Monday, April 30, 2012

முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்- ஐஞ்சுவை அவியல்

                                              
ஏனுங்க மாமா! நம்ம பக்கத்து வீட்டு பார்வதி பாவமுங்க. சாப்ப்பாட்டுக்கே கஷ்டப்படுதுங்க. அந்த தெய்வம் அவ விசயத்துல கண் தொறக்கலயே.

இதப்பாரு புள்ள, சாமி நேருல வந்து உதவி செய்யாது.கடவுள் மறைமுகதான் செய்யும் அதை புரிஞ்சுக்கிட்டு நாமதான் அதை யூஸ் பண்ணிக்கனும்.

புரியலியே மாமா, சாமியாலதான் எல்லாமே முடியுமே, அவ கஷ்டத்தை ஒரு நொடியில மாத்த முடியாதா மாமா?!

இதப் பாரு புள்ள, எதுவுமே ஈசியா கிடைச்சுட்டா அதுக்கு மரியாதை கிடையாது. அதனாலதான. உன்னை மாதிரிதான் கீரனூர்ல இருந்த முத்து, கடவுள் நேருல வந்து சொன்னாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்ணிக்கிட்டு, எதிர்க்க சாப்பாடை வச்சுக்கிட்டு  உக்காந்துக்கிட்டான்.

மணி 9 ஆச்சு. ஏங்க சாப்பிட வாங்கன்னு அவன் பொண்டாட்டி போய் கூப்பிட்டா. ஏய், நான் என்னடி சொன்னேன். சாமி வந்து ஊட்டினாதான்  சாப்பிடுவேன்னு சொன்னேன்லன்னு சீறினான். எக்கேடோ கெட்டுப் போன்னு போய்ட்டா. மணி 12 ஆச்சு, டேய், சாமிக்கிட்டலாம் சவால் விடாத , ஒழுங்கா சாப்பிடுன்னு அவனை பெத்தவங்க சொன்னாங்க. சே ஒரே ரோதனையா போச்சு, அட்வைசுலாம் பண்ணிக்கிட்டுன்னு சாப்பாட்டை எடுத்துக்கிட்டு பெட்ரூம்ல போய் உக்காந்துக்கிட்டான்.

சாயந்தரம், மணி 4 ஆச்சு பசங்க ஸ்கூலிருந்து வந்து அப்பா சாப்பிடுப்பா அம்மா செஞ்ச உப்புமா நல்லா இருக்குன்னு குழந்தை அவன் வாய்ல உப்புமா ஊட்ட போச்சு. சீ போ அந்தாண்டன்னு சொல்லி சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக்கிட்டு யாருமில்லாத ஏரிக்கரையில போய் உக்காந்துக்கிட்டான். 

ராத்திரி 12 ஆச்சு. அந்த வழியா, கொள்ளையடிச்சுக்கிட்டு  டயர்டா  திருடனுங்க  வந்தானுங்க. அவனுங்களுக்கு செம பசி. சோத்து மூட்டையை பார்த்ததும் அவன்கிட்ட பிடுங்கிக்கிட்டு போய் சாப்பிட உக்காந்தாங்க.

அப்போ, டேய் கபாலி,  கொஞ்சம் பொறுமையா இரு. அவன் எதிர்க்க சோத்து மூட்டையை வச்சுக்கிட்டு உக்காந்துக்கிட்டு இருக்கான், ஒரு வேளை நம்மை பிடிக்க ராசா இந்த சாப்பாட்டுல வெசத்தை வெச்சு இருதா நம்ம கதின்னு சொல்லி, முத்துவை சாப்பிட வற்புறுத்தினாங்க. அவன் மாட்டேன்னு சொல்லி அடம்பிடிசான்.

இதுல ஏதோ சூது இருக்குன்னு முடிவுக்கு வந்து முத்துவை அடிச்சு உதைச்சு சாப்பாட்டை அவன் வாய்ல திணிச்சு சாப்பிட வச்சாங்களாம். முத்துவோட பொண்டாட்டி, பெத்தவங்க, பையன் ரூபத்துல வந்து  சாமி சொல்லிச்சு. அப்பவே அவன் கேட்டிருந்தா முத்து உடம்பு புண்ணாகியிருக்க வேணாமே.

அதுப்போலதான்  பார்வதி கதைதான். பத்தாவது படிச்சிருக்குறவ எதாவது கைத்தொழில் கத்துக்கிட்டு, கவர்ன்மெண்டுல லோன் வாங்கி பொழச்சுக்காம சாமி நேருல வரும்னு காத்துக்கிட்டு இருந்தால் எப்படி புள்ள? திருவள்ளுவரும் திருக்குறள்ல முயற்சி தன் மெய்வருத்த தெய்வம் கூலி தரும்ன்னு சொல்லியிருக்கார்.

நீங்க சொன்னது சரிதானுங்க மாமோய். நானும் பார்வதிக்கிட்ட நல்லவிதமா எடுத்து சொல்றேனுங்க.
                                          

அப்புறம் மாமா, என் செல்போன்ல ஒரு மெசேஜ் வந்திருக்கு. படிச்சதும் சிரிச்சுட்டேன் மாமா

அப்படியா, எனக்கும் சொல்லு புள்ள,

ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி. அதை நான் பேசாத வரை...,
 வீட்டை சுத்தப்படுத்துவதற்காகவே பண்டிகைகளைக் கண்டுபிடித்துள்ளான் தமிழன்.
வெயில் காலத்திற்கும், பனி காலத்திற்கும் ரெண்டே ரெண்டு வித்தியாசம்தான். எப்படா குளிக்க போறோம்ன்னு நினைச்சா வெயில் காலம். ஏண்டா குளிக்க போறோம்ன்னு நினைச்சா அது பனி காலம்ன்னு மெசேஜ் வந்துச்சு மாமா.
ஹா ஹா நல்லா இருக்குடி.

                                           

நான் உன்கிட்ட ஒரு கணக்கு சொல்றேன். தெரியுதான்னு பார்க்கலாம் புள்ள.  
ஹா ஹா மாமா, நம்ம தெருலயே  பால்கணக்கு, வரட்டி கணக்குலாம் வெவரமா நாந்தான் போடுவேனாக்கும்.
அப்பிடியா, யோசிச்சு சொல்லுடி என் செல்லக்குட்டி, ஒருநாள் தன் வூட்டுக்காரனோட  சண்டையிட்டுக் போட்டுட்டு  கோபத்தோட  வூட்டை வுட்டு பொண்டாட்டி நாள் ஒன்னுக்கு ஒரு காதம் (10 மைல்) வீதம் நடந்து போறா. ஏழு நாட்களுக்குப் பிறகு கவூட்டுக்காரன் அவளைத் தொடர்ந்து, புறப்பட்டு நாளொன்றுக்கு ஒன்றரை காதம் வீதம் நடந்து போறான். அவ்விருவரும் எப்போ மீட் பண்ணுவாங்க ?  இருவரும் நடந்த தூரம் எவ்வளவு ?
ஐ கண்டுபிடிச்சுட்டேன் மாமா! 
இருடி,  அவசரப்படாதே அவங்கலாம் என்ன சொல்றங்கன்னு பார்க்கலாம். 
சரிங்க மாமா, 
இன்னிக்கு காணாமல் போன கனவுகள் ராஜி வீட்டுக்கு போனேன். அவங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது அவங்க பையன் செஞ்ச காமெடியை சொல்லி சொல்லி சிரிச்சாங்க.
என்னன்னு சொன்னா நானும் சிரிப்பேனே புள்ள, 
ராஜி குடும்பமும், அவங்க அண்ணன் குடும்பமும் எந்திரன் படத்துக்கு போய் இருக்காங்க. போய்ட்டு வீட்டுக்கு வந்ததும் அவங்க அண்ணன் பையன் ஒரு கேள்வி கேட்டானாம். அவங்க ஷாக்காகி நின்னுட்டாங்களாம்.
அப்படி என்ன புள்ள கேட்டானாம்?
எலக்ட்ரானிக்ஸ் சாமான்லாம் தண்ணில விழுந்த கெட்டு போகுது. ஆனா, எந்திரன்ல ’சிட்டி’ மட்டும் மழைல நனையுது, தண்ணில குதிக்குது ஆனா, அது கெட்டு போகலியே எப்படின்னு கேட்டு ராஜியை நிலைகுலைய வச்சிருக்கான் மாமா.
            
ஹா ஹா நல்லாதாண்டி கேட்டிருக்கான். அப்புறம். நம்ம மரத்துல முருங்கக்காய் நிறைய காய்ச்சிருக்கு. அக்கம் பக்கட்துல இருக்குறவங்களுக்கு குடுத்துட்டு மிச்சத்தை அப்படியே ஃபிரிட்ஜ்ல வெக்காம, காயோட தோள் எடுத்து சின்ன சின்னதா வெட்டி, பிளாஸ்டி க் கவர்ல போட்டு ஃப்ரிட்ஜ்ல வெச்சா ஒரு வாரம் வரைக்கும் கெடாது.  குருமாக்கும், சிக்கன் குழம்புக்கும் தேங்கா அரைச்சு ஊத்துவே தானே.  அதுல தேங்காயை குறைச்சுக்கிட்டு பாதாம் பருப்பை சேர்த்துக்கிட்டா, ருசியும் நல்லா இருக்கும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகும், ரிச்னசும் வரும்டி. சின்ன புள்ளைகளுக்கு  சோம்பை பொடி செய்து தேனில் கலந்து 21 நாள் சாப்பிட்டு வந்தா ஞாபக சக்தி வருமாம் புள்ள. 

சரிங்க மாமா, துணி துவைக்கனும், வீட்டை கூட்டனும் வேலை நிறைய இருக்கு நான் வாரேன் மாமோய். 


22 comments:

  1. ஐஞ்சுவை அவியல் அமர்க்களமாக இருக்கே.

    ReplyDelete
  2. //எலக்ட்ரானிக்ஸ் சாமான்லாம் தண்ணில விழுந்த கெட்ட் போகுது. ஆனா, எந்திரன்ல சிட்டி மட்டும் மழைல நனையுது, தண்ணில குதிக்குது ஆனா, அது கெட்டு போகலியே எப்படின்னு கேட்டு ராஜி நிலைகுலைய வச்சிருக்கான் மாமா.//

    அஹா அவன் என்னை போல புத்திசாலின்னு நினைக்கிறன்

    ReplyDelete
  3. அவியல்...சுவை...தூக்கலா உப்பு ( சி பி ) க்காக வெயிட்டிங்...

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி
    நலமா?
    நீண்ட இடைவெளி..
    விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளதால்
    வலையுகம் பக்கம் வர முடியவில்லை..

    இன்றைய புதிருக்கு விடை..210 வது மைல் தொலைவில் சந்திப்பார்கள்
    என்பது சரியான விடை என நினைக்கிறேன்..
    மனைவி சென்ற பிறகு பதினான்கு நாட்கள் கழித்து சந்திப்பார்கள்..
    கடந்த தொலைவு.. 210 மைல் ..

    இனிய ஐஞ்சுவை
    மணக்கிறது சகோதரி...

    ReplyDelete
  5. அற்புதமாய் சுவைக்கிறது ஐஞ்சுவை அவியல்..

    கைவண்ணத்துக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இன்றைய அவியலும் சூப்பர் அக்கா..

    ReplyDelete
  7. அட, இந்த அவியலை நீ பிரஸன்ட் பண்ணின விதம் ரொம்பவே நல்லா இருக்கும்மா. விடாம புடிச்சு்கோம்மா.

    சாப்பிட மறுத்த அந்த பக்தனின்(?) கதை அருமை. புதிர்..? மகேன் சொன்னது சரியா இருககும்னு நம்பறேன். ஹி... ஹி... உங்களை விட குழந்தைங்க புத்திசாலிங்களாத் தேங் இருக்குது! தொடரட்டும் அவியல் அமர்க்களம்!

    ReplyDelete
  8. அவியல் செம டேஸ்ட்.
    நன்றி

    ReplyDelete
  9. அவியல்... அமர்க்களமான சுவையோட இருக்கு சகோ....

    பக்தனின் கதை படித்து நல்ல விஷயம் தெரிந்து கொண்டேன்.... :)

    பசங்க பசங்க தான்... நமக்கு சிட்டி பத்தி இப்படி யோசிக்க தெரியல பாருங்க! :)

    தொடரட்டும் பகிர்வுகள்...

    ReplyDelete
  10. செல்போன் மெசேஜை ரசித்தேன்.

    ReplyDelete
  11. சிரித்தேன்., சிந்தித்தேன் ...!

    ReplyDelete
  12. கதை நன்றாக இருக்கிறது வழக்கம் போல......உங்களுக்கு வந்த SMS யை இன்னொரு ஆன்லைனில் வேறு ஒரு இடத்தில் படித்தேன். படித்ததும் சிரிப்பு வந்தது எப்படிதான் இப்படியெல்லாம் சிந்திக்கிறார்களோ.....எந்திரன் கமெண்ட எவ்வளவு கோடி பணம் போட்டு எடுத்தாலும் சரியாக கவனிக்காமல் விட்டதால் அது சிரிப்புக்கு ஆழாகிவிடுகிறது மொத்ததில் பதிவு படிக்க நன்றாக இருக்கிறது.

    போன பதிவில் நீங்கள் சொன்ன கதையை என் மகளுக்கு சொன்னேன் அவளுக்கும் பிடித்திருந்தது . நன்றி

    ReplyDelete
  13. இரசிக்கும்படி இருந்தது அனைத்துமே!
    நன்றி!

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  14. அவியல் சிந்திக்க வைத்தது

    ReplyDelete
  15. >>>சரிங்க மாமா, துணி துவைக்கனும், வீட்டை கூட்டனும் வேலை நிறைய இருக்கு நான் வாரேன் மாமோய்.

    இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக்ஸ். இந்த வேலை எல்லாம் ஆம்பளைங்க தானே செய்வாங்க?

    ReplyDelete
  16. அவியல் அருமை...

    ReplyDelete
  17. சுவையான அவியல்.

    முதல் கதை நகைச்சுவை போல தெரிந்தாலும் மிக உயர்ந்த கருத்தை கொண்டுள்ளது சிறப்பு.

    ReplyDelete
  18. அவியலின் சிறப்பே சுவையும் சத்தும்தான்
    இந்த அவியலிலும் இந்த இரண்டும் மிக மிக அதிகம்
    தொடர்ந்து தர வேண்டுகிறேன்
    மனம் கவர்ந்த பயனுள்ள பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete