Tuesday, August 28, 2018

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ஆட்டு ஈரல் தொக்கு - கிச்சன் கார்னர்

போன வாரம்லாம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைஞ்சு போய் மயக்கம். டாக்டர்கிட்ட போனால் எதுலாம் சாப்பிட்டா எச்.பி அளவு அதிகரிக்கும்ன்னு லிஸ்ட் போட்டு கொடுத்துட்டார்.  முதல் நாள் இரவே மூணு திராட்சையை தண்ணில ஊற வச்சு    வேளைக்கு ஒன்னுன்னு சாப்பிடனும். மறுநாள் ஆறு ஊற வச்சு வேளைக்கு இரண்டா சாப்பிடனும். இப்படியே தினமும் வேளைக்கு ஒன்னா எண்ணிக்கையில்  சேர்த்துக்கிட்டு 9 திராட்சை வரை போகனும். ஒருநாள் இடைவெளி விட்டு மீண்டும் முதல்ல இருந்து ஆரம்பிக்கனுமாம். பீட்ரூட் சேர்த்துக்கனும், தக்காளி சாறு +எலுமிச்சை சாறு+தேன் கலந்து காலை மாலை குடிக்கனுமாம்.  தினமும் சமையலில் கீரை, பச்சை பட்டாணி சேர்த்துக்கனுமாம். உடனடியா ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க ஆட்டு ஈரல் சாப்பிடனும்ன்னு சொன்னாங்க. கீரை,  பீட்ரூட்லாம் பச்சை குழந்தை வாய்ல முத்தம் கொடுத்த மாதிரி சப்ப்ப்ப்புன்னு இருக்கும்.  அதனால் காரசாரமான ஆட்டு ஈரலை சாப்பிடலாம்ன்னு சொல்லி வாங்கி வந்தாச்சு.

தேவையான பொருட்கள்;
ஆட்டு ஈரல்
வெங்காயம்’
தக்காளி
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சப்பொடி
மிளகாய்பொடி
உப்பு
எண்ணெய்
மிளகு
தனியா.
சோம்பு,
காய்ஞ்ச மிளகாய்
கடுகு
பட்டை
லவங்கம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி


ஆட்டு ஈரலை சுத்தம் பண்ணி சின்ன சின்னதா நறுக்கிக்கனும். வெங்காயம், தக்காளியை கழுவி பொடியா நறுக்கிக்கனும். வெறும் வாணலில மிளகு, தனியா, சோம்பு போட்டு வறுத்துக்கனும், கடைசியா காய்ஞ்ச மிளகாயை சேர்த்து வறுத்து பொடி செஞ்சு வச்சுக்கனும்.
வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும், கடுகு, பட்டை, லவங்கம் போட்டு தாளிச்சுக்கனும்.

வெங்காயம் சேர்த்து வதக்கிக்கனும்.

இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கனும்.
தக்காளி சேர்த்து வதக்கிக்கனும்.

உப்பு சேர்த்துக்கனும்.

ஆட்டு ஈரல் சேர்த்துக்கனும். அத்தோடு மஞ்சப்பொடி சேர்த்துக்கனும். அசைவம் சமைக்கும்போது கொஞ்சம் மஞ்சப்பொடி சேர்த்துக்கிட்டால் கெட்ட வாடை வராது. 

மிளகாய் தூள் சேர்த்து, கரம் மசாலா சேர்த்துக்கனும். 
 
பொடிச்சு வச்சிருக்கும்  மிளகு, சோம்பு, தனியா மிளகாய்  பொடியை சேர்த்து, தேவையான அளவு தண்ணி சேர்த்து நல்லா கொதிக்க விடனும். குழம்பா வேணும்ன்னா தேங்காய் முந்திரி பருப்பு அரைச்சு சேர்த்துக்கலாம். இல்ல, தொக்கு பதத்தில் வேணும்ன்னா கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சேர்த்து  இறக்கிக்கனும். 

காரசாரமான ஆட்டு ஈரல் தொக்கு ரெடி, இட்லி, தோசை, சாப்பாடுன்னு எல்லாத்துக்குமே செட் ஆகும்.

ரத்தத்திலிருக்கும் ஒருவகை புரதத்துக்கு ஹீமோகுளோபின்னு பேரு. இதை எச்.பின்னு சுருக்கமா சொல்வாங்க. இந்த எச்.பிதான் ரத்தத்தை சிவப்பா வச்சுக்கிட்டு, உடலின் அனைத்து அவையங்களுக்கும் ஆக்சிஜனை கொண்டு செல்லும் வேலைய செய்யுது. இது குறைஞ்சா ரத்த சோகை உண்டாகும். உடலில் வலு இல்லாத மாதிரி ஆகிடும். நெஞ்செரிச்சல், தலைவலி, மயக்கம், நகம் உடைதல், சுறுசுறுப்பில்லா தன்மை உண்டாகும். அதனால் இரும்பு சத்து அதிகம் இருக்கும் முருங்கை கீரை, முட்டைக்கோஸ், இறைச்சி, பீட்ரூட்லாம் அதிகம் சேர்த்துக்கனும்.

ராஜிக்கு உடம்புக்கு முடிலன்னு ஹார்லிக்ஸ், ஆப்பிள், ஆரஞ்சுன்னு வாங்கிட்டு வராதீக. அதுலாம் எனக்கு பிடிக்காது. வேணும்ன்னா, நெட்கார்ட் போட்டு விடுங்க. அது போதும் :-)

நன்றியுடன்,
ராஜி. 

17 comments:

 1. உடம்புக்கு முடியலைனா நெட் கார்டா ? இதென்ன காலக்கொடுமையாவுல இருக்கு....?

  ReplyDelete
  Replies
  1. ஆமா. பொழுது போகனும்ல்ல! அதுக்குதான் நெட் கார்ட்

   Delete
  2. விவேக்-ரூபலா பெயர் காரணமும், பிள்ளைகளின் திருமண படமும் பார்த்தேன். வாழ்க வளமுடன்

   Delete
 2. உடல் நிலை முக்கியம். பதிவுகள் கிடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. சரியாகிட்டேன்ண்ணே. சும்மா இருந்தாலும் போரடிக்குதுல்ல

   Delete
 3. அட அக்கா ..ரெஸ்ட் எடுக்காம இதையும் பதிவு போட்டாச்சா..

  சரி போங்க நல்லா நிறைய சாப்பிட்டு தெம்பா வாங்க...

  ReplyDelete
  Replies
  1. அதுலாம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டுதான் இருக்கேன்பா. தூக்கம் வரல. தூக்கமில்லாம சும்மா படுத்து கிடந்தால் உடல்வலிதான் மிச்சம்

   Delete
 4. உங்களின் பொறுமை வியக்க வைக்கிறது அக்கா..... (!)

  ReplyDelete
  Replies
  1. அக்காவா?!

   இதென்ன புதுசா இருக்கு!?

   இதுல ஏதோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே!

   Delete
 5. ரத்தத்தில் ஹெச் பி அளவு குறைவது மிக் மிக ஆபத்தானது. உடனே அதை கவனித்து ஆவன செய்வது அவசியம்.

  ReplyDelete
  Replies
  1. இனி கவனமா இருக்கேன் சகோ

   Delete
 6. உடல் நலனை கவனித்துக் கொள்ளவும்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. அக்கறைக்கும் ஆலோசனைக்கும் நன்றிண்ணே

   Delete
 7. அண்ணனுக்கு இது அளவு கூட்டிப்போய் வெளிநாட்டுக்கு போக ஏழு எட்டு மாசமாச்சு, பொய் சொல்லி பொய் சொல்லி நான்கைந்து முறை ரத்ததானம் செய்தும் பலனில்லாமல், மும்பை ஏர்போர்ட்டை சுத்தி பதினைந்து நாட்கள் வெறிபிடிச்சு ஒடி லேவலாக்கிட்டு வந்துருக்கேன்...

  ஒருநாள் மட்டன் சாப்பிட்டு இருந்தப்போ வீட்டுக்குள் வந்த வீட்டம்மாவின் தோழி [பிசியோதெரபி டாக்டர்] "நீயே மாமாவை கொன்னுருவே போலிருக்கே"ன்னு கத்த...என்னான்னு விசாரிச்சா...ஹீமோகுளோபின் கூடுதலா இருந்து மட்டன் சாப்பிட்டா இரத்த அடர்த்தி இன்னும் கூடி மரணத்தில் முடித்து வைத்துவிடும்ன்னு சொன்னாள்.

  பிறகுதான் மட்டன் சுத்தமா வீட்டில் நிறுத்தி விட்டார்கள்...

  இப்போ கடேசியா ஒரு ஆர்டிகல் முட்டையின் வெள்ளைக்கரு சாப்பிட்டால் கூடி இருக்கும் ஹீமோகுளோபின் குறையுமாம்.

  ஹீமோகுளோபின் அளவு பெண்ணிற்கு 12 சதவீதமும் ஆணுக்கு 14 சதவீதமும் இருக்கணுமாம், கூடினாலும் குறைந்தாலும் ஆபத்துதான்.

  ReplyDelete
  Replies
  1. இங்க 5தான் இருக்கு. அதான் போதைல இருக்க மாதிரி கிர்ர்ர்ர்ர்ன்னு இருக்கு. ஆனா தூக்கம் வரல. வேலை செய்யவே பிடிக்கலைண்ணே. வேலை சரியா செய்யலைன்னு சின்ன பொண்ணு திட்டுது.

   Delete
 8. அளவு எத்தனை இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கலாம் சைவ உணவுக்காரர்கள் ஆட்டு ஈரல் சாப்பிட முடியாதே திராட்சைதான்கதியா நல்ல உணவு ஓய்வு உடன்மனதையும் ஒருமுகப்படுத்தி எந்த வேலையிலும் ஈடுபடுங்கள் ரத்த சோகைஎல்லாம் ஓடிவிடும்

  ReplyDelete
  Replies
  1. ஆட்டு ஈரல்லாம் சட்டுன்னு அதிகரிக்க சாப்பிட சொன்னாங்க.

   நிரந்தரமா உடலில் எச்.பி சேர திராட்சை, பீட்ரூட், கீரை முக்கியமா முருங்கைக்கீரை, ப.பட்டாணி சேர்த்துக்க சொன்னாங்க. பேரீட்சையும் ஓக்கே.

   மனோ அண்ணா சொன்னமாதிரி ஆணுக்கு 14, பெண்களுக்கு 12 இருக்கனும். அட்லீஸ்ட் எச்.பி அளவு 9வது இருக்கனும்., எனக்கு 5க்கு இறங்குனதுதான் பிரச்சனை

   Delete