Wednesday, August 15, 2018

ஆடுவோமே! பள்ளு பாடுவோமே! - சுதந்திர தினம்

 flag GIF
இந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றை சொல்லனும்ன்னா என்னோட வாழ்நாள் பத்தாது. அறிவும் பத்தாது. ஏன்னா, அத்தனை தியாகம், துரோகம், வஞ்சகம், வீரம், கண்ணீர், நெகிழ்ச்சின்னு அத்தனை கதை இருக்கு. வெளிச்சத்துக்கு வந்த, வராத எத்தனையோ தியாகிகள், வெளிச்சத்துக்கு வந்த தியாகிகள் வீட்டார் பட்ட துன்பங்கள்ன்னு எத்தனையோ இருக்கு. அப்படியிருக்க ஒருசிலரை சொல்லி பலரை சொல்லாமல் விட்டால் நன்றிக்கெட்டவர்களாவோம். அதனால அந்த எப்படி சுதந்திரம் கிடைத்ததுன்னு போகாம சுதந்திரம் கிடைத்தபோது நடந்தவற்றில் சிலவற்றை பார்ப்போம்....

Hindustan Times front page on August 15, 1947.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தியாவுக்கான தேசிய கீதம் கிடையாது.. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட 'ஜன கண மன' பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் சுதந்திர தினத்தன்னிக்கு வந்தேமாதரம் பாடல்தான் பாடப்பட்டது.
இந்தியாவுக்கு  சுதந்திரம் கிடைத்த அன்னிக்கு தேசப்பிதா மகாத்மா காந்தி கோல்கத்தாவில் இருந்தார். மத மோதல்களை எதிர்த்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.  சுதந்திரம் பெற்றப்பின் காங்கிரஸ் இயக்கத்தையே கலைக்க நினைத்தார் காந்திஜி. சுதந்திரம் பெற்று தந்ததை சொல்லிக்காட்டி மக்களிடம் அதிகாரம் செலுத்துவர் என அவர் நினைத்தார். 
கதர் துணியில் மட்டுமே தேசியக்கொடி தயாரிக்க வேண்டும். மற்ற  துணி வகைகளில் கொடியை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றம்.  அரபிந்தோ கோஸ், நெப்போலியன் போனபார்ட்லாம் ஆகஸ்ட் 15ல் பிறந்தவர்கள்.  மகாதேவ் தேசாய், அமர்சிங் சவுத்ரி, ஆகியோர் ஆகஸ்ட் 15ல் இறந்தவர்கள்.
1947ல்இந்தியாவின் ஒரு ரூபாய் அமெரிக்காவின் ஒருடாலருக்கு சமமாக இருந்தது. ஆனால் இன்று?! இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் இதே நாளில் தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகளும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. இந்தியாவில், சுதந்திரத்தின்போது 1,100 மொழிகள் வழக்கத்தில் இருந்தன. ஆனா, இன்னிக்கு 880 மொழிகள் மட்டுமே இருக்கு.  
இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிகமுறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88.62 பைசா.  சுதந்திரம் பெற்ற போது  இந்தியா 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்ததால்தான் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று பெயர் பெற்றார். மவுண்ட்பேட்டன் டில்லி(இந்தியா) மற்றும் கராச்சி(பாகிஸ்தான்) ஆகிய இரண்டு இடங்களிலும் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.



இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவில் 562 சுதேச மாகாணங்கள் இருந்தது.  இந்திய தேசியக் கொடி முதன் முதலாக 1906-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஏற்றப்பட்டது. கல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில்தான் ஏற்றப்பட்டது. அப்ப, தேசியக்கொடி சிவப்பு, மஞ்சள், பச்சை வண்ணத்தில் இருந்தது. மேலே 8 தாமரைப் பூக்கள், கீழே சூரியனும், பிறை நிலாவும் இருந்தன. இப்ப இருக்கும் தேசியக்கொடியின் நிறங்களுக்கு அர்த்தம் உண்டு. காவி வண்ணம் தைரியம், தியாகத்தையும்,  வெள்ளை உண்மை, அமைதி, தூய்மையையும், பச்சை வண்ணம் நம்பிக்கை, தீரச்செலையும், நடுவிலிருக்கும் அசோகச்சக்கரம் நீதியையும் குறிக்கும்.  தற்போதுள்ள தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கய்யா. 1921-ல் வடிவமைத்தார். இக்கொடி 1947-ம் ஆண்டு ஜூலை 22 அன்று தேசியக் கொடியாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியா சுதந்திரமடைந்தபோதும் கோவா மட்டும் சுதந்திரம் பெறாமலேயே இருந்தது. ஏன்னா, கோவா போர்த்துகீசியர் வசம் இருந்தது. 1961-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, இந்திய ராணுவம் தலையிட்ட பிறகு, கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.   இந்தியா ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது போல இன்னும் 3 நாடுகளும் அன்றைய தினம் தங்களது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுகின்றது.  இதே நாளில் 1945-ம் ஆண்டு ஜப்பானிடமிருந்து கொரியாவும், 1971-ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து பஹ்ரைனும், 1960-ம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து காங்கோவும் விடுதலை பெற்றன.

இந்தியாவுக்கு விடுதலை அளிக்க முடிவு செய்ததும், ஆகஸ்ட் 15தேதிதான் என இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுதான் முடிவு செய்தார். இரண்டாம் உலகப் போரின்போது 1945-ம் ஆண்டு நேச நாடுகள் படைகளிடம் ஜப்பான் சரணாகதி அடைந்தது அந்தத் தேதியில்தான். அந்த நினைவாக அந்தத் தேதியைத் தேர்வு செய்தார். இந்தியா என்ற அகண்ட நாடு இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிந்த பிறகு இரு சுதந்திர தினக் கொண்டாட்டத்திலும் மவுண்ட்பேட்டன் பிரபு கலந்துகொள்ள விரும்பினார். அதற்கு வசதியாகப் பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதியும், இந்தியாவுக்கு ஆக15 சுதந்திரம் தர முடிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 15 சரியில்லாத நாள் எனவும், இரண்டு நாட்கள் கழித்து கொடுக்கலாம் என ஜோதிடர்கள் இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆக., 15 என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில்தான் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள். இதனால் ஆகஸ்ட் 15 நள்ளிரவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அப்பொழுது  எழுப்பப்பட்ட  ஒலியை கேட்டு, அனைவரும்  ஒரே  நேரத்தில்  எழுந்து  நின்று “ வந்தே  மாதரம் “ என  பாடினார். பின்னர், அரசியல் அமைப்பு  சபையில்  ஆகஸ்ட்  15 ஆம் தேதி காலை  10.30  மணியளவில்  தேசியக்கொடி ஏற்றப்பட்டது.


கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்ததுன்னு கொஞ்சம் மிகைப்படுத்தி சொன்னாலும், நிஜத்தில் அப்படி நடக்கவில்ல. பலப்பேர் தங்கள் இன்னுயிரை ஈந்தும், உடல் அவங்களை இழந்துதான் இந்த சுதந்திரம் கிடத்தது. அப்பேற்ப்பட்ட சுதந்திரத்தை நாம் எப்படி போற்றி பாதுக்காக்க வேண்டும்/?! கருத்து சுதந்திரம் இருக்கு. ஆனா எதுல?! காதல், காமம், ஆன்மீகம் பற்றி பேச மட்டுமே! அரசியல், நாடு, சமூகம்ன்னு கருத்து சொன்னால் வழக்குகள் பாயும்.  ஆடை சுதந்திரம் உண்டு. ஆனா அது உடல் அவயங்களை காட்ட மட்டுமே... மது அருந்தி சாலையில் விழுந்து கிடக்க அனுமதி உண்டு. ஆனா, ஒரு சமூக அவலத்துக்காக போராட அனுமதி இல்லை.  கல்வி சுதந்திரம் உண்டு., அது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே. சமூக வளைத்தளங்களில் பெண்களுக்கு முழு சுதந்திரம் உண்டு ... செல்ஃபி போட மட்டுமே. எதாவது சமூக கருத்து சொன்னா உடனே வேசி பட்டம்... சமூக வலைத்தளத்தில் கருத்தை பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. அது சமூகத்தை பத்தி இருக்கக்கூடாது..

ஆற்று மணலை அள்ள சுதந்திரம்.. ஆனா, ஆற்றை தூர் வாற அனுமதியில்லை. தண்ணியை வீணாக்க சுதந்தரமுண்டு... ஆனா, குளம், குட்டை கிணறு வெட்டக்கூடாது.  மரம் வெட்டிக்கலாம்.. ஆனா, மரம் நடக்கூடாது. எங்க வேணும்ன்னாலும் குப்பை கொட்டலாம்... ஆனா குப்பை அள்ள வரக்கூடாது... கண்ட இடத்தில் மலம், சிறுநீர் கழிக்கலாம்.. ஆனா, அதை சீர் பண்ண வரக்கூடாது... வாக்கு போட வரக்கூடாது... கிராம சபை கூட்டத்துக்கு வரக்கூடாது... அக்கம் பக்கம் நடக்கும் சமூக அவலத்துக்கு குரல் கொடுக்க வரக்கூடாது.

எல்லா தப்பையும் செய்வோம். எல்லாவிதத்திலயும் சுதந்திரம் அனுபவிப்போம். ஆனா, நாடு என்ன செய்ததுன்னு கேட்போம். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சட்டம்தான் போடும். ஆனா குடிமக்களாகிய நாமும், அதிகாரிகளும்தான் சரிவர, மனசாட்சிப்படி நடந்து எல்லா மக்களுக்கும் போய் சேரும்படி பார்த்துக்கனும். அதை விட்டு ஆட்சியாளர்களையே எதுக்கெடுத்தாலும் குறைசொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது. 



முதல்ல நாம மாறுவோம். அப்புறம் அவங்களை மாத்துவோம்.  அப்படியும் ‘அவிய்ங்க’ மாறாவிட்டால் வேற ஆளை மாத்துவோம்.   மாற்றம் முதல்ல நம்மிடமிருந்து வரனும்... இன்னிலிருந்து மாறுவோமா?!

வந்தே மாதரம்.

நன்றியுடன்,
ராஜி



9 comments:

  1. சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. சுதந்திர தின வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. நிறைய நல்ல தகவல்கள் அறிந்துக் கொண்டேன் ராஜி க்கா...

    ஆமா ...நம்மில் மாற்றம் கொண்டு வருவோம்...முதலில்..

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நல்ல சிந்தனை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இந்தியா சுதந்திரமடையும் முன்பே சுதந்திரப்பள்ளு பாடினார் பாரதியார் என்ன சுதந்திரம்கிடைஹ்து என்ன பல்ன் மனதளவில் நாம் சிலகோட்பாடுகளுக்கு அடிமையே

    ReplyDelete