Saturday, August 18, 2018

எது உண்மையான தேசபக்தி?! படம் சொல்லும் சேதி.

செங்கோட்டையிலும், ஜார்ஜ் கோட்டையிலும் கொடி ஏத்தினவங்க, முகநூஇல் பதிவு போட்ட, நாமலாம் விளம்பரத்துக்காக. ஆனா தேசபக்தி என்பது இதுதான்.  எங்கோ ஏற்றும் கொடிக்கு செருப்பை கழட்டி வணக்கம் சொல்லும் பாங்கு.  விடுதலை கதைகளை படிச்ச நமக்கு வரலையே! இதுதான் ஒரு விசயத்தை பத்தி தெரிஞ்சுக்குறதுக்கும், உணர்தலுக்குமுள்ள வித்தியாசம். 
என்னைய மாதிரி கணக்குல ஃபெயிலா போன கழுதைங்க எப்படி நேரம் பாக்குமாம்?!

தாலி கட்டிக்கொண்ட  பாக்கியசாலி...
நம்ம இனத்தைலாம் வெட்டிப்புட்டு இவனுங்க எப்படி உசுர் வாழ போறாங்கன்னு நினைக்குதோ!!

 மகிழ்ச்சி பணத்திலும், பொருட்களிலுமில்லை என்பதற்கு உதாரணம்.

சின்ன ஆப்பிள், பெரிய ஆப்பிள்..

தன் பொண்டாட்டிய சொல்லாம சொல்லுறாரோ!?
எந்த பிரச்சனைக்கும் கடவுள்  வழிக்காட்ட மாட்டாரு. இதை சொன்னா என்னைய லூசும்பானுங்க. 

 ஈகோ கொண்டாடி
நீ அத்திசையியை
பார்க்கிறாய்!!
அதனால் ஊடல் கொண்டாடி
நான் இந்த திசையை பார்க்கிறேன்!
இருவர் மனமும்
மனம் கேட்கிறது....
யார் முதலில் பேசப்போறீங்க என?!


நமக்கு நாமே திட்டம்ன்றது இதுதான் போல!

உண்மைய பேசுறது நல்ல விசயம்தான்.  ஆனா, அதுக்காக உண்மையவே பேசிக்கிட்டிருந்தா இதான் நடக்கும். 

குப்பைகள்லாம் கழிவு நீரில் கலந்து போகாம இருக்க நல்லதொரு யோசனை..

பின்குறிப்பு: பக்கம் பக்கமா எழுத நேரமில்லை. அதான் எழுதலை. மத்தபடி கோவம்லாம் இல்ல வெங்கட் அண்ணா. கிட்டத்தட்ட 7 வருசமா பிளாக், பேஸ்புக்ன்னு நட்பா இருக்கோமே! இதுவரை கோவிச்சுக்கிட்டோ இல்ல நான் சண்டையிட்டோ பார்த்திருக்கீங்களா!? உடம்புக்கு முடில. ஹாஸ்பிட்டல் போய் வந்துக்கிட்டு பக்கம் பக்கமா டைப்ப முடில. அதான் இன்றும் படங்களை வச்சு பதிவு.

நன்றியுடன்,
ராஜி

22 comments:

  1. எப்படியோ விடாம பதிவு போடறோமில்ல

    ReplyDelete
    Replies
    1. நம்ம குறிக்கோள் முக்கியம்மில்ல!

      Delete
  2. அனைத்தும் ரசிக்க வைத்தன.

    சின்ன ஆப்பிள் பெரிய ஆப்பிள் சிரிக்க வைத்தது.

    பீவி (BV) என்று வந்திருப்பதால் பொண்டாட்டியா?!!

    ReplyDelete
    Replies
    1. அப்படிலாம் இல்ல சகோ. தந்தையாவும் இருக்கலாம்.

      Delete
  3. அடடா.... உடல் நலம் தான் முக்கியம். பதிவு எங்கே போய்விடப் போகிறது... நாங்கள் தான் எங்கே போய்விடப் போகிறோம்! விரைவில் உடல் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.....

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனைகள் செய்யுமளவுக்குலாம் ஒன்னுமில்ல சகோ’ஸ்.

      Delete
  4. கில்லர்ஜிக்கு போட்டியா...? ம்ஹீம்...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு யாரும் போட்டியில்லை. நானும் யாருக்கும் போட்டியில்லை.. மாயாவி சூர்யா டயலாக்

      Delete
  5. படம் சொல்லும் செய்திகள் அருமை.
    உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அக்கறைக்கு நன்றிம்மா.

      Delete
  6. தேசபக்தி உண்மை அருமை சகோ.

    மேலிருந்து கீழ் மூன்றாவது படத்தில் மாமாவையும், உங்களையும் பார்ப்பது போன்ற உணர்வு.

    ReplyDelete
    Replies
    1. மாமாவும் நானுமா?! இப்படிலாம் நின்னு பேசி ரொம்ப நாள் ஆச்சுதே!

      Delete
  7. படமும் நல்லா சேதி செல்லுது.. நீங்களும் நல்லாவே சொல்றீங்க

    இருந்தாலும் செம...

    ReplyDelete
    Replies
    1. நமக்குதான் வாய் அதிகம்ன்னு தெரியுமே!

      Delete
  8. அனைத்தும் அருமை
    உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரியாரே

    ReplyDelete
  9. படங்களை வைத்து அதிலும் செய்திகளை உணர்த்திய விதம் அருமை. உடல்நலன்தான் முக்கியம். அதனைப் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. ஓ உங்களுக்கும் மா...இங்கயும் அந்த கதை தான் ..

    இனி தான் எல்லா பதிவும் வாசிக்கணும் ராஜி க்கா..

    same pinch..

    ReplyDelete