Tuesday, October 30, 2018

பனீர் பட்டர் மசாலா - கிச்சன் கார்னர்


விளையாட்டு வீரர்கள், வளரும் குழந்தைகள்ன்னு புரத சத்தின்  தேவை இருக்கவங்களாம் சிக்கன், முட்டை, பாதாம், பருப்பு வகைகள்ன்னு எடுத்துப்பாங்க.  எல்லாருமே அசைவம் சாப்பிடுறதில்லையே. அதுமாதிரியான சைவப்பிரியர்களுக்கு கைக்கொடுப்பது பன்னீர் எனும் பனீர். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சை பழத்தை பிழிந்தா பால் திரிய ஆரம்பிக்கும் அதை மிக மெல்லிய துணியில் வடிகட்டி பதப்படுத்தினால் கிடைப்பது பனீர். பால் திரிந்தாலும் இதில் அதிகளவு புரதம், மங்கனீசியம்  பாஸ்பரஸ், புரதச்சத்துலாம் அதிகளவு இருக்கு. கார்போஹைட்ரைட் அளவு குறைச்சல்.சர்க்கரையின் அளவு ரொம்ப குறைச்சல்ன்றதால இதை நீரிழிவு நோய்க்காரங்களும் சாப்பிடலாம். கொழுப்பு சத்தும்  அதிகளவில் இருக்கு. அதும் நன்மை செய்யும் கொழுப்புசத்தில்லைங்குறது இதோட மைனஸ்.  இதோட இன்னொரு மைனஸ், மெதுவா ஜீரணிக்கும் தன்மை கொண்டது. 

100கிராமில்  பனீரில் 265 கலோரிகள் கிடைக்குது.  உடலுக்கு பலம் கிடைக்கும்.  பல் சிதைவு, ஈறு பிரச்சனைகள் மற்றும் மூட்டு பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாகவும் பனீர்  உதவுது.  இதை இரவு நேரத்தில் சாப்பிடுவதை வழக்கமா வச்சுக்கலாம். சாப்பிட்ட பின் 1 மணிநேரம் கழிச்சு தூங்கபோவதால் உடல் பருமனை குறைக்கலாம். பனீர் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்குது. இதயநோய்களிலிருந்தும் நம்மை காக்குது. இந்த பனீர்ல பலவகை உணவுகள் சமைக்கப்படுது. ஆனா, அதிகமா வறுப்பதோ பொரிப்பதோ கூடாது. இது எதிர்விளைவை உண்டாக்கும்ன்றதை நினைவில் வச்சுக்கனும்.

இன்னிக்கு, நம்ம பதிவில் பனீர் பட்டர் மசாலா செய்யுறது எப்படின்னு பார்க்கலாம். 
தேவையான பொருட்கள்..
பனீர்
பெல்லாரி வெங்காயம்
தக்காளி
வெண்ணை
பூண்டு
இஞ்சி
மிளகாய் தூள்
முந்திரி பருப்பு
எண்ணெய்
உப்பு

வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி பெருசு பெருசா வெட்டிக்கனும். தக்காளியையும் அப்படியே!. பூண்டை தோல் நீக்கிக்கனும், இஞ்சியையும் தோல் நீக்கி கழுவிக்கனும். 

ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு சூடாக்கிக்கனும்..
வெண்ணெய் உருகினால் போதும். வெங்காயத்தை சேர்த்துக்கலாம். கூடவே கொஞ்சம் உப்பு சேர்த்துக்கிட்டா வெங்காயம் சீக்கிரம் வெந்துரும்.
வெங்காயம் சிவக்கனும்ன்னு அவசியமில்லை. லேசா கண்ணாடி மாதிரி ஆனா போதும். வெட்டி வச்ச தக்காளியை சேர்த்துக்கலாம்.. அடுத்து பூண்டு பற்கள், இஞ்சியையும் சேர்த்து வதக்கிக்கனும்.
முந்திரி பருப்பையும் சேர்த்து வதக்கி அடுப்பை அணைச்சு, ஆறினதும் விழுதா அரைச்சுக்கனும். 

வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகினதும் அரைச்சு வச்சிருக்கும் விழுதை சேர்த்துக்கனும். 

காரத்துக்கு தகுந்த மாதிரி மிளகாய் பொடி சேர்த்துக்கனும். தனி மிளகாய் தூள் சேர்த்துக்கிட்டா நல்லா கலர் கொடுக்கும்.  கரம் மசாலாவையும், உப்பையும் சேர்த்து கிளறி தண்ணி சேர்த்து கொதிக்கவிடனும்.  மசாலா கொதிக்குறதுக்குள் பனீரை துண்டு துண்டா நறுக்கி லேசா எண்ணெய்ல இல்ல வெண்ணெய்ல பொரிச்சுக்கனும். 

மிளகாய் தூள் வாசனை போகும்வரை கொதிச்சதும் பொரிச்சு வச்சிருக்கும் பனீரை சேர்த்து லேசா கொதிக்க விட்டு கொ.மல்லி இலைகளை தூவி இறக்கிக்கிடனும். உலர்ந்த வெந்தயக்கீரை அதானுங்க கஸ்தூரி மேத்தியை லேசா கசக்கி சேர்த்தா இன்னும் நல்லா இருக்கும்.  கடைசியா ப்ரெஸ் க்ரீம் சேர்த்துக்கலாம். கஸ்தூரி மேத்தியும், க்ரீமும் இல்லாததால் அதை நான் சேர்க்கல. 
என் பையனுக்கு பனீர் பிடிக்காததால் அவனுக்கு மட்டும்  கொதிக்கும் கிரேவியை தனியா கொஞ்சம் எடுத்து  முந்திரி பருப்பை வறுத்து சேர்த்துக்கிட்டேன். 
இது என் பையனுது நான் சுட்டுட்டேன். சாப்பிட இல்லீங்க. படத்துக்காக...

இது எங்களுக்கானது பனீர் பட்டர் மசாலா...  வெண்ணெய்தான் சேர்க்கனும்ன்னு இல்ல, எண்ணெயும் சேர்க்கலாம். வெண்ணெய் சேர்த்தா வாசம் நல்லா இருக்கும். அம்புட்டுதான்

பார்க்க நல்லா இருக்கா?!  

நன்றியுடன்,
ராஜி

15 comments:

  1. அருமையா இருக்கு ராஜி க்கா ...எனக்கு ரொம்ப பிடிக்கும் ..

    நானும் இப்படி தான் செய்வேன் ...என்கிட்ட கிரீம் இருக்காது ,,அதனால் பால் ஆடை கொஞ்சம் சேர்த்து துளி வெல்லமும் சேர்ப்பேன்..

    ReplyDelete
    Replies
    1. அப்படியா?! அடுத்த தபா நானும் சேர்த்து பார்க்கிறேன்ப்பா

      Delete
    2. நாங்கள் கொஞ்சம் தயிர் சேர்த்து செய்திருக்கிறோம்.

      Delete
    3. காசா பணமா?! இதையும் ட்ரை பண்ணலாம்

      Delete
  2. செய்திருக்கிறோம் நாங்களும். பிடித்த ஐட்டம். சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ. ஆனாலும் தோசைக்கும் நல்லா இருக்கும்

      Delete
  3. ஆசையை தூண்டும் படங்கள்.
    ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.
    ரெண்டு தேவகோட்டை பார்சல்....

    ReplyDelete
    Replies
    1. தேவக்கோட்டைக்கு வரும்போது ஊசி போயிருக்கும். சோ, பஸ் பிடிச்சு ஆரணிக்கு வரவும். இங்க வந்து சாப்பிடலாம்.

      இல்ல, பஸ் டிக்கெட் எடுத்து அனுப்பவும். அங்க வந்து அண்ணனுக்கு சமைச்சு போடுறேன்.

      Delete
  4. வீட்டில் இரண்டு நாள் முன்பு தான் செய்தார்கள்...

    ReplyDelete
    Replies
    1. இங்கயும் அடிக்கடி செய்வதுண்டுண்ணே

      Delete
  5. நன்று.

    நம் ஊரில் பனீர் பட்டர் மசாலா என்று சொன்னாலும் இதன் பெயர் ஷாஹி பனீர்.

    ReplyDelete
    Replies
    1. இந்த விசயம் தெரியாதுண்ணே. இனி நினைவில் வச்சுக்கிறேன்

      Delete
  6. அருமை
    மிகவும் பிடித்தமான உணவு

    ReplyDelete
    Replies
    1. பையனை தவிர மிச்ச பேருக்கு பனீர் பிடிக்கும்

      Delete
  7. அடுப்பில் இருக்கும்போது படமெடுக்க நேர்ந்தால் கொஞ்சம் ஊதிவிட்டு (வாணலியின் சூட்டுப் புகையை) ஓரிரண்டு படங்கள் எடுத்தால் அதில் ஒன்றாவது கிளியராக வந்திருக்கும்.

    மசாலா பவுடர் எதுவும் சேர்க்கலையா? (இதற்கென்றே உள்ள மசாலா பவுடர்கள்).

    ReplyDelete