1997ம் வருசத்துல அரவிந்தன்ன்னு ஒரு படம் சரத்குமார், பார்த்தீபன், நக்மா, ஊர்வசி நடிப்புல வந்துச்சு. அதுக்கு இசை, இளையராஜா பையன் யுவன்சங்கர்ராஜான்னு ஒரு புது பையன் அறிமுகம். அவன் என்னத்த பெருசா இசை போட்டுடபோறான். சொத்துக்குலாம் பினாமி இருக்க மாதிரி இளையராஜாவின் இசைக்கு இந்த பையன் பினாமி.அம்புட்டுதான்ன்னு மக்கள் பேசிக்கிட்டது இன்னமும் நினைவிலிருக்கு. நக்மா-சரத்குமார் பாட்டுங்க ஹிட் அடிச்சதுக்கு காரணம் நக்மாவின் கவர்ச்சியும், அவங்க ரெண்டு பேருக்குமிடயே ஓடிக்கிட்டு இருந்த லவ்ஸ்தான்.
ஆனா, அதே படத்தில் சத்தமில்லாம ரொம்ப ஹிட் அடிச்ச பாட்டு.. ஈரநிலா... விழிகளை மூடி...ன்னு சரத்குமாரும், ஊர்வசியும் ஜோடியா வரும் பாட்டு. இந்த யுவன்சங்கர் ராஜா அறிமுகமாகும்போது அவருக்கு 16 வயசு. அந்த வயசில், இந்த மாதிரியான மெச்சூர்ட் மெலடியா?! போட்டாரான்னு எல்லாரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இந்த பாட்டில் எடுத்த எடுப்பிலேயே புல்லாங்குழல் இசையால் நம்மை கட்டிப்போட வச்சு, போகப்போக தன் அப்பாவை போலவே காலத்துக்கும் ரசிக்க வைக்கும் மெலோடி பாடலை கொடுத்தார். அதுவும் இடையிசை முடிந்து, சரணம் ஆரம்பிக்கிற இடைவெளியை கேட்கும் காதுகளுக்கு வெற்றிடத்தை உணராமல் பாடலை டிரான்ஸ்ஃபர் செய்யனும். இந்த பாடலின் எந்த இடத்திலும் ஃபார்வார்ட் பட்டனை தேடாம வச்சதுலயே யுவன், இளையராஜாவின் வாரிசுன்னு நிரூபிச்சுட்டார்.
இளையராஜாவைதான் இந்த படத்துக்கு புக் பண்ண போனேன். வரவேற்பரையில் இருக்கும்போது கிரிக்கெட் விளையாடிட்டு அழுக்கு டிரஸ்ஸோட யுவன் அங்க வந்தாப்ல. ‘என்னப்பா.. என்ன பண்றதா உத்தேசம்?”ன்னு சும்மா பேச்சுக்குடுத்தேன். வடிவேலு வசனம் வருமே! அதுமாதிரி நீ வேணும்ன்னா ‘ஒரு பேங்க் ஒண்ணு கட்டி விடுங்க.. நடத்தறோம்’னு.. சொல்வாப்ல. அதே மாதிரி, ஒரு படம் குடுங்க. இசையமைக்குறேன்னு சொன்னாப்ல.நான் வாய்ப்பு தரேன், பேச்சு மாறக்கூடாது. நீ சொன்னது நிஜம்தானேன்னு திரும்ப கேட்டேன். ஆமான்னு யுவன் சொல்லவும், அப்ப அங்க ராஜா சார் வரவும் சரியா இருந்துச்சு. ‘அய்யய்யோ அப்பாகிட்ட சொல்லிடாதீங்கன்னு சொல்லிட்டு உள்ள யுவன் ஓடிட்டார். ராஜாகிட்ட விஷயத்தைச் சொன்னதும் ‘அதான் பண்றேங்குறானே.. அவனையே வெச்சுப் பண்ணுங்க’ன்னார். நெசமா சொல்றாரானு டவுட்டோட பார்த்தேன். ’நெஜமாத்தான்யா சொல்றேன். யுவனை அறிமுகம் பண்ணது நீங்கங்கற பேர் உங்களுக்கு காலத்துக்கும் நிக்குற மாதிரி வருவான் பாருங்க’ன்னார். மறுநாளே, ஸ்டூடியோவுக்கு யுவன் வந்தாப்ல. மைக் உயரம்கூட இல்ல. ரெண்டு நாள்ல அத்தனை பாட்டுக்கும் இசையமைச்சு கொடுத்துப்ல! அவங்கப்பா மாதிரியே அத்தனை டெடிகேஷன். அன்னிக்கு அவங்கப்பா சொன்ன அந்த வார்த்தை இன்னிக்கு நிஜமாகிடுச்சு! யுவன் சங்கர் ராஜா அறிமுகமான கதையை அம்மா கிரியேஷன்ஸ் சிவா சொன்னது.
ஊர்வசி சிறந்த நடிகைன்றதுல சந்தேகமே இல்ல. ஆனா, 1990களில் வெகுளியா, கொஞ்சம் லூசுத்தனமான கேரக்டர் படத்துல இருக்கா?! ஊர்வசியை புக் பண்ணுங்கன்ற அளவில்தான் அவர் படங்கள் இருந்துச்சு. ஊர்வசியை பழையபடி நடிக்க வச்சது இந்த படம். படம் ஹிட் அடிக்கலைன்னாலும் யுவனுக்கு வெற்றிப்படம்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே!
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே!
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ...
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்..
நீருக்கு நிறம் ஏது?! நேசத்தில் பேதம் வராது!
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்.
முள்மீது என் பாதை... பூவாகும் உந்தன் பார்வை...
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்
நம்மை விழி சேர்த்ததோ?! இல்லை விதி சேர்த்ததோ?!
உள்ளம் ஒன்றானதே! போதும் இன்பம் போதும்!!
ஈரநிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே!!.
தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும்போது
என் நெஞ்சில் பாலூரும் அன்புத் தவிப்பு.
தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு.
சேரும் நதி ரெண்டுதான். பாதை இனி ஒன்று தான்
வெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும்.
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே!
பாட்டு எப்படி இருக்குன்னு பார்த்து சொல்லுங்க!
நன்றியுடன்,
ராஜி
படம் : அரவிந்தன்
நடிகர்கள்: சரத்குமார், ஊர்வசி
இசை: யுவன் சங்கர் ராஜா.
பாடியவர்கள்: எஸ்.பி.பி. மகாநதி ஷோபனா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பி. மகாநதி ஷோபனா
எழுதியவர்: வைரமுத்து
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.
ReplyDeleteமீ ட்ட்ட்ட்ட்டூ சகோ
Deleteஅருமையான பாடல்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
நன்றிண்ணே
Deleteநல்லபாடல், அறிமுகம்தான் இருப்பினும் இளையராஜா வார்த்தையின்படிதானே சிவா சம்மதித்தார்.
ReplyDeleteபடத்தில் அவரது பங்கு இல்லாமல் இருக்காது.
இளையராஜாவின் வழிக்காட்டுதல் இல்லாம இருக்காது. ஆனா, யுவனுக்கும் திறமை இல்லாம இல்ல. திறமை இல்லன்னா இன்னிக்கு இந்தளவுக்கு வந்திருக்க முடியாது. இளையராஜாவின் மகள் பவதாரிணியும் சில பாடல்களை பாடி இசையமைச்சிருக்கார். ஆனா நீடிக்க முடில. ஏன்னா அங்க திறமை இல்லை.
Deleteநல்ல பாடல்.
ReplyDeleteபாடலை எழுதியது வைரமுத்து இல்லை.
பின்ன வேற யாராம்?!
DeleteThis comment has been removed by the author.
Deleteபாடல்கள் எல்லாமே ஹிட்ஸ் அரவிந்தன் படத்தில். ஈரநிலா பாடல் எழுதியது பழனிபாரதி .
ReplyDelete√
Delete