Wednesday, October 03, 2018

திருவலம் ராஜேந்திரா பாலம் - மௌன சாட்சிகள்

வெளிநாட்டில் எதாவது வித்தியாசமான இடங்களை பார்த்தால்  சினிமா ஷூட்டிங்க் எடுக்க கிளம்பிடுறாங்க. அதுமாதிரியான வித்தியாசமான, அதிசயமான இடங்கள் நம்மூரில் பல உண்டு.  நாமதான் உள்ளூர் பொருளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டோமே!. வெளிநாட்டு பொருள்ன்னாலே நமக்குலாம் ஒரு கிக்தான். 
இந்த பாலம்  கொல்கத்தாவின் ஹவுரா பாலத்துக்கு முன்னோடி. மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஹவுரா நகரையும், கொல்கத்தாவையும் இணைக்கும் வகையில் கடந்த 1938ம் ஆண்டு கங்கை நதியின் கிளை நதியான ஹூக்ளி நதியின்மீது கட்டப்பட்ட ஹவுரா இரும்பு பாலம், திருவலம் ராஜேந்திரா பாலத்தின் தொழில்நுட்பத்துடன், திருவலம் பாலத்தை கட்டிய தாராப்பூர் இன்ஜினியரிங் நிறுவனத்தால் கட்டப்பட்டது.  அந்த வகையில் ஹவுரா பாலத்துக்கு திருவலம் இரும்பு பாலம் முன்னோடி இந்த ராஜேந்திரா பாலம்ன்னு சொல்லலாம்.

வேலூர் மாவட்டத்தில் இருக்கு திருவலம்ன்ற ஊர். இந்த திருவலம் ஊரை பொன்னையாறு பாய்ந்து அழகு சேர்க்குது. இந்த பொன்னையாற்றின்மீது  கட்டப்பட்டு 77 ஆண்டுகளை கடந்தும் கம்பீரத்தை தொலைக்காம, அதேப்பொலிவுடன் நிக்குது.  சுதந்திரத்துக்கு முன்னாடியே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதாலயும், நிறைய சினிமாக்களில் நடிச்சிருக்குறதாலயும்,  இந்த இரும்பு பாலத்தை நினைவுச்சின்னமாக போற்றி பாதுகாக்கனும்ன்னு கோரிக்கை  எழுந்திருக்கு.அப்போதைய சென்னை ராஜதானியில் சென்னை-பெங்களூரு இடையே செல்லும் நெடுஞ்சாலையில் திருவலம் பொன்னையாற்றின் குறுக்கே பாலம் கட்ட அப்போதைய பிரிட்டிஷ் இந்திய அரசு திட்டமிட்டது.

பாலத்தை கட்டனும்ன்னு முடிவானதும் கட்டுமான பணியை சென்னையை சேர்ந்த தாராப்பூர் இன்ஜினியரிங் கம்பெனி கடந்த 1935ம் ஆண்டு தொடங்கியது. 1939ம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இப்பணியை தாராப்பூர் இன்ஜினியரிங் கம்பெனியின் தலைமைபொறியாளர் ராபர்ட் எம்பர்சன் மேற்கொண்டார். 
இப்பாலம் பொன்னையாற்றின் குறுக்கே சாய்வு வடிவ இரும்பு தூண்களை கொண்டு பாதுகாப்பான முறையில் துல்லியமாக அமைக்கப்பட்டது. அரை கிலோ மீட்டர் நீளமுள்ள திருவலம் இரும்பு பாலம் கட்டுவதற்கு 10 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டதாம். 4 ஆண்டு காலம் நடந்த இந்த பாலம் கட்டுமான பணியில் 1200 தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். பாலங்களை இணைக்க 2 லட்சம் இரும்பு ஸ்குரூக்கள் பயன்படுத்தி பொருத்தப்பட்டுள்ளதாம். 
பல தேசிய தலைவர்கள் இந்த பாலத்தை கடந்துள்ளனர்.  திருமுருக கிருபானந்த வாரியார் தனது சொந்த ஊரான காங்கேயநல்லூருக்கு வரும்போது இந்த வழியாகத்தான் வருவாராம். இந்த பாலத்திலிருந்துதான் வேலூரின் காட்பாடி நகராட்சி ஆரம்பிக்குது. காங்கேயநல்லூர் காட்பாடி நகராட்சிலதான் வருது. அதனால், தன் சொந்த ஊரின் எல்லையை காரிலிருந்து இறங்கி தொட்டு கும்பிட்டுதான் போவாராம்.
தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்பட கதாநாயகர்களான சிவாஜிகணேசன், எம்ஜிஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், அசோகன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலரின் திரைப்படங்களில் இந்த பாலம் வந்திருக்கு.  ஆட்டுக்கார அலமேலு திரைப்படத்தில் சிவகுமாரும், ஜெய்கணேஷூம் மோதிக் கொள்ளும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி இங்கதான் படமாக்கி இருக்காங்க. இதுதவிர பாலிவுட், மல்லுவுட் படங்களிலும் இந்த பாலம் வந்திருக்குதாம்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் "வல்லவ இராயர்கள்" ஆட்சி புரிந்த பகுதிக்கு தலை நகரமாக  "வல்லம்"ன்ற ஊர் இருந்திருக்கு. இது  பொன்னை ஆற்றங்கரையில் இருக்கு. இந்த ஊரில் ஆலமரங்கள் உள்ள வழிபாட்டு தளத்தில் தினமும் திருஞானசம்பந்தரால் வலம் வந்து பாடப்பெற்றத் திருத்தலத்திற்கு அவர் காலத்தில் திருவல்லம் என அழைக்கப்பட்டு நாளடைவில் திருவலம் என அழைக்கப்படுது...

நாலு வருடத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் திரு.திருபுவனம் பொறியாளர் தலைமையில் பாலத்தின் உறுதித்தன்மையும் மற்றும் அதிகபட்ச எடை தாங்கும் தன்மையும் சோதிக்கப்பட்டது.  எப்படி சோதித்தார்கள் தெரியுமா?!
ஆட்டுக்கார அலமேலு படத்தின் கிளைமேக்ஸ் காட்சி.
விடியோ தொடங்கி 1.15 நிமிசத்துல பாலம் படத்துல வரும்....
பாலத்தை சுற்றி இருக்கும்  பல கிராமங்களை சேர்ந்த மக்கள் அழைத்து வரப்பட்டு,  வந்த அத்தனை பேரையும், ஆடு மாடு உள்பட அவர்களின் எடைதனை குறித்துக்கொண்டு,  பாலத்தின் உள்ளே அனுப்பி பாலம்முழுவதும் மக்களால்  நிறைக்கப்பட்டு, பின் பாலத்தின் அதிக பட்ச எடை தாங்கும் தன்மை சோதிக்கப்பட்டது!! இப்படி பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட அனைவருக்கும்  தலா எட்டு அனா பைசா கூலியா கொடுத்தாங்களாம்!  அந்த எட்டு அனாவை கூலியா வாங்கி வந்து ஒருவர் தன் குடும்பம் முழுமைக்கும் இனிப்பு வாங்கி கொடுத்ததாக பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துள்ளார்.
தமிழ்ல உதயம் NH4 படத்தின் காட்சி கிடைக்கலை. விடியோ தொடங்கி சரியா 2.27 நிமிசத்துல  பாலம் வரும்.

இப்படி வரலாற்று சின்னமாய் இருக்கும் இந்த ராஜேந்திரா பாலம் என்பதை ஆண்டு காலத்தை நிறைவு செய்து,  இப்போது நூற்றாண்டை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கு. கருப்பு வெள்ளை படம் தொடங்கி, இன்றைய HD தொழில்நுட்பம் வரைக்கும் நடிச்சிருக்கு இந்த பாலம். சில வருடங்களுக்கு முன் வெளியான உதயம் NH4 படத்திலும் இந்த பாலம் நடிச்சிருக்கு.




 இத்தனை காலம் கம்பீரமா, கெத்தா நின்னிட்டிருந்த இந்த பாலம். கடந்த பத்து ஆண்டுகளாக மணல் கொள்ளை மற்றும் ஆக்கிரமிப்புகளால் அடிவாரம் ஆட்டம் காண ஆரம்பிச்சிருக்கு. மணல் அள்ளுவதனால் உண்டாகும் வெற்றிடத்தாலும், பாலத்தின் உயரத்தையும், உறுதித்தன்மையையும் கருத்தில் கொள்ளாமல் பாலத்தின்மீது போகும் கனரக வாகனங்களினாலும் இந்த பாலம் ஆட்டம் காண ஆரம்பிச்சிருக்கு. இனியாவது அரசாங்கம் சுதாரிச்சு மிச்சமிருக்கும் பாலத்தை காப்பாத்துமான்னு இங்க இருக்கும் மக்கள் கவலைப்படுறாங்க. மனுக்கள் கொடுத்தும் போராடியும் ஆட்சியாளர்களின் பார்வை இந்த பாலத்தின்மீது படலை. தனது நூற்றாண்டு விழாவினை கண்குளிர கண்டு ரசிப்போமா?! இல்ல அதுக்கு முன்னமயே காயலான் கடைக்கு போய் சேருவோமான்னு தன் நிலையை மௌனமா நொந்திக்கிட்டிருக்கு இந்த பாலம்.

சென்னை டூ வேலூர் (பெங்களூர்) போறவங்க. திருவலம் வழியா வந்தால் இந்த பாலத்தை கடந்துதான் போகனும்.

படங்கள் உதவி முகநூல் சகோதரர் கவின்மொழி வர்மன், மற்றும் திருவலம் முகநூல்  பக்கம்.

நன்றியுடன்,
ராஜி.

22 comments:

  1. தகவல்கள் அருமை சகோ காணொளி இணைப்பு ஸூப்பர்.

    ReplyDelete
  2. மணல் கொள்ளையால் இப்படி புதிய ஆபத்தெல்லாம் வருகிறதா? அநியாயம் பாருங்கள்.

    புதிய தகவல்கள். சுவாரஸ்ய தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது மட்டுமா இன்னும் பல விசித்திரமான விளைவுகளை இந்த மணல் கொள்ளை ஏற்படுத்தும் பாருங்க.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Replies
    1. யாருக்கு தெரியும்?! ஃபேஸ்புக்ல தேடும்போது கிடைச்சுது. சுட்டுக்கிட்டு வந்திட்டேன்

      Delete
    2. ஹா... ஹா.. ஹா... ஒரு நன்றி சொல்ல வேண்டாமோ...

      Delete
  5. தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு : உள்ளுர் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் / கானா / ஆல்பம் சாங்க் / குறும்படம் / விரைவில் தொடங்க இருக்கும் எங்கள் நிறுவனத்திற்கு நடிகர் / நடிகைகள் தேவை… வயது வரம்பு இல்லை / பணம் தேவையில்லை / திறமை மட்டும் போதும் இருந்தால் வாட்ஸ் அப் செய்யவும் : 9600991199

    ReplyDelete
    Replies
    1. நடிச்சா ஹீரோயினாதான் நடிப்பேன். வசதி எப்படி?! கேரவேன் வேணும், நான் சொல்லும் க்டையில்தான் சாப்பாடு வாங்கனும்.ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவேன். காஸ்ட்யூம்லாம் என் செலக்‌ஷந்தான் மேக்கப் என் பொண்ணு போட்டுடும், அதுக்கு தனி சார்ஜ் கொடுக்கனும். இதுலாம் ஓகேன்னா சொல்லுங்க வாரேன்.

      Delete
  6. படங்களும் பகிர்வும் அருமை

    ReplyDelete
    Replies
    1. படம்லாம் சுட்டதுண்ணே

      Delete
  7. அடுத்த முறை அந்த ஊர்ப்பக்கம் செல்லும்போது திருவலம் அவசியம் செல்வேன். பெருமைப்படவேண்டிய செய்தியைப் பகிர்ந்த விதம் அருமை. வழிபாட்டு தளத்தில்.....என்றுள்ளதே, அது வழிபாட்டுத் தலத்தில் என்றல்லவா இருக்கவேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு மிஸ்டேக்தானே?! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கப்பா!.

      ஒருமுறைக்கு இருமுறை பதிவை படிச்சு பார்க்காம பதிவை போட்டுட்டு எப்படிலாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு.

      Delete
  8. படங்களும் பகிர்வும் அருமை அக்கா..

    ReplyDelete
    Replies
    1. படங்கள்லாம் சுட்டது சகோ

      Delete
  9. துளசி: பாலம் பற்றிய படங்களும் தகவல்களும் புதியவை அறியாதது. அருமை.

    கீதா: அக்கருத்துடன்...மணல் கொள்ளை எப்படி பாருங்க ஒரு பாலத்தையே ஆட்டம் காண வைக்குது. மோசம் இல்லையா...வேலூரில் இந்த ஆற்றில் தான் மணற் கொள்ளை இடையில் செய்தியில் கூட வந்துச்சுல்ல..?

    ReplyDelete
    Replies
    1. வேலூரில் ஓடுவது?! பாலாறு கீதாக்கா. பாலாற்றின் துணை நதியான பொன்னையாறு. அதுலதான் இந்த பாலம். 7வது படத்தில் இன்னொரு பாலத்திலிருந்து எடுத்த படத்தில் என்ன ஆறுன்னு தெரியும் பாருங்க

      Delete
  10. பாலம் என்றவுடன் நினைவுக்கு வருவது எங்கள் ஊரில் கிருஷ்ணராஜபுரம் அருகே இருக்கும் பாலம்தான் மேலும்புனலூரில் நான்கண்ட பாலமும் வியக்க வைத்தது

    ReplyDelete
  11. எங்கள் ஊரான இராணிப்பேட்டைக்கு மிக அருகில் உள்ளது திருவலம். பலமுறை கால்நடையாகவே மாணவப்பருவத்தில் இந்தப் பாலத்தைச் சென்று கண்டதுண்டு. காரணம் அப்போது வைஜயந்திமாலா நடித்த படம் 'பெண்' இங்கு படமாக்கப்பட்டது. 'அகில பாரதப் பெண்கள் திலகமாய் அவனியில் வாழ்வேன் நானே' என்ற பாடலில் அவர் குதிரைமீது ஏறி இந்தப் பாலத்தைக் கடந்து செல்வார். அப்போது அங்கு பயணித்த ஒவ்வொருவரும் தானே குதிரையில் வைஜயந்திமாலாவோடு சவாரி செய்வதாகக் கனவு கண்டதுண்டு. நீங்களும் கேளுங்கள் அந்தப் பாடலை:

    https://www.youtube.com/watch?v=E0zYEnfEaGE

    55 வருட ஞாபகங்களைக் கிளறிவிட்டீர்கள் சகோதரி!

    -இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete