Saturday, May 26, 2018

ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் பாகம் 2 - அறிவோம் அர்த்தம்

ராவணனை கொன்ற பாவத்தினை போக்க ராமன்,  மணலால் செய்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்றும் பேர் வந்துச்சாம்.
(ஆமா, தேவக்கோட்டைலதான் மீசைக்கார கில்லர்ஜி அண்ணா இருக்காரு)
சண்டாசுரனை வதம் செய்ய வேண்டித்  தேவர்படைக்குக்  காளிதேவி தலைமை ஏற்று வீற்றிருந்த இடத்தில் தேவர்கள் கட்டிய  மாயாசாலக் கோட்டைதான்  தேவகோட்டை. தேவி+கோட்டை. தேவிகோட்டை என அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி தேவகோட்டை என்றானது. தேவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் முன்னர் தேவர்கோட்டை என்றும் அழைக்கப்பட்டு இப்ப தேவகோட்டை என்றானதாம். இது சரியான்னு கில்லர்ஜி அண்ணன்தான் சொல்லனும். 

'ஆம்' ன்ற வார்த்தைக்கு ஊற்றுநீர்ன்னும்  பொருள்.  ஊற்று கசியும் ஊர்  = ஆம்பூர். அதேமாதிரி ஆம்பூரின் பழங்காலத்து  பேரு காட்டாம்பூர். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் ன்னு ஆனதாகவும் சொல்வாங்க. பல்லவர், சோழர், விஜயநகர மன்னர், ஒய்சாலர் மன்னர்களில் கட்டுப்பாட்டில் இந்த ஊர் இருந்தது. அந்த நேரத்தில் போர்ப்படையில் இந்த பகுதி மக்கள் அதிகமாய் இருந்த காரணத்தால் ஆண்மையூர் என்றழைக்கப்பட்டு, ஆமையூர் என்றாகி இப்ப ஆம்பூர் என்றானதாம். ஆம்’ன்னா மாம்பழம்ன்னும் அர்த்தம். மாம்பழத்துக்கு பேமசான ஊர்ன்றதாலயும் இதுக்கு ஆம்பூர்ன்னு பேர் வந்ததாம். 
ஸ்ரீபுரின்னு அழைக்கப்பட்ட  ஊர் இப்ப திருப்பூர் அழைக்கப்படுது. அதாவது, லட்சுமி வாசம் செய்யும் ஊர்ன்ற அர்த்தம். இந்த ஊருக்கு திருப்பூர் என பெயர் வர காரணம், தற்போதுள்ள தாராபுரம் எனப்படும் விராடபுரத்தில், பாண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்து (அஞ்ஞானவாசம்) வாழ்ந்து வந்தனர். இதையறிந்த கவுரவர்களில் மூத்தவரான துரியோதனன், விராடனுக்கு உரிய பசுக்களை கவர்ந்து சென்றான். அர்ச்சுனன் உள்ளிட்டோர் "திருப்போர்' புரிந்து, பசுக்களை மீட்டுச் சென்றனர். திருப்போர் புரிந்து, பசுக்களை திரும்ப அழைத்து சென்றதால் அந்த இடத்துக்கு "திருப்பூர்' என  அர்த்தம். 


இந்த ஊர் கடலில் உப்பனாறு, பரவனாறு  4 இடங்களில் கூடுகிறது. எனவே கூடலூர் என அழைக்கப்பட்டு  கடலூர் என ஆனது. 

இன்னமும் ஊரை தெரிஞ்சுக்கலாம்...

நன்றியுடன், 
ராஜி

18 comments:

  1. அடடே நம்ம ஊர் சரித்திரத்தை அழகாக விவரித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    தேவலோகத்திலிருந்து.... கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. அழகான வீடுகளை கொண்ட ஊர்ண்ணே உங்க ஊர். 2002ல ஒருமுறை வந்திருக்கேன். சில ஊர்லாம் எப்பயும் மறக்காது. அதுல தேவகோட்டையும் ஒன்னு.

      Delete
    2. ஆமாம் தலைவாசல் இந்த தெரு என்றால் கொல்லைவாசல் அடுத்த தெருவில் இருக்கும் அவ்வளவு பெரிய வீடுகள்.

      எனது வீடும் இப்படித்தான் நீளமானது 9 கதவுகள் உள்ளது நேர்கோட்டில் மட்டும்.

      Delete
    3. பெங்களூரில் என் வீடும் இப்படித்தான் இரு பக்கமும் சாலைகள்

      Delete
  2. அருமை..........இரண்டாம் பாகம் கிடைத்ததில் மகிழ்ச்சி.ஊர்களுக்கெல்லாம் பெயர் வந்தது நம் முன்னோர்களின் தயவு.பல ஊர்களுக்கு காரணப் பெயர் தான் இன்று வரை நிலவுகிறது. நன்றி தங்கச்சி,பதிவுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மூன்றாம் பாகமும் வரும்ண்ணே

      Delete
  3. தொடரட்டும் உங்கள் பணி.
    சிறக்கட்டும் உங்கள் எழுத்து.

    ReplyDelete
    Replies
    1. இந்த கிண்டல்தானே வேணாங்குறது சேக்ஸ்ண்ணா.

      Delete
  4. இன்ட்ரெஸ்டிங்க்!! ராஜி தொடருங்க...சில ஊர்கள் பேர் அதுலருந்தே தெரிஞ்சுருது நாலும் சிலது சில புராணக் கதைகள் பேஸ்ட்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமா கீதாக்கா. பழனி, நாகர்கோவில் மாதிரி..

      Delete
  5. Is it சண்டாசுரனை or Bhandasuran?

    ReplyDelete
    Replies
    1. சண்டாசுரன்தான் சகோ. பண்டாசுரன் முருகன் கதைகளில் வருவார். சண்டாசுரனை வதம் செய்தது காளிதேவி

      Delete
  6. ரா.பி.சேதுபிள்ளை எழுதிய தமிழகம் ஊரும் பேரும் நூல் நினைவிற்கு வந்தது. இந்நூலைப் பற்றிய ஓர் அறிமுகக் கட்டுரையினை விக்கிபீடியாவில் ஆகஸ்டு 2015இல் பதிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?! தேடிப்பார்க்குறேன்ப்பா.

      Delete
  7. ஒவ்வொன்றும் புதிய தகவல்கள் சகோ. ஆம்பூர் என்றாலே பிரியாணி தான் நியாபகத்திற்கு வரும் ஆனால் மாம்பழமும் உண்டோ?

    ReplyDelete
    Replies
    1. ஆம்பூர் பிரியாணி, மாம்பழத்துக்கு மட்டுமல்ல தோல் பொருட்களுக்கும்கூட.....

      Delete