Saturday, May 19, 2012

ப்ளீஸ் ஹெல்ப் மீ











கார் வாங்கலாம்ன்னு இருக்கேன். உங்க வீட்டுலதான் கார் இருக்கே. எப்படி பராமரிக்கனும், கார் வாங்கும்போது என்னென்ன ஃபிக்ஸ் பண்ணனும்ன்னு சொல்லுடின்னு  ஃப்ரெண்டை கேட்டேன்.  அந்த நாயி சாரி அவ கார் பின் கண்ணாடில வரைய டிசைன் செலக்ட் பண்ணுன்னு மெயில் அனுப்பி இருக்கா.

முதல்ல கோவம் வந்துச்சு, இருந்தாலும் எப்படியும் கண்ணாடில எதாவது வரையத்தானே போறோம்ன்னு செலக்ட் பண்ணிட்டேன். அந்த படத்தை பார்க்கனுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
கார் வாங்குனா எப்படியும் நான் கார் ஓட்டுவேன். அப்போ இந்த படத்தை போட்டாத்தானே சரியா இருக்கும். மாற்று கருத்து இருந்தா சொல்லுங்க. நல்ல படத்தை செலக்ட் பண்ணி குடுங்க ப்ளீஸ்....
டிஸ்கி: என் மக தூயா யாருக்காகவோ காத்திருக்கிறாளாம். உருகி, உருகி கவிதை எழுதியிருக்கா. அது என்னன்னு இங்க போய் பாருங்களேன். 
  

Friday, May 18, 2012

கோலம் போடுங்க... கோலாகலமாக வாழுங்க!

                                         
ஏண்டி புள்ள, காலங்காத்தால எம்புட்டு வேலை இருக்கு. வாசல் தெளிச்சோமா, கூட்டினோமா, நாலு புள்ளில ஒரு கோலம் போட்டோமான்னு வராம வாசலடைச்சு தினமும் கோலம் போடுறியே உனக்கு இடுப்பு வலிக்கலை?!

என்னங்க மாமா இப்பிடி கேட்டுட்டீங்க? கோலம் போடுறதுல எம்புட்டு விசயம் இருக்கு தெரியும்ங்களா?

ம்க்கும் என் காசுலாம் கோலமாவாவும், கலர் பொடியாவும்  மாறி வேஸ்ட் ஆகுறதுதான் மிச்சம்.

ஐயோ மாமா, உக்காருங்க இப்பிடி, அழகா இருக்குற ஒரு விசயத்தை இன்னும் கொஞ்சம் அழகு பண்றது நம்ம பழக்கம்.

என்ன புள்ள சொல்றே?! கோலம் போட்டு அழகு பண்றியா? வெளங்கலியே!

மாமோய்!  ஒவ்வொரு விசயத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கு மாமா.  காரணம் தெரியாம அந்த  காரியத்தை செய்யுறது அறியாமை. அந்த காரணத்துக்காகக் காரியம் செய்வது அறிவுடைமைன்னு பெரியவங்கலாம் சொல்லியிருக்காங்க.

சுத்தத்துக்காகவும், ஆரோக்கியத்துக்காகவும்  நாம வீட்டைச் சுத்தம் செய்றோம். காத்து  மூலமா  வர்ற  தூசு, தும்மை  தடுக்க ஜன்னல்,  கதவுகள் வெச்சு வீட்டை கட்டுறோம். ஜன்னலுக்கு ஸ்கிரீன் கட்டுறோம். சுவத்துல  சுண்ணாம்பு பூசுறோம். சுவத்துல  பூசுற சுண்ணாம்பு சுவத்துல நமக்கு தெரியாம  புகுந்திருக்குற நுண்ணிய நோய்க் கிருமிகளை அழிக்குது.

அதுப்போல அலங்காரங்களினால், வீட்டுக்குள் இருப்பவர்களின் நலன்கள் பாதிக்காமல், பாதுகாக்கப்படுறது  பழந்தமிழர் நாகரிகத்தின் பழக்க வழக்கங்கள்ல ஒண்ணு.  வூட்டுல இருக்குறவங்க  நலனைப் பாதுகாக்கும் முறைகள்ல  ஒண்ணுதான்   கோலம் போடுறது.

பொம்பளைங்க நாங்க,  அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல    பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்துத் தெளிச்சு,
வாசலைப் பெருக்குறது.  இது, சுத்தத்துக்காக மட்டும் செய்யப்படுவதல்ல! வீட்டின் முன்னாடியும் பின் வாசல்லலியும்  தெளிக்குற பசுஞ்சாண தண்ணி, அந்த வூட்டுக்குள்ள காத்துலயும், தூசியிலயும், வீட்டுக்குள் வர்றாவங்களால தொத்திக்கிட்டு வர்ற நோய்க்கிருமியை தடுக்குது. அதனால, பசுஞ்சாண தண்ணி  ஒரு கிருமிநாசினியாகப் பயன்படுதுங்க மாமா. அம்மை நோய், காலரா, வைசூரி போன்ற நோய்லாம்  பரவுறதைப் பசுஞ்சாண தண்ணி தடுக்குதுன்னு ஆராய்ச்சிலயே சொல்லியிருக்காங்க மாமோய்.

அப்படியா புள்ள!

வீட்டுமுன் வாசலில் கோலம் போடுவாங்க. இந்தக் கோலம்கூட  கண்டமேனிக்கு கண்டவாறு போடுறதில்லை. ஒவ்வொரு கிழமைக்கு ஏத்த மாதிரி  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலம் போடுவாங்க. அந்தக்கோலம், முக்கோண வடிவிலயும், நாற்கோண வடிவிலயும், வட்ட வடிவிலயும், பதினாறு கோண வடிவிலயும் இருக்கும் பொம்பளைங்க போடுறது  கோலமா இருந்தாலும்...,  அதுலாம்,  வூட்ல இருக்குறவங்களை காக்கும் யந்திர சக்ரமாகும்.

வூட்டு முன்னாடி போடுற கோலம், “ யந்திர சக்கரங்கள்”. அது  அந்த வூட்டுல இருக்குறவங்க, வூட்டில இருந்து வெளியே போகும் போதும், வூட்டுக்குள்ள  நுழையும் போதும் அவங்களுக்கு எந்த கெடுதலும்  நடந்துடாம பாதுகாக்குமாம்.
வூட்டிலிருக்கும் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ கண்ட  இடத்துக்கு போவாங்க . கண்ட கண்ட  பொருள்களைத் தொடுவாங்க. . அந்த இடங்களிலிருக்கும் தீய சக்திகள் குழந்தைகள் நலனைக் கெடுத்துடாம பாதுகாக்குதாம்.  

கோலத்தின் நடுவே பசுஞ்சாணம் வைத்து அதில் பூசணிப் பூவை வைக்கிறோமே!  அந்த பூசணிப்பூ மற்றவர்களால் கண் திருஷ்டி  படாம பாதுகாக்குது. பூசணிப்பூவின் மஞசள் கலருக்கு அந்த  சக்தி இருக்காம்.
இந்தப்பழக்கம் காலங்காலமாக நடந்துக்கிட்டு வர்ற பண்பாட்டு முறையாம்.
ஆனா, இன்ன்னிக்கு  நாகரிக வளர்ச்சியில எல்லாமே  போலித் தனங்கள். கோலமிடும் பொம்பளைங்க குறைஞ்சு போயிட்டாங்க.  தினமும் கோலத்தை தானே போடாம.  ஏதோ ஒரு கோலத்தை கலர் கலரா பிளாஸ்டிக் பேப்பர்ல அச்சடிச்சதை வாங்கி  வாசல் முன்னே ஒட்டிக்குறாங்க.

ஆமா புள்ள, முன்னலாம் நானும் வயலுக்கு போகும் போது  அழகழகான பொண்ணுங்கள்லாம் வாசல்ல கோலம் போடும்ங்க. நானும் அதெல்லாம் பார்த்துக்கிட்டே...,

என்ன பார்த்துக்கிட்டே?!

அது வந்து, அது வந்து கோலத்தையெல்லாம் பார்த்துக்கிட்டேன்னு சொல்ல வந்தேன் புள்ள.

ம்க்கும் உங்களை பத்தி எனக்கு தெரியாதா? நான் கோலம் போடும்போது எதிர்க்க டீகடைல உக்காந்து சைட்டடிச்ச ஆளுதானே நீங்க?!  உஙக புத்தி எனக்கு தெரியும். அதை விடுங்க. கோலத்தை பேசலாம்..

வார நாட்கள் ஏழும் ஏழு கோள்களின் ஆதிக்கத்தைக் குறிப்பதாகும். ஒரு நாளில் இருக்கும் ஆதிக்கம் மறுநாள் மாறிவிடும். அந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு கோலங்களை மாற்றி மாற்றிப் போடுவதனால், தீமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதை மறந்துவிட்டு, பிளாஸ்டிக் கோலங்களை ஒட்டி வைத்தால் என்ன பாதுகாப்பு கிடைக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மார்கழி மாதம் வந்து விட்டால் போதும்: வாசல் தோறும் வண்ணக் கோலங்கள் புத்துப்புது மலர்கள்போல் நாளும் ஓர் அழகுடன் மலரும். கோலம்போடும்போது கோடுகள் கோணல் மாணலாக இருந்தாலும் போட்டு முடித்தபின் எப்படிக்கோலாகலமான அழகுடன் இருக்கிறதோ அப்படியே கோலம் போடும் வீட்டினையும் மகாலட்சுமி தன் அருட்பார்வையால் நிறைப்பாள் என்பது ஜதிகம்.


அது மட்டுமில்லாம என்ன கோலம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்னு கூட இருக்கு மாமோய்.  கோலங்களில் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போட வேண்டும் ஹ்ருதய கமலம், நவகிரக கோலங்கள், ஐஸ்வர்யக் கோலம், ஸ்ரீசக்ரக் கோலம் போன்றவை யந்திரம் போன்றவை இவற்றை மஞ்சள் பொடியினாலும், அரிசிமாவினாலும் மட்டுமே போடுவது நல்லது.

அழகுக்காக வண்ணப்பொடிகளைப் பயன்படுத்தினால் கோலத்திற்கு உரிய தெய்வம் அல்லது கிரகத்திற்கு உரிய வண்ணத்தில் போடலாம். இத்தகைய கோலங்களால் தெய்வீக அருள் நிரம்பும் கிரக தோஷங்கள் விலகும். சுப காரியங்களுக்காகப் போடப்படும் கோலங்கள் கண்டிப்பாக இரட்டை இழைக்கோலங்களாகத்தான் இருக்க வேண்டும்.

 ஒற்றை இழை ஒருபோதும் கூடாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் போடும் கோலங்களுக்கு காவியால் அழகூட்டுவது சிறப்பானது இப்படிப் போடுவதால் மங்கலம் சிறக்கம் மனை விளங்கும்.வீட்டு வாசலில் போடும் கோலங்களில் தெய்வீக வடிவங்கள் இடம்பெறக் கூடாது.புனிதமான பொருட்களின் வடிவங்களை வரைவதைத் தவிர்ப்பதும் நல்லது. அவற்றை பூஜை அறையிலோ வீட்டின் உள்ளே போடலாம். 

படிக்கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரை, திசை தெய்வங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். வாசல் படிகளில் குறுக்குக் கோடுகள் போடுவதைத் தவிர்ப்பதும் நல்லது. கோலத்தின் தொடக்கமும் முடிவும் கோலத்தின் மேற்புறமாக அமையும்படி போடுவது அவசியம். ஏறு முகமான பலனை இது தரும்.கோலத்தில் இடப்படும் காவி சிவ சக்தி ஜக்கியத்தை உணர்த்துகிறது. இப்படிக் கோலமிடுவது. சகல நன்மையும் தருமாம்  மாமா. அதேப்போல முன்னலாம் அரிசி மாவுல கோலம் போடுவாங்க. அது, எறும்பு, பூச்சி, குருவிக்குலாம் பசியாற உதவி பண்ணுச்சு. ஆனா, இப்பலாம் கோலப்பொடி கல்லு உடைச்சு அதை பவுடராக்கி அதுல கோலம் போடுறோம்.அதனால ஒரு யூஸும் இல்ல மாமா.

கரெக்ட்தான் புள்ள, இனி  வாசல்ல கோலம் போடு.  ஆனா, என்கிட்ட கோலம் வராத. புரிஞ்சுதா?!

என்னாது, உங்களை..., ஓடாதீங்க மாமா! எப்படியும் கொட்டிக்க வூட்டுக்கு வந்துதானே ஆகனும் அப்ப இருக்கு உங்களுக்கு.

Wednesday, May 16, 2012

ஐ மிஸ் யூ டா செல்லம்......





I MISS YOU என்பதின் தமிழாக்கம் என்ன ????

நான் உன்னை தொலைத்து விட்டேன் என்பதா ???

கைக்குள் இருந்த ஒன்று
இல்லாத வெறுமை உணர்வை
சொல்லுவதா  "I MISS YOU"?!

தேடி தேடி அலைந்தும்
கிடைக்காதோ என்ற பய உணர்வை
பறைசாற்றுவதா "I MISS YOU"?!

எண்ணமெல்லாம் தனக்கே என்று
குத்தகை எடுத்து கொண்ட ஆக்கிரமிப்பை
வெளிபடுத்துவதா "I MISS YOU"?!

பிரிவின் துயரத்தை
துயரத்தின் வலியை அழகாக
கூறுவதா "I MISS YOU"?!

பல உணர்வின் கலவையான
"I MISS YOU" எனற சொற்றொடருக்கு இணையான
தமிழ் வாக்கியம் என்ன ??????????????

டிஸ்கி: தெரிஞ்சவங்க அர்த்தம் சொல்லிடுங்கப்பா.  ?!இல்லைன்னா பார்ட் டூ ரிலீஸ் பண்ணிடுவேனாக்கும்

Tuesday, May 15, 2012

முதல்ல முட்டைதான் வந்துச்சு..., நான் கண்டுபிடிச்சுட்டேன்

கோழி வந்ததா? இல்ல முட்டை வந்துச்சான்னு ரொம்ப நாளா கேள்வி, உலகம் ஃபுல்லா சுத்திக்கிட்டு இருக்கு. எனக்கும் அந்த டவுட் ரொம்ப நாளா இருந்துச்சு. அதை என் ஃப்ரெண்ட்கிட்டயும் கேட்டு உயிரை வாங்கியிருக்கேன். அவதான் இந்த புகைப்படங்களை அனுப்பி முட்டையிலிருந்துதான் கோழி வந்துச்சுன்னு நம்புறியான்னு கேட்டா.

நான் நம்பிட்டேன் நீங்க?!








                            
                            
                            
                                       
டிஸ்கி:  என்னதான் முட்டையிலிருந்து  கோழி வந்துச்சா? கோழியிலிருந்து முட்டை வந்துச்சான்னு   கிண்டலடிச்சாலும் 50கிராம் முட்டைக்குள் இருக்கும் வெள்ளைக்கருவும், மஞ்சக்கருவும் பல உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஒரு கோழி குஞ்சாய் வெளிவருவதென்பது தெய்வச்செயல்தானே. இந்த படங்களை பார்க்கும்போது ஆச்சர்யத்துடன் இயற்கைக்கு நன்றியும் சொல்லனும்ன்னு தோணுச்சு. படங்களை அனுப்பிய தோழிக்கு நன்றி

Monday, May 14, 2012

படித்தால் மட்டும் போதுமா?! - ஐஞ்சுவை அவியல்

                           
என்னடி புள்ள!  காலங்காலத்தாலே  புலம்பிக்கிட்டு இருக்கே?!

அது ஒண்ணுமில்லைங்க மாமா, நம்ம பக்கத்து வீட்டு கதிர் இருக்கானே, அவன் எம்புட்டு பெரிய படிப்பு படிச்சு இருக்கான். காலேஜுக்குலாம் போய் இருக்கான். ஆனா, அவனுக்கு ஊர் பெரியவங்க முன்னாடி எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியலியே, அதான், அவன்லாம் படிச்சு என்ன புண்ணியம்? யாருக்கு என்ன லாபம்ன்னு சொல்லுங்க பார்க்கலாம். அதான் புலம்பிக்கிட்டு இருக்கேன். 

எல்லாருமே பிரகலாதனாகிட முடியுமா புள்ள?!

பிரகலாதனா?யாருங்க மாமா அது? எனக்கு தெரியாம இந்த ஊருல? அவன் வெளியூரா?!

இல்ல புள்ள, இரண்ய கசிபுன்ற ராட்சனோட பையன். அம்மாவோட வயத்துல இருக்கும்போதே நாரதரின் போதனையால தன் அப்பாவுக்கு பிடிக்கவே பிடிக்காத விஷ்ணு பகவானின் பக்தனா பிறந்தார்.  பிரகலனாதன், விஷ்ணுவை மறக்க, கொடிய  வழிகளைலாம்  கையாண்டு தோற்று போன  இரண்யகசிபு, எங்கே உன் ஹரின்னு அந்த பச்ச புள்ளையை பார்த்து கோவமா கேட்டானாம்.

ஐயையோ, அப்புறம் மாமா...,

என் ஹரி தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்னு மகன் சொன்னதை கேட்டு, பக்கத்தில இருந்த தூணை தன் கையிலிருந்த கதாயுதத்தால உடைச்சானாம். அப்போ, தூணிலிருந்து விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தாரு. நரசிம்மம்னா...,

எனக்கு தெரியும் மாமா, மனிதன் உடம்பும், சிங்கத்தின் தலையும் சேர்ந்த ஒரு அவதாரம்தான் நரசிம்மம்.

கரெக்டா சொல்லிட்டே புள்ள. நரசிம்மர் போரிட்டு இரண்ய கசிபுவை கொண்ணுட்டார். நரசிம்மரோட உருவத்தை பார்த்து, தேவர்கள் உட்பட எல்லாரும் பயந்தாங்க. அவரோட கோவத்தை போக்க விஷ்ணுவின் பொண்டாட்டியான மகா லட்சுமிதேவிக்கிட்ட கேட்டுக்கிட்டாங்க. அந்தம்மாவும் புருசன் பக்கத்துல போக பயந்தாங்க.

ம்ம்ம்ம், அப்புறம் எப்படிதான் விஷ்ணு பகவானின் கோவம் போச்சு?

பிரகலாதன்தான் பாட்டுலாம் பாடி விஷ்ணுவோட கோவத்தை போக்குனாரு. அதனால, கோவம் குறைஞ்ச விஷ்ணு, பிரகலாதன்கிட்ட மன்னிப்பு கேட்டாரு.

என்னாது கடவுள் மன்னிப்பு கேட்டாரா? ஏன் மாமா?

தன் மேல பிரகலாதன் வெச்ச பக்தி உண்மைதானான்னு, சின்ன பையன்கூட பார்க்காம ரொம்ப சோதிச்சுட்டேன். அதனால, என்னை மன்னிச்சு, எதாவது வரம் கேள்ன்னு விஷ்ணு பகவான் பிரகலாதன்கிட்ட கேட்டாராம்.

ஐயனே! ஆசைகள் என் மனசுல  தோணவே கூடாது,  பணம் இருக்குது, படிப்பு இருக்குது. ஆனா, ஆசை வேணாம்ன்னு சொன்னான் பிரகலாதன். குருகுலத்துல  அவன் படிச்சதுது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் இல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக்குறாதுக்கு.

படிச்சா மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துகணும்ங்குற மாதிரி  இருந்த பிரகலாதனின் இந்தப் பேச்சு,  நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. சாமியை பார்த்து பக்தன் தான் உருகுவான். ஆனா, இங்கயோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த சாமி பக்தனை பார்த்து  உருகிப் போனான். இந்த சின்னவயசுல,  எவ்வளவு நல்ல மனசு! ஆசை வேணாம்ங்குறானே! ஆனாலும், அவர் விடலை.

 நீ ஏதாவது கேட்டுத்தான் ஆகணும்ன்னு, நரசிம்மர் கெஞ்சுனதால , எங்க அப்பாவை தண்டிக்காம அவருக்கு வைகுண்ட  பதவி கொடுக்கனும்ன்னு கேட்டுக்கிட்டானாம்.   அதுக்கு, விஷ்ணு, பிரகலாதா! உன் அப்பா  மட்டுமில்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெத்த அப்பாக்கள்  தப்பே செய்திருந்தாலும், அவங்க என் இடத்துக்கு வந்துடுவாங்க. அவங்க  21 தலைமுறையினரும் புனிதமடைவாங்கன்னு  வரம் தந்தாராம் விஷ்ணு.  தந்தை கொடுமை செஞ்சாரேங்குறாதுக்காக  அவரை பழிவாங்கனும்ன்ற எண்ணம்  பிரகலாதனிடம் இல்லை. படிச்சவங்க  கத்துக்கொள்ள வேண்டிய பண்பு இதுதான் புள்ள.

கரெக்டுதானுங்க மாமா.  படிச்ச படிப்பை பயனுள்ள வகையில யூஸ் பண்ணாதானே அந்த படிப்புக்கும் லாபம். மத்தவங்களுக்கும் லாபம்.
                              
அப்புறம்,  நம்ம கம்ப்யூட்டர் பொட்டில  பொட்டில ஒரு ஜோக்கு படிச்சேனுங்க  மாமா. சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாகிட்டுது.

எனக்கும் சொல்லுடி. நானும் சிரிக்குறேன்.

மனைவி: ஏங்க காரக்குழம்பு செய்யவா? இல்லை கூட்டு செய்யவா?
கணவன்: நீ முதல்ல சமையல் செய்.  நாம அப்புறமா அதுக்கு காரக்குழம்பா? கூட்டான்னு பேர் வச்சுக்கலாம். 

ஹாஹா நல்லாதான் சிரிக்குற மாதிரி இருக்கு. good joke. Very funny,  ஹா ஹா

என்னங்க மாமா திடீர்ன்னு இங்கிலிபீஷ்ல பேசுறீங்க?

நான் கரஸ்ல படிக்குறேன் புள்ள. அதான் இங்க்லீஷ்ல பட்டம் வாங்க போறேஏன். நீதான் படிக்காத தற்குறி. என்னையும் அப்படியே இருக்க சொல்றியா?

யாரு நானா தற்குறி?

இங்க்லீஷ்ல நான் ஒண்ணு கேட்குறேன் பதில் சொல்லு பார்க்கலாம்.

அடியே என்கிட்டயே சவாலா? கேளுடி டான்னு பதில் சொல்றேன்.

அப்படிங்களா மாமோய்?! அதையும் பார்க்கலாம் 7 லெட்டர்ஸ்  உள்ள  ஒரு இங்கிலீஷ் வார்த்தை. அதுல எந்த ஒரு லெட்டரை எடுத்தாலும் அர்த்தம் மாறாது. அது என்ன வார்த்தைன்னு சொல்லுங்க பார்க்கலாம்.

அதுவா? அது வந்து..., எனக்கு தெரியலை நீயே சொல்லுடி. அப்படி வா வழிக்கு. நான் சொல்றதுக்குள்ள பிளாக்கர்ஸ் யாருக்காவது தெரிஞ்சா சொல்லட்டும்.  ராத்திரி சாப்பாட்டுக்கு ஓட்ஸ்ல எதாவது செய்யட்டுமா?

                            
ஓட்ஸா? ஓட்ஸ்ன்னதும் உன் ஃபிரண்ட் ராஜி ஞாபகம்தான் வருது.

ஏன்? அவளுக்கென்ன?

அவளுக்கொண்ணுமில்லை. நான் ஒருதரம் அவ வீட்டுக்கு போயிருந்தேன். அப்போ அவ, சின்ன பொண்ணு இனியாக்கு 5 இல்ல 6 வயசிருக்கும். அப்போதான் இந்த ஓட்ஸ்லாம் நமக்கு அறிமுகமான டைம். ஓட்ஸ்லாம் சர்க்கரை நோயாளிக மட்டும்தான் சாப்பிடனும்ன்னு பரவலா ஒரு பேச்சு. அதை ராஜி தன் பொண்ணுக்கிட்ட சொல்லி இருப்பா போல.

நான் போயிருக்கும்போது ராஜி தன் பாட்டிக்கு ஓட்ஸ் பொங்கள் செஞ்சு கொடுத்தா. அப்போ அந்த பாட்டி, இன்யாக்கிட்ட கொஞ்சம் பொங்கள் கொடுத்து காக்காவுக்கு வெச்சுட்டு வான்னு சொன்னாங்க. இனியாவும் அப்படியே செஞ்சா. ஆனா, அப்புறம் பாட்டியை பார்த்து ஒரு கேள்வியை கேட்டா பாரு எல்லாரும் சிரிச்சுட்டோம்.

அப்படி என்னதான் கேட்டா மாமா?!

ஏன் பாட்டி உனக்குதான் சுகர் அதனால ஓட்ஸ் சாப்புடுறே. காக்காக்கும் சுகரா? அதனால அதுக்கும் ஓட்ஸ் பொங்கல் வைக்குறியான்னு கேட்டா.

ஹா ஹா இனியா ரொம்ப சுட்டி. இப்படிதான் எதாவது கேட்டு ராஜியை வம்புக்கு இழுக்கும் ஹா ஹா. ஆ ஐயோ.., அம்மா...,
                                      
                                           
ஏன் என்னாச்சு புள்ள?!

ஒண்ணுமில்லைங்க மாமா, பல் வலிக்குது. கடைவாய் பல் சொத்திஅயா இருக்கு. அது ரெண்டு நாளா ரொம்ப வலிக்குதுங்க மாமா. நைட்லாம் தூக்கமே இல்ல.

இதுக்குதான் இனிப்புலாம் சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும், சாக்லேட், கற்கண்டுலாம் கடிச்சு சாப்பிட கூடாது. அதிக குளிர்ச்சி, சூடானதை சாப்பிட கூடாது. சாப்பிட்டபின் வாய் கொப்பளிக்கனும். காலையில எழுந்ததும் பல் துலக்கனும்.  ராத்திரி படுக்க போறதுக்கு முன்னாடி பல் துலக்கனும். வருசத்துக்கு ஒரு முறையாவது பல் டாக்டர்கிட்ட போய் ஆலோசனை கேட்கனும்.

சரிங்க மாமா, அதெல்லாம் இனி கரெக்டா செய்றேன். இப்ப வலிக்குதே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க மாமா. மிளகுத்தூளுல  கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்குறா பல்லுல  தடவி வந்தா வலி குறையும். முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறிச்சு  நல்லா  கடிச்சு  சாப்பிட்டு வந்தாலும் பல் வலி குறையும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தாலும் சொத்தைப்பல் குறையும்.

ஆனா, இதெல்லாம் சும்மா தற்காலிகமாதான் செஞ்சுக்கனும். உடனே மறக்காம பல் டாக்டகிட்ட போய் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும். நான் போய் கழனில மடை திருப்பிவிட்டு வரேன். சாயந்தரமா டவுனுக்கு போய் உன் பல்லை புடுங்கலாம்.

என்னங்க மாமா, இப்படி கிண்டல் பண்றிங்களே!?

சும்மா தமாஷ் பண்ணே புள்ள. சொத்தை பல்லை எடுத்துட்டு வந்துடலாம்.

சரிங்க மாமோய்.நானும் சீக்கிரம் வீடு வேலைலாம் முடிச்சு வைக்குறேன்.