். இதன் மூலம் எதிரிகளைத் தாக்கும்.
                            
தாவர உணவுகளையே உண்டாலும், சில சமயங்களில் சிறிய புழு, பூச்சி, ஓணான் போன்ற ஊர்வனவற்றையும் சாப்பிடும். நான்கு வயதில் முட்டையிடும் பருவத்தை அடையும். 30 முதல் 70 வயது வருடங்கள் வரை வாழும்.

இதன் முட்டை உலகிலேயே மிகப் பெரியது. ஒரு முட்டை சராசரியாக 1.4 கிலோ எடை இருக்கும். இது, 40 கோழி முட்டைகளின் அளவுக்குச் சமம்.
                                    
முட்டைகளை, இரவில் ஆண் பறவியும், பகலில் பெண் பறவையும் அடகாப்பது இந்த இனத்தின் சிறப்பு. இதற்கும் ஒரு சுவாரசியமான காரணம் இர்டுக்கிறது. ஆண் பறவையின் சிறகுகள் ஏறக்குறைய சாம்பல் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.இரவில் முட்டைகளைத் தின்ன வரும் எதிரிகளுக்கு, எளிதில் அவை தென்படாது. அதேப்போல, பெண் பறவையின் இளம் பழுப்பு நிறச் சிறகுகள், சுற்றிலும் இருக்கும் புல்லின் நிறத்தை ஒத்திருப்பதால், பகலிலும் முட்டைகளுக்குப் பாதுகாப்பு. 45 நாட்கள் அடைக்காக்கப்பட்ட பிறகு, குஞ்சுகள் பொரிக்கும். 
                                  

 இவற்றின் சிறகுகள் தொப்பிகள் செய்யவும், தோல் அலங்காரப் பொருட்கள் செய்யவும், இறைச்சி உணவாகவும் பயன்படுகிறது.

குதிரைகளுக்குப் பூட்டுவது போல சேணங்கள், கடிவாளம் போன்றவற்றாஇப் பூட்டி, வண்டிகளை இழுக்கச் செய்வதும் மேலை நாடுகளில் சகஜம். ஆஸ்ட்ரிச்களுக்கான ஓட்டப் பந்தயமும் பிரபலமானது.

டிஸ்கி: தகவல்கள் சுட்டி விகடனிலிருந்தும், படங்கள் கூகுளிலிருந்தும் சுட்டது. 

14 comments:

  1. தகவலுக்கு நன்றி சகோ ..!

    ReplyDelete
  2. அரிய தகவல்களை இன்று அறிந்தேன். நன்று.

    ReplyDelete
  3. அப்புறம் எப்படி நெருப்புக் கோழின்னு பெயர் வந்தது?

    ReplyDelete
  4. நீங்க எக்ஸாம் ஹால்ல்க்கு விடக்கோழி கொண்டு போய் விடை தருமா?ன்னு பார்த்து பல்பு வாங்கினீங்களாமே? ஹி ஹி

    ReplyDelete
  5. பயனுள்ள அரிய செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  6. நெருப்புக்கோழி பற்றிய பல சுவையான தகவல்களுக்கு நன்றி ராஜி. ஆபத்து வந்தால் மண்ணில் தலையைப் புதைக்கும் என்றே பலரும் நம்புகின்றனர். அதைத் தவறென்று சுட்டியதற்கு நன்றி. அடிப்படையில் இது ஆப்பிரிக்கப் பறவை. ஈமுவும் கேசோவரிப் பறவையும்தான் ஆஸ்திரேலியப் பறவைகள்.

    ReplyDelete
  7. நெருப்புக்கோழி பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டோம் நன்றி

    ReplyDelete
  8. அக்காவுக்கு ஒரு ப்ளேட் நெருப்பு கோழி பிரியானி பர்செல்ல்ல்ல் ..... :))

    ReplyDelete
  9. நல்ல தகவல்கள்... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. புதுமையான தகவல்கள் ராஜி.அறியத்தந்தமைக்கு நன்றி !

    ReplyDelete
  11. அற்குதமான இது வரை கேள்விப்படாத தகவல் அக்கா

    ReplyDelete
  12. அரிய தகவல்கள் ! நன்றி !

    ReplyDelete
  13. ada daa!

    theriyaatha thakavalai-
    theriyapaduthiyathukku-
    ungalukku
    ulanganintha nantri!

    ReplyDelete
  14. நாங்கள் அப்போ கல்லூரியில் படிக்கும் போது, "தம்" அடிக்கும் பெண்களை நெருப்புக்கோழிகள் என்று ஆசையாக அழைப்போம்.

    மேலும் ஒரு கேள்வி? நெருப்பு சேவல் உண்டா?

    ReplyDelete