Thursday, May 31, 2018

வளையலோ வாங்கலியோ வளையல் - கைவண்ணம்

எனக்கு வளையல்ன்னா ஆசையோ ஆசை.. புடவை, நகைமேல் இல்லாத ஆசை வளையல்மீது உண்டு. விதம்விதமா, கலர்கலரா வளையல் வாங்கி குவிப்பதே வேலை. வெளில கிளம்பும்போது நகை இல்லன்னாலும் கிளம்பிடுவேன். ஆனா புடவைக்கு மேட்சிங்கா வளையல் இருந்தே ஆகனும்.  கண்ணாடி, மெட்டல்ன்னு விதம்விதமா வளையல் வாங்கி குவிப்பேன். இப்பலாம் வளையல்களை வாங்குறதே இல்ல. அதுக்காக திருந்திட்டேன்னு நினைக்காதீங்க. எம்ப்ராய்டரி செஞ்சு மிச்சமிருக்கும் நூல், கல், சமிக்கிகளில் வளையல் செஞ்சுக்குறேன். இதனால, பைசா மிச்சம், தேவையில்லாம பரண்மேல் தூங்கும் வளையல்களுக்கு விமோசனம் கிடைக்கும். சுற்றுச்சூழலும் பாதிக்காது..

இந்த வாரம் திருப்பதிக்கு போலாம்ன்னு சொன்னதும்,  கேமரா ரெடி செய்வது, வண்டி புக் செய்வது, ரூம் புக் செய்வது, ஷாப்பிங்க்ன்னு ஆளாளுக்கு பிசியா இருக்க, நான் வளையல் செய்ய இறங்கியாச்சு.. எல்லாத்தையும் தூக்கி போட்டு கொளுத்த போறேன்னு வீட்டில் திட்டியதையும் காதில் வாங்காம.....

தேவையான பொருட்கள்...
பழைய வளையல்கள்
சில்க் த்ரெட் நூல்
ரன்னிங்க் ஸ்டோன்
ஃபேப்ரிக் க்ளூ
முத்து சரம்

 சில்க் த்ரெட்டில் 20 இழை எடுத்துக்கிட்டு வளையலில் பசை தடவி ஒட்டிக்கனும்... 
இப்படியே வளையல் முழுக்க நூல் சுத்திக்கிட்டு வரனும்.  


 நூல் சுத்தி முடிச்சதும் இப்படி இருக்கும்.. இதுக்கப்புறம் நமக்கு பிடிச்ச மாதிரி அலங்காரம் பண்ணிக்கலாம்.
சின்ன சின்னதா முத்து இருக்கும் செயின் இருக்கும். அதில் 4, 3,2,1ன்னு சந்துப்புள்ளி மாதிரி வளையலில் நேருக்கு நேராய் நாலு இடத்தில் இப்படி ஒட்டிக்கிட்டேன். 
கலர் கலர் கற்கள் பதிச்ச ரன்னிங்க் ஸ்டோன் இருக்கு. அதுல கலர் கலர் முத்துக்களும் கடையில் கிடைக்குது. அதில் வெள்ளை முத்துக்களை 3, 2ன்னு ஒட்டிக்கிட்டேன். 

சைடுன் வளையலுக்கு அதே முத்தை நீள வாக்கில் ஒட்டிக்கிட்டேன்.

 பச்சை புடவைக்கு மேட்சிங்கா ஒரு செட் வளையல் ரெடி..



அடுத்த செட் வளையலுக்கு நடுவால இருக்கும் பெரிய வளையலை ஆறு கலர் நூலால் சுத்திக்கிட்டு, ரெண்டு கலர் சேருமிடத்தில் ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கிட்டேன். 

சைடு வளையலுக்கு கோல்ட் கலர் நூலால் வளையல் செஞ்சுக்கிட்டாச்சுது.  எல்லா புடவைக்கும் மேட்ச் ஆகுற மாதிரி அடுத்த செட் வளையல் ரெடி.

மருமக வர்றதுக்குள் தின்னு பாரு, பொண்ணு வளரும்முன் கட்டி பார்ன்னு  எங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க. அதாவது, மருமக வந்தா வாய்க்கு ருசியா சாப்பிட முடியாதுன்னும், பொண்ணு வளர்ந்து பெரிய மனுஷியாகிட்டா அம்மா அழகா உடுத்த முடியாது., ஏன்னா நகை புடவைலாம் அது கட்டிக்கும். அப்படியே நாம கட்டிக்கிட்டா வயசு பொண்ணு வச்சிக்கிட்டு எப்படி மினுக்குறா பாருன்னு சொல்வாங்க. அந்த பாழமொழி என் விசயத்தில் ரொம்ப சரி. எதாவது புடவை, நகை வாங்கும்போது என் சின்ன பொண்ணு சொல்லும்.. அம்மா இது சூப்பர். எனக்குதானே?! இந்த வயசில் இதுலாம் நீ உடுத்தக்கூடாதுன்னு:-(... 
என் மல்டி கலர் வளையல் அழகுல மயங்கி!!! அது தன்னோட பழைய வளையலை புதுசாக்கி தரச்சொல்லுச்சு. அது ட்ரெஸ்சுக்கு தகுந்த மாதிரி வளையல் ரெடி செஞ்சு தந்தாச்சுது.
 மூணு செட் வளையல் ரெடி....
எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்லுங்க....

நன்றியுடன்,
ராஜி

22 comments:

  1. மருமக வந்தால் தின்ன முடியாதா ?
    இந்த பழமொழி தோன்றி சுமார் இருபது வருடங்கள் இருக்குமா ?

    அதற்கு முன்பு மருமகதான் பட்டினியாக இருந்திருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. இப்பத்திய மாமியார்கள் கொடுமை பண்ணுறதில்லையா?!

      அப்படிலாம் இல்லண்ணா. எந்த காலத்திலும் விதி விலக்குகள் உண்டு.

      Delete
  2. சரிதான் திருப்பதில வளையல் கடை போட்டுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நாமம் போடாம இருந்தால் சரிதான்.

      Delete
  3. கையிலே கலை வண்ணம்கண்டேன்

    ReplyDelete
  4. அழகான கை வண்ணம்..........இப்ப யாரு இதெல்லாம் பண்றா... நேரா வளையல் கடைக்குப் போ வேண்டியது,வாங்கிட்டு வர வேண்டியது......அப்புறம் தூக்கிப் போட்டுடுறது..அம்புட்டுத் தேன்........

    ReplyDelete
    Replies
    1. அதேதான், என் பசங்க இந்த மாதிரி வேலைக்கு வரமாட்டாங்க. எப்பவாவது எம்ப்ராய்டரி வேலைக்கு கற்கள் ஒட்டி தருவாங்க. அம்புட்டுதான்

      Delete
  5. கலக்கறீங்க போங்க ராஜி!! வளையோசை கல கல...கலக்கல் வளையல்கள்!!! செம கை வேலைத் திறன்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கா கீதாக்கா. அதென்னமோ வளையல்ன்னா மட்டும் கொஞ்சம் ஆசை அதிகம். இதை மாத்திக்கனும்ன்னு நினைப்பேன். ஆனா முடில.

      Delete
  6. வித வித வளையல்கள்
    அழகான கைவண்ணம்
    கண்ணைப் பறிக்கிறதே!

    ReplyDelete
  7. அருமை
    ஒரு சிறு கால இடைவெளிக்குப் பிறகு இன்றுதான் வலையுலகிற்குத் திரும்பியுள்ளேன்.
    இனி தொடர்வேன்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அதான் உங்க பதிவிலேயே சொல்லி இருந்தீங்களே. ஜூன்லதான் வலை உலகிற்கு வருவேன்னு... நினைவிருக்குண்ணா.

      Delete
  8. அட்டகாசம்.... பாராட்டுகள் சகோதரி...

    ReplyDelete
  9. நான் என்ன எழுத வேண்டும் என்று மனதில் வரிகள் உருவானதோ, அப்படியே அதை ஜி எம் பி ஸார் முன்னரே எழுதி இருக்கக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  10. உங்க வளையல் எண்ணிக்கை பெருகுது. இனி வளையலுககு மேட்சா புடவை வாங்க வேண்டியிருக்கும. எச்சரிக்கை!

    ReplyDelete
    Replies
    1. புடவைல விருப்பமில்ல சகோ. பொங்கல் தீபாவளிக்கு எடுப்பதோடு சரி. வருடத்துக்கு 5 அல்லது 6 புடவைகள் எடுப்பதே அதிகம்.

      வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  11. நல்லா இருக்கு ராஜி க்கா..

    இதுவரை இப்படி செஞ்சது இல்ல..இனி செஞ்சு பாக்கணும்..

    திருப்பதியில் ...நல்ல தரிசனம் செஞ்சுட்டு வாங்க க்கா

    ReplyDelete
    Replies
    1. பயங்கரமா கூட்டமா இருக்காம் அனு. ரூம் கிடைக்கல, 300ரூபா டிக்கெட்ட்டும் கான்சல் பண்ணிட்டாங்களாம். தரிசனம் முடிக்க குறைஞ்சது 33 மணிநேரம் ஆகுதாம் அனு.

      Delete