Tuesday, July 11, 2017

பூமியின் கற்பக விருட்சம் எது தெரியுமா?! கிச்சன் கார்னர்



 முருங்கைமரம் வைத்தவன் பசியோடு தூங்கமாட்டான்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க. ஏன்னா, சீசனில்லாத போதும் ஒன்னிரண்டு காய் காய்க்கும். காய் இல்லாதபோது முருங்கைகீரையை சமைச்சு சாப்பிடலாம். முருங்கை மரத்துக்கு கற்பகத்தருன்ற பேருமுண்டு.   முரின்னா ஒடிதல்ன்னு அர்த்தம். சீக்கிரம் ஒடியக்கூடிய கிளைகளை கொண்டதுன்னு பொருள்படத்தான் முருங்கமரம்ன்னு சொல்றோம்.  அனைத்து நிலத்திலும் இந்த முருங்கை வளரும் தன்மைக்கொண்டது. தண்ணியில்லாத காட்டிலும், வெப்பம் அதிகமுள்ள இடத்திலும் இம்மரம் செழித்து வளரும்.  முருங்கையின் பூர்வீகம் இமயமலை அடிவாரத்து பின்னிருக்கும் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவுக்கு போய் கடைசியா இந்தியாவுக்கு வந்தது.  ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில்தான் அதிகளவு பயிரிடப்படுது. இலங்கையிலும், தாய்லாந்து, தைவானிலும் பயிரிடப்படுது. 



பயிரிடப்பட்டதிலிருந்து ஆறு மாசத்திலிருந்து ஒரு வருசத்துக்குள் காய் காய்க்கும் தன்மைக்கொண்ட முருங்கை யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கைnனு பேர்ல காய்க்குது. முன்னலாம் அரை அடி நீளத்துல இருந்த முருங்கை இப்பலாம் ஒன்னரை அடி நீளத்துலயும் கிடைக்குது. இலை, பூ, காய், பட்டை, வேர்ன்னு அத்தனையும் மருத்துவ குணம் வாய்ந்தது. 



,முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள்,   தாது உப்புக்கள் இருக்கு. காய் மற்றும் இலைகளில் வைட்டமின் சி அதிகளவு இருக்கு. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக்அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின், இரும்புசத்து, பொட்டாசியம் இருக்கு. கொழுப்பு சத்து துளியும் இல்லாதது இதன் சிறப்பு/ பொரியல், காரக்குழம்பு, சாம்பார்,பிரட்டல், சூப், கூட்டுன்னு அத்தனை விதமாய் இதை சமைக்கலாம். 

மருத்துவ பயன்பாடு....

முந்தானை முடிச்சு படத்துக்குப்பின் முருங்கையின் பயன்பாடு ’அது’ ஒன்னு மட்டும்தான் எல்லாருக்கும் தெரியும். அது ஓரளவுக்கு உண்மையாயிருந்தாலும் இன்னும் ஏகப்பட்ட மருத்துவ பலன் உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  முருங்கைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் இதிலிருக்கும் கால்சியம், இரும்புசத்துலாம் பெண்ணின் கருப்பையை வலுப்படுத்தி குழந்தைப்பிறப்பை  துரிதப்படுத்தும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். இலையின் சாறு விக்கல் போக்கும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவ நல்ல பலன் கிடைக்கும். மஞ்சள், உப்பு சேர்த்து வதக்கி கட்டி உள்ள இடத்தில் இளஞ்சூட்டில் வைத்து கட்டினால் கட்டி பழுத்து உடையும்.  கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்கும்.தாய்ப்பாலை ஊறவைக்கும்.



முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாத்திரத்தில் இரவு முழுதும் வைத்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும்.  ஆஸ்துமா, மார்ச்சளி, சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

இத்தனை மருத்துவ குணம் கொண்ட முருங்கக்கீரையில செஞ்ச பொரியல் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்...
முருங்கைக்கீரை, 
வெங்காயம்,
பூண்டு,
காய்ந்த மிளகாய்,
கடுகு, 
உளுத்தம்பருப்பு,
கடலை பருப்பு
எண்ணெய்
துவரம்பருப்பு

முருங்கைக்கீரையை பழுத்தது, பூச்சிலாம் இல்லாம ஆய்ஞ்சுக்கோங்க.. துவரம்பருப்பை வேகவச்சுக்கோங்க. நல்லா வெந்திருக்கனும்,. ஆனா குழையக்கூடாது. 

வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடுகு போட்டு பொரிஞ்சதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க விடுங்க. 


நசுக்கின பூண்டு, காய்ஞ்ச மிளகாய் சேர்த்து சிவக்க விடுங்க.

வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க..


தண்ணி கொதிச்சதும் முருங்கைக்கீரை சேர்த்து கிளறி விடுங்க. 


கீரை கொஞ்சம் வதங்கினதும் உப்பு சேருங்க. முதல்லியே உப்பு சேர்த்தா கீரைல உப்பு இறங்கி உப்பு கரிக்கும். 



கீரை வெந்ததும் வேக வெச்ச துவரம்பருப்பை சேருங்க.  தேங்காய் துருவல் சேர்த்தா சத்து கூடும். சுவையும் நல்லா இருக்கும். இதேமாதிரி பக்குவத்துல கீரைல துவரம்பருப்புக்கு பதிலா வறுத்த வேர்க்கடலை, எண்ணெயில் வதக்கிய மிளகாயோடு பூண்டு சேர்த்து கொரகொரப்பா அரைச்சு சேர்த்தா வாசனையாவும் ருசியாவும் இருக்கும்.


அகத்தி வேகாம கெடுத்தது, முருங்கை வெந்து கெடுத்ததுன்னு ஒரு பழமொழி உண்டு. அதனால, முருங்கைக்கீரையை அதிகம் வேகவிடாதீங்க. குக்கர்ல வேகவைக்காதீங்க.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465975

நன்றியுடன்,
ராஜி.

25 comments:

  1. முருங்கையின் பயன்கள் ..அளவிடமுடியாதது...

    எனக்கு மிகவும் பிடித்த கீரை...ஆனால் இங்கு கிடைக்காது ..

    ReplyDelete
  2. எங்கள் வீட்டில் செய்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. நல்லதுப்பா. அடிக்கடி உணவில் கீரைகள் சேர்த்துக்குறது நல்லதுப்பா

      Delete
  3. ’முருங்கைக்கீரை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது பழமொழி’ன்னு எங்கேயோ படிச்சேன்.

    நல்ல பயனுள்ள பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  4. எங்கள் வீட்டில் மரம் உண்டு. எனவே சமைப்பதும் உண்டு...முருங்கையின் பயன்கள் நிறைய...

    கீதா: பிடிக்கும். கிடைக்கும் போது செய்வதுண்டு. வேர்க்கடலை பொடித்துப் போட்டும் செய்வதுண்டு. சில சமயம் துவரம்பருப்பிற்குப் பதிலாக பாசிப்பருப்பைச் சேர்த்தும் செய்ததுண்டு. உங்கள் குறிப்பையும் குறித்துக் கொண்டேன்...

    ReplyDelete
    Replies
    1. பாசிப்பருப்பு சேர்த்தா கூட்டு.

      Delete
  5. அந்த கசப்பு சுவையே தனி...

    ReplyDelete
    Replies
    1. முருங்கைக்காய் எனக்கு பிடிக்காதுண்ணே. மென்னு திங்க சோம்பேறித்தனம்தான்

      Delete
  6. ஒரே ஒரு சந்தேகம் இதையும் ஆராய்ந்து தீர்த்து விடுங்கள்

    //முருங்கையின் பூர்வீகம் இமயமலை அடிவாரத்து பின்னிருக்கும் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவுக்கு போய் கடைசியா இந்தியாவுக்கு வந்தது.// சரி


    //முருங்கை யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கைnனு பேர்ல காய்க்குது. //
    யாழ்ப்பாணமும் சாவகச்சேரியும் வட இலங்கையில் உள்ளது. அப்போ ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முருங்கைக்கு இந்தப் பெயர்கள் எப்படி வந்தது?

    ReplyDelete
    Replies
    1. ஏங்க... முருங்கைக்காய்ல நான் பி.ஹெ.டி பண்ணலைங்க சகோ. படிச்சதையும் தெரிஞ்சதையும் பகிர்ந்துக்குறேன் அம்புட்டுதான்.

      ஊர் சுத்துற கழுதைக்கு தெருவுக்கு நாலு பேரு இருக்கத்தான் செய்யும்.

      Delete
  7. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ

      Delete
  8. #இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம்#
    காற்று கொஞ்சம் வேகமா அடித்தாலே ஒடிந்து விடும் முருங்கைக்கு இவ்வளவு சக்தியா :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  9. த ம வாக்களித்தால் ,மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்றே வருகிறதே ....ஒரு வேளை, இதற்கு மொய் பெறாமல் மொய் செய்யாதே என்று அர்த்தமா :)

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு வேணும்ன்னா மொய்க்கு மொய்ன்னு செட்டிங்க்ஸ்ல இருக்கலாம்/ இங்க அப்படி இல்ல. த.ம ஏதோ பிரச்சனை போல

      Delete
  10. நெய்வேலியில் இருந்தவரை நிறைய சாப்பிட்டதுண்டு. அம்மா கைப்பக்குவத்தில் முருங்கைக்காய், கீரை என இரண்டிலும் விதம் விதமாய் சாப்பிட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முருங்கைக்காய் சாம்பார்ன்னா தெரு முழுக்க வாசம் பரவுமே

      Delete
  11. முருங்கைக்கீரை இறைவன் தந்த வரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் கீதாக்கவும் இரண்டு பாகங்களாக இதன் பயன்களையும் சமையல் குறிப்புகளையும் தந்திருந்தார். எங்கள் மரத்தில் முருங்கைப் பூ கொஞ்சமாகவே கிடைப்பதால் அதை மட்டும் எடுத்து சமைக்க மனம் வருவதில்லை. காயாகட்டுமே என்று விட்டு விடுவது வழக்கமாகிறது!

    ReplyDelete
    Replies
    1. கீரை ஒடிக்கும்போது பூக்கள் இருந்தால் எடுத்து போட்டுடாம சமைங்க சகோ

      Delete
  12. முருங்கையில் இவ்வளவு விசயம் இருந்தாலும் பாக்கியராஜ் சொன்ன விசயமே மக்களிடம் விரைவாக சென்றடைகிறது எல்லாம் மக்களின் விழிப்புணர்வு.
    த.ம

    ReplyDelete
    Replies
    1. முருங்கையில் ஆயிரத்தெட்டு மருத்துவப்பலன் இருக்கும்போது பாக்கியராஜ் சொன்னது மட்டும்தான் எல்லாத்துக்கும் நினைவிலிருக்கு

      Delete